D.V.Prakash BJP

  • Home
  • D.V.Prakash BJP

D.V.Prakash    BJP D V.Prakash

கோவையில் தலைவர் திரு.அண்ணாமலலை  அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல், உடன் தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் M...
27/03/2024

கோவையில் தலைவர் திரு.அண்ணாமலலை அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல், உடன் தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் MLA அவர்கள்... மலரட்டும் தாமரை தியாக பூமி கோவையில்.. வாழ்த்துக்கள்.

வாழ்க‌பாஜக..‌‌ வெல்க தாமரை..கோவையில் தாமரை...‌ நமது வெற்றி வேட்பாளர் நமது திரு.அண்ணாமலை ex IPS அவர்கள்
21/03/2024

வாழ்க‌பாஜக..‌‌ வெல்க தாமரை..
கோவையில் தாமரை...‌ நமது வெற்றி வேட்பாளர் நமது திரு.அண்ணாமலை ex IPS அவர்கள்

13/01/2024

கேள்வி :-
கோவில் விமானம் அல்லது பிராகாரம் இவை போன்றவை முழுக்க கட்டாமல் ஸம்ப்ரோக்ஷணம் செய்யலாமா ?

பதில்:-
தாராளமாகச் செய்யலாம்.
கோவிலில் பெருமாளை எழுந்தருளப்பண்ணி ப்ரதிஷ்டையும் செய்து பிறகும் விமானம் கட்டலாம். அதன் பிறகு விமான ஸம்ப்ரோக்ஷணம் தாராளமாக செய்யலாம். கோவிலைப் பொறுத்த வரை ஆகமமே ப்ரமாணம். சிற்ப சாஸ்திரம் எல்லாம் ஆகமங்களுக்குத் துணை தானே தவிர தானே நாட்டாமை ஆகாது. ஆகமம் தான் கோவிலின் அடித்தளமே. அதன் துணை தான் ஜோதிடம் சிற்பசாஸ்திரம் உள்பட எல்லாம். கோவில் என்றாலே அதன் முதல் தர்மசாஸ்திரம் ஆகமம் தான். இதனை எவரும்‌ மாற்ற இயலாது.

பகவத் சாஸ்த்ர ப்ரமாணம் இல்லாமல் இந்த தகவல் எழுதப்படவில்லை.‌
உண்மையான பிரமாணம் இது.

ப்ராணப்ரதிஷ்டை என்று தனியே எதுவும் இல்லை. மஹாஸம்ப்ரோக்ஷணத்தில் ஒரு அங்கம் தான் ப்ராண ப்ரதிஷ்டை.

கோவிலில் மத நம்பிக்கை அற்ற நபர்கள் வந்து எழுத எந்த அவசியமும் இல்லை

நாங்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆனால் கோவிலில் நடப்பதை சரியா தவறா என்று ஆராயும் மக்களுக்கு ஒரு தெளிவு கொடுக்க இந்த பதிவு.

பதிவு: DrParthasarathy Bhattar

ஜெய் ஸ்ரீராம்
08/01/2024

ஜெய் ஸ்ரீராம்

05/01/2024
ஹிந்தி தெரியாது போடா ன்னு டீசர்ட்‌ போட்டவங்களை, ஹிந்தி தெரியலைன்னா போடான்னு சொல்லிட்டாங்க இ.. ந்.. தி புள்ளி கூட்டணியிலே...
20/12/2023

ஹிந்தி தெரியாது போடா ன்னு டீசர்ட்‌ போட்டவங்களை, ஹிந்தி தெரியலைன்னா போடான்னு சொல்லிட்டாங்க இ.. ந்.. தி புள்ளி கூட்டணியிலே!..
மே துணைப்பிரதமர் ஹே...‌ அபி ஹிந்தி தெரியும் ஹே

கோவா விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் இந்தி தெரியாதா என கேட்டு மிரட்டியதாக கூறிய தமிழக பெண் ஷர்மிளா ராஜசேகர்...
14/12/2023

கோவா விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் இந்தி தெரியாதா என கேட்டு மிரட்டியதாக கூறிய தமிழக பெண் ஷர்மிளா ராஜசேகர்,

கடந்த மே 14ல் ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவை பகிர்ந்து ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளாள்...

கமெண்டில் பாருங்க எல்லா டீவீட்டும் இருக்கு..

மாட்டிகிச்சு டூல் கிட் மாட்டிகிச்சு 😆

இன்னும் 70 களிலியே இருக்கானுக...

