30/09/2021
குமரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று 30/09/2021 மாலை முதல் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெருமளவில் முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு வாகனங்களில் கூடுதலாக ஆல்ட்ரேஷன் பணிகள் எதுவும் செய்து இருந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி கனிம வளக் கடத்தல் லாரிகள் செயற்கையாக பாடி உயரத்தை அதிகரித்து உள்ளதை கண்டும் காணாமல் சல்யூட் அடித்து அனுப்பி வருகின்றனர். இப்படி முறைகேடுகளுக்கு துணை போனதால் தற்போது எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு லட்சத்துக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதும் தொடர்ந்து சோதனை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.