மேலப்பாளையம் நிகழ்வுகள்

  • Home
  • மேலப்பாளையம் நிகழ்வுகள்

மேலப்பாளையம் நிகழ்வுகள் அன்றாடம் நடக்கும் மேலப்பாளையம் நிகழ்வுகள்

திருநெல்வேலி அல்பிட்டோ கிரிக்கெட் கிளப் நடத்தும் 32 அணிகள் கலந்து கொண்ட  #மாவட்ட_அளவிலான  #மாபெரும்_கிரிக்கெட்_திருவிழா ...
15/01/2024

திருநெல்வேலி அல்பிட்டோ கிரிக்கெட் கிளப் நடத்தும் 32 அணிகள் கலந்து கொண்ட #மாவட்ட_அளவிலான
#மாபெரும்_கிரிக்கெட்_திருவிழா
பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது...இறுதிப்போட்டியில் பாளையங்கோட்டை அன்கர் பாய்ஸ் மற்றும் எம.பி.எம் ரைடரஸ் அணிகள் மோதின!
முதலில் பேட் மேலப்பாளையம் எம்.பி.எம. ரைடரஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்களில் 75ரன்கள் அடித்தது!!!
76 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய பாளை அன்கர் பாய்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் அடித்து 26ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது...
வெற்றி பெற்ற மேலப்பாளையம் எம்.பி.எம் ரைடரஸ் அணிக்கு புல்லட்ராஜா அவர்கள் கோப்பை மற்றும் 15,000 பரிசுத்தொகையையும் வழங்கினார்கள்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் 3வது முறையாக சேக்உஸ்மானி தலைமையில் அணித்தலைவர் இஸ்மாயில், ராஜா,பஷீர்,அபூ,ஆர்.டி சித்தீக்,மசூத் போன்ற இளம் வீரர்களை கொண்ட #மேலப்பாளையம் எம்.பி.எம் ரைடரஸ் அணியினர் சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது...

📸 Look at this post on Facebook https://www.facebook.com/share/p/JMPDhuifNKqBunaL/?mibextid=Zmo65R
02/01/2024

📸 Look at this post on Facebook https://www.facebook.com/share/p/JMPDhuifNKqBunaL/?mibextid=Zmo65R

இறைவன் நாடினால் எதிர்வரும் #ஜனவரி_7_2024 #ஞாயிற்றுக்கிழமை #அரசு_சான்றிதழ்கள்_விண்ணப்பிப்பதற்கான_மற்றும்_திருத்தம்_செய்வதற்கான_இலவச_பொது_சேவை_முகாம்

Melapalayam Officers Academy (MOA), Melapalayam Welfare Committee (MWC), அரசு அங்கீகாரம் பெற்ற பொதுசேவை மையங்களான மற்றும் #சீனிஸ்_இ_சேவை_மையம் இணைந்து நடத்தும் #அரசு_சான்றிதழ்கள்_விண்ணப்பிக்க மற்றும் #திருத்தம்_செய்வதற்கான_இலவச_பொது_சேவை_முகாம் நடைபெற உள்ளது.

நாள்:
#ஜனவரி_07_2024 ஞாயிறு
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
இடம்: அம்பை ரோட்டில் உள்ள MOA அலுவலகம்

சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#முக்கிய_குறிப்பு:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதற்கு முன்பாகவே தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்து எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு,
Melapalayam Officers Academy (MOA), Melapalayam Welfare Committee
97518 89826
97895 68898
99421 58369

இன்று செவ்வாய்க்கிழமை 19 12 2023 இரவு  ஏழு மணி அளவில்  திடீர் போன் கால் வீரமாணிக்கபுரத்திலிருந்து சுமார் 75 பேர் மழையினா...
20/12/2023

இன்று செவ்வாய்க்கிழமை 19 12 2023 இரவு ஏழு மணி அளவில் திடீர் போன் கால் வீரமாணிக்கபுரத்திலிருந்து சுமார் 75 பேர் மழையினால் பாதிக்கப்பட்டு அரசு பள்ளிக்கூடத்தில் பசியோடு இருக்கிறோம் எங்களுக்கு இரவு உணவு வேண்டும் ஏன்று ஒரு குரல்.

உடனே கோட்டூர் மஸ்ஜித் மாலிக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கோட்டூர் கலீல் 75 பேருக்கு உணவு வேண்டும்என்று கேட்ட உடனே மஸ்ஜித் மாலிக் நிர்வாகிகள் 75 நபருக்கு சப்பாத்தி ஏற்பாடு செய்து தந்தார்கள் உடனே அதைப் பெற்றுக் கொண்ட நாங்கள் (பழனி பாபா பாசறை ).

பசியில்லா மேலப்பாளையத்திற்கு போன் செய்து இங்கே 75 பேர் இன்னும் கூடுதலாக குடும்பங்கள் பசியோடு இருக்கின்றது என்று சொன்னவுடனே அவர்களும் இரவில் சமைத்த சுட சுட சாப்பாடு எடுத்துக்கொண்டு விரைந்து வீரமாணிக்கபுரம் வந்தார்கள் எங்களுக்கு போன் செய்த நபரை தொடர்பு கொண்டு நாங்கள் அனைவரும் வீரமாணிக்கபுரம் சென்று பசியோடு இருந்த மக்களுக்கு கொடுத்தோம்

இதில் பழனி பாபா பாசறை மற்றும் மஸ்ஜித் மாலிக் கோட்டூர் மற்றும் பசியில்லா மேலப்பாளையம்

18/12/2023

தமிழக முதல்வர் அவர்களே.

