VLankatv

VLankatv TV Channel for Entertainment

10/06/2023
26/09/2021

எமது V Lanka வின் முன்னாள் ரௌடிபேபி நிகழ்ச்சி தொகுப்பாளர் எம்குட்டி சாபீர் பாத்திமா ரியா வின் மெனிக்க பாடல் இதாே...

கட்டாயம் அதிகமாக Share பன்னுங்க*----*-----*-----*------*-----*------*-----*-----*------*---*25 நபிமார்களின் அடக்கஸ்தலங்க...
07/07/2021

கட்டாயம் அதிகமாக Share பன்னுங்க
*----*-----*-----*------*-----*------*-----*-----*------*---*

25 நபிமார்களின் அடக்கஸ்தலங்கள். நான் பார்த்துட்டேன் அல்ஹம்துலில்லாஹ் மற்றவர்காளும் பார்க்க வேண்டும் என்ற என்னம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அம்பாறை மாவட்டத்தின் பயனாளிகளுக்கான தகவல்.*********விபத்தினாலோ நோயாலோ கால் பாகங்களை இழந்தோர்க்கான செயற்கை கால் பாகங்கள் ...
05/07/2021

அம்பாறை மாவட்டத்தின் பயனாளிகளுக்கான தகவல்.
*********

விபத்தினாலோ நோயாலோ கால் பாகங்களை இழந்தோர்க்கான செயற்கை கால் பாகங்கள் எமது தொண்டு நிறுவனமான Lanka Fundamental Rights Organizationனுக்கு கிடைக்கவுள்ளன.

இயன்றளவு அம்பாரை மாவட்டத்தில் செயற்கை கால் பாகங்கள் தேவையுடையோருக்கும் அதை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம்.

01-பெயர்:

02-முகவரி:

03-தொலைபேசி:

04-பாதிக்கப்பட்ட கால் வலது/இடது

05 பாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட கால் பகுதியின் அங்குல அளவு:

மேற்சொன்னவற்றை பாதிக்கப்பட்ட காலின் புகைப்படத்துடன் எமது WhatsAppக்கு அனுப்பிவைத்தால் பெற்றுத்தர முயற்சிப்போம்
WhatsApp: 0777279144

LFRO Amparai District சார்பாக
வஃபா பாறுக்-

Note அம்பாறை மாவட்டத்தின் பயனாளிகளுக்கான தகவல்.
*********

விபத்தினாலோ நோயாலோ கால் பாகங்களை இழந்தோர்க்கான செயற்கை கால் பாகங்கள் எமது தொண்டு நிறுவனமான Lanka Fundamental Rights Organizationனுக்கு கிடைக்கவுள்ளன.

இயன்றளவு அம்பாரை மாவட்டத்தில் செயற்கை கால் பாகங்கள் தேவையுடையோருக்கும் அதை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம்.

01-பெயர்:

02-முகவரி:

03-தொலைபேசி:

04-பாதிக்கப்பட்ட கால் வலது/இடது

05 பாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட கால் பகுதியின் அங்குல அளவு:

மேற்சொன்னவற்றை பாதிக்கப்பட்ட காலின் புகைப்படத்துடன் எமது WhatsAppக்கு அனுப்பிவைத்தால் பெற்றுத்தர முயற்சிப்போம்
WhatsApp: 0777279144

LFRO Amparai District சார்பாக
வஃபா பாறுக்-

அதிகம் Share பன்னுங்க

நமக்கு ஒரு எடுத்துக்காட்டு இச் சிறுவன் *----*-----*-----*-----*------*-----*-----*-----*------*-----*கொவிட் 19 நிவாரண நி...
29/06/2021

நமக்கு ஒரு எடுத்துக்காட்டு இச் சிறுவன்
*----*-----*-----*-----*------*-----*-----*-----*------*-----*

கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு தான் உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய நிந்தவூர் சிறுவன் றிஹான் ஆரி...!!!

(யாக்கூப் பஹாத்)

கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான நபர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் நிலையில் தானும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக மாறியிருக்கின்றார் இந்த சிறுவன்.

இவரின் மனதில் ஏற்பட்ட இந்த உதவி செய்யும் மனப்பாங்கை புரிந்து கொண்ட இவரது தந்தை நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியை தொடர்பு கொண்டு தன் மகன் உண்டியலில் சேர்த்து வைத்த ( 10216/- ) பத்தாயிரத்து இருநூற்று பதினாறு ரூபா பணத்தை குறித்த பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்.

