Thundu Cheetu - துண்டு சீட்டு

  • Home
  • Thundu Cheetu - துண்டு சீட்டு

Thundu Cheetu - துண்டு சீட்டு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thundu Cheetu - துண்டு சீட்டு, Media/News Company, .

06/09/2023
தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின், நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பாக இன்று  55 -வது 'தேசிய ...
14/11/2022

தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின், நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பாக இன்று 55 -வது 'தேசிய நூலக வார விழா' வின் துவக்க விழாவாக புத்தகக் கண்காட்சி மற்றும் நீலகிரி மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் ஆவண படக்கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது .

நூலக வாசகர் வட்ட தலைவர் திருமதி அமுதவல்லி அவர்கள் தலைமையில், மாவட்ட மைய நூலகர் திரு இரவி, நூலக ஆய்வாளர் திருமதி வசந்த மல்லிகா ஆகியோர் முன்னிலையில் காவல்துறை ஆய்வாளர் திரு பிலிப் அவர்கள் கண்காட்சியினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

கனரா வங்கியின் மேலாளர் திரு பிரேம்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார்

ஊட்டி டாக்குமெண்டேசன் சென்டர் நிறுவனர் திரு மதிமாறனின் ஆவணப்படக் கண்காட்சியில் நீலகிரி மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததுடன் மாணவ மாணவிகள் தங்களது கருத்துக்களை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

14/11/2022

உதகை, வானிலை மையம் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி

01/08/2022

ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு

https://youtu.be/O7Qafq3UK60

ஸ்ரீ விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை

29/07/2022

ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு விசாலாட்சி அம்பாள் மகளிர் குழு சார்பாக விளக்கு பூஜை

https://youtu.be/RPPzWHp6O3I

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த ...
17/07/2022

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த IT கம்பெனியில் வேலை புரியும் 10 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

இதில் குட்ட வினிதா சௌத்ரி என்பவர் நேற்று மாலை கல்லட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதன் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்பு குழு கூடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று (17-7-2022)காலை சுமார் ஒன்பது மணியளவில் அந்தப் பெண்ணின் பிரேதத்தை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்டனர்.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான பல உ...
16/07/2022

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன அதில் ஒரு பகுதியாக இன்று குன்னூர் உட்கோட்டம் கொலக்கம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் செங்கல் கோம்பை கிராமத்திற்கு காவல்துறை சார்பில் மக்களுக்கு கட்டில்கள் கொலக்கம்பை காவல் உதவி ஆய்வாளர் அவர்களால் வழங்கப்பட்டது உடன், பழங்குடியின மக்கள் தலைவர், ஊர்த்தலைவர் மற்றும் பொதுமக்கள்
கலந்து கொண்டனர் இதில் மொத்தம் 17 கட்டில்கள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது

அணை கட்டியதிலிருந்து வரலாற்றில் 42 வது முறையாக முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை. 16 மதகுகளும் திறந்து உபரிநீர் வெளியேற்றம...
16/07/2022

அணை கட்டியதிலிருந்து வரலாற்றில் 42 வது முறையாக முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை.

16 மதகுகளும் திறந்து உபரிநீர் வெளியேற்றம்.

கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

1 லட்சம் கனஅடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு என பொதுப்பணித்துறை தகவல்.

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உணவகங்களின் கழிவுகள் பள்ளி வளாகத்தில் கொட்டப்படுகின்றன. சம்பந்தபட்ட அதிகாரிகள் கவன...
16/07/2022

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உணவகங்களின் கழிவுகள் பள்ளி வளாகத்தில் கொட்டப்படுகின்றன. சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஊட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலைத்துறையால் மீட்பு.நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தள் அமைந்...
16/07/2022

ஊட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலைத்துறையால் மீட்பு.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தள் அமைந்துள்ள அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோவில் மற்றும் முக்கோணம் பகுதியில் அமைந்துள்ள முருகர் கோவில் ஆகியவை இந்;து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் அருள்மிகு மூவுலகரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கபட்டிருந்தது மற்றும் முக்கோணம் பகுதியில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல உதவி கமிஷனர் திரு. கருணாநிதி அவர்கள் தலைமையில் செயல் அலுவலர்கள் லோகநாதன், சங்கீதா, ஆய்வாளர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு அங்கே அறிவிப்பு பலகைவைத்தனர்.

15.7.2022 நேற்று இரவு கூடலூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை ...
16/07/2022

15.7.2022 நேற்று இரவு கூடலூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் காற்கறிகளுக்கு நடுவே கடத்தி வந்த ரூபாய் 15,30,000 மதிப்புள்ள குட்கா ஹன்ஸ் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கடத்தி வந்த சாஜர் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் கூடலூர் தோட்டமுலா பகுதியில் உள்ள கோயில் மீது ராட்சத மரம் விழுந்து ச...
15/07/2022

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் கூடலூர் தோட்டமுலா பகுதியில் உள்ள கோயில் மீது ராட்சத மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது

13/07/2022

அன்புவடிவாக நின்றாய் சிவபெருமானே !

ஊட்டி தட்சணாமூர்த்தி மடாலயம் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் - காந்தள்.

https://youtu.be/7OCcXqblg80

தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thundu Cheetu - துண்டு சீட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share