True Flash News

  • Home
  • True Flash News

True Flash News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from True Flash News, News & Media Website, .

Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political news, sports news, weather updates, exam results, business news, entertainment

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.பார்வையாளர்கள்...
10/02/2024

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது வ...
03/02/2024

76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (05) அனைத்து அரச நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும்.

🇱🇰 𝐎𝐧𝐞 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐲, 𝐎𝐧𝐞 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧 🇱🇰 #𝙋𝙧𝙤𝙪𝙙  #𝙏𝙤  #𝘽𝙚  #𝘼  #𝙎𝙧𝙞𝙇𝙖𝙣𝙠𝙖𝙣         𝟳6  #𝗜𝗻𝗱𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝘁  #𝗗𝗮𝘆
03/02/2024

🇱🇰 𝐎𝐧𝐞 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐲, 𝐎𝐧𝐞 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧 🇱🇰
#𝙋𝙧𝙤𝙪𝙙 #𝙏𝙤 #𝘽𝙚 #𝘼 #𝙎𝙧𝙞𝙇𝙖𝙣𝙠𝙖𝙣
𝟳6 #𝗜𝗻𝗱𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝘁 #𝗗𝗮𝘆

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல மாண...
01/02/2024

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 162 பட்டதாரிகளுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 (அ) தரத்திற்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.*ஒக்டேன் 92 பெற்றோல் ...
01/02/2024

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.*

ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368ரூ.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456ரூ.

ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360ரூ.

ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468ரூ.

01/02/2024

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01) கூறியுள்ளார்.

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்துள்ளது.அதன்படி ஒக்...
31/01/2024

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

அத்தோடு ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெ...
31/01/2024

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண மாற்றம் நாளை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்...
29/01/2024

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்.

விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதோடு, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொதித்தாறிய நீரை பருகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இந்நோயின் அறிகுறிகளாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுப்படுத்த பொலிஸாரால் கண்ணீர்ப்புகை - நீர்த்தாரை பிரயோகம் மேற்...
29/01/2024

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுப்படுத்த பொலிஸாரால் கண்ணீர்ப்புகை - நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் தீவு நாடான ஐஸ்லாந்தில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதி...
16/01/2024

ஐரோப்பாவின் தீவு நாடான ஐஸ்லாந்தில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தமது நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் தொலைத்தொடர்பு வணிகத்தை இலங்கையிலும் விஸ்தரி...
16/01/2024

இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தமது நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் தொலைத்தொடர்பு வணிகத்தை இலங்கையிலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி அரசுக்கு உரித்தான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பங்குகளை கொள்வனவு செய்ய அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற செய்வதற்கு தற்போதைய அதிகாரிகள் பல துறைகளை தனியார்மயமாக்குவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிய ஆழமான பணப் பற்றாக்குறையிலிருந்து இலங்கையை மீட்பதற்காக, நாட்டில் உள்ள அனைத்து முக்கியத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) இலங்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் பணமில்லாத நிலையில் டெலிகொம் நிறுவனத்தை கொண்டு நடத்திவருகிறது.

அதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு சாத்தியமான ஏலதாரர்களிடமிருந்து கடந்த நவம்பர் 10 ஆம் திகதிக்குள் இலங்கை அரசாங்கம் விண்ணப்பங்களை கோரியிருந்தது.

அதற்கமைய, டெலிகொம் பங்குகளை வாங்குவதற்கு முன்வந்துள்ள 3 நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனமும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை முதலீட்டுடன், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஜியோ அனைத்து இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடையே சந்தையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது....
15/01/2024

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் இலங்கை 96 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன.

பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் பின்தங்கியுள்ளன.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த பட்டியலை Henley Passport Index தயாரித்து வருகிறது.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு –
France, Germany, Italy, Japan, Singapore, Spain
Finland, South Korea, Sweden
Austria, Denmark, Ireland, Netherlands
Belgium, Luxembourg, Norway, Portugal, United Kingdom
Greece, Malta, Switzerland
Australia, Czechia, New Zealand, Poland
Canada, Hungary, United States
Estonia, Lithuania
Latvia, Slovakia, Slovenia
Iceland

உழவர் திருநாளாம் தைத்திருநாளில்தை பிறந்தால் வழி பிறக்கும் 🌾தடைகள் தகரும்தலைகள் நிமிரும்நிலைகள் உயரும்நினைவுகள் நிஜமாகும்...
15/01/2024

உழவர் திருநாளாம் தைத்திருநாளில்
தை பிறந்தால் வழி பிறக்கும் 🌾
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
வாழ்வில் எல்லா வளமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ எமது

#இனிய #தமிழர் #திருநாள் #வாழ்த்துகள் 🌾

அனைத்து அரசாங்க அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளை கடுமையாக கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை நிதிய...
14/01/2024

அனைத்து அரசாங்க அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளை கடுமையாக கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, மாதாந்திர கூடுதல் நேரத் தொகை அடிப்படைச் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் விடுமுறை ஊதியம், பிற கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக கூடுதல் நேரக் கொடுப்பனவு ஒதுக்கப்படாது.

அந்தச் சுற்றறிக்கையில், சம்பந்தப்பட்ட நிறுவனமே முழுச் செலவையும் ஏற்காத பட்சத்தில், வெளிநாட்டுப் படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல், மாநாடு, பயணங்களில் அலுவலர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியைச் செலவு செய்து அதிகாரிகளை வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுப்பக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கூட்டங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் முடிந்தவரை ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் மற்றும் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகன உரிமையின்படி ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் உத்தியோகபூர்வ வாகன உரிமைக்கு பதிலாக மாதாந்திர போக்குவரத்து கொடுப்பனவு பெறும் அதிகாரிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்பதிவு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது மற்றும் முன் அனுமதியின்றி மாதாந்திர வாடகை அடிப்படையில் அல்லது இயக்க குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெறக்கூடாது.

மேலும், ஏற்கெனவே பெற்றுள்ள சலுகை ரயில், சாலைப் போக்குவரத்து டிக்கெட், போக்குவரத்து வசதிகள் தவிர, பொதுப்பணிகளுக்கு வருவதற்கும், செல்வதற்கும் அரசுப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது, அரசைப் பயன்படுத்தி டைரி, நோட்டுப் புத்தகங்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் அச்சிடக் கூடாது.

அவசரகால கொள்முதல் நடைபெறாத வகையில், முறையான ஒப்புதல் மற்றும் தேவைகளை முன்கூட்டியே அடையாளம் காணாமல், அரசு நிறுவனங்களுக்கு நேரடி வெளிநாட்டு மானியங்களைப் பெறக்கூடாது என்பது சுற்றறிக்கை விதிகளில் அடங்கும்.

அத்தியாவசிய செலவுகள், சம்பளம், அரச செலவுக் கட்டுப்பாடு கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில...
13/01/2024

அத்தியாவசிய செலவுகள், சம்பளம், அரச செலவுக் கட்டுப்பாடு கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் திறைசேரியால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம் காரணமாக, மேலதிக நேரம், பயணம் மற்றும் இதர கொடுப்பனவுகள் போன்றவற்றின் போது அத்தியாவசிய செலவுகளை மட்டும் தாங்குதல் போன்ற ஒதுக்கப்பட்ட நிதியில் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சு, மாகாண செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.வற் வரி காரணமாகவே ...
13/01/2024

யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் யோகட் விலை 10 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட யோகட் 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை ( 15.01) மலரவுள்ள உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வியாபாரிகள் திருப்தியான வியாப...
13/01/2024

எதிர்வரும் திங்கட்கிழமை ( 15.01) மலரவுள்ள உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வியாபாரிகள் திருப்தியான வியாபாரம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பாக பொங்கல் பானை உற்பத்தியாளர்கள், உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர்கள், வாண வேடிக்கைகள், வெடி விற்பனையாளர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆகிய சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது. குறிப்பாக இது தொடர்பாக விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வற் வரியும் அதிகரித்துள்ளது. இதனால் நாமும் விற்பனைப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளோம்.