சிறிய வயதில் இப்பெரிய விடயத்தை மேற்கொண்டிருக்கும் எஸ்.முஹம்மட் றிஹான் ஆரி அவர்களுக்கு நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

இன்றைய சூழ்நிலையில் வீட்டுக்குள் அடைந்து கொண்டு பணத்தினை  #டேட்டாவுக்காக வீணாக செலவு செய்து கொண்டிருக்கும் பல நண்பர்களுக...
18/06/2021

இன்றைய சூழ்நிலையில்
வீட்டுக்குள் அடைந்து கொண்டு பணத்தினை #டேட்டாவுக்காக வீணாக செலவு செய்து கொண்டிருக்கும் பல நண்பர்களுக்காக இந்தப்பதிவு

தாங்கள் பயன்படுத்தும் எந்த வகையான சிம்காட்டாக இருந்தாலும்
#எவ்வளவு_ரீலோட்_செய்தால்_நமக்கு_என்ன_பயன்_கிடைக்கும்_என்று__இதோ........

Dialog ,Mobitel,Hutch,Airtel

அவுஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மல்வானைப் பெண்மணி!----*-----*-----*-----*-----*-----*------*-----*-----*---...
31/05/2021

அவுஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மல்வானைப் பெண்மணி!
----*-----*-----*-----*-----*-----*------*-----*-----*-----*-----

அவுஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் பெற்றார் சகோதரி ஹாஜரா அஸ்லம். இவர் மல்வானை,மல்வத்தை அல்-ஹாஜ் அப்துல் சமத்-மஹபூல் மற்றும் முஃபீதா சமத் ஆகியோரின் புதல்வி என்பதோடு மல்வானை பள்ளம் அஹமட் அஸ்லமின் துணைவியாருமாவார்.

டாக்டர் ஹஜாரா அஸ்லம் 2017 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினார், மேலும் ஜீலாங் விக்டோரியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

திருமணம் என்பது மாதற்களின் கனவுகளுக்கு ஒரு முடிவு என்று நம்புகிற நம் சமூகத்தில் உள்ள அனைத்து இவர் ஒரு முன்மாதிரி என்றே சொல்ல வேண்டும். அவரது சாதனைகள் கடின உழைப்புக்கு சான்றாகும், அர்ப்பணிப்பு வெற்றிக்கான பாதைகளை அமைக்கும்.

டாக்டர் ஹாஜரா ஒரு புலமைப்பரிசில் பெற்றார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுரா எஸ்.ஆர்.எல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த பின்னர் சர்வதேச டீக்கின் பல்கலைக்கழக முதுகலை தொழில் ஆராய்ச்சி உதவித்தொகை. கூகிள் அறிஞரில் தனது அறிவார்ந்த பணிக்காக அதிக தாக்க காரணி அறிவியல் பத்திரிகைகள் மற்றும் திரட்டப்பட்ட மேற்கோள்களிலும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனது ஆராய்ச்சியைத் தொடர டீக்கின் பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க பெல்லோஷிப் ”எக்ஸிகியூட்டிவ் டீன்ஸ் போஸ்ட்டாக்டோரல் புலமைப்பரிசில் ” அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சகோதரி ஹாஜராவின் புலமைத்துவ சாதனைப்பயணம் தொடர தேசத்தின் சார்பான வாழ்த்துக்கள்!

  💎💎💎.🇱🇰Beautiful Mosques of Sri Lanka. 🇱🇰இலங்கையின் அழகிய பள்ளிவாசல்கள். #அதிகம் பகிருங்கள்.
25/05/2021

💎💎💎.

🇱🇰Beautiful Mosques of Sri Lanka.
🇱🇰இலங்கையின் அழகிய பள்ளிவாசல்கள்.

#அதிகம் பகிருங்கள்.

 #தோட்டத்தில்_மரங்களை_நடும்_பொழுது_கவனிக்க_வேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அடி_அளவீடுகள்.👉வேப்பமரம். 15' × 15'👉பனைமரம். 10'...
24/05/2021

#தோட்டத்தில்_மரங்களை_நடும்_பொழுது_கவனிக்க_வேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அடி_அளவீடுகள்.

👉வேப்பமரம். 15' × 15'
👉பனைமரம். 10' × 10'
👉தேக்கு மரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉சந்தன மரம். 15' × 15'
👉வாழை மரம். 8' × 8'
👉தென்னை மரம். 24' × 24'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉பலா மரம். 22' × 22'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முந்திரிகை மரம். 14' × 14'
👉முருங்கை மரம். 12' × 12'
👉நாவல் மரம். 30' × 30'

இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.

தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!

என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.

