Kubrick Team Production

  • Home
  • Kubrick Team Production

Kubrick Team Production An Independent Film Production

"Strictly for 18+"Link👉 - https://youtu.be/oBT5L3l93dM"எல்லையற்று விரிகிறதோர் இரவு (ANEII) (2024)" Short Film (15 mins)....
04/08/2024

"Strictly for 18+"
Link👉 - https://youtu.be/oBT5L3l93dM
"எல்லையற்று விரிகிறதோர் இரவு (ANEII) (2024)" Short Film (15 mins).
Link👉 - https://youtu.be/oBT5L3l93dM
Cast
Logananthan Suman
Selvaraj Leela
Jenoshan Jeyaratnam
Ramachandran Kirishanth

Crew
Director - Soban Velrajah
Screenplay - Soban Velraja & Pirashanth Puvaneswaran
DOP - Rishi Selvam
Camera - Tamil Creators
Assistant Director - Pirashanth Puvaneswaran
Second Assistant Director - Rj Benaya
Editor - Dhilip Loganathan
Sound Recordist - Vakeesan Ananth
Production Manager - Kanth Ruban
Foley & Sound Mix - Piranavan Buvanendran

Festival Selection -
“Officially Selected in International Section” 15th IDSFFK of International Film Festival of Kerala - IFFK Official
“Best National Short Film” Nominated at Jaffna International Cinema Festival
“Most Gender Sensitive Film Award” at Agenda 14

மீண்டும் கேரளாவில் 🥳🕺WhiteFox Studios  மற்றும் Kubrick Team Production  இணைந்து தயாரித்து, Soban Velrajah இயக்கத்தில் உர...
27/07/2024

மீண்டும் கேரளாவில் 🥳🕺
WhiteFox Studios மற்றும் Kubrick Team Production இணைந்து தயாரித்து, Soban Velrajah இயக்கத்தில் உருவான "தத்தரசமயம் (Crisis)" குறும்படம், இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்படவிழாவான International Film Festival of Kerala - IFFK Official வின் பகுதியாக நடக்கும் 16th International Documentary & Short film Festival of Kerala (IDSFFK)விற்கு, "International Fiction" பகுதியில், இலங்கை சார்பில், உத்தியோகபூர்வமாக(Officially Selected) தெரிவாகியுள்ளது.

போன வருடமும் இலங்கை சார்பாக, 15th IDSFFKயில் எங்களுடைய "எல்லையற்று விரிகிறதோர் இரவு, A Night Expands Into the Infinite" குறும்படம் தெரிவாகியிருந்தது.

International Film Festival of Kerala - https://www.facebook.com/share/p/MLALpo7UwYCteECk/?mibextid=xfxF2i

Achievements of MAATHIRUKAI SHORT FILM13th Agenda 14 Short Film FestivalColombo, Sri Lanka - 2023Nominated for Best Shor...
01/01/2024

Achievements of MAATHIRUKAI SHORT FILM

13th Agenda 14 Short Film Festival
Colombo, Sri Lanka - 2023
Nominated for Best Short Film
Special Jury Mention for 'Outstanding Performance'
Selvaraj Leelawathy for her performance in 'Maathirukai'

9th Jaffna International Cinema Festival - 2023
OFFICAL SELLECTED

National Youth Short Film Festival - 2023
Most Promising Newcomer award
Nominated for Best Short Film
Nominated for Best Cinematography

கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற National Youth Film Festival of Sri Lanka நிகழ்வில் எமது மாதிருகை திரைப்படத்துக்காக ...
23/12/2023

கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற National Youth Film Festival of Sri Lanka நிகழ்வில் எமது மாதிருகை திரைப்படத்துக்காக 'MOST PROMISING NEWCOMER' என்னும் விருதினையும் சான்றிதழினையும் அதன் இயக்குனர் பெற்றுக்கொண்டார்.
அதேநேரம் அந்நிகழ்வில் இத்திரைப்படமானது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவிக்கான போட்டிப் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

Director received the 'MOST PROMISING NEWCOMER' award and certificate for our 'Maathirukai' short film at the National Youth Film Festival of Sri Lanka held at Royal College Colombo. 22.12.2023
At the same time, the film was not nominated in the categories of Best Film and Best Cinematography.

