Jeevan Network

  • Home
  • Jeevan Network

Jeevan Network ஒன்றிணைவோம் ஒருமனதாய்

சிறைக்கு சென்று விட்டாள் பயந்து விடுவோம் என்று பலர்  எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயந்து போகிற கூட்டம்...
10/01/2024

சிறைக்கு சென்று விட்டாள் பயந்து விடுவோம் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயந்து போகிற கூட்டம் அல்ல,
எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.
நாங்கள் தொடர்ந்து கிறிஸ்தவ சமுதாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிறுபான்மை மக்களுக்காக போராடுவோம்...

இது எங்கள் நாடு இந்தியா
நான் ஒரு தமிழன்

இயேசுவே உலக இரட்சகர்
கிறிஸ்தவ முன்னணி
வழக்கறிஞர் D.சரவணன்

 ெய்திகள் | ₹30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தையும் கையோடு பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்!  |   |
10/01/2024

ெய்திகள் | ₹30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தையும் கையோடு பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்!

| |

10/01/2024
 #பில்கிஸ்பானு_பேசுகிறேன்அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தை...
10/01/2024

#பில்கிஸ்பானு_பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில்
கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும், காண்பவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வ தாகவும் பதற்றத்தோடு சொன்னார்கள். செருப்பை மாட்டிக் கொள்ளவோ, மாற்றுத் துணிகளை
எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு உற வினர்களோடு வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த பள்ளிக் கூடத்தில் தஞ்சமடைந்தோம்.

அது பாது காப்பில்லை என்றார்கள். என்னோடு சேர்த்து 17 பேரும், என் வயிற்றில் இருந்த குழந்தையோடு 18 பேர் ஒரு மசூதிக்குள் தஞ்சமடைந்தோம்.
அதுவும் பாது காப்பில்லை என்றார்கள். ஊரை விட்டுக் கிளம்பினோம். ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருந்தோம். 18பேரும் ஊர் ஊராக பாதுகாப்பான இடம்தேடி உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடிக் கொண்டிருந்தோம். மார்ச் 3 அன்று ஒரு கும்பல் எங்களை வழிமறித்தது. 20, 30 பேர் இருப்பார்கள். அனைவரும்
எங்கள் ஊர்க்காரர்கள். நான் பிறந்தது முதல் அவர்களைப் பார்த்தே வளர்ந்திருக் கிறேன். அவர்கள் சிலரை நானும், என்னை அவர்களும் உறவு சொல்லி அழைத்திருந்திருக்கிறோம். அவர்களைக் கண்டதும் உள்ளூர்க்காரர்கள் என்பதால் பெரிய அச்சம் ஒன்றும் எனக்கு தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அப்போது வேறொன்றாக
மாறியிருந்தார்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 17பேரில் 14 பேரை ஈவிரக்கமின்றி எனது கண் முன்பே படுகொலை செய்தார்கள். அதில் 7 பெண்கள் இருந்தோம். கைக்குழந்தையோடும், கரு வாக இருந்த குழந்தையோடும் இருந்த நான், எனது தங்கை, வீட்டிலிருந்து ஓடிவரும் போது நிறைமாத கர்ப்பிணியாக
இருந்து ஓடிக் கொண்டிருந்த இரண்டாம் நாளில் குழந்தையைப் பெற்றெடுத்த என் சித்தப்பா மகளும் அதில் இருந்தார். 7 பெண்களையும் அவர்கள் எவ்விதக் கரு ணையுமின்றி கொடூரமான முறையில் ஆயுத முனையில் வல்லுறவு செய்தார்கள். அவர்களின் தாய் வயது, தங்கை வயது, மகள் வயது, பேத்தி வயது இருந்த யாரையும்
விட்டு வைக்கவில்லை. எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்கு முன்பு ஒருவரையும் விட்டுவிடாமல் வல்லுறவு செய்தார்கள்.