#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

[படித்ததை பகிர்ந்தது ]

23/05/2021

அன்பரார்ந்த கிண்ணியா வாழ் மக்களே!சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 #திருகோணமலையின்   1880களில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் இதோ
23/05/2021

#திருகோணமலையின் 1880களில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் இதோ

 #இலங்கையின்_முக்கியமான_தொலைபேசி_இலக்கங்கள்● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (க...
22/05/2021

#இலங்கையின்_முக்கியமான_தொலைபேசி_இலக்கங்கள்

● பிரதமர் – 011-2321406

● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171

● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110

● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938

● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919

● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939

● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984

● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962

● கல்வி அமைச்சு – 1988

● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905

● IMEI மீளாய்வு அலகு – 1909

● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918

● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996

● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989

● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984

● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977

● மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956

● உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666

● சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545

● சிறுவர் துஸ்பிரயோகம் – 1929

● பரீட்சை திணைக்களம் – 1911

● உயர்கல்வி அமைச்சு – 1918

● தேசிய உதவி மையம் – 118

● போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111

● குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799

● செஞ்சிலுவை – 011-2672727

● தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110

● இராணுவ தலைமையகம் – 011-2432682

● வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646

● குற்றப்பிரிவு – 011-2691500

● பொலிஸ் தலைமையகம் – 011-2421111

● மின்சார தடை – 011-2466660, 011-4617575

● அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052

● தொலைபேசி இணைப்பு – 112

● தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935

● விபத்து பிரிவு – 011-2693184

● சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744

● மோசடி பணியகம் – 0112583512

● சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618

● கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111

● செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505

● மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606

● இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910

● விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920

● அவசர அதிவேக பிரிவு – 1969

● இலங்கை மின்சார சபை – 1987

● தேசிய வைத்தியசாலை – 1959

● தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966

● வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968

● தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900

● புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052

● கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215

வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள – 076-6224949, 076-6226363

 #முஸ்லிம்_கட்சிகள்_அதன்_தலைவர்களின்_காட்டுப்பாட்டில்_இல்லை (நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப்)முஸ்லிம் கட்சிகள் அதன்...
22/05/2021

#முஸ்லிம்_கட்சிகள்_அதன்_தலைவர்களின்_காட்டுப்பாட்டில்_இல்லை
(நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப்)

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காணப்பப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை இருபதாம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகிறது.

இருபதாம் திருத்த சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் துறைமுக நகர சட்டமூலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் காட்டுப்பாட்டில்லையே உள்ளனர் என்பது புலனாகியது.

அதுவும் இந்த சட்டமூல விவாதத்தில் இதற்கு எதிராக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்காளிக்காமல் தடுத்துள்ளனர். காரணம் இவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்காளிக்க முடியாது. எனவே எதிராக வாக்ளிக்க இருந்த தலைவரையும் வாக்காளிக்காமல் தடுத்து இவர்கள் மக்களிடமும் ராஜாபக்சக்களிடமும் தப்ப முயற்சிக்கின்றனர்.

அடுத்த பக்கம் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட அக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமது தலைவரை சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை.

ஆகவே இவர்கள் அனைவரும் தற்போது ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது என தெரிவித்தார்.

 #உலகச்_செய்திஇளவரசி நூரா பின்த் அப்துல் ரஹ்மான்பெண்கள் பல்கலைக்கழகம் ரியாத்சவுதி அரேபியா12000 பாடம் கற்கும் அறைகளும்270...
22/11/2020

#உலகச்_செய்தி

இளவரசி நூரா பின்த் அப்துல் ரஹ்மான்
பெண்கள் பல்கலைக்கழகம் ரியாத்
சவுதி அரேபியா

12000 பாடம் கற்கும் அறைகளும்
2700 அதி சொகுசு அறைகளும்
33825 மாணவிகளும்
5928 ஆசிரியைகளும்
1465 ஊழியர்களும்
4 மெற்றோ இரயில்களும் சேவையில்
உள்ளதுடன்
சுமார் 26 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட
உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம்
என இது சர்வதேச அளவில் இடம்பெற்று
உள்ளது.

மாஷா அல்லாஹ்    ✨இந்த சகோதரியின் அற்புதமான முயற்சியை பாருங்கள் திறமை பிடித்திருந்தால் லைக் செய்து Share பன்னவும்.
22/11/2020

மாஷா அல்லாஹ் ✨
இந்த சகோதரியின் அற்புதமான முயற்சியை பாருங்கள்

திறமை பிடித்திருந்தால் லைக் செய்து Share பன்னவும்.

நீங்கள் உணவு சமைக்கும் தொழில் ஒன்றை ஏன் ஆரம்பிக்க கூடாது----*----*-----*-----*-----*-----*------*------*------*----*----...
17/11/2020

நீங்கள் உணவு சமைக்கும் தொழில் ஒன்றை ஏன் ஆரம்பிக்க கூடாது
----*----*-----*-----*-----*-----*------*------*------*----*----*---

சுவையான ஆரோக்கியமான உணவு தயாரிப்பு வகைகளை கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.