Kubrick Team Production தயாரிப்பில் உருவான குறும்படம், "எல்லையற்று விரிகிறதோர் இரவு சிறந்த குறுந்திரைப்படம் என்னும் பரிந...
23/12/2023

Kubrick Team Production தயாரிப்பில் உருவான குறும்படம், "எல்லையற்று விரிகிறதோர் இரவு சிறந்த குறுந்திரைப்படம் என்னும் பரிந்துரையினை யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக்கொண்டது. அதற்கான சான்றிதழினை இயக்குனர் இறுதி நிகழ்வில் பெற்றுக்கொண்டார்.

Kubrick Team Production short film , 'A Night Expands into the Infinite' was Nominated for National Best Short Film at Jaffna International Cinema Festival. Director received
a Certificate that final Award Ceremony

19.12.2023

13th Agenda 14 Short Film FestivalColombo, Sri Lanka11.12.2023எமது  Kubrick Team Production, தயாரிப்பில் உருவான "எல்லையற...
13/12/2023

13th Agenda 14 Short Film Festival
Colombo, Sri Lanka
11.12.2023

எமது Kubrick Team Production, தயாரிப்பில் உருவான "எல்லையற்று விரிகிறதோர் இரவு", கொழும்பில் நடைபெற்ற 13th Agenda 14 ல் "MOST GENDER SENSITIVE FILM" விருதினையும், "BEST CINEMATOGRAPHER"க்கான விருதுப் பரிந்துரையையும் பெற்றுக் கொண்டது.
Our Kubrick Team Production, short film "A NIGHT EXPANDS INTO THE INFINITE" won the "MOST GENDER SENSITIVE FILM" award and was Nominated for "BEST CINEMATOGRAPHER" at the 13th Agenda 14 held in Colombo.

அதே போல Kubrick Team Production தயாரிப்பில் உருவான மற்றுமொரு குறும்படமான 'மாதிருகை' அந்நிகழ்வில் சிறந்த குறும்படத்துக்கான போட்டிப்பிரிவில் விருதுப்பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும் அப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியமைக்காக செல்வராஜ் லீலாவதி அவர்கள் நடுவர் குழுவினரால் தெரிவு செய்து கௌரவிக்கப்பட்டார்.

Kubrick Team Production, Another short film 'MAATHIRUKAI'
Best Short Film Catagory Jury Award Nominated. and Special Jury Mention for Outstanding Performance Selvaraj Leelawathy for her performance in that short film.

Congratulations to the Filmmakers...

எங்களுடைய Kubrick Team Production குறும்படம் ‘மாதிருகை’, Jaffna International Cinema Festival மற்றும் Agenda 14 Short Fi...
02/12/2023

எங்களுடைய Kubrick Team Production குறும்படம் ‘மாதிருகை’, Jaffna International Cinema Festival மற்றும் Agenda 14 Short Film Festival - 2023 ஆகியவற்றில் தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Our Kubrick Team Production's Short film ‘MAATHIRUKAI’ is Officially Selected for the ‘National Short Film Competition Section’ at Jaffna International Cinema Festival and Agenda 14 Short Film Festival 2023.
Cast
Selvaraj Leela
Robinsha subashan
K. Saththiyaseelan

Supporting Cast
K.Kanistan
R.Kantharuban
Piratheepa
Ramachandran Kirishanth

Crew
Cinematography - Sobanasivan.v
1st Ac - Ramachandran Kirishanth
Editor - Dhilip Loganathan
Colour Grading - Rishi Selvam
Sound Design - Pirashanth
Director - Puvaneswaran Pirashanth

எங்களுடைய Kubrick Team Production குறும்படம் "எல்லையற்று விரிகிறதோர் இரவு", Jaffna International Cinema Festivalலில், "த...
02/12/2023

எங்களுடைய Kubrick Team Production குறும்படம் "எல்லையற்று விரிகிறதோர் இரவு", Jaffna International Cinema Festivalலில், "தேசிய ரீதியான போட்டிக்கும்" மற்றும் Agenda 14 குறும்பட திரைப்படவிழாவுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Our Kubrick Team Production's Short film "A NIGHT EXPANDS INTO THE INFINITE" is Officially Selected for the "National Short Film Competition Section" at Jaffna International Cinema Festival and Agenda 14 Short Film Festival 2023.
Cast
Logananthan Suman
Selvaraj Leela
Jenoshan Jeyaratnam
Ramachandran Kirishanth