சென்னையை விட 2 மடங்கு மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்து இருக்கிறது.

எச்சரிக்கை விட, முனேற்பாடு செய்ய கூட நேரம் இல்லை.

பெரும்பாலான கடைகள் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டது.

ஒவ்வொரு நபருக்கும் லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

போர்கால அடிப்படையில் பணிகள் நடை பெற அரசு தரப்பில் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது போக உடனடியாக சென்னையில் வழங்கியது போல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நிவாரண தொகை பத்தாயிரம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
M. K. Stalin

12/12/2023
02/12/2023

*FREE GAS*
Barath Gas
ராம் முத்துராம் தியேட்டர் அருகில் *ஜங்ஷன்*

இலவச சிலிண்டர் வழங்குவதற்கு பாரத் கேஸ் அலுவலகத்தில் அழைப்பு கொடுத்திருந்தார்கள்
Dec,2 தேதி சனிக்கிழமை இன்று பழைய அவர்களுக்கு மட்டும் அதாவது ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு புதிதாக கேஸ் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கொடுத்திருந்த நபர்களுக்கு மட்டும் இன்று இலவச கேஸ் அடுப்பு வழங்கப்படுகிறது

*குறிப்பு*:

புதிதாக விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு என்று மேலப்பாளையத்தில் இருந்து அதிக பெண்கள் பாரத் கேஸ் அலுவலகத்தை அணுகுகின்றனர் புதிய விண்ணப்பங்கள் இன்று வாங்கவில்லை *யாரும்* *செல்ல* *வேண்டாம்*

புதிய விண்ணப்பங்கள் வருகின்ற திங்கட்கிழமை டிசம்பர் 4ஆம் தேதி பாரத் கேஸ் அலுவலகத்திற்கு சென்று புதிய விண்ணப்பங்கள் கொடுக்கவும்.

இன்று யாரும் புதிய இணைப்பு வாங்குவதற்கு செல்ல வேண்டாம் காலை 10 மணியிலிருந்து இப்பொழுது 12:15pm

25 பெண்களுக்கு மேல் புதிய விண்ணப்பம் கொடுப்பதற்காக சென்று திரும்பி வீட்டுக்கு சென்று விட்டனர் என்பதனால் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜிதுல் அக்ஸா கிளை சார்பாக கடந்த 09-11-2023 அன்று மேலப்பாளையம் மண்டலம் உதவி ஆணையாளர் திரு. கா...
11/11/2023

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜிதுல் அக்ஸா கிளை சார்பாக கடந்த 09-11-2023 அன்று மேலப்பாளையம் மண்டலம் உதவி ஆணையாளர் திரு. காளி முத்து அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. .

இதில் மேலப்பாளையம் 46 வார்டு பிறை நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன, இங்குள்ள தெருக்களில் சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது. மழைக்காலமாக இருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது.

தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் நிறைந்த வண்ணம் உள்ளது. இதனால் காய்ச்சல் மற்றும் கொடுய நோய் தொற்று ஏற்பட்டு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றது. எனவே துரிதமாக இப்பகுதியில் தார் சாலைகளை போர்க்கால அடிப்படையில் அமைத்து தர வேண்டும்.

05/11/2023

வெளுத்து வாங்கும் கனமழை தற்போது☔💦 மேலப்பாளையத்தில்☔ இறைவா பயனுல்ல☔ மழையாக ஆக்கி☔ 💦வைப்பாயாக☔

தாமிரபரணியை பாதுகாப்போம்,மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி பாளையம்கால்வாய் மீட்டெடுப்போம். #மேலப்பாளைய...
28/10/2023

தாமிரபரணியை பாதுகாப்போம்,

மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி பாளையம்கால்வாய் மீட்டெடுப்போம்.

#மேலப்பாளையம்மண்டலம்46வது வார்டுக்கு உட்பட்ட மேலநத்தம் தாமிரபரணி ஆற்றுப் பகுதி சுடலை கோயில் அருகிலுள்ள ஒடை வழியாக சாக்கடை கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக நண்பர் மாரி(ஓட்டுநர்) அளித்த புகாரை தொடர்ந்து ராமசாமி, ஜெயராமன், சரவணன் ,மீனாட்சி சுந்தரம், சுடலை, முருகன் போன்ற சகோதரர்களுடன் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் இடங்களை பார்வையிட்டு உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் ,மாநகராட்சி ஆணையாளர்,மற்றும் அரசு அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன்.

உடனடியாக மாநகராட்சி ஆணையாளர் திரு தாக்கரே சுபம் ஞானதேவராவ் IAS அவர்கள்,/ CE, EE,AE ,JE, போன்ற அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து சாக்கடை கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலக்காத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் உறுதி கூறினார்.