அற்ப இலாபத்திற்கு மக்களை ஏமாற்றி உணவில் கலப்படமும் கண்மறைப்பும் செய்யும் பல உணவகங்களுக்கு மத்தியில் நீங்கள் தனித்துவமாக தெரிய வேண்டுமெனில் இலாபம் ஒருபக்கம் இருக்க மக்களை பெறுவதற்கு சிந்தியுங்கள்.

வேண்டுமென்றே மோசடிகளை தவிர்த்து நீதியான சம்பாத்தியம் தான் கொஞ்சம் என்றாலும் வாழ்வில் நிறைவை ஏற்படுத்தும்.

இலாபம் போதாது என்று நினைப்பவன் அந்த இலாபத்திற்காக எதையும் செய்ய துணிவான். நீங்கள் சற்று சிந்தித்து தீர்மானியுங்கள்.

இலாபம் தேவை தான். நேர்மையாக எப்படி பெற வேண்டும் என்கிற ஐடியா தான் எமக்குள் வர வேண்டும். அதற்காக இரவுபகல் உழைக்க வேண்டும்.

நன்றி - ரிங்கோ சேல்ஸ்.

 #உலகச்_செய்திஉலகிலேயே மிக அதிக உயரத்தை கொண்ட மினராவை பெற்றுள்ள அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் பெரிய பள்ளிவாசல். மினராவின் உயர...
17/11/2020

#உலகச்_செய்தி

உலகிலேயே மிக அதிக உயரத்தை கொண்ட மினராவை பெற்றுள்ள அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் பெரிய பள்ளிவாசல். மினராவின் உயரம் 267 மீட்டர்

வரலாற்றுச் சாதனை படைத்த  நம் சிறுவர்களை வாழ்த்துவோம் ----*-----*-----*-----*-----*------*------*------*-----*-----*-----...
16/11/2020

வரலாற்றுச் சாதனை படைத்த நம் சிறுவர்களை வாழ்த்துவோம்
----*-----*-----*-----*-----*------*------*------*-----*-----*-----

இம்முறை வெளியான ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சயில் சிங்கள மொழிமூலம் 200 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு ஸாஹிரா வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவரான மொஹமட் அம்மார் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் அதே பரீட்சையின் தமிழ் மொழிமூலம் தோற்றிய புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையின் மாணவி செய்னா அர்ஷத் 199 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பரீட்சை முடிவுகளில் இரு மொழிகளிலும் இரண்டு முஸ்லிம் மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வரலாற்றுச் சாதனையாகும். இம்மாணவர்களுக்கும் இப்பரீட்சையில் சித்தியடைந்த, சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

நன்றி-

✍ #கலைமணாளன் 2020

இலங்கையில் 5 தர புலமை பரீட்சையில் முதலிடம்-----*-----*-----*-----*-----*-----*----*-----*-----*-----*----*----இம்முறை நட...
16/11/2020

இலங்கையில் 5 தர புலமை பரீட்சையில் முதலிடம்
-----*-----*-----*-----*-----*-----*----*-----*-----*-----*----*----

இம்முறை நடந்து முடிந்த தரம் 5 புலமை பரீட்சையில் புத்தளம் மாவட்ட சாஹிரா ஆரம்ப பாடசாலையை சேர்ந்த செய்னா அர்ஷாத் 199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.

இவர் சாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியை
மஹ்தியா அவர்களின் மகளாவார்.

இவர் VLankatv சார்பாக வாழ்த்துக்கின்றோம்!

 #கண்_கலங்க_வைத்த_பதிவுஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான உண்மை  பதிவு!அணைத்து ஆண் பெண் அணைவரும் படிங்க          ...
10/11/2020

#கண்_கலங்க_வைத்த_பதிவு

ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான உண்மை பதிவு!

அணைத்து ஆண் பெண் அணைவரும் படிங்க

இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும் மீறி கடவுளிடம் மன்றாடி இருக்கிறேன்.

டெலிவரி(பிரசவ) அறையில் வலியால் துடிக்கும் பெண்களின் உணர்வை வேதனையை துடிப்பை யாராளும் விவரிக்க முடியாது அது ஒரு மறு பிறவிக்கான போராட்டம்.

இது தனது குழந்தைக்காக 9 மாதங்கள் அவர்கள் தாங்கியது. தமக்காக இதில் ஒரு நாளைக்கூட அவர்கள் செலவழித்ததில்லை.