Crew
DOP - Rishi Selvam
Assistant Director and Co-Writer - Pirashanth Puvaneswaran
2nd Assistant Director - Rj Benaya
Editor - Dhilip Loganathan
Live Sound Recordist - Vakeesan Ananth
Production Manager - Kanth Ruban
Foley & Sound Design - Piranavan Buvanendran(A1 Music)

எங்களுடைய 'Kubrick Team Production' தயாரிப்பில்  'மாதிருகை' மற்றும் 'எல்லையற்று விரிகிறதோர் இரவு', ஆகிய குறும்படங்கள், இ...
15/11/2023

எங்களுடைய 'Kubrick Team Production' தயாரிப்பில் 'மாதிருகை' மற்றும் 'எல்லையற்று விரிகிறதோர் இரவு', ஆகிய குறும்படங்கள், இலங்கையில் நடைபெற இருக்கும் 'National Youth Film Festival of Sri Lanka' வில் இறுதிசுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Our Kubrick Team Production's Short films MAATHIRUKAI and A NIGHT EXPANDS INTO THE INFINITE were Shortlisted for the National Youth Film Festival of Sri Lanka 2023.

எங்களின் Kubrick Team Production குறும்படம் "எல்லையற்று விரிகிறதோர் இரவு", 4 ஆகஸ்ட் 2023 அன்று "கேரள மாநில திரைப்பட வளர்...
03/08/2023

எங்களின் Kubrick Team Production குறும்படம் "எல்லையற்று விரிகிறதோர் இரவு", 4 ஆகஸ்ட் 2023 அன்று "கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் கைரளி ஸ்ரீ நிலா திரையரங்கு திருவனந்தபுரம்" இல் காலை 11.00 மணிக்கு 15th International Documentary and Short Film Festival of Keralaவினால் திரையிடப்படுகிறது.
Our Kubrick Team Production Short film "A Night Expands into the Infinite", will be Screening at "Kerala State Film Development Corporation Kairali Sree Nila Theatres Thiruvananthapuram" at 11.00 AM, on 4th August 2023 by 15th International Documentary and Short Film Festival of Kerala (International Film Festival of Kerala - IFFK Official)
Official Website - https://idsffk.in/filmcategorylist/MTIwODI0ODAuNTI=
Thank you so much guys for being Supportive All the Time.

Our Kubrick Team Production short film "A Night Expands into the Infinite" was officially Selected in the "International...
03/08/2023

Our Kubrick Team Production short film "A Night Expands into the Infinite" was officially Selected in the "International section (Out of Competition Section)" on behalf of Sri Lanka along with short films from America, Iran, Canada, Italy, China, and some other countries in the prestigious "15th International Documentary & Short Film Festival of Kerala" in India.
எங்களுடைய Kubrick Team Production "எல்லையற்று விரிகிறதோர் இரவு" குறும்படம், இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாவான, "15th International Documentary & Short Film Festival of Keralaவில்", அமெரிக்கா, ஈரான், கனடா, இத்தாலி, சீனா மற்றும் சில நாடுகளின் குறும்படங்களோடு, இலங்கையின் சார்பாக, "International section (Out of Competition Section)"க்கு உத்தியோக பூர்வமாக தெரிவுசெய்யபட்டுள்ளது.
Facebook - https://web.facebook.com/photo/?fbid=834529834700545&set=pcb.834530711367124
Instagram - https://www.instagram.com/p/CvXL0bcvTTA/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

கொட்பு விமர்சனம் - 05'குப்றிக்’ ப்ரோடக்க்ஷன்ஸில் இருந்து  4:3 ஃபார்மட்,  கருப்பு வெள்ளை பாணியில் (style) பார்க்கக் கிடைத...
22/01/2023