OmvainavshaivaPremnath

ஐயப்ப பக்தர்களுக்கு RSS சேவாபாரதி அளிக்கும் சேவைகள்
13/12/2023

ஐயப்ப பக்தர்களுக்கு RSS சேவாபாரதி அளிக்கும் சேவைகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!..
11/11/2023

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

02/11/2023

தாங்கள் கட்டமைத்த திமுக ஆயுதம் துருப்பிடிப்பது தெரிந்தவுடன் கூத்தாடி விஜயை இளைஞர்களின் நாயகனாக பிம்பத்தை உருவாக்குகின்றனர் பாஜக விரோத - ஹிந்து விரோத சக்திகள்!

இளைய தலைமுறையின் எழுச்சி அண்ணாமலையின் பின்னே அணி திரள்வதால், அவர் பாடுபட்டு உருவாக்கிய திமுக எதிர்ப்பு அலையை அப்படியே கூத்தாடி விஜய் பக்கம் மடைமாற்றும் முயற்சிதான் திமுகவுடன் விஜய் மோதுவது போன்ற பிம்பம்!

திமுக எதிர்ப்பு வோட்டுக்களை பாஜக அறுவடை செய்துவிடக் கூடாது!

அந்த ஊழல் எதிர்ப்பு தளத்தின் முதன்மை இடத்திலிருந்து அண்ணாமலை மீதான மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்!

திமுக துருப்பிடித்த ஆயுதம் - இனியும் அது தேறாது - மாற்று சக்தி என்பது அண்ணாமலையாக இருக்கக் கூடாது - அது "நமது" ஆளாக இருக்க வேண்டும்!

அதற்கு அந்த திமுக எதிர்ப்பு அலையிலேயே - அலையின் ஓட்டத்துடனேயே நீந்திக் கரை சேரும் ஆளாக "நமது" ஆள் இருக்க வேண்டும் என்று கவனமாக ஹிந்துத்வா விரோத - மோடி எதிர்ப்பு சக்திகளால் கூர் தீட்டப்படும் ஆயுதம்தான் ஜோசப்பு விஜய்!

எனவே விஜய் - திமுக மோதல் போல் கட்டமைக்கப்படும் நாடகங்களைக் கண்டு தேசிய - தெய்வீக உணர்வு கொண்டவர்கள் மயங்கி விழ வேண்டாம்!

இளைய தலைமுறையின் எழுச்சி நாயகன் அண்ணாமலை மட்டுமே!

திராவிட மாடலுக்கு மாற்று ஜோசப்பு விஜய் அல்ல - பா.ஜ.க மட்டுமே!

இந்த உண்மையை மடை மாற்றும் எந்த முயற்சியையும் முறியடித்துக் கடந்து செல்வோம்!

ஜெய் ஹிந்த்!

- பதிவு திரு. Murali Seetharaman .

21/10/2023

குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிரிக்கெட் போட்டியோ அங்கு வெற்றிக்களிப்பில் சிலரால் எழுப்பப்பட்ட கோஷமோ அல்ல இவர்கள் பிரச்சினை....  ‌  ஸ்ரீ  ஆஞ்சனேயர் தி...
16/10/2023

கிரிக்கெட் போட்டியோ அங்கு வெற்றிக்களிப்பில் சிலரால் எழுப்பப்பட்ட கோஷமோ அல்ல இவர்கள் பிரச்சினை.... ‌
ஸ்ரீ ஆஞ்சனேயர் திருவாய்மொழிந்த "ஜெய் ஸ்ரீராம் " என்ற வார்த்தையே, இந்த மண் சாரா அன்னிய மதங்களை ஏற்ற இவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகப்புரிகிறது....

முப்பது வருடங்களுக்கு முன்பே அய்யா இராமகோபாலன் சொன்னார் 'மதமாற்றம் தேசிய அபாயம்' என்று...

13/10/2023

இந்துக்களை திரட்டி இந்துமுன்னணி மாபெரும் போராட்டம் சென்னிமலை காக்க,.

அப்பன் முருகன் வாழும் மலை,
சென்னிமலை எங்கள் மலை,
மதம் மாற்றிகளுக்கு இங்கென்ன வேலை...

சென்னிமலை யை ஏசு மலையாக மாற்றுவோம் என்று கூவியவர்களுக்கு எதிராக அதிர்ந்த கோசம்...

பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டத்தின் ஆற்றல் மிகுந்த நிர்வாகி, கட்சிக்காக அர்பணிப்புடன் பணியாற்றிவரும் மாவட்ட  IT W...
08/10/2023

பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டத்தின் ஆற்றல் மிகுந்த நிர்வாகி, கட்சிக்காக அர்பணிப்புடன் பணியாற்றிவரும் மாவட்ட IT WING தலைவர் திரு. செல்வகுமார் அவர்கள் சமூக வலைதள பதிவிற்காக கைது செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களின் குரல்வலையை நசுக்கும் செயல், மற்றும் பாஜகவின் கள போராளிகளை முடக்க நினைக்கும் செயலாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளின் பல பதிவுகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாஜக நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Vasantha Rajan

ஹாக்கியில் தங்கம்... வாழ்க பாரதம்
06/10/2023

ஹாக்கியில் தங்கம்... வாழ்க பாரதம்

25/09/2023

கோவை யில் காவிப்படை உற்சாக ஊர்வலம்
K.Annamalai அவர்களின் #என்மண்_என்மக்கள் யாத்திரை

பாரத தேசத்தின் கோட்டைச்சுவரே... அந்நியர்களின் கைப்பாவைகளை அகற்றி பாரத மண்ணின் மைந்தர்களின் ஆட்சியை மீட்டெடுத்தவரே...சுயம...
17/09/2023

பாரத தேசத்தின் கோட்டைச்சுவரே...
அந்நியர்களின் கைப்பாவைகளை அகற்றி பாரத மண்ணின் மைந்தர்களின் ஆட்சியை மீட்டெடுத்தவரே...

சுயமரியாதை யை உதய சூரியன் களுக்கு கற்றுத்தந்தவரே,உலக அரங்கில் உன்னத உயரத்தில் தேசத்தை நிலைநிறுத்தியவரே,

தமிழர்களின் இதயக்கனியே,திருக்குறளை உலகறியச் செய்தவரே,
புள்ளிராஜாக்கள் ஆட்சியில் தமிழக மீனவர்களை காக்கை குருவிகளைப்போல் சுட்டுக்கொன்றது மறந்திட்டதோ? இலங்கை கடற்படை கைகள் துப்பாக்கியை தொடவும் நடுங்குகிறதே இன்று யாரால்?

ஆட்சி என்றால் இதுதான்யா!.. ஆள்பவனுக்கு இலக்கணமே நீதானய்யா....

தாமரை பொத்தான் தேயும் வரை அழுத்திடுவோம், தங்கத்தலைன் நரேந்திரமோடி மீண்டும் அரியனையில் அமர்த்த அவர் பிறந்தநாளில் சூளுரைப்போம்.

நான் அவனில்லை...
07/09/2023

நான் அவனில்லை...

பெருமை மிகு தருணம்... வாழ்த்துக்கள் திரு.வீரமுத்துவேல்
26/08/2023

பெருமை மிகு தருணம்... வாழ்த்துக்கள் திரு.வீரமுத்துவேல்

ஒவ்வொரு பாரதியனுக்கும் பெருமை,..  சந்திரயான் வெற்றியால்   தேசமெங்கும் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் இஸ்ரோ...மிகுந்த அர்ப்பணிப்...
23/08/2023

ஒவ்வொரு பாரதியனுக்கும் பெருமை,.. சந்திரயான் வெற்றியால் தேசமெங்கும் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் இஸ்ரோ...

மிகுந்த அர்ப்பணிப்புடனும், நாட்டுப்பற்றுடனும் பணியாற்றி தமிழ் நிலத்திற்கு பெருமை தேடித்தந்த திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறோம்.

21/08/2023

சந்திராயன் பயணத்தின் இறுதி படிநிலைகள் பற்றிய அருமையான‌ விளக்கம்...
வாழ்க பாரதம்... வெல்க இஸ்ரோ

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிஇருந்ததும் இந்நாடே - அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துமுடிந்ததும் இந்நாடே - அவர்சி...
15/08/2023

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே
இதை வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

அனைவருக்கும் இனிய பாரத சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..

01/08/2023

எவனோ ஒரு அரைவேக்காடு எடுத்த பேட்டி ஒன்றில் அண்ணாமலை அவர்களைக் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு ஆட்டினை மேடைக்குக் கொண்டுவந்து அவரிடம் கேலியாகப் பேசும் நிகழ்ச்சியொன்றைப் பார்க்க நேரிட்டது. ஆடு வளர்த்துப் படிப்பது அவ்வளவு கேவலமானதா என்ன? இது எனக்குப் புரிவதே இல்லை. அடுத்தவனின் சொத்தைத் திருடி ஹம்மர் காரில் உலாவருவதனை விட தன் சொந்த உழைப்பில் வாழ்பவன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவனல்லவா? அந்த இடத்தில் நானாக இருந்தால் என்னுடைய எதிர்வினை வேறாக இருந்திருக்கும். அண்ணாமலை மிகப் பொறுமையுடன் அந்தச் சூழலைச் சமாளித்தார்.