இன்று நான் வேதனையுடன் அழுதேன், ஏனெனில் நான் ஒரு பெண்மணியை (கர்ப்பிணியை) இழந்துவிட்டேன், இது போன்ற நேரங்களில் வாழ்க்கை வெறுத்துவிடுகிறது. கடவுள் வேறுமாதிரி முடிவு எடுத்துவிடுகிறான். தாங்க முடியவில்லை காரணம்

இந்த பெண்ணின் கதை மிகவும் வேதனையாக இருக்கிறது? 14 வருடங்களாக அவள் மலடிஎன்று தூற்றப்பட்டு குழந்தை இன்றி இருந்தாள்! நாம் IVF முயற்சி மற்றும் பல நவீன முறை என நிறைய வழியாக முயற்ச்சி செய்து இறுதியாக கடவுளின் அருளால் அவர் கர்ப்பம் தரித்தாள் இதை விஞ்ஞானம் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று தான் நான் கூறுவேன் ஏனென்றாள்

அவர் கருப்பை நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் என பல தாக்கத்தை கொண்டிருந்த போதிலும், அவள் கர்ப்பமாக இருந்தாள்,

அவளது கவலை உருக ஆரம்பித்தது, எல்லாம் சரியாக இருந்தது, அது அவளுக்கு மறுவாழ்க்கைக்கான ஆரம்பம், அவர் தனது தாய்மையை உலகிற்கும் உறவினருக்கும் உணர்த்திய மகிழ்ச்சியில் இருந்தார்.

குழந்தை இல்லாதவள் என தன்னை சபித்தவர்களை நினைத்து சிரித்தாள்... அவள் வைத்தியரான என்னை கடவுளாக பார்த்தாள்... ஆனால் நான் கடவுளை தான் கடவுளாக பார்த்தேன்...

9 மாதங்களுக்குப் பிறகு, பிரசவ வலி எடுக்க அவளுடைய கணவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், எனக்கு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வந்தது
நான் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு மகிழ்வுடன் அவளிடம் சென்றேன்.

7 மணி நேரம் ஆகியும் சுகப்பிரசவம் ஆகவில்லை , அவள் வேதனையால் துடித்தாள் அது மிகவும் வேதனையாக இருந்தது, சுகப்பிரசவ சாத்தியக்கூறு விலகியது.. எனவே அவளைத் அறுவைச்சிகிச்சை (சிசேரியன்) செய்ய நாங்கள் தீர்மானித்தோம்.

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து அவளின் மார்பில் வைத்தோம் ... கைகலால் அணைத்துக்கொண்டவள் எங்களை கண்ணீரோடு பார்த்து புன்னகைத்தாள்... அடுத்த நிமிடம் அவள் உயிர் பிரிந்துவிட்டது.. கைகள் குழந்தையை அணைத்தவாறே இருந்தது.

நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை இழந்து விட்டோம். ஆனால் குழந்தை உயிரோடு இருந்தது. அவள் இறப்பதற்கு முன், அவள் கையில் குழந்தையை வைத்திருந்தாள். அவள் இறக்கப்போவதை அவள் உணர்ந்திருந்தாள்... புன்னகையோடு கண்ணீருமாக எங்களைப்பார்க்கும் போதே என்னால் உணர முடிந்தது...

அவளின் கண்ணீர் நிச்சயமாக அவளின் மரணத்திற்காக அல்ல. அவளின் குழந்தை நல்லபடியாக உள்ளது என்பதற்காகவே.

தன் உடல் நிலை மோசமானது என்றுதெரிந்தும் மரணம் நடக்கலாம் என்று தெரிந்தும் குழந்தைக்காக தன் உயிரை அவள் பணயம் வைத்தாள்...

இதை கேள்விப்பட்டபோது, ​​அவளுடைய கணவன் என்னை புண்படுத்தினான் மிக கவலையாக கதறி அழுதான் திட்டினான்... , இறுதியில் கணவன் மயங்கிவிட்டார்,

அவர்களுடைய மகிழ்ச்சியான நாள் இருளாக மாறிவிட்டது. இன்றைய தினம் ஒரு புதிய வாழ்க்கையை வாழ அவள் ஆயத்தமாக இருந்தாள்.

சகோதரர்களே
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஏனென்றால் பிரசவ காலத்தில் அவர்கள் உயிரைக் காப்பாற்ற மரண பள்ளத்தாக்கை கடந்து செல்கின்றனர். உங்கள் மனைவியை மரியாதை செய்யுங்கள்!

9 மாதங்களுக்கு உங்கள் குழந்தையை அவள் வயிற்றில் வைத்திருப்பது வேடிக்கையானது அல்ல, உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை அவளுக்கு வேறு வேலைகள் இல்லை.

இந்த பதிவை படிக்கும் நோயற்ற வாழ்வு குழு உறவுகள் கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க தயவுசெய்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அன்புள்ள கணவர்மார்களே, உங்கள் மனைவியை மதியுங்கள், ஏனென்றால் அவர் உண்மையிலேயே உயிர் கொடுப்பவர். உயிரையும் கொடுப்பவர்..!!