கொட்பு விமர்சனம் - 05

'குப்றிக்’ ப்ரோடக்க்ஷன்ஸில் இருந்து 4:3 ஃபார்மட், கருப்பு வெள்ளை பாணியில் (style) பார்க்கக் கிடைத்த இரண்டாவது திரைப்படம் ‘கொட்பு’. முதலில் பார்த்த ‘பற’ (Fly) யும் என்னை வெகுவாக ஈரத்திருந்தது. தாம் வாழும் சமூகத்தின், சூழலின் எல்லா விவரங்களையும் (details) அதி துல்லியமாக, முழு வர்ணத்தில் காட்சிப்படுத்திவிட வேண்டும், பிரதிநிதித்துவப் படுத்தி விடவேண்டும் என்கிற ஒரு கடப்பாடு பலரையும் பிடித்தாட்டுகிற ஒன்று. குறிப்பாக புகுநிலை இளையோரிடம் இந்த ஆரவக்கோளாறு சற்று அதிகமாகவே இருக்கும் (தெரிதாவின் archive fever மாதிரி ஒரு வித representation fever?). இந்த ஒரு ethnographic burden போக்கில் இருந்து விலகி, தனியாக இயங்க முடிகிற, காத்திரமான ஒரு சினிமா மொழியை வளர்த்தெடுக்கும் பரீட்சார்த்த முயற்சிகளாக இக்குறும்படங்ககளை நான் பார்க்கிறேன்.

வன்முறையை அதன் சமூகச் சூழலில் இருந்து விலக்கி உள்வயமாக்கி அணுகுதல் என்பதற்கு ஈழச் சூழலில் முன்னோடிகள் கிடையாது. இந்த வகையில் ‘கொட்பு’ புத்துணர்வூட்டக்கூடிய அனுபவமாக இருந்தது. அதனதன் தனித்த அக உலகங்களை நேர்மையாக விசாரிப்பதற்கும் விதந்தோதுவற்கும் இடையிலான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் ‘கொட்பு’வில் repetitive ஆக வரும் சில மனோரதியமான சித்தரிப்புகளைக் குறைக்க முயலலாம். தனிமை,குடி/புகை போன்ற விடயங்களில் ஒருவித stylistic investment தூக்கலாகத் தெரிந்தது.

படத்தின் ஒலி வடிவமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். குறிப்பாக இறுதிக் காட்சியில் உடல் ரீதியிலான தாக்குதல் நடத்தப்படும் போது வெட்டுச் சத்தங்கள். இதற்காக Folly sound libraryகள் உண்டு. அவற்றில் இருந்து தேவையான ஒலிகளை தேடிப் பெற்றுகொண்டிருக்க முடியும். அல்லது அதை செய்யக்கூடிய sound artist களை freelance ஆக hire பண்ணி ஒலிவடிவமைப்பு செய்திருக்கலாம். அதற்கு அவ்வளவு செலவு ஆகாது. அதைப்போல, subtitle மொழிபெயர்ப்பில் கொஞ்சம் கூடுதல் சிரத்தை எடுக்கலாம். எடுக்க வேண்டும். அதிலும் கவனம் செலுத்துங்கள்.
தனித்துவம்/signature தொடர்பான commitment எமது சூழலில் அவசியம். அதற்கான கட்டிறுக்கத்தை 4:3 formatஇல், எடிட் செய்திருக்கிற விதத்தில், கருப்பு வெள்ளையில் காண்கிறேன். மிகவும் உற்சாகமூட்டக்கூடிய மாற்றம் இது. இன்னமும் refine செய்யப்பட்டு கூர்மையான சினிமா அணுகுமுறை கைகூடி வர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

- ஹரி இராஜலட்சுமி
கலைஞர், எழுத்தாளர், விமர்சகர்.

படத்தின் இணைப்பு 👇
https://youtu.be/pchdebqLLmc

கொட்பு விமர்சனம் - 4அன்பின் தம்பி, தங்களது படத்தைப்பற்றிய எனது குறிப்புகள்:படம் அருமையாகவும் ஆழமாகவும் வந்துள்ளது. மனமார...
21/01/2023

கொட்பு விமர்சனம் - 4

அன்பின் தம்பி,
தங்களது படத்தைப்பற்றிய எனது குறிப்புகள்:

படம் அருமையாகவும் ஆழமாகவும் வந்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்! இயக்குனர் மற்றும்'குப்ரிக்கின்' பெயருக்கு நியாயம் செய்திருக்கும் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