எந்த தாய்க்கும் நேரக்கூடாத துயரத்தை நான் அனுபவித்தேன். அய்யோ, நினைக்கவே மனம் இப்போதும் பதறுகிறதே, எனது மூன்று வயது மகளின் காலைப் பிடித்து அருகில் இருந்த
பாறையில் அவளது தலையை ஓங்கி அடித்து கொன்றார்கள். கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் என்னை பலரும் வல்லுறவு செய்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்று இருந்த எனது சித்தப்பா மகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. விலங்கினங்கள் கூட ஈன்ற ஒரு பெண் விலங்கோடு உடனடியாக
உறவு கொள்ளாது என்று கேட்டிருந்தேன். ஓட முடியாத நிலையிலிருந்த- அப்போது தான் ஈன்றெடுத்த மான் குட்டியை பசியில் இருக்கும் புலி கூட தின்னாது என்று பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கயவர்களைப் பொறுத்தவரை அனைத்தும் பொய்யாய்ப் போனது. நானும் கொல்லப்பட்டு விட்டதாகவே நினைத்து அவர்கள்
சென்றுவிட்டார்கள்.
ஆனால் எனக்கு உயிர் இருந்தது. என்னோடு 7 வயது, 4 வயதுச் சிறுவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தார்கள். அதாவது, எங்கள் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்.
தாயை, பெற்றெடுத்த மகளை, சுற்றத்தை, என் சுயமரியாதையை இழந்து நான் துயரின் விளிம்பில், ஆற்றாமையில்
நின்று கொண்டிருந்தேன். கொஞ்சம், கொஞ்சமாக மன வலிமையை உருவாக்கிக் கொண்டு புகார் கொடுத்தேன். 14 பேரையும் உடற்கூராய்வு செய்யா மலேயே எரித்துவிட்டார்கள். நான் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டது பொய் என்றார்கள். எங்களை கொலை செய்தவர்கள் மட்டுமின்றி, காவல்துறையினர், மருத்துவர்,
விசாரணை அமைப்புகள் என அனைவரும் குற்றத்தையும், குற்றவாளிகளையும் பாதுகாத்து நின்றார்கள். மலைப்பு தான். ஆனாலும் தொடர்ச்சியாக முயற்சி செய்தேன். டீஸ்டா செதல்வாத் போன்றவர்கள் உத வினார்கள். மூடப்பட்ட வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத் தின் உத்தரவால் திறக்கப்பட்டது. குஜராத் காந்தியின் பூமி
மட்டுமல்ல, அது மோடியின் பூமியும் கூட. குற்றங்கள் நடப்பதும், குற்றமிழைத்தவர்கள் கொண்டாடப்படுவதும் வழக்கமாகியிருக்கும் காலம் இது. எனவே, அங்கு நீதி கிடைக்காது என்று அறிந்து வேறொரு மாநிலத்திற்கு வழக்கு விசாரணையை மாற்றக் கோரினோம். உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது
மகாராச்ட்ராவில் வழக்கு
நடந்தது. அந்த வழக்கில் முதலில் முதல் தகவல் அறிக்கையை முறையாக பதிவு செய்யாத காவல்துறையினரும், என்னை பரிசோதித்து தவறான சான்றளித்த மருத்துவரும் குற்றத்திலிருந்து விடு விக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மேல்முறையீட்டில் அவர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டிருந்தார்கள்.

அதில் 11 பேர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். ஏற்கனவே ஒருவர் இறந்து போனார். நீதிமன்றம் எனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், வீடும், அரசு வேலை யும் தர உத்தரவிட்டிருந்தது. நினைவில் கொள்ளுங்கள், நான் இருப்பது குஜராத்தில். மோடியின் குஜராத்தில். பணம் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

வீடும், அரசு வேலையும் தரவில்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை எஞ்சியிருந்தது. முன்னே நின்ற தடைக் கற்கள் அனைத்தை யும் இந்திய நாட்டின் நீதித்துறை விலக்கி, தகர்த்து நீதி வழங்கியிருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

அந்த நம்பிக்கையில் தான் இப்போது அமிலம் ஊற்றப்பட்டிருக்கிறது.

இந்தியா தனது சுதந்திர தினத்தை அதன் வைர விழாவைக் கொண்டாடிக் கொண்டி ருந்தது. தங்கள் முகப்புப் படங்களில் மூவர்ணக் கொடியை அடையாளமாக வைத்திருந்தார்கள். தங்களுடைய தனிப்பட்ட முகமல்ல; தனிப்பட்ட விருப்பமல்ல; எங்களு டைய ஒரே அடையாளம் மூவர்ணக் கொடி தான் என்று எல்லோரும் கொண்டாடிக்

கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்தது. இந்த மகிழ்ச்சி அனைத்தும் எவரையும் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். இந்த புன்னகை பூத்த முகங்களுக்கிடையே 11 முகங்கள் சிரித்த படியே வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் கழுத்தில் மாலைகள் தொங்குகிறது. அவர்கள் முகத்தில்
பெருமிதப் புன்னகை மலர்ந்திருக்கிறது. அவர்களைப் பாராட்டி சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி சிலர் அவர்களின் ஆசி கோரி நிற்கிறார்கள். ஒரு இலை முழுவதும் விருந்து படைத்து அதன் நடுவில் ஒரு துளி விஷத்தை வைத்தது போல பவளவிழா சுதந்திர
தினத்தை 140 கோடி மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இவர்களுடைய கொண்டாட்டமும் இருந்தது. ஆம். என் குடும்பத்தில் 14 பேரைக் கொன்றவர்கள். நான் உட்பட 7 பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்கள். இந்திய நீதி வழங்கும் அமைப்பில் உயர்ந்த பீடத்தால் குற்றவாளி கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தான் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் சுதந்திரமும், இந்தியக் குடியரசும் எப்படி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அடையாளங்களில் ஒன்று இது.

இதோ, நான் பிறந்து, வளர்ந்து, தவழ்ந்து, விளை யாடி, படித்து, திருமணம் செய்து, குழந்தை பெற்ற அந்த ஊரில் அவர்கள்
கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள். நான் அந்த ஊரில், அந்த துயரமான நாளுக்கு பிறகு குடியேறவே முடியவில்லை. விசாரணையில் பல்வேறு கட்டத்திலும் என்னை, என் கணவர் யாகூப் ரசூலை, எனது கைக் குழந்தையை கொன்று விடுவதாக, எரித்து விடுவதாக, காணாமல் செய்து விடுவதாக 2002ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ச்சியாக மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். எனவே, நிரந்தரமாக இந்த 20 ஆண்டு களும் நிலையானதொரு இடத்தில் நான் தங்கியிருக்கவே முடியவில்லை. அகதிகளுக்கு கூட முகாம் உண்டு. காந்தி பிறந்த பூமியில் பிறந்த எனக்கு ஒரு முகாம் கூட அல்ல, நிரந்தரமாக ஒரு வீட்டில் கூட இருக்க முடியாத நிலைமையில்
ஓடிக் கொண்டே இருந்தேன். இந்த காலம் முழுவதும் நான் பட்ட துயரங்களும், துன்பங்களும், வேதனைகளும் உலகில் வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அன்னை மரியாள் பார்த்துக் கொண்டிருந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இறந்திருந்தாலும் அந்த வலியை அவர்
உணர்ந்திருக்கக் கூடும். கம்சனால் தனது மகன் கண்ணன் கொல்லப்படக் கூடும் என்று அறிந்த போது, யசோதா என்ன பாடுபட்டிருப்பார். ஆனால் நான் என் குழந்தையை பறிகொடுத்துவிட்டு போராடிக் கொண்டி ருந்தேன். அது என் குழந்தைக்கு நீதி கேட்ட போராட்டம் மட்டுமல்ல; என்னைப் போன்று ஒரு தாய்,
தன் கண்முன்னே தன் குழந்தை காலைப் பிடித்து தலையை பாறையில் அடித்து கொல்லப்படுவதை பார்க்கும்படியான சம்பவம் நிகழவே கூடாது என்பதற்காக.

ஆனால், இப்போது நான் பார்ப்பது என்ன? இதோ, அந்தக் குற்றவாளிகள் என் ஊரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நானோ மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
“பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து- குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்-இது செய்யுமுன்னேமுடியேன்” என்றுரைத்தாள், பாஞ்சாலி.

நான் அப்படிக் கோரமாட்டேன். அவர்களைப் போல் யாரும் மிருகமாக மாறாமல் வாழ
வேண்டும். அதற்காக அவர்கள் சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.

கண்ணகியோ, “பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்”

என்று சாபம் உரைத்தாள். இது தன் கணவனை மட்டும் அநீதியாக இழந்ததால் வந்த கோபம் அது. ஆனால் 14 பேரை அதுவும் தாய்,
மகள், நெருங்கிய உறவுகள் அனைவரையும் பறிகொடுத்த பிறகும் நான் அப்படி கோரமாட்டேன்.
நான் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும், ஒவ்வொரு உயிரையும் அந்த உயிரின் உறவுகளையும் நான் நேசிக்கிறேன். யாருக்கும் தீங்கிழைப்பதோ, தீங்கிழைத்தோரை தீயிடுவதோ, தீ தின்னட்டும் என சாபம் விடுவதோ என் நோக்கமல்ல
ஆனால் இப்படி கொடிய குற்றவாளிகள் 11 பேரும் ஊருக்குள் தலைநிமிர்த்தி திமிரோடு அலைவது நீடிக்கும் என்றால், இந்த நாட்டை யார் நாடு என்பார்? இந்த மக்களை யார் மனிதர்கள் என்பார்? இந்த நீதித்துறையை யார் நீதி வழங்கும் அமைப்பு என்பார்?

