Nila Gameing

Nila Gameing Welcome friends ��

15/03/2022
12/02/2022

Most people like this BMW 😍

12/02/2022

Car Lovers mention 😇

12/02/2022

Every fun day with my friends ❤️

12/02/2022

My favorite 🐈 in my house ❤️💯

18/08/2021

Hai Guys Support My Page 😉😊😊

நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்புபட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகை மீரா மிதுன...
15/08/2021

நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு

பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகை
மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்
நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆஜராகாத மீரா மிதுன் “என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில்தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர் களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று வீடியோ வெளியிட்டு கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஆண் நண்பருடன் தங்கியிருந்த
அவர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்,
இன்று சென்னை அழைத்து வந்தனர். அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் குடியிருப்பில் உள்ள 7 வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்பு நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுநீரகப் பாதிப்பு, பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை: பண உதவி கேட்டு உருக்கம்சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் ...
15/08/2021

சிறுநீரகப் பாதிப்பு, பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை: பண உதவி கேட்டு உருக்கம்

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை, பொருளாதார உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியில் வெளியான கிரைம் பேட்ரோல் அந்தாலஜி தொடரில் நடித்து புகழ்பெற்றவர் அனயா சோனி (Anaya Soni). இவர் அதலாட், இஷ்க் மேய்ன் மர்ஜவான், ஹை அப்னா தில் தோ அவாரா உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடத்துக்கு முன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவர் தந்தை ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தார். அதில் இருந்து ஒரு சிறுநீரகத்துடன் இயங்கி வந்த நடிகை அனயா சோனிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் படுத்திருந்த படி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் உருக்கமாக பண உதவி கேட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக என் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. 2 சதவிகிதம் மட்டுமே அது செயல்படுகிறது. என் தாய் துணி வியாபாரம் செய்துவந்தார். சகோதரரும் நல்ல நிலையிலேயே இருந்தனர். சில நாட்களுக்கு முன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில் மொத்தமாக போய்விட்டது. வைத்திருந்த சேமிப்பு மருத்துவச் செலவுக்கே முடிந்துவிட்டது. இன்னும் செலவழிக்க பணமில்லை. எனக்கு உதவி தேவைப்படுகிறது. தயவு செய்து உதவுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏலக்காயில் உள்ள இயற்கை நன்மைகள்!!ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன. ஏலக்காய...
15/08/2021

ஏலக்காயில் உள்ள இயற்கை நன்மைகள்!!

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன. ஏலக்காய்-யில் உள்ள நன்மைகளை தொகுப்பாய் இங்கு காண்போம்...

# ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.

# வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.

# ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
# சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.

# ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.

# ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
# அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

# ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

# நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இர...
15/08/2021

வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது

செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.

காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப்படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இயற்கையான முறையில் வெந்தய பேஸ்பேக் மூலம் முகத்தை பளிச்சிட...!வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சரு...
15/08/2021

இயற்கையான முறையில் வெந்தய பேஸ்பேக் மூலம் முகத்தை பளிச்சிட...!

வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.

வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nila Gameing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share