படத்தின் கதையாடலுக்கு ‘எது நியாயம்' என்கிற கேள்வியே மையமானது. காணாமற்போன குடும்ப உறுப்பினர்களைச் சுட்டும் தொடர்கொலைகளைப் பற்றிய குறிப்புகளும் அதிலிருந்து விலகி ஆயினும் அதை அடித்தளமாக்க் கொண்ட மர்மமான அந்த அசாதாரண சூழலும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. அங்கே மாட்டிக்கொள்ளும் குருவி மற்றும் பறக்க யத்தினிக்காமல், அங்கே எதிர்பார்க்கக்கூடிய வன்முறைக்கு தன்னை இயந்து அளிக்கும் அந்த புதிர்கள் நிறைந்த இளைஞர் நம்மை ஆக்கிரமிக்கிறார்கள்!

வன்முறையின் மூலம் எளிதாக பதிலில்லாது தனித்து விடப்பட்டும் தனிமையை அணுக்கமானதாக உணர்வதாக அறிவிக்கும் மனதின் மூலம் நீதியின் ஸ்திரத்தன்மையை கட்டவிழ்த்து எதிர்மறை கதாநாயகனின் தொடர்கொலை மனப்பாங்கின் பிறழ்வு நிலையை நம்மை அனுபவிக்கச் செய்வதில் படம் வெற்றிபெற்றுள்ளது.

எனது வாழ்த்துகள்!
இது ஒரு தேர்ந்த இயக்குனரின்/குழுவினரின் படம்! பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தெலூஸ் 'schizoid' என்கிற ஒரு தத்துவார்த்த ஆக்கபூர்வ மனநிலையை முன்வைக்கிறார். இருண்ட கதாநாயகன் வெகு அருகிலிருந்தாலும் காத தூரத்திலேதான் இருக்கிறான்.

படத்தினை வன்முறையுடன் முடிக்காமல் பறக்கும் பட்சியுடன் முடித்திருக்கலாம். நீதியைப் போலவே வன்முறையும் கடைசித் தருணத்தில் நிறைவற்றதாகவே உள்ளது. குருவியின் அக்னி குஞ்சின் துடிப்பை அடக்க அருகதையற்றதாக இருக்கிறது — கிடைக்காத (தெரிதிய நோக்கில்) என்றும் நாளை வரும் நீதியைப்போலவே!

- சொர்ணவேல் ஈஸ்வரன்
இயக்குனர், பேராசிரியர் (அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழகம்)

குறும்படத்தின் இணைப்பு 👇
https://youtu.be/pchdebqLLmc

கொட்பு விமர்சனம் - 03 ஒரு குறும்படம் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்ட போல இருக்க வேண்டும் என்பார்கள். ஒரு திரைப்படத்...
13/01/2023

கொட்பு விமர்சனம் - 03

ஒரு குறும்படம் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்ட போல இருக்க வேண்டும் என்பார்கள். ஒரு திரைப்படத்தை பார்த்த பின் அந்த படத்தின் "காட்சிகள்" நிழலாடினால் அதுதான் அத்திரைப்படத்தின் வெற்றி
இந்த இரண்டு விடயத்துக்கும் "கொட்பு" நியாயம் செய்து இருப்பதாகவே நான் கருதுகிறேன். Psychological thriller என்று இதை வகைப்படுத்தி இருந்தாலும் இன்று தனிமை விரும்பிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களின் உலகத்தில் எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை ஒளிந்திருக்கிறது என்பதும் உண்மை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு துண்டத்தை இந்தப்படம் சொல்கிறது. அது எங்கள் மனதை ஊடறுக்கிறது. சந்தேகங்கள், கேள்விகள், பிரச்சனைகள், புரியாமை எல்லாம் ஏற்படுகின்றன அதனை ஒரு கலந்துரையாடல் செய்வதே ஒரு படைப்பை இன்னும் புரிந்து கொள்ள உதவும். அப்படி கலந்துரையாடல் செய்ய ஒன்றும் இல்லை என்றால் அந்த படம் எங்களை எதுவும் செய்யவில்லை என்றே அர்த்தப்படும். கொட்பு எங்களை இன்னொரு தளத்திற்கு முன் நகர்த்துகிறது. வாழ்த்துகள்.