பெண்களின் தியாகம் படித்தேன் பதிவு செய்துள்ளேன் ..!!

நன்றி-கிழக்கு ஓசை

1400 ஆண்டுகளுக்கு முந்தைய புனித குர்ஆன் முஸ்லீம்கள் அனைவரும் "ஷேர்" செய்ய வேண்டும்!
08/11/2020

1400 ஆண்டுகளுக்கு முந்தைய புனித குர்ஆன் முஸ்லீம்கள் அனைவரும் "ஷேர்" செய்ய வேண்டும்!

 #உலகச்_செய்தி #இவருக்காக_நாமும்_பிராத்திப்போம்தன் நாட்டுக் கடனினை செலுத்த முடியாமல  தவிர்க்கும் பல நாட்டின் தலைவர்கள் இ...
08/11/2020

#உலகச்_செய்தி

#இவருக்காக_நாமும்_பிராத்திப்போம்

தன் நாட்டுக் கடனினை செலுத்த முடியாமல தவிர்க்கும் பல நாட்டின் தலைவர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் சோமாலியாவின் கடனை, செலுத்த முன்வந்தது துருக்கி.

மாஷா அல்லாஹ் சூபிகளின் நாடு

மற்றைய நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழும் தலைவரினை அதிகமாக பகிருங்கள்

 #உலகச்_செய்தி #அமெரிக்காவின்_46வது_ஜனாதிபதியாக_77_வயதுடைய_ஜோ_பைடன்_தெரிவானார்.-உத்தியோகபூர்வ முடிவு-290 உறுப்பினர்களை -...
08/11/2020

#உலகச்_செய்தி

#அமெரிக்காவின்_46வது_ஜனாதிபதியாக_77_வயதுடைய_ஜோ_பைடன்_தெரிவானார்.
-உத்தியோகபூர்வ முடிவு-

290 உறுப்பினர்களை - இவர் பெற்றுள்ளார்.

2021 - ஜனவரி 20 ஆம் திகதி - ஜனாதிபதியாக
பதவி ஏற்பார். இந்த திகதியில் தான் பதவியேற்க வேண்டும் என்று - அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை - ஜனவரி 20 ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் , தனிப்பட்ட ரீதியில் பதவியேற்பர். ஆனால் , அடுத்த நாள் 21 ஆம் திகதி மக்கள் முன்னிலையில் பதவியேற்பு இடம்பெறும்.

அமெரிக்க - முன்னாள் ஜனாதிபதி , பராக் ஒபாமா - 2 வது முறையாக ஜனாதிபதியாக தெரிவானபோது 21 - 01-2013 அன்று பதவியேற்றார்.

V Lanka சார்பாக நாமும் வாழ்த்துவோம்

 #தென்னையில்_அதிக_தேங்காய்களை_பெறுவது_எப்படி?தென்னையில் உள்ளூர் (உயரமான இனம் ) தென்னைகளுக்கு நடுகை  செய்தது முதல் ஒரு வர...
07/11/2020

#தென்னையில்_அதிக_தேங்காய்களை_பெறுவது_எப்படி?

தென்னையில் உள்ளூர் (உயரமான இனம் ) தென்னைகளுக்கு நடுகை செய்தது முதல் ஒரு வருடத்திற்கு
மாட்டெரு 10 கிலோ,
யூரியா 325 கிராம்,
சூப்பர் (TSP) மற்றும் பொட்டாஷ்(MOP) தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.5 கிலோ இட வேண்டும்.

2 வருட கன்றுக்கு
மாட்டெரு 20 கிலோ,
யூரியா 650கிராம்,
சூப்பர் (TSP) மற்றும் பொட்டாஷ்(MOP) தலா
1கிலோ,
வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும்
என 5 வருடங்கள் வரை பசளை வேண்டும்.

மற்றைய (உயரமான மற்றும் குட்டை ) இனங்கள் தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு மாட்டெரு 15 கிலோ,
யூரியா 500 கிராம்,
சூப்பர் (TSP)375 கிராம்,
பொட்டாஷ் (MOP) 750 கிராம்,
வேப்பம்புண்ணாக்கு 1.5 கிலோவும்,

இரண்டு வருட கன்று ஒன்றுக்கு மாட்டெரு 30கிலோ,
யூரியா 1கிலோ,
சூப்பர் (TSP)750கிராம்,
பொட்டாஷ் (MOP)1.500கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும்
என மூன்று வருட, நான்கு வருட, ஐந்து வருட தென்னை நாற்றுகளுக்கு பரிந்துரைப்படி உரம் இட வேண்டும்.

மேற்கண்ட உர பரிந்துரை அளவினை சம பங்காக பிரித்து வருடத்தில் இரு முறை இட வேண்டும்.

அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். மேற்கண்ட பசளைகளை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண் சத்து (mg,B,zn) உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும்

இவ்வகை பசளைகளை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

முறையாக பசளை இடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை கண்டிப்பாக எடுக்க முடியும்.

#இது_ஒரு_தென்னை_ஆராய்ச்சியாளர்களின்_பரிந்துரை

மற்றவர்கள் பயன் பெறும் வகையில் அதிகமாக பகிரவும்.

 #சீனி_வியாதிக்காரா்களுக்கு_ஏற்படும்_குழிப்புண்களுக்கு_கால்களை_விரல்களை_வெட்ட_வேண்டாம்.   காப்பாற்றுவோம்.!சீனி நோயால் பா...
07/11/2020

#சீனி_வியாதிக்காரா்களுக்கு_ஏற்படும்_குழிப்புண்களுக்கு_கால்களை_விரல்களை_வெட்ட_வேண்டாம். காப்பாற்றுவோம்.!
சீனி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சீனி வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி .

இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்க்கு கண்கண்ட மருந்து .
ஆவாரம் இலை.
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள் விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிா்ந்து பலாின் கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!
நன்றி....

"படித்ததில் நல்ல நாட்டு வைத்திய முறை இதனை அதிகமாக பகிருங்கள்"

 #நேற்றுடன்_உயர்தரப்_பரீட்சைகள்_நிறைவு..!கொரோனா அச்ச நிலைக்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை எழுதி முடித்த மாணவர்கள்...
07/11/2020

#நேற்றுடன்_உயர்தரப்_பரீட்சைகள்_நிறைவு..!

கொரோனா அச்ச நிலைக்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை எழுதி முடித்த மாணவர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

குறிப்பாக மேற்பார்வையாளர்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும்,

கொரோனா தொற்றோடும் பரீட்சை எழுதிய மாணவர்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

அம்மாணவர்கள் பூரண சுகம் பெற்று மேலும் மேலும் பல முன்னேற்றங்களை அடைய VLanka சார்பாக பிரார்த்திப்போம்...

 #தண்டனை_காணாது_இருந்தும்_பரவாயில்லைமூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த  மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம...
03/11/2020

#தண்டனை_காணாது_இருந்தும்_பரவாயில்லை

மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவு.

திருகோணமலை

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இவ்வுத்தரவை நேற்று திங்கட்கிழமை (02) பிறப்பித்துள்ளார்.

2015ம் ஆண்டு 4 மாதம் 14ம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது.
இவ்வழக்கு தொடர்பில் 2019ம் ஆண்டு நான்காம் மாதம் 30ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் ஆகிய கணவன் கூட தனது மனைவியின் விருப்பம் இல்லாது பலாத்காரமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் என சட்டம் தெரிவிக்கின்ற நிலையில் தனது திருமணம் செய்த மனைவியை போதையை ஊட்டி சக நண்பர்களுக்கு கூட்டு வன்புணர்வுக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்காக மூதூர்- சிராஜியா நகர் பகுதியைச் சேர்ந்த கணவரான நஜீர் நாபிர் (28வயது) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்குமாறும் அரச செலவாக 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத கால கடூழிய சிறை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இதேவேளை மற்றைய எதிரியான மூதூர் சின்ன நகர் பகுதியைச் சேர்ந்த பைசர் பாசிம் (23வயது) என்ற குறித்த எதிரிக்கு சம்பவம் நடைபெறும் போது 18 வயது 24 நாட்கள் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து இவருக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறும் 5,000 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.

அத்துடன் மூன்றாம் எதிரியான மூதூர் ஆலிம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் தாரிக் (37 வயது) பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் பதினைந்து வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் 10 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.
அத்துடன் 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் குறித்த எதிரிக்கு ஒரு மாதகால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திறந்த நீதிமன்றில் உத்தரவிட்டார்.

நன்றி :- அமீர் கான்

 ி_நேர_போராட்டத்தின்_பின்னர்_மீட்க்கப்பட்ட_குழந்தை_அய்தா #யா_அல்லாஹ்!  #இந்த_சிறுமியை_பாதுகாத்து_அருள்புரிவாயாக!துருக்கி...
03/11/2020

ி_நேர_போராட்டத்தின்_பின்னர்_மீட்க்கப்பட்ட_குழந்தை_அய்தா

#யா_அல்லாஹ்! #இந்த_சிறுமியை_பாதுகாத்து_அருள்புரிவாயாக!

துருக்கியில் கடந்த வாரம் இடம் பெற்ற பூமி அதிர்வில் சிக்குண்ட குழந்தையை மீட்க்க போராடும் உள்ளத்தை உருக்கும் காட்சி.