என் தாய் நாடு நீதிமறுக்கப்பட்டவர்களின் தேசமாக வும்,
நீதி மறுப்போர் ஆளும் காடாகவும் மாறிவிடக் கூடாது.

எனவே,

*இனி இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம். இந்த தேசத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக னுக்கும் உண்டு. எனவே, ஒவ்வொரு இந்தியரும் உரத்துச் சொல்ல வேண்டும்.*

நான் அதிகம் கோபப்படுவதுஉண்மைஆனால் என்கோபத்தில் ஒருபோதும் துரோகம்இருக்காதுவழக்கறிஞர் D.சரவணன்
10/01/2024

நான் அதிகம்
கோபப்படுவது
உண்மை
ஆனால் என்
கோபத்தில் ஒரு
போதும் துரோகம்
இருக்காது

வழக்கறிஞர் D.சரவணன்

  | ஆணவக் கொலை - பெற்றோர் கைது  |   |   |
10/01/2024

| ஆணவக் கொலை - பெற்றோர் கைது

| | |

07/01/2024

பாவம் என்று தெரிந்தும் மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்?...

மனம் போன போக்கில் போகவேண்டாம் என்று சொல்வது இதற்காகவே. நமக்காக மரித்த,
நம் பாவங்களுக்காகவே மரித்த இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
நன்மை எது,
தீமை எது என்று சிந்திக்கும் பகுத்தறிவு மனிதனுக்கு தேவன் அருள செய்திருக்கிறார்.
இருந்தாலும் மனம் மனிதனை பாவத்தின் பக்கம் இழுத்துவிடுகிறது அதிலிருந்து விலகவே ஆன்மிக வழியை தேவன் (இயேசு )ஏற்படுத்தி வைத்தனர். பக்குவப்பட்ட நல்ல மனம்,மனிதனை நன்மையின் பாதையில் செலுத்தும் பலம் பெற்றிருக்கும்.

தேவன் நமக்கு கொடுத்த இந்த அற்புத உலகத்தில்
நன்மை செய்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்
பாவம் செய்து தேவனுடைய மகிமை இழந்து விடாதீர்கள்
நன்மை செய்வதற்காக தேவன் நம்மை உலகத்தில் படைத்திருக்கிறார்

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:32

வழக்கறிஞர் D.சரவணன்

ஏன் EVM  ஐ தடை செய்ய வேண்டும் ?EVM ஐ பயன்படுத்தி பின்னர் தடை செய்த ஜெர்மனி,பங்களாதேஷ் போன்ற நாடுகளின் அனுபவங்கள் உள்ளிட்...
06/01/2024

ஏன் EVM ஐ தடை செய்ய வேண்டும் ?

EVM ஐ பயன்படுத்தி பின்னர் தடை செய்த ஜெர்மனி,பங்களாதேஷ் போன்ற நாடுகளின் அனுபவங்கள் உள்ளிட்ட
பல்வேறு முக்கியமான விபரங்கள் அடங்கிய 76 பக்க ஆவணம்..

ஆவணத்தை படிக்க-
https://drive.google.com/file/d/18QDs03rSxsLUXQH5hM1qLy1_34e-2Inn/view?usp=drivesdk

*(Updated Document)*

தவறாக அச்சிடப்பட்ட ராமர் கோவில் அழைப்பிதழ்!  |   |
06/01/2024

தவறாக அச்சிடப்பட்ட ராமர் கோவில் அழைப்பிதழ்!

| |

வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்
06/01/2024

வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்

நீங்க விளக்கேத்துங்கஏத்திய விளக்கு புடிங்கஅதுக்குதானே அமைச்சர் ஆயிருக்கேங்கமுருகன் சார்......சிறுபான்மை மக்களை ஒடுக்குறி...
06/01/2024

நீங்க விளக்கேத்துங்க
ஏத்திய விளக்கு புடிங்க
அதுக்குதானே அமைச்சர் ஆயிருக்கேங்க
முருகன் சார்......