- இராசையா லோகாநந்தன் (நாடக கலைஞர்)

படத்தின் இணைப்பு 👇
https://youtu.be/pchdebqLLmc

கொட்பு விமர்சனம் - 02படத்தின் அரசியலிலே என் பார்வை ஆரம்பிக்கிறது. நீதி எது என்பதை கேள்வி கேட்பதும் அந்த கேள்வி யாரிடம் வ...
11/01/2023

கொட்பு விமர்சனம் - 02

படத்தின் அரசியலிலே என் பார்வை ஆரம்பிக்கிறது. நீதி எது என்பதை கேள்வி கேட்பதும் அந்த கேள்வி யாரிடம் வைக்கப்படுகிறது என்பதும் முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
ஒட்டுமொத்தமாக ரொம்ப தொலைவாக சென்று தனிமையை தேடி இருக்கும் ஒருவரின் கதையை கதைக்களமாக எடுத்தது ஒரு ஈசி டாஸ்க் என்பதற்காக இருந்ததாய் போல எனக்கு தெரிந்தது. சமூகத்தின் தாக்கம் என்பதை எடுத்துக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது. மேலும் வன்முறை தூண்டலுக்கு பின் இருக்கும் கதை காரணம் ஏதோ ஒரு புள்ளியில் வெளிப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. எதற்கான நீதி என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்வோம் என்று கூறியது படத்தில் பிடித்திருந்தது.

ஒரு படமாக எனக்கும் கருப்பு வெள்ளை 4:3 format பிடிக்கும் என்பதால் படம் என்னை அந்த வகையில் ஈர்த்தது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

- A.M. Ashfaque (இயக்குனர்)

படத்தின் இணைப்பு 👇
https://youtu.be/pchdebqLLmc

கொட்பு விமர்சனம் - 01"உங்களுடைய குறும்படம் எனக்கு நன்றாக பிடித்திருந்தது. படத்தின் கறுப்பு வெள்ளை நிறத்தெரிவு நன்றாக இரு...
10/01/2023

கொட்பு விமர்சனம் - 01

"உங்களுடைய குறும்படம் எனக்கு நன்றாக பிடித்திருந்தது. படத்தின் கறுப்பு வெள்ளை நிறத்தெரிவு நன்றாக இருக்கிறது. ஷாட் தெரிவு மற்றும் கொம்பசிஷன் நன்றாக இருக்கிறது. படம் பற்றிய விமர்சனமாகப் பார்த்தால் படத்தின் ரிதம் பிழைக்கிறது. ஒரு மாதிரி கட் ஆகி கட்டாகி வருவது போல, நகர்வுகளுக்கு ஏற்றமாதிரி இல்லாமல் இருக்கின்றது. ஷாட்ஸ், டியுரேசன் அவ்வாறு ரிதமில்லாமல் இருக்கிறது. அந்த ரிதம் கவனிக்கப்பட வேண்டும். படத்தின் எழுத்திலும் காட்சிப்படுத்தலிலும் அதிகமாக அரூபத்தன்மையோடு இருக்கிறது. ஒரு கவிதை மாதிரி. மக்களுக்கு விளங்கிறமாதிரி இன்னுமே எளிமைப்படுத்தி இருக்கலாம். மற்றபடிக்கு உங்களுடைய வேலையை நான் பாராட்டுகிறேன்."

- Lenin M. Sivam (இயக்குனர்)

படத்தின் இணைப்பு 👇
https://youtu.be/pchdebqLLmc

"Every Ideology is a Cage"Presenting Our Kubrick Team Production Short Film  #கொட்பு (Kodpu). Watch the Film 👇👇https://y...
09/01/2023

"Every Ideology is a Cage"
Presenting Our Kubrick Team Production Short Film #கொட்பு (Kodpu).
Watch the Film 👇👇
https://youtu.be/pchdebqLLmc

08/01/2023

Teaser of Kodpu(2022).
Releasing on YouTube on 09.01.2023 (Monday) .
Youtube Channel -
https://youtube.com/