91 மணி நேரத்தின் பின்னர் குழந்தை அய்தா பத்திரமாக மீட்க்கப்பட்டாள் - அல்ஹம்து லில்லாஹ்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய பொழுதிலும் குழந்தை தனத்துடன் கைகளை பற்றிக் கொள்ளும் மழலையின் நடத்தைகள் கண் கலங்க வைக்கிறது. அல்லாஹ் இந்த சிறுமிக்கு பூரண உடல், உள நலத்தை கொடுக்க பிரார்திப்போமாக!

நன்றி:-ரஸ்மின் MISc

கிண்ணியா வாழ் உறவுகளே! இரத்த மாதிரிக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வோம்.IN-HOUSE BLOOD DONATION -----*------*------*...
03/11/2020

கிண்ணியா வாழ் உறவுகளே!
இரத்த மாதிரிக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வோம்.
IN-HOUSE BLOOD DONATION
-----*------*------*------*-------*-------*------*------*------*-----

நாட்டின் பல பாகங்களிலும் Covid-19 இன் தாக்கம் தீவிரம் அடைந்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
(கிண்ணியா தவிர்த்து திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய இடங்களும்).

இக்காலப்பகுதியில் இரத்த தான முகாம்களை பெரிய அளவில் சுகாதார வழி முறைகளை பின்பற்றி நடாத்துவது சிரம மானதாக அமையும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இருந்தபோதிலும் வைத்தியசாலைகளில் வழமையாக இடம்பெறும் சத்திர சிகிச்சை மற்றும் மகப்பேற்று செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் இரத்த வங்கிகளில் இரத்த மாதிரிகளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிண்ணியா தள வைத்தியசாலை இரத்த வங்கியிலேயே இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நாளை(04/11/2018-புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரம் காலை 9.00 மணி.

நன்றி:-
Dr Hilmy Mohaideen Bawa
Dr Sithara Sahfan
MO Blood Bank
BH Kinniya.

 #பல்கலைக்கழக_வறிய_மாணவர்களுக்கு  #உதவும்_முயற்சியில்_சேர்ஃப்_லங்கா  #தொண்டு_நிறுவன_ஸ்தாபகரும்  #பணிப்பாளருமான_இஞ்ஜினியர...
30/10/2020

#பல்கலைக்கழக_வறிய_மாணவர்களுக்கு #உதவும்_முயற்சியில்_சேர்ஃப்_லங்கா #தொண்டு_நிறுவன_ஸ்தாபகரும் #பணிப்பாளருமான_இஞ்ஜினியர் #இஹ்ஸான்_ஜவாஸன்

கடந்த காலங்களில் கல்வி தொடர்பான பல்வேறுபட்ட உதவிகளை தேவையுடைய மாணவர்களுக்கு உதவி செய்து வரும் சேர்ஃப்-லங்கா தொண்டு நிறுவன ஸ்தாபகரும் பணிப்பாளருமான Eng.இஹ்ஸான் ஜவாஸன் தற்போது பல்கலைக்கழக வறிய மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் பல்வேறு முன்னெடுப்புகளை செய்யவுள்ளார்.

இதன் முதல் கட்டமாக தற்போது பல்கலைக்கழகத்தில் முதலாவது வருடத்தில் உள்ள வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

அதிலும் குறிப்பாக தோப்பூர்-மூதூர் பிரதேசத்தை மையமாக கொண்டு முதல் கட்டமாக திருகோணமலை மாவட்ட மாணவர்களின் உதவிகளுக்குரிய முயற்சிகள் செய்யப்பட்டவுடன் ஏனைய மாவட்ட மாணவர்களுக்குமான முயற்சிகள் செய்யப்படவுள்ளன.

தேவைக்கு ஏற்ப பிரதேச ரீதியான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

பதிவுகளுக்கு:
உங்களது Name, NIC No, Address, University, Course/Faculty ஆகியவற்றை 075-32 32 100 இற்கு SMS செய்யலாம்.

மேலதிக தகவல்களுக்கு
075-32 32 100 (SMS)

குறிப்பு:
இந்த வேலைத்திட்டத்திற்கு நிதியுதவி, ஒத்துழைப்பு செய்ய நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலினை அதிகமாக பகிரவும்.

https://www.facebook.com/SerfLankaNGO

 #உலகச்_செய்திதுருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 பதிவாகியுள்ளது:முதல்கட்ட தகவல்கள் படி 8 பேர் பலி......
30/10/2020

#உலகச்_செய்தி

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 பதிவாகியுள்ளது:

முதல்கட்ட தகவல்கள் படி 8 பேர் பலி.....

202 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர்....

மீட்பு பணி நடைபெறுகிறது......

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when VLankatv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VLankatv:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share