11/01/2023
இந்தப் பதிவை படிக்காமல் கடந்து செல்லாதீர்
செய்வினை வைத்துள்ளனர் என சொல்வாங்க நம்பாதீங்க
இந்து மதம் இந்து மதம் அழிகிறது அழிகிறது என சொல்போருக்கு அழிப்பவர்கள் யார் என தேடலாம் வாங்க.....
நமது கோவில்பட்டியில் அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் மந்திதோப்பு அருகில் அமைந்துள்ளது இந்த கோவில் அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இங்கே கோயில் கட்டியது பக்திக்காக அல்ல பணம் சம்பாதிக்க ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியும் அங்கே செய்வினை எடுப்பதாக கூறி பல பக்தர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டுள்ளது. ஏதேனும் உங்களுக்கு பிரச்சனை என்றால் இந்த கோவிலுக்கு சென்று கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் செய்வினை வைத்துள்ளார்கள் அதனை எடுக்க பத்தாயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்வார்கள் செய்வினை எடுப்பது எப்படி என்பது தெரியுமா? சேவலின் ரத்தத்தை உடல் முழுவதும் பூசுவது செய்வினை எடுப்பதாம். மேலும் ஒரு எலுமிச்சம் பழத்தை சாறை தேனில் கலந்து குடித்தால் செய்வினை தீர்ந்து விடுமாம்.
இந்த கோவிலில் நடைபெற்ற சில சம்பவங்களை சொல்கிறோம் ஒரு நபர் தனக்கு தீராத வயிற்று வலி இருக்கிறது என இந்த கோயிலை நாடி உள்ளார். மருத்துவமனையில் சோதனை செய்த போது நீர் கட்டிகள் என்று சொல்லி உள்ளனர் )நமது கோவில்பட்டி மருத்துவர் தவறான தகவலால்) அங்கே இருந்த கோயில் பூசாரிகள் செய்வினை வைத்துள்ளார்கள். அதனை எடுப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் அதாவது வெள்ளிக்கிழமை வர சொல்லியுள்ளனர் சேவலின் கழுத்தை அறுத்து அதனுடைய ரத்தத்தை அந்த நபரின் உடல் முழுவதும் பூசி உள்ளனர். அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்து நாளை காலை வெறும் வயிற்றில் எலுமிச்சம் சாற்றையும் தேனையும் கலந்து குடியுங்கள் என சொல்லி உள்ளனர். அந்த எலுமிச்சை சாற்றை பிடித்தவுடன் தீராத வயிற்று வலி பெரும் வழியாக உணர்ந்து உடனே மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே சோதனை செய்ததில் அவருக்கு கேன்சர் கட்டி உள்ளது தெரியவந்து கடைசியில் அதனை அகற்றி உள்ளனர். அந்த கேன்சர் கட்டிகளின் மீது எலுமிச்சை சாற்றின் துளிகள் பட்டவுடன் உடைந்து உள்ளது அவர் தற்பொழுது கேன்சருக்கான மருந்துகள் எடுத்துக் கொண்டு நலமாக உள்ளார். ஆனால் இதன் பிறகு ஒரு பெண்மணியும் தீராத வயிற்று வலி என சோதனை செய்ததில் கேன்சர் கட்டிகளுக்காக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். அவருக்கு கேன்சர். அவர் கடந்த வாரம் பூஜைக்காக பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டார். இதுபோல் பல பக்தர்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கோயிலை மக்கள் புறக்கணிக்க வேண்டுகிறோம். ஒரு பூஜைக்கு குறைந்தது 10 பேராவது வருகின்றனர். அவர்களின் லாப நோக்கத்தோடு நடைபெறும் இந்த கோயிலின் எந்த ஒரு பூஜையிலும் கலந்து கொள்ளாது தவிர்க்கும்படி மக்களை கேட்டுக் கொள்கிறோம் நன்றி.