SLMC கிண்ணியா

  • Home
  • SLMC கிண்ணியா

SLMC கிண்ணியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLMC கிண்ணியா, Media/News Company, .

இவர்களுக்கு எதிராக அறிக்கை விட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களே இதற்கு உங்களின் பதில் எ...
14/05/2022

இவர்களுக்கு எதிராக அறிக்கை விட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களே இதற்கு உங்களின் பதில் என்ன...???

SLMC கிண்ணியா
2022-05-14

06/05/2022
ஜனாஸா அறிவித்தல் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் சகோதரர்  #மீஸான் சற்று முன் காலமானார்இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ரா...
22/02/2022

ஜனாஸா அறிவித்தல்

குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் சகோதரர் #மீஸான் சற்று முன் காலமானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

மிக நீண்ட காலமாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளியாகவும் கட்சியில் பல பதவிகளையும் வகித்து இறுதியாக குச்சவெளி பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி குச்சவெளி பிரதேச சபை உறுப்பினராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

22/01/2022
இலங்கை மத்திய வங்கி ஆளுனர் - சவூதி அபிவிருத்தி நிதியத்தின் குழு சந்திப்பு***********************************************...
29/12/2021

இலங்கை மத்திய வங்கி ஆளுனர் - சவூதி அபிவிருத்தி நிதியத்தின் குழு சந்திப்பு
***************************************************
மத்திய வங்கி ஆளுனர் குழுவிற்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (29. 12. 2021) இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கை மத்திய வங்கி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் ஆளுனர் அஜித் கப்ரால், சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஸாத், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஸாந்த ரனதுங்க, பொது முகாமையாளர், பொறியியலாளர் மஸூத், பிரதி மத்திய வங்கி ஆளுனர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - சவூதி அபிவிருத்தி நிதியத்தின் குழு சந்திப்பு**********************************************...
29/12/2021

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - சவூதி அபிவிருத்தி நிதியத்தின் குழு சந்திப்பு
**************************************************
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஸாத் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (29. 12. 2021) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் மற்றும் எதிர்கால புதிய திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. சவூதி அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான பொறியியலாளர் அல் மஸூத், நிதி அமைச்சின் செயலாளர் திரு. ஆரட்டிகல, மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்குறிஞ்சாக்கேணி - கிண்ணியாவுக்கான இலவச பஸ் சேவை ஆரம்பம்**************************************************...
20/12/2021

அல்ஹம்துலில்லாஹ்

குறிஞ்சாக்கேணி - கிண்ணியாவுக்கான இலவச பஸ் சேவை ஆரம்பம்
*******************************************************
இன்று கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் சேரின் முயற்சினால் (20. 12. 2021) காலை முதல் குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாண வேலைகள் முடியும் வரை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இலவச பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இவ் இலவச பஸ் சேவையை முன்னால்கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் சனூஸ் சேர் ஆரம்பித்து வையித்தார்.

24.11.2021இடை நிறுத்தம்                                                                               பாராளுமன்றத்தில் வ...
24/11/2021

24.11.2021

இடை நிறுத்தம்

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

07/11/2021

பூவரசந்தீவு - கல்லடிவெட்டுவான் வீதி வடசல் பால நிர்மான பணிகள் ஆரம்பம்----------------------------------------------------...
16/10/2021

பூவரசந்தீவு - கல்லடிவெட்டுவான் வீதி வடசல் பால நிர்மான பணிகள் ஆரம்பம்
---------------------------------------------------------------------------------------

பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையான வடசல் பாலம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களின் முயற்சியின் பயனாக 30 மில்லியன் ரூபாய் செலவில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்களான கிண்ணியா பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.சனூஸ் அவர்களும் மற்றும் Dr. ஹில்மி மஹ்ரூப், கலிபத்துல்லாஹ், நிவாஸ், முகம்மது அலி, அனிபா, இப்னுல்லாஹ், ஜர்சாத் ஏ மஜீத், அதிபர்களான ஹதியத்துல்லாஹ், அனீஸ், ராஜர்கான், நஸ்புல்லாஹ், ஹாதி, மப்ரூஸ் ஆசிரியர், அக்பர் சலீம், அதீக் (SO) அவர்களுடன் அப்பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 #வடசல் பால  #கனவு  #நிறைவேறப்போகும்  ஆரம்ப வேலைகள்நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த பூவரசன்தீவையும் கல்லடிவெட்டுவானையும்...
15/10/2021

#வடசல் பால #கனவு #நிறைவேறப்போகும் ஆரம்ப வேலைகள்

நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த பூவரசன்தீவையும் கல்லடிவெட்டுவானையும் இணைக்கும் வடசலுக்கான #பால #வேலைகள் நாளை 16.10.2021 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு #கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். #தௌபீக் அவர்களால் #ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

28/09/2021

ஊடக சந்திப்பு.