குறிப்பாக ஒரு கிலோ அரிசி வேகவைக்கும் மண்பானை ஒன்றின் விலை கடந்த 03 வருடத்திற்கு முன் 500 ரூபாவாக இருந்தது இப்போது 2024 ஆண்டு 800 ரூபாவாக இருக்கின்றது. அதே போன்று ஏனைய பானைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

800 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது. பழவகைகள் ,வெடிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12)  நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ...
13/01/2024

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வத...
12/01/2024

அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில அரச நிறுவனங்களின் உத்தியோகத் தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததையடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையின்படி, அரச அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணிவரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பணியின்போது தனது அலுவலக அடையாள அட்டையை அணிந்துகொள்வதுடன் மேலும் சீருடை உதவித்தொகை பெறும் அனைத்து அரச அலுவலர்களும் தங்களது சீருடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் இருப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு நிறுவனங்களின் விசாரணைச் சாளரங்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் சாளரங்கள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சாளரங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும் எனவும் வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புக...
11/01/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதன் ஆறுகள் வாவிகள் பெருக்கெடுத்து வருகின்றது.

இந்நிலையில் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் அதேநேரம் கால்நடைகளைகளையும் பிடித்துச்செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் அதிகளவான மக்கள் வாழும் பகுதிக்குள் இன்று (11) காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்த நிலைமையினை காணமுடிந்தது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதேபோன்று நேற்று (10) மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த முதலை மாட்டை பிடித்து ஆற்றுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வள...
11/01/2024

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் - அடிக்கடி சிறிதளவில். மழை பெய்யும்

மட்டக்களப்பு - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களுக்கு பாடசாலைக...
10/01/2024

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களுக்கு பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழன் (11), மற்றும் வெள்ளிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ,இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதம் பதில் பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் மூடப்பட்டுள்ளது.
10/01/2024

சீரற்ற காலநிலையால், தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் மூடப்பட்டுள்ளது.

நாட்டில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர் பார...
10/01/2024

நாட்டில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர் பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பு - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் - அடிக்கடி மழைபெய்யும்.

கண்டி - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மன்னார்- அடிக்கடி மழை பெய்யும்.

10/01/2024

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் மன்னம்பிட்டி - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆ...
09/01/2024

மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கிரான் புலி பாய்ந்தகல் மற்றும் கின்னயடி பிரம்படித்தீவு, ஈரலகுளம், மயிலவட்டுவான், வாகரை கல்லரிப்பு பகுதிகளுக்குச் செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படகு சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு வாகரையில் 393 குடும்பங்கள், மண்முனை வடக்கு பகுதியில் 33 குடும்பங்கள், களுவாஞ்சிக்குடி பகுதியில் 7 குடும்பங்கள், மண்முனை தென் தென்மேற்கு பட்டிப்பளை பகுதியில் 10 குடும்பங்கள், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பகுதியில் 290 குடும்பங்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கவைத்துள்ளனர்.

காத்தான்குடியில் 1498 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 7 குடும்பங்கள் காத்தாங்குடி பதுரியா வித்தியாலயத்திலும், எறாவூர் பற்று செங்கலடி பகுதியில் 88 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 27 குடும்பங்கள் எறாவூர் - 4 கோயில் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

வவுணதீவு மண்முனை மேற்கு பகுதியில் படகில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், பெரும்பாலான வீதிகளும் வெள்ள நீரால் நிறைந்துள்ளதுடன், பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வாகன இறக்குமதி மீண்டும் 2027இல்தான் சாத்தியம். ஏற்கனவே பல நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. வக்கடை வெட...
09/01/2024

வாகன இறக்குமதி மீண்டும் 2027இல்தான் சாத்தியம்.

ஏற்கனவே பல நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது.

வக்கடை வெட்டியது போல் வாகன இறக்குமதிக்கு இடம் கொடுக்க முடியாது. நாட்டில் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அவ்வளவு இல்லை.

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போத...
09/01/2024

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11.01.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள ஆபத்து தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும்.

தற்போதைய மழை குறைவடைந்ததும் பனி தொடங்கும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

VAT அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்...
09/01/2024

VAT அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வற் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when True Flash News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share