Poster Of கொட்பு (KODPU).Our Kubrickteamproduction short film "KODPU" is Selected at 12th Agenda 14  Short film festival...
09/12/2022

Poster Of கொட்பு (KODPU).
Our Kubrickteamproduction short film "KODPU" is Selected at 12th Agenda 14 Short film festival 2022.
The screening will be held on the 11th of December, Sunday at Alliance Française de Kotte in Colombo from "11.00 AM" onwards.
Directed by - Pirashanth Puvaneswaran & Sôbâñ Vêłrâjãh

Performed by - ராம் தமிழ் & Akimsan Alateesvaran ♥️

11/07/2022

Story is about Principles, not rules.
..Inexperienced writers obey rules. Rebellious, unschooled writers break rules. Artists master the form.

Robert McKee.

Watch Here & Subscribe 👇https://youtu.be/f3MQuVg3_TQ  - Experimental Drama From Kubrick Team Productions 🥰Crew ❤Screenpl...
19/03/2022

Watch Here & Subscribe 👇
https://youtu.be/f3MQuVg3_TQ

- Experimental Drama From Kubrick Team Productions 🥰

Crew ❤
Screenplay - Puvaneswaran Pirashanth & Velrajah
Direction - Velrajah
Camera - Harí Anujith & Thusidharan VG
Actors - Akshayan Senthuran, ராம் தமிழ் , Abinayan Senthuran
Editing - Rackshan Leon & Sôbâñ Vêłrâjãh
Production Design - Rackshan Leon

Special Thanks to 🥰 -
Bavaneedha Loganathan
Raghavan
ACS Capture
Hari-Boy Photographÿ

Watch Here & Subscribe 👇
https://youtu.be/f3MQuVg3_TQ

Watch Here👇https://youtu.be/f3MQuVg3_TQ  - Experimental Drama From Kubrick Team Productions 🥰Crew ❤Screenplay - Puvanesw...
19/03/2022

Watch Here👇
https://youtu.be/f3MQuVg3_TQ

- Experimental Drama From Kubrick Team Productions 🥰

Crew ❤
Screenplay - Puvaneswaran Pirashanth & Sôbâñ Vêłrâjãh
Direction - Sôbâñ Vêłrâjãh
Camera - Harí Anujith & Thusidharan VG
Actors - Akshayan Senthuran, ராம் தமிழ் , Abinayan Senthuran
Editing - Rackshan Leon & Sôbâñ Vêłrâjãh
Production Design - Rackshan Leon

Special Thanks to 🥰 -
Bavaneedha Loganathan
Raghavan
ACS Capture
Hari-Boy Photographÿ

Watch Here & Subscribe 👇
https://youtu.be/f3MQuVg3_TQ

நாளை மாலை (10.02.2022) "3.30 - 4.30" மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13.02.2022) "12.00 - 1.00"க்கும், Kubrick Team Productionல...
09/03/2022

நாளை மாலை (10.02.2022) "3.30 - 4.30" மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13.02.2022) "12.00 - 1.00"க்கும்,

Kubrick Team Productionலில் தயாரிப்பில் உருவான பற (Fly) திரைப்படம் University Of Jaffna, Kailasapathy Auditoriumதில், Jaffna International Cinema Festival சார்பாக திரையிடப்படுகிறது.

அனைவரும் வந்து பார்க்கலாம். பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

Official Teaser Of Fly -
https://youtu.be/1LMCjdNrlyY

DAN Television மூலமாக நடாத்தப்படும் "Dancinimarathon" போட்டிக்காக கொடுத்த குறும்படம் பற்றி, Kubrick Team Production  சார...
27/02/2022

DAN Television மூலமாக நடாத்தப்படும் "Dancinimarathon" போட்டிக்காக கொடுத்த குறும்படம் பற்றி, Kubrick Team Production சார்பாக குறும்படத்தின் Puvaneswaran Pirashanth மற்றும் Sôbâñ Vêłrâjãh கொடுத்த நேர்காணல். 👇👇👇

https://youtu.be/2MtpBLxZmtI

சுவீடனில் (Swedan) நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவான "Boden International Film Festival"லில், வெவ்வேறு நாடுகளிலிருந்து வ...
25/02/2022

சுவீடனில் (Swedan) நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவான "Boden International Film Festival"லில், வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த குறும்படங்களுடன் போட்டியிட்டு எங்களுடைய Kubrick Team Production தயாரிப்பில் உருவான "பற" ("Fly") குறும்படம், அரையிறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அதோடு, முல்லைத்தீவிலிருந்து பங்குபற்றிய முதல் குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்குபற்றியும் வருகிறது.