முன்னாள் கிண்ணியா பிரதேசசபையின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ் தௌபீக்  அவர்களின்  பிரத்தியேக செயலாளருமான எம்...
01/08/2021

முன்னாள் கிண்ணியா பிரதேசசபையின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.சனூஸ் அவர்களின் சத்திர சிகிச்சையின் பின்னர் அவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் இச் சந்திப்பில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னால் நகர பிரதேச சபை உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

அவர் மிக விரைவில் பூரண குணமடைய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். #தௌபீக் அவர்கள்  #ஶ்ரீ_லங்கா_முஸ்லிம்_காங்கிரஸின்_தேசிய_அமைப்பாளராக கட்சியின் தேசிய ...
01/08/2021

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். #தௌபீக் அவர்கள் #ஶ்ரீ_லங்கா_முஸ்லிம்_காங்கிரஸின்_தேசிய_அமைப்பாளராக கட்சியின் தேசிய தலைமை கௌரவ #ரவூப்_ஹக்கீம்_சேர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

20/07/2021
இன்றைய (12. 06. 2021) தினகரனில்
12/06/2021

இன்றைய (12. 06. 2021) தினகரனில்

30/05/2021

நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்த சில நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...!!!

[நுஸ்ரி முகம்மட்]

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்த சில நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்தியதிகாரி ஏ.எம்.எம்.அஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களையும் அரசாங்கத்தின் வழிகாட்டல்களையும் கண்டிப்பாக கடைபிடித்து நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பு :- [மக்கள் தயவுசெய்து இதில் அலட்சியப்
போக்கு காட்ட வேண்டாம்.]

#𝐊𝐮𝐫𝐚𝐥𝐓𝐯 News

அல்ஹம்துலில்லாஹ்கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதியை ஆரம்பிப்பதற்கு கொந்தராத்துக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.*********...
26/05/2021

அல்ஹம்துலில்லாஹ்

கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதியை ஆரம்பிப்பதற்கு கொந்தராத்துக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
**********************************************
பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் சேவகன் எம்.எஸ் #தெளபீக்_சேர் மற்றும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் எம். எச். #சனூஸ்_சேர்அவர்களின் முயற்சியின் பயனாக கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதியை ஆரம்பிப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கொந்தராத்துக்கார்ர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: குறிகச்சக்கொட்டித்தீவு சந்தியிலிருந்து 6 KM க்கான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

 #தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.கூட்டணி தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிருப்பது அளப்பரிய மகிழ்ச்சிய...
03/05/2021

#தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.கூட்டணி தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிருப்பது அளப்பரிய மகிழ்ச்சியையளிப்பதாகவும், இந்த மகோன்னத வெற்றியின் ஊடாக இந்திய - இலங்கை தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று பளிச்சிடுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டு கால இடை வெளியின் பின்னர் ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டுக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு ஏற்கவிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

பிரத்தியேகமாக தளபதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடடிதமொன்றை எழுதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அதற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.அவையாவன:

மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி உட்பட திமுக வினரும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலான அதன் ஏனைய கூட்டுக் கட்சியினரும் எங்களுடன் சிறந்த நட்புறவைப் பேணிவருகின்றனர்.

234 ஆசனங்களைக் கொண்ட தமிழக சட்ட சபையில், அவற்றில் ஆகக் கூடுதலானவற்றை கைப்பற்றும் திறன் திமுக கூட்டணிக்கு வாய்த்திருக்கின்றது. தந்தையைப் போலவே புதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் தொகுதியில் மிக அதிகப் படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியிருப்பதுவும் மகிழ்ச்சிக்குரியது.

தி.மு.க.வின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான மனித நேய மக்கள் கட்சியில் இனிய நண்பர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியிலும், அதே கட்சியில் பா.அப்துல் சமது திருச்சி மாவட்டம் மணற்பாறைத் தொகுதியிலும் ,தி.மு.க.கூட்டணியில்இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நாகப்பட்டிணத்தில் இளம் அன்புத் தோழர் ஆளுர் ஷா நவாஸ் ஆகியோரும் வெற்றிவாகை சூடியிருப்பதும் எங்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.

தளபதி ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துடனும் எமது தாய்த் திருநாடான இலங்கை முதலான அயல் நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி பரவலாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இறைவன் அருள் புரிய வேண்டுமென இறைஞ்சுகின்றோம்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் சம்மந்தமாக************************************...
17/03/2021

அல்ஹம்துலில்லாஹ்

குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் சம்மந்தமாக
************************************************
#பாராளுமன்ற_உறுப்பினர்_கெளரவ_எம்_எஸ்_தெளபீக்_சேர்_அவர்களின்_தலைமையில்

இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவிருக்கும் குறிஞ்சாக்கேணி பால வேலைகளை பார்வையிடுவதற்காக இன்று (17. 03. 2021) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் குழு விஜயம் செய்து பார்வையிட்டனர். திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் திருமதி. யேசுதாசன், சிரேஸ்ட பொறியியலாளர் திரு. சிவகுமார், பொறியியலாளர் திரு. சாந்தீபன், திட்ட முகாமையாளர் (VVK) யசோதரன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குச்சவெளி காணி  பிரச்சினை சம்மந்தமாக கலத்தில் இறங்கினார் எம்.எஸ்.தெளபீக் MPஆளுனர் அலுவலகத்தினால் பெயர் பதாதைகள் போடப்பட்...
04/03/2021

குச்சவெளி காணி பிரச்சினை சம்மந்தமாக கலத்தில் இறங்கினார் எம்.எஸ்.தெளபீக் MP

ஆளுனர் அலுவலகத்தினால் பெயர் பதாதைகள் போடப்பட்ட குச்சவெளி காணி பிரச்சினை சம்மந்தமாக இன்று கிழக்கு மாகாண ஆளுனரை அவருடை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார் இரண்டு வாரங்களுக்குள் சம்மந்தப்பட்ட காணி உரிமையாளர்களையும் சந்தித்து பிரச்சினையை தீர்ப்பதற்கு இனக்கம் தெரிவித்துள்ளாத எமது ஊடகப்பிரிவு அவர் கருந்து தெரிவித்தார்.
copy Kural TV News

04/03/2021

தலைமைகளுக்கு விசுவாசமாக இருங்கள் தலைமைகளை விழ்த்த நினைகாதீர்கள் .

தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்திற்கு உலர் உணவுப் பொருட்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக்.
22/01/2021

தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்திற்கு உலர் உணவுப் பொருட்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு COVID - 19 தொற்று உறுதி! கடந்த 10 நாட்களில் அவருடன் தொடர்ப...
10/01/2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு COVID - 19 தொற்று உறுதி! கடந்த 10 நாட்களில் அவருடன் தொடர்புபட்ட அனைவரும் தனிமையில் இருக்குமாறு தலைவர் வேண்டிக் கொண்டார்.

Condolence Message issued by SLMC leader Rauff Hakeem on the demise of Poet Maruthoor A.Majeed.இஸ்லாமியத் தமிழ் இலக்கியப...
26/12/2020

Condolence Message issued by SLMC leader Rauff Hakeem on the demise of Poet Maruthoor A.Majeed.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் கிழக்கிலங்கை, சாய்ந்தமருது மண்ணிலிருந்து கோலோச்சிய பெருந்தகை மருதூர் ஏ. மஜீத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நண்பர் மருதூர் ஏ. மஜீத்தை பல்துறை வித்தகர் என்றால் மிகையாகாது. கல்வியலாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும், மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடுடையவராகவும், தற்காப்புக் கலையில் கைதேர்ந்தவராகவும், இவை அனைத்தையும் விட கிழக்கு மாகாண நாட்டாரியலில் முத்திரை பதித்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும் அவர் விளங்கினார்.

பழகுவதற்கு மிகவும் இனியவராக இருந்த அவரிடத்தில் ஒரு வித்துவச் செருக்கு இருந்தது. அதனை இலக்கிய ஆணவம் என்று கூடக் கூறலாம். இலக்கியத்தில் மட்டுமல்லாது, அவர் ஈடுபட்ட எந்தத் துறையிலுமே அன்னாருக்குச் சரியெனப்பட்டதை எவராவது வித்தியாசமாக விமர்சித்து அவர் மீது அழுத்தம் செலுத்த முற்பட்டால், அதற்கு அடிபணிய மறுக்கும் தன்மை அவரில் இயல்பாகவே குடிகொண்டிருந்தது.

இலங்கைக்கும் அப்பால் தமிழகம் தொட்டு மலேஷியா வரை இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுகளில் அவரது பங்களிப்பு இருந்திருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகப் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அசைக்க முடியாத ஆளுமையினால் அதிகம்ஈர்க்கப்பட்டு, அவரால் அரவணைக்கப்பட்ட மருதூர் ஏ.மஜீத் எமது கட்சியின் வளர்ச்சியில் ஊணாகவும், உரமாகவும் இருந்திருக்கின்றார்.

தமது நூல்களின் வரிசையில் பதினெட்டுத் தொகுதிகள் வரை எழுதியிருக்கும் அவர், எனது குடும்பப் பின்னணியை வைத்து எழுதிய “வேர்” என்ற நூல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டதையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.

அவருக்கு போர்த்தப்படாத பொன்னாடைகள் இல்லை. புன்னகை பூத்த முகத்துடன் அவர் பொன்னிற ஆடையும், சால்வையும் அணிந்து கண் முன் காட்சியளிப்பது மனதில் இன்றும் நிழலாடுகின்றது.

ஆரவாரமின்றி, இஸ்லாமிய ஈமானியப் பின்புலத்தில் பணி செய்து ஓய்ந்துள்ள நண்பர் மஜீத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அளிப்பானாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் அல்லாஹ் ஆறுதலை வழங்குவானாக.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SLMC கிண்ணியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share