new line news

  • Home
  • new line news

new line news Media Entertainment's. social .and film industry news

*தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா – உலகத்தரம் இந்தியாவில்!* சென்னை, ஜனவரி 24, 2025 – தமிழ் சினிமாவுக்...
26/01/2025

*தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா – உலகத்தரம் இந்தியாவில்!*

சென்னை, ஜனவரி 24, 2025 – தமிழ் சினிமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஓடிடி தளம் டென்கோட்டா, தற்போது இந்தியாவில் தங்களின் சேவையை தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு தரமான சினிமா அனுபவங்களை வழங்கி வந்த டென்கோட்டா, இப்போது தமிழ் சினிமாவின் சொந்த மண்ணில் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, உலகத்தரம் வாய்ந்த டால்பி அட்மாஸ் டெக்னாலஜியை கொண்டு பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபத்தை வழங்குவது டென்கோட்டாவின் தனித்துவம். தற்போது, இந்திய பார்வையாளர்களுக்கும் இந்த தரமான அனுபவம் கிடைக்க உள்ளது.

“தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன்று, தமிழர்களின் சொந்த நாட்டில் டென்கோட்டாவை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை கொள்ளுகிறோம். இந்தியாவின் வளர்ந்து வரும் ஓடிடி சந்தையில், தமிழ் கலைத்திறனின் வளத்தையும் கதை சொல்லலின் ஆழத்தையும் கொண்டாடும் ஒரு தளமாக நாங்கள் செயல்பட விரும்புகிறோம்,” என டென்கோட்டாவின் நிறுவனர் வருண் தெரிவித்தார்.

இந்தியாவில் டென்கோட்டா அறிமுகமாகும் முக்கிய அம்சங்கள்:
•தமிழ் திரைப்படங்களின் தனிச்சிறப்பான தொகுப்பு: பழம்பொருட்கள் முதல் சமகால ஹிட்ஸ்கள் வரை.
•அனைவருக்கும் ஏற்ற விலைத் திட்டங்கள்: இந்திய பார்வையாளர்களின் வருவாயை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சந்தா.
•உயர்தர ஸ்ட்ரீமிங்: ஸ்மார்ட் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் தடையற்ற தரமான அனுபவம்.

சினிமா ரசிகர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தொகுப்புகள் மற்றும் சமீபத்திய வெளியீடுகளை அடையாளமாக கொண்டு, டென்கோட்டா இந்தியாவின் திரைப்பிரியர்களுக்கு புதிய ஓர் வரப்பிரசாதமாக செயல்பட தயாராக இருக்கிறது.

இப்போது, iOS, Android, இணைய உலாவிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் டென்கோட்டா கிடைக்கிறது.

மேலும் தகவல்களுக்கு: www.tentkotta.com

*சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு**ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமு...
26/01/2025

*சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமுடி - ராஜ் பி. ஷெட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக்*

26/01/2025
26/01/2025
26/01/2025

Thank u Message from Shri K. Damodaran (Chef Damu) for being honored with Nation's Fourth Highest Civilian Award



Onlynikil

  is the 5th Person to receive this prestigious   award from Tamil Film industry🔥
25/01/2025

is the 5th Person to receive this prestigious award from Tamil Film industry🔥

https://youtube.com/shorts/4VSfTZrF_h8?feature=share       Latest Video Of THALA   From Dubai! 🌟🇦🇪A Lucky Fan Pays Tribu...
25/01/2025

https://youtube.com/shorts/4VSfTZrF_h8?feature=share



Latest Video Of THALA From Dubai! 🌟🇦🇪

A Lucky Fan Pays Tribute To AK By Singing A Song From Kandukondain Kandukondain 🎶

What A Moment To Cherish! ❤️

|

Latest Video Of THALA From Dubai! 🌟🇦🇪A Lucky Fan Pays Tribu...

*PRESS NOTE - TAMIL & ENGLISH* *கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க ப...
25/01/2025

*PRESS NOTE - TAMIL & ENGLISH*

*கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்*

*தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் 'மனிதம்' உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது*

*முன்னணி இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் 'மனிதம்' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்*

யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார்.

புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான 'மனிதம்' படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, "உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை 'மனிதம்' வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான் முறையில் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறோம்," என்றார்.

'இன்ஃபினிட்டி' மற்றும் 'கழுமரம்' உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் கிருஷ்ணராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் புருனோ சாவியோ சுமார் 25 ஆண்டுகள் கார்ப்பரேட், தொழில்துறை மற்றும் விளம்பரப் படங்களை உருவாக்கிய அனுபவம் பெற்றவர் ஆவார்.

'மனிதம்' திரைப்படத்திற்கு பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, வேலவன் கே படத்தொகுப்பை கையாண்டுள்ளார். மதுநிகா ராஜலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இணை தயாரிப்பு: ஆனி நிர்மலா; இணை இயக்கம்: அருள்முருகன். 'மனிதம்' திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான‌ பணிகள் நடைபெற்று வருகின்றன.

***

*'Manidham' produced by Krishnaraju and directed by Bruno Savio is the first Tamil film to featue Puducherry actors in all characters*

*With music by National Award-winning Srikanth Deva, 'Manidham' highlights true relationships and friendships*

*Leading directors Bhagyaraj, R.V. Udhayakumar, Aravindraj attend the audio launch of 'Manidham'*

'Manidham,' a Tamil film that promises to d

பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக! உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்!உலகத் தமிழர் பேரமைப்பின் தல...
25/01/2025

பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக! உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை.

"உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009ம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது.

சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்."

25/01/2025

இன்று 25.01.25 மாலை சூரியன் மறைவுக்குப் பின் மாலை 5.37க்கு வானத்தில் வரிசையாக அணிவகுத்து செல்லும் 6 கிரகங்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் & நெப்டியூன். யுரேனஸ் & நெப்டியூனை டெலஸ்கோப் மூலமும், மற்ற 4 கோள்களை வெறும் கண்களாலும் பார்க்கலாம்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இவை தெரியும். வானில் மிகவும் பிரைட்டாக தெரியும் இவற்றை நட்சத்திரங்கள் என எண்ணி விட வேண்டாம்.
காணக் கிடைக்கும் உலகின் நகரங்களில் நேர விபரங்கள்

HERE IS THE LOCATION AND THEIR TIMINGS
Sao Paulo, Brazil: 6:59 PM

Lagos, Nigeria: 5:44 PM

New York City, USA: 4:48 PM

Toronto, Canada: 4:53 PM

London, UK: 4:11 PM

Sydney, Australia: 8:23 PM

Mexico City, Mexico: 6:08 PM

Abu Dhabi, UAE: 5:30 PM

Hong Kong, China: 6:03 PM

Athens, Greece: 5:15 PM

Tokyo, Japan: 4:40 PM

New Delhi, India: 5:37 PM

Thankyou for Re-Post in social media video

கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைக்கும் *பாட்டில் ராதா* திரைப்பட குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. தோழர்கள...
24/01/2025

கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைக்கும் *பாட்டில் ராதா* திரைப்பட குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.

தோழர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவும்.

நாள்: 25/01/2025 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4 மணி

*அனுமதி இலவசம்!*

"2K லவ்ஸ்டோரி" டிரெய்லர் வெளியீட்டு விழா !! இயக்குநர் சுசீந்திரனின்  "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா  ...
23/01/2025

"2K லவ்ஸ்டோரி" டிரெய்லர் வெளியீட்டு விழா !!

இயக்குநர் சுசீந்திரனின் "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது...
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது...
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when new line news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share