Fly Official Teaser -
👇👇👇
https://youtu.be/1LMCjdNrlyY

Crew & Cast
Screenplay - Puvaneswaran Pirashanth & Sôbâñ Vêłrâjãh
Direction - Sôbâñ Vêłrâjãh
Camera - Harí Anujith & Ganeshan Thushidharan
Actors - Akshayan Senthuran, ராம் தமிழ் , Abinayan Senthuran
Editing - Rackshan Leon & Sôbâñ Vêłrâjãh
Production Design - Rackshan Leon

Thanks to 🥰 -
Akimsan Alateesvaran
Sanojan Yogathas
ராம் தமிழ்

Special Thanks to 🥰 -
ACS Capture Hari-Boy Photographÿ

Fly Official Teaser -
👇👇👇
https://youtu.be/1LMCjdNrlyY

Subscribe to Our Channel ✌️
&
Like Our Page ✌️🥰

உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படம் மற்றும் Visual Storytellersஐ ஒன்றிணைக்கும் "Lift - Off Global Network"ஆல் இங்கிலாந்...
11/02/2022

உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படம் மற்றும் Visual Storytellersஐ ஒன்றிணைக்கும் "Lift - Off Global Network"ஆல் இங்கிலாந்தில் (England) நடாத்தபட்ட "First Time Filmmaker Session"னில்,
எங்களின் Kubrick Team Productionனில் உருவாக்கப்பட்ட "பற" ("Fly") குறும்படம் (Official Selection) தெரிவாகியதுடன், அவர்களின் (Lift - Off Global Network) OTT தளத்தில் பார்வையிடவும் வைக்கப்பட்டது.

CREW ❤
Screenplay - Puvaneswaran Pirashanth & Sôbâñ Vêłrâjãh
Direction - Sôbâñ Vêłrâjãh
Camera - Harí Anujith & Ganeshan Thushidharan
Actors - Akshayan Senthuran, ராம் தமிழ், Abinayan Senthuran
Editing - Rackshan Leon & Sôbâñ Vêłrâjãh
Production Design - Rackshan Leon

THANKS TO 🥰 -
Akimsan Alateesvaran
Sanojan Yogathas
ராம் தமிழ்

SPECIAL THANKS TO 🥰 -
ACS Capture Hari-Boy Photographÿ

Subscribe to Watch - On 17th Feb (17.02.2022)
👇👇👇
https://www.youtube.com/channel/UC7Ne1jimtEWlMpVZxqMC00A

Like Our Page 🥰🙏

எங்களின் Kubrick Team Productionனில் உருவான முதலாவது "பற" (Fly) குறும்படம், இலங்கையில் நடக்கும் மிகவும் முக்கியமான குறும...
09/02/2022

எங்களின் Kubrick Team Productionனில் உருவான முதலாவது "பற" (Fly) குறும்படம்,
இலங்கையில் நடக்கும் மிகவும் முக்கியமான குறும்பட விழாவான Agenda 14 Short Film Festivalலில், Green Awardக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதோடு, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து Agenda 14 Short Film Festivalலுக்கு தெரிவாகி, பரிந்தரைக்கப்பட்ட முதல் குறும்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறும்படத்தை உருவாக்க உதவிய நண்பர்களுக்கு மிக்க நன்றிகள். 🥰🥰
Sanojan Yogathas
Harí Anujith
ராம் தமிழ்
Akimsan Alateesvaran
Senthuran Mahadevan
Puvaneswaran Pirashanth
Rackshan Leon
Ganeshan Thushidaran

சிறப்பு நன்றிகள் 🥰🥰
ACS Capture Hari-Boy Photographÿ

Subscribe to Watch Film -
https://www.youtube.com/channel/UC7Ne1jimtEWlMpVZxqMC00A

Like Our Page -
Kubrick Team Production

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kubrick Team Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kubrick Team Production:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share