1990-களுக்கு முன்னால் தமிழகத்தின் பெரும்பகுதி கிராமத்தில்தான் வாழ்ந்தது. பின்னர் பொருளாதார காரணங்களுக்காக பலர் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தார்கள். கிராம வாழ்க்கை வாழ்கையில் ஆடு, மாடுகள் வளர்ப்பதனை அனேகமாக எல்லாக் கிராமவாசிகளும் செய்தார்கள். ஏழு அல்லது எட்டுவயது வரையில் கிராமத்தில் வாழ்ந்த நானும் ஆடுகள் மேய்த்திருக்கிறேன். அதைக் கேவலமானதாக என்றைக்குமே நான் நினைத்ததில்லை.

இன்றைக்கு நகரங்களில் வசிப்பவர்களுக்கு கிராமம் என்றால் கேவலமாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வந்தவன்தான் அவனுடைய அப்பன் என்கிற நினைவு அவனுக்கு மறந்துபோய்விட்டது. அவனுடைய அப்பனும் அப்படியொன்றும் கோடீர்ஸ்வரனாக இருந்திருக்க மாட்டான். மிஞ்சிப் போனால் ஏதாவது அரசு அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு நாற்காலியைத் தேய்துக் கொண்டிருந்திருப்பான். இவன் என்னவோ டாடா, பிர்லா குடும்பத்தில் பிறந்து வந்தது மாதிரியும், ஆடு மேய்த்தவனெல்லாம் கேவலமானவன் என்கிற மாதிரியும்....உண்மையிலேயே இப்படியாகப்பட்டவனெல்லாம் பூமிக்குப் பாரமானவன். பிச்சைக்காரப்பயல்.

கிராமப்புற வறுமை இன்றைக்கு மறைந்துவிட்டது. 1970-களில் கிராமப்புற வறுமை உச்சத்தில் இருந்தது. அரை வயிற்றுக் கஞ்சி குடிக்க அவனவன் ஆலாய்ப் பறந்தான். காலையில் வெறும் நீச்சுத்தண்ணீரைக் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த குழந்தைகள் அதிகம். என்னுடைய பாட்டையா கொஞ்சம் நிலபுலன்கள் வைத்திருந்ததால் சோற்றுக்குப் பஞ்சமில்லை. குறைந்தபட்சம் கேப்பைக்களியாவது கிடைக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அதுவும் இருக்காது. விவசாயக் கூலி வேலைகள், ஆடு, மாடு மேய்த்தல்தான் கிராமத்தின் பிரதான தொழில். எனவே பெற்றோர்கள் விடியற்காலையிலேயே வேலைக்குப் போய்விடுவார்கள்.

அந்தக் குழந்தைகள் பள்ளிக்கு வர ஒரே காரணம் அங்கு வழங்கப்படும் மதிய உணவு மட்டும்தான். அரிசியெல்லாம் தட்டுப்பாடாக இருந்த காலத்தில் உடைந்த அமெரிக்க கோதுமையை வேகவைத்துக் கொடுப்பார்கள். அல்லது மக்காச் சோள மாவை களியாகக் கிண்டிக் கொடுப்பார்கள். இரவு வரைக்கும் அந்தக் குழந்தைகளுக்கு அதுதான் உணவு. சத்துணவெல்லாம் பின்னால் வந்தது. சரியான உடைகள் அவர்களிடம் இருந்ததில்லை. எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு ஒரே ஒரு கிழிந்த ட்ரவுசர் மட்டுமே இருந்தது. சட்டை போடாமல்தான் பள்ளிக்கு வருவான். கிழிந்த டவுசர் வழியாக அவனுடைய பட்டாக்ஸ் பிறை நிலவு போலத் தெரியும். அத்தனை வறுமை. ஆனால் மிக நன்றாகப் படிப்பான்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு அவன் ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் போய் நீ கிழிந்த டவுசர் போட்டுத் திரிந்தவன் என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான்? இப்படிச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அவன் வறுமையில் இருந்தது உண்மை. ஆனால் அதனைத் தன் கடின உழைப்பால் வெற்றி கொண்டிருக்கிறான். எத்தனைபேரால் இப்படிச் செய்ய முடியும் எனக் கேட்கிறேன்?

சுயமாகப் படித்து முன்னேறிச் சம்பாதிக்கத் துப்பில்லாமல், அப்பன், பாட்டன் சம்பாத்தியத்தில் வெட்கமில்லாமல் தின்பவனைவிட ஆடு மேய்த்துப் படித்து முன்னேறிய அண்ணாமலையைக் கடவுளாக அல்லவா தமிழகம் வணங்கவேண்டும் என்கிறேன். அடுத்தவன் சொத்தைத் திருடித் திங்கிறவனுக்கு அண்ணாமலையைக் குறை சொல்ல எந்தத் தகுதியுமில்லை. அப்படிச் செய்கிறவன் (அண்ணா)மலையைப் பார்த்துக் குரைக்கிற நாய்க்குச் சமானமானவன்.

பதிவு: நரேந்திரன் K.Annamalai

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when D.V.Prakash BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share