Read News

Read News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Read News, Media/News Company, .
(1)

 #சம்மாந்துறை பிரதேசத்தின் கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம் இன்று...!-ஐ.எல்.எம் நாஸிம்-நாட்டில் வேகமாக பரவிவரும...
07/10/2020

#சம்மாந்துறை பிரதேசத்தின் கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம் இன்று...!

-ஐ.எல்.எம் நாஸிம்-

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் விஷேட கூட்டம் இன்று (06) பி.ப. 02.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் ,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், சமயத் தலைவர்கள்,கோவில் பரிபாலண சபை பிரதி நிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலக கொரோனா பாதுகாப்புச் செயலணிக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பொறுப்புவாய்ந்தவர்களும் அவற்றை கடைப்பிடித்து நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொரோனா பாதுகாப்பு செயலணியின் விஷேட அறிவித்தல்

தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தெற்றிலிருந்து தம்மைத் தற்கத்து தெற்றைத் தடுக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் நிலையம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் இலங்கை இராணுவத்தினர் கூடி பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றை கட்டாயம் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

1.கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்தல்.

2. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா, மொனராகலை, யாழ்ப்பாணம் போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து எமது பிரதேசத்துக்கு வருகைதரும் நபர்கள் தொடர்பான தகவல்களை கிராம சேவகரிடம் அறிவிக்கவேண்டும் என்பதோடு அவ்வாறு வருகை தந்தவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சுயதனிமைப்படுத்தல் நிலையத்துக்கு குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்படுவர். மேலும் தகவல்களை மறைத்தவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

3. தனியார் பிரத்தியோக வகுப்புக்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தல் வேண்டும்.

4. பொது மக்கள் பொதுவாக ஒன்றுகூடக்கூடிய திருமணம், மரணவீடு போன்ற இடங்களில் கொவிட் - 19 தொடர்பான சுகாதார நடைமுறைளைப் பேணுமாறும் அவசியமற்ற ஒன்று கூடல்கள், சுற்றுலாக்கள், மற்றும் பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

5. சகல கடைகள், பொது இடங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள கைகழுவுவதற்கான ஏற்பாடுகளை மீள நடைமுறைப்படுத்துவதுடன் கொவிட் - 19 சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பேணவேண்டும்.

6. சம்மாந்துறையின் எல்லைப் புறங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுமாறும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

7.பொதுக் கழியாட்ட இடங்கள் சிறுவர் பூங்காக்களை தற்காலியமாக மூடுதல்.

8.கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய மத நிறுவனக்களின் பிரதி நிதிகள் தத்தமது மதங்களின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல்.

மேற்படி அறிவுறுத்தல்களை பேணி நடக்குமாறும் தவறும் பட்சத்தில் கடுமையான சட்டநடிவடிக்கைகளுக்கு முகக் கொடுக்க நேரிடும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 256 பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள்  இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன.
01/09/2020

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 256 பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன.

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"சம்மாந்துறை பிரதேசத்தில் மீண்டும் வீடு திறந்து வைப்பு
04/07/2020

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"சம்மாந்துறை பிரதேசத்தில் மீண்டும் வீடு திறந்து வைப்பு

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" சம்மாந்துறை பிரதேசத்தில்  இரண்டு வீடுகள் திறந்து வைப்பு.++++++++++++++++++++++++...
25/06/2020

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" சம்மாந்துறை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" சம்மாந்துறை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இன்று (25) வைபவ ரீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ் இரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடு சம்மாந்துறை மலையடிகிராமம் 1, சம்மாந்துறை சென்னல் கிராமம் 2 ஆகிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட எம்.எல். சித்தி நபீசா,எம்.எல் வெள்ளம்மா என்ற பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் 51 வீடுகளில் இரண்டு வீடுகள் இன்று கையளிப்பட்டுள்ளதாக,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க இதன் போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள் எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

20/06/2020
தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படு...
07/06/2020

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) தேர்தல் சிறப்பு #ஒத்திகை தேர்தல் இடம்பெற்றது.

* அம்பலாங்கொடை-வில்லேகொடை விஹாரை மண்டபத்தில் மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை 200 வாக்காளர்கள் பங்குபற்றனர்.

* இதன்போது, சுகாதார வழிமுறைகளுக்கமைய வாக்களிப்பு நிலையத்தை அமைத்தல் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர் ஒருவர் செலவு செய்யும் நேரம் என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளது..

A special trial election supervised by Election Commission Chief Mahinda Deshapriya held at the Ambalangoda Vilegoda Dhammayukthikarama Temple today.

The trial election was held involving health guidelines such as maintaining social distancing and wearing face masks.

( )

நாளை (06) முதல் இரவு 11:00pm -  4:00Am மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.....
05/06/2020

நாளை (06) முதல்
இரவு 11:00pm - 4:00Am மணிவரை
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.....

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பிரதமர் மஹிந்...
01/06/2020

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம்!

பள்ளிவாசல்கள் ஜூன் 8 இல் திறப்பு!.
01/06/2020

பள்ளிவாசல்கள் ஜூன் 8 இல் திறப்பு!.

பள்ளிவாசல்கள் ஜூன் 8 இல் திறப்பு!.

சுகாதார அமைச்சு வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த முழு நாட்டிலும் உள்ள பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என வக்பு சபைபின் தலைவர் சட்டத்தரணி அலி சப்றி நவமணி பத்திரிகைக்கு தெரிவித்திருந்ததாக அப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு,கம்பஹா மாவங்களில் தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் மூடப்படிருக்கும் நிலையில்,திறக்கபடும் பள்ளிவாசல்கள் குறிப்பிட்ட தொழுகைக்கு 15நிமிடத்துக்கு முன் திறக்கபட்டு 45 நிகிடத்துக்குள் மூடப்பட வேண்டும்,

கூட்டுத் தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரம் அனுமதிக்கபடுவர்.

பள்ளிவாசலில் ஒரு நுழைவாயில் மட்டுமே திறந்து வைக்கப்பட வேண்டும்,

பள்ளிவாடலில் மலசடகூடம்,ஹவ்ல் என்பன பூட்டி வைக்கப்பட வேண்டும்,

ஒரு மீற்றர் இடைவெளியை காட்டும் அடையாளங்கள் பள்ளிவாசலில் இடப்பட்ட வேண்டும்,

சகலரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,

தொழுகைக்காக வருவோர் முஸல்லாக்களை எடுத்து வர வேண்டும்,

பள்ளி வாசல்களில் கூட்டங்களை நடந்துவதற்கோ,அன்னதானங்களை நடத்துவதற்கோ அனுமத்திக்கப்பட மாட்டாது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் உள்ளாடங்கிய வக்பு சபை தயாரித்திருக்கின்ற 10 நிபந்தனைகள் கொண்ட புதிய சுற்று நிரூபம் இன்று வெளியிடப்படும் என்றும் அலி சப்றி தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை ஜூம்ஆ தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்ற வரையறைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி-- நவமணி

நாட்டில் கொரோனா தொற்றினால் மற்றுமொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோ...
01/06/2020

நாட்டில் கொரோனா தொற்றினால் மற்றுமொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த நபர் குவைதிலிருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அரசின் 5000 ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்பனவுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக...
14/05/2020

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அரசின் 5000 ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்பனவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான
இரண்டாம் கட்ட கொடுப்பனவு (13) சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்தகர் எம்.எல் தஸ்னீம்,கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் மற்றுமொரு உதவி!சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்...
14/04/2020

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் மற்றுமொரு உதவி!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதற்காக இருபது ஆயிரம் (20,000) பக்கெட்டுகளை சம்மாந்துறை இருட்டு வட்ட அமைப்பினர் இன்று(14) அன்பளிப்பு செய்தனர்.

அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லாபிரினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத்.எம் ஹனீபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் இருட்டு வட்ட அமைப்பினர் வைத்திய சாலை உத்தியோகர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இருட்டு வட்ட அமைப்பு இக் காலப்பகுதியில் பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கும்  தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு : சம்மாந்துறை பிரதேச சபை தவிசா...
13/03/2020

மறு அறிவித்தல் வரை சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு : சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அதிரடி உத்தரவு

சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளராக எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவு.சம்மாந்துறையின் புதிய உபதவிசாளராகஸ்ரீ ல.சு.கட்சியின்...
05/03/2020

சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளராக எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவு.

சம்மாந்துறையின் புதிய உபதவிசாளராக
ஸ்ரீ ல.சு.கட்சியின் அமைப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர் எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவாகியுள்ளார்.

வாழ்த்துக்கள் 🎊......

சட்டவிரோதமாக உரப்பை மூலம் கடல்மண் கடத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணை...
04/03/2020

சட்டவிரோதமாக உரப்பை மூலம் கடல்மண் கடத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்களம் உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அண்மைக்காலமாக மண்கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இரவு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர் குழு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது இரவு மோட்டார் சைக்கிள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தல் முயற்சி ஒன்றினை தடுத்து நிறுத்தியதுடன் கடத்தலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் சுமார் 20க்கும் அதிகமான மண் மூடைகள் கைப்பற்றப்பட்டு மீண்டும் கடற்கரையில் கொட்டப்பட்டன.

மேலும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி சென்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது.இந்...
26/02/2020

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மத்திய குழு ஆகியவை ஐ.தே.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்தது என்றும் இதுவே நாங்கள் செய்த ஒரு வரலாற்று தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தற்போதைய அ...
26/02/2020

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

மைத்திரிபால சிறிசேனவை போன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக மாறியிருந்தாலும் கொள்கைகள் அப்படியே இருப்பதாகவும் பொருளாதாரத்தில் சிறப்பான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த அரசாங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் ஆனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவில்லை என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி சற்றுமுன் வெளியாகியுள்ளத...
14/02/2020

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி சற்றுமுன் வெளியாகியுள்ளது..

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்த அரசியல் பிரமுகர்கள் சிலரை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
31/01/2020

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்த அரசியல் பிரமுகர்கள் சிலரை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதன்படி சரத் பொன்சேகா, அஜித் பி பெரேரா, ரோஸி சேனாநாயக்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரஞ்சன் ராமநாயக்க உட்பட்டவர்களை நீக்கி புதியவர்களைச் செயற்குழுவில் நியமித்துள்ளார் ரணில்.

ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கியதாலும், ஏனையோர் சஜித் பிரேமதாஸவின் தீவிர ஆதரவாளர்கள் என்று கருதப்படுவதாலும் செயற்குழுவிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம்...
31/01/2020

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.

இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபடுவார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் அசூர வேகத்தில் பரவி வருகின்றது. இதனையடுத்து, உலக நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை அழைத்து வருகின்றது. அந்தவகையில் அங்கு பல்கலைகழகங்களில் பயின்ற இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அவ்வாறு அழைத்து வருபவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரமே தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து கடந்த மாத இறுதியில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் தொடர...
30/01/2020

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து கடந்த மாத இறுதியில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவி வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து அரசையும், மருத்துவத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.

சீனாவில் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 170 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,974 பேர் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

நேற்று 29.01.2020 சுமார் 100 பேரும் இன்று 30.01.2020 சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு ...
30/01/2020

நேற்று 29.01.2020 சுமார் 100 பேரும் இன்று 30.01.2020 சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Read News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share