Ceylon Plus News

  • Home
  • Ceylon Plus News

Ceylon Plus News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ceylon Plus News, News & Media Website, .

மறைந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் தேகம் இன்று (31) கொட்டகலையில் அமைந்துள்...
01/06/2020

மறைந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் தேகம் இன்று (31) கொட்டகலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது,

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மே...
29/05/2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்காக தேவைப்படும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மான நிலையத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்! 40 வயதுடைய ராபியா அர்ஷாத்..
29/05/2020

பிரிட்டனில் இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்! 40 வயதுடைய ராபியா அர்ஷாத்..

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத...
29/05/2020

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக ஒரு சூலில் 3 குழந்தைகள்3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியைச் சேர...
29/05/2020

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக ஒரு சூலில் 3 குழந்தைகள்

3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) வியாழக்கிழமை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.

18.05.2020 அன்று குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன் 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில் குறித்த சத்திர சிகிச்சையினை அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளிடங்கலாக மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

இதில் இரு ஆண் குழந்தைகளும் தலா 1910 கிராம் 1960 கிராம் மற்றும் பெண் குழந்தை 1480 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த மாதமும் இந்த மாதமும் நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கு ஒரே சூலில் தலா 3 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கண்டிக் கிளை, புதிய இடத்திற்கு மாற்றம்கீழுள்ள இணைப்பில் புதிய இடத்தின் loca...
29/05/2020

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கண்டிக் கிளை, புதிய இடத்திற்கு மாற்றம்
கீழுள்ள இணைப்பில் புதிய இடத்தின் location ஐ பெற்றுக்கொள்ளலாம்

Kandy branch of the Department of Immigration and Emigration moves to a new location.
You can get the location map at the below link.

Department of Immigration and Emigration - Kandy (ආගමන විගමන දෙපාර්තමේන්තුව - මහනුවර)
No 461 Peradeniya Rd, Kandy 20000
0815 624 470

https://maps.app.goo.gl/536Rtp3SEaWzxfmJ9

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது...
29/05/2020

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆறுமுகனின் கடைசிக் கோரிக்கை 1,000 ரூபா கொடுப்பனவு விரைவில் வழங்கப்படும் – உறுதி அளித்தார் பிரதமர் மஹிந்ததோட்டத் தொழிலாளர...
28/05/2020

ஆறுமுகனின் கடைசிக் கோரிக்கை 1,000 ரூபா கொடுப்பனவு விரைவில் வழங்கப்படும் – உறுதி அளித்தார் பிரதமர் மஹிந்த

தோட்டத் தொழிலாளர்களிற்கு விரைவில் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான்“ என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதனை தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தின் ஆரம்பத்தில், ஆறுமுகன் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரஸ்தாபித்தார்.

நேற்று அவர் காலமாகுவதற்கு முன்னதாக தன்னை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும், ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றி பேசினார். இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் உடலு...
28/05/2020

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

நேற்று மரணமடைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் இன்று உடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்கு சென்றார்.

அதன் பின் ஆறுமுகம் தொண்டமானின் மனைவி மற்றும் பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்களோடு அனுதாபங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அமைச்சர் ரொமேஸ் பத்திரன உள்ளிட்ட அங்கு குழுமியிருந்த பல முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் தேகம் இன்று (28) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, ...
28/05/2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் தேகம் இன்று (28) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஊரடங்குச் சட்டம் பற்றிய இன்றைய அறிவித்தல்:ஜுன் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும், மற்றும் அதன் பின்னரும் - நாட்டில் ஊரடங்...
28/05/2020

ஊரடங்குச் சட்டம் பற்றிய இன்றைய அறிவித்தல்:

ஜுன் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும், மற்றும் அதன் பின்னரும் - நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும்:

—> மே 31, ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் - முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

—> ஜுன் 01, திங்கள், முதல் ஜுன் 03, புதன், வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

—> ஜுன் 04, வியாழன், மற்றும் ஜுன் 05, வெள்ளி, ஆகிய இரு தினங்களும் - நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

—> ஜுன் 06, சனி, முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

—> கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,...
27/05/2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (27) அவரது இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அத்துடன் செந்தில் தொண்டமான் உட்பட அங்கிருந்த ஏனையோருடனும் தனது அனுதாபத்தை பகிர்ந்துகொண்டார்.

"அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைகின்றேன்" முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ...
27/05/2020

"அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைகின்றேன்" முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுனைய தலைவரும்,அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடைய மரணச் செய்தி என்னை மிகுந்த ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர் எனக்கு மிக நெருக்கமான ஒரு நண்பர். எப்பொழுது மலையகத்திற்குச் சென்றாலும் அன்பாக வரவேற்று மலையக மக்களுடைய அபிவிருத்தி பற்றி என்னோடு அளவளாவி அவர்களுக்காகவே சிந்திக்கும் ஒரு பண்பான ஆளுமையுள்ள மனிதர். நல்ல நண்பர். நாங்கள் மிக நெருக்கமாக வாழ்ந்தவர்கள்.

அண்மையில் கூட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களுக்கு விநியோகிக்கவென 3000 குர்ஆன் பிரதிகளைக் கூட என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மிகவும் கடுமையான வெள்ளம் மட்டக்களப்பு மாவட்டத்திலே வந்த போது கூட அங்கு விநியோகிக்கவென தேங்காய் உட்பட பல பொருட்களை கொண்டுவந்து என்னிடம் தந்த ஒருவர். நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாக பழகுகின்றவர்கள். அவரது மரணச் செய்தி என்னை மிகவுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவரது கட்சி வளர்ச்சியிலே அரும்பாடுபட்ட ஒருவர். அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான அவர்களது தலைமையிலே இக்கட்சி உருவாகிய காலம் முதல் நாங்கள் அவரோடு நெருக்கமாக பணிகளைச் செய்து இருக்கின்றோம். அதற்குப் பின் அவர்களது பேரன் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இக்கட்சியைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்கள். ஆகவே எதிர்காலத்திலே இக்கட்சி தொடர்ந்து செல்ல வேண்டும்.

முஸ்லீம்கள் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், குறிப்பாக செந்தில் தொண்டமான் எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நல்ல பணிகள் மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
26/05/2020

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடைசி புகைப்படம்இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தூதுவருடன் ஆறுமுகம் தொண்டமான் எடுத்துக்கொண்ட புகைப்படம்ஆழ்ந்த அனுதாபங்கள்
26/05/2020

கடைசி புகைப்படம்
இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தூதுவருடன் ஆறுமுகம் தொண்டமான் எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஆழ்ந்த அனுதாபங்கள்

காத்தான்குடி நகரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
26/05/2020

காத்தான்குடி நகரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.திடீர் சுகயீனம் காரணமாக இன்று ...
26/05/2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று மாலை தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானார்.

ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மகிந்த தெரிவிப்பு !
26/05/2020

ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மகிந்த தெரிவிப்பு !

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Plus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share