#தொடர்ந்து_பாளையங்கால்வாய் மேலப்பாளையம் பகுதியில் தொடங்கி பாளையங்கோட்டை பைபாஸ் அருகில் வரை ஆய்வுகள் மேற்கொண்டு பாளையங்கால் வாயில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை முறையாக பாதாள சாக்கடை திட்டம் (பேஸ் 3) யைமுதன் முதலாக மேலப்பாளையத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றுசுகாதாரச் சேர்மனும், மாமன்ற உறுப்பினர் #ரம்ஜான்அலி அவர்கள் அழுத்தமான கோரிக்கையை முன் வைத்தார். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக தொடங்கி சாக்கடை கழிவு நீரை இணைப்பதாக மாநகராட்சி ஆணையாளர் உத்தரவாதம் வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு ...
26/10/2023

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறையும் மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா சப்னம் ஆகியோர் ஆலோசனையின் பெயரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், எஸ் ராமசுப்பிரமணியன், மீன்வளத்துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் பதன பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, ரூபாய் 20000 மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது.

#விழிப்புணர்வுக்காக

#இடிப்பேரவை #மக்கள்நலன் #மேலப்பாளையம்
#பாளையங்கால்வாய்
#பாளையங்கால்வாய்_மீட்புக்குழு

25/10/2023

நம்ம ஊரின் முத்துக்கள்….

வரும் காலங்களில் நமது ஊர் மேலப்பாளையத்திலும் இதே போன்று ஆட்டோ ஆம்புலன்ஸ் தான் செயல்படும் சூழ்நிலை வந்துவிடும் என்று நினை...
20/10/2023

வரும் காலங்களில் நமது ஊர் மேலப்பாளையத்திலும் இதே போன்று ஆட்டோ ஆம்புலன்ஸ் தான் செயல்படும் சூழ்நிலை வந்துவிடும் என்று நினைக்கிறேன்
ஆரம்ப காலத்தில் ஆம்புலன்ஸ் 407 ஏங்கியது அதில் ஆம்புலன்ஸில் ஃபர்ஸ்ட் எய்ட் அனைத்து உயிர் காப்பு சாதனங்களும் மருந்துகளும் இருந்தது

ஆனால் இந்த வாகனம் தற்போது ஊர் உள்ளே வர முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் இதயத்தில் ரத்தம் படிந்தது போன்று தெருக்களில் படிகள் பதிந்து விட்டது

இதயத்தில் இருக்கும் ரத்த கட்டிகளை கூட ஆஞ்சியோகிராப் மூலம் தகர்த்து விடுகிறார்கள்

ஆனால் இந்த படிக்கட்டுகளை யாரும் தகர்க்க முன் வரவில்லை அந்த இதய துடிப்பு நிற்கின்ற ஏழு நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள் காப்பாற்றி விடலாம்

ஆனால் தற்போது சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்கு வந்து வெளியே செல்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது தெரு முனையில் மல்டி கேர் ஆஸ்பிட்டல் இருந்தால் கூட அவசர நிலையில் தெருவை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு நமது ஊர் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிர்த்துக் கொண்டிருக்கிறது

தற்போது சாலை பணிகள் எல்லா தெருகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஊர் பெரியவர்கள் சரியான முறையில் அவர்களை விழிப்புணர்வு செய்து படிக்கட்டுகளை உள்ளே அமைத்து சொல்ல வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு மேலப்பாளையம் ஊர் நலன் இடிப்பேரவை Kader Omsmeeran Mpm MeMe Muhammed Mydeen Avm Mohideen Abdul Kader Rasool Mydeen Nellai Hithayat Shahul Emiratess Khan Yusuf Ibbu நெல்லை பானு Abu Nadheera Salman Mydeen Yasin Ym

நமதூர் சமாயினா சேக் முகம்மது மூப்பன் தெருவைச் சார்ந்த அண்ணன் காவன்னா பீர் முகம்மது  அவர்களின் மகன் சகோ.K.P.முகம்மது ஜிப்...
03/10/2023

நமதூர் சமாயினா சேக் முகம்மது மூப்பன் தெருவைச் சார்ந்த அண்ணன் காவன்னா பீர் முகம்மது அவர்களின் மகன் சகோ.K.P.முகம்மது ஜிப்ரி MSc அவர்கள் இன்று (03-10-2023) "இயற்பியல்" துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்து முனைவர் (Doctorate) பட்டம் பெற்றுள்ளார்கள். சகோதரர் ஜிப்ரி அவர்களின் கல்விப் பணி சிறக்க வாழ்த்தி துஆ செய்கிறோம்.

- MEEF & MPMPROF

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் முதல் முறையாக இன்ஷா அல்லாஹ் நாளை காலை 12 மணி முதல் நம்ம ஊரு மேலப்பாளையத்தில் பெங்களூர் ரொட...
03/10/2023

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் முதல் முறையாக இன்ஷா அல்லாஹ் நாளை காலை 12 மணி முதல் நம்ம ஊரு மேலப்பாளையத்தில் பெங்களூர் ரொட்டியுடன் சேