23/12/2023
குளிர்காலத்துக்கு இதமான மிளகு ரசம்
தேவையான பொருட்கள்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
வரக்கொத்தமல்லி - அரை ஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - 1
புளி - நெல்லிக்காய் அளவு
பழுத்த தக்காளி - இரண்டு
தாளிக்க - கடுகு ,சீரகம், வெந்தயம் - சிறிதளவு
என்னை - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
கருவேப்பிலை ,மல்லி இலை- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் கொத்தமல்லி போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் ,சிறிது கறிவேப்பிலை போட்டு மீண்டும் ஒரு தடவை அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,சீரகம் ,வெந்தயம் ,காய்ந்த மிளகாய் ,பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள ரசப்பொடி ,புளித்தண்ணீர்,மசித்த தக்காளி ஒரு டம்ளர் தண்ணீர் தேவையான அளவுக்கு ,உப்பு நன்கு கலந்து விடவும்.
இந்த ரசம் வந்து கொதி வரக்கூடாது கொதித்தால் நன்றாக இருக்காது.
கொதிக்கு முன்பு நன்கு நுரைத்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கம கமன்னு மணக்கிற மிளகு ரசம் ரெடி.
ரசப் பொடியை மிக்ஸியில் அரைக்காமல் இடிக்கிற கல்லில் இடித்து வைத்தால் இன்னும் டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.