சிறுபான்மை மக்களை ஒடுக்குறிங்க அடிக்கிறீங்க
பெண்களுக்கு பதிகாப்பு இல்ல...
அப்போ எதுக்கு சார் விளக்கு புடிக்கணும் ...
யாரை ஏமாத்துறீங்க

இளையராஜாவை இரண்டு அடி தள்ளி நிக்க வைத்த சனதானம்
05/01/2024

இளையராஜாவை இரண்டு அடி தள்ளி நிக்க வைத்த சனதானம்


தயவு செய்து இது எல்லாம் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்...நம்மை ஏமாற்றுவதற்கு மோடி அய்யா போடும் தந்திரம் ஓட்டுக்காக.யாரும் ...
05/01/2024

தயவு செய்து இது எல்லாம் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்...
நம்மை ஏமாற்றுவதற்கு மோடி அய்யா போடும் தந்திரம் ஓட்டுக்காக.
யாரும் ஏமார்ந்து விடாதீர்கள்
கவனமாக இருங்கள்...

இவர் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் சேவை செய்வதில், கல்வியில், மருத்துவத்தில், கிறிஸ்தவர்கள் தான் முதலிடம் என்று சொல்லிக்கொண்டேபோகலாம்....
இது வரலாறு மறுக்கமுடியாத உண்மை...

10/12/2023

கிறிஸ்தவத்தில் உள்ள #சாதி கலைக்கப்பட வேண்டும் #கிறிஸ்தவ_முன்னணி

05/12/2023

படிக்கவே கூடாது என்று சொன்ன இந்துத்துவம் #கிறிஸ்தவமுன்னணி

கூட்டத்தில் நிற்பது எளிதுதனியாக நிற்க தான் தைரியம் தேவைவழக்கறிஞர்D.சரவணன்
09/11/2023

கூட்டத்தில் நிற்பது எளிது
தனியாக நிற்க தான் தைரியம் தேவை

வழக்கறிஞர்
D.சரவணன்

தமிழக அரசே தடை செய்   #கிறிஸ்தவமுன்னணி
10/10/2023

தமிழக அரசே தடை செய் #கிறிஸ்தவமுன்னணி

தாமதமாக கிடைப்பட்ட நீதி1992 ஜூன் மாதம் வாச்சாத்தி மலைவாழ் மக்களை அப்போது ஆளும் பயங்கரவாத அரசின் துணையோடு காவல்துறை பொருக...
29/09/2023

தாமதமாக கிடைப்பட்ட நீதி

1992 ஜூன் மாதம் வாச்சாத்தி மலைவாழ் மக்களை அப்போது ஆளும் பயங்கரவாத அரசின் துணையோடு காவல்துறை பொருக்கிகள் வனத்துறைகாமுகர்கள் அரசு அதிகாரிகள்ஊழல்வாதிகள் என்று அனைவரும் சேர்ந்து விசாரணை என்ற பெயரில் சிறுமிகள் உள்பட 18பெண்களை பாலியல் வண்புணர்வு செய்து ஊர் மக்களையே அடித்து உதைத்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி உடமைகளையும் பொருட்களையும் திருடிகொண்டு நாசம் செய்த பெரும் வரலாற்று வன்முறையை நிகழ்த்தியது

அப்போதிலிருந்து இந்த வழக்கு விசாரணையிலிருக்கும் பட்சத்தில் வழக்கை விசாரிக்கவிடாமல் குற்றவாளிகள் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல.

இப்படியான காக்கிபொருக்கிகள் எளிய மக்களின் மீதும் இன்றளவும் வக்கிரத்தை காட்டிக்கொண்டுதான் வருகிறது. அதைத்தான் சுட்டிகாட்டி திரைப்படங்களும் கட்சிகளும் பேசிவருகின்றது. காவல்துறை கன்னியமிக்கதுமாய் பாதுகாப்பாய் உள்ளதுபோல் காட்டிகொள்வது கேவலத்தின் உச்சம்😡

269 குற்றவாளிகளில் அப்போதே 150க்கும் மேற்பட்டோரை தூக்கில் போட்டிருக்கலாம் சட்டமும் சரியில்லாத அப்போது ஆளும் அதிமுக வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்த வன்மைறையை காவல்துறைமீது மலைவாழ் பழங்குடிகள் தான் தாக்கியுள்ளனர் அவர்தான் குற்றவாளி என்று பேசியிருக்கிறார் இதுவே அவரின் எச்சை வேலை என்பதற்க்கு உதாரணம்.

Address


Telephone

+19003388030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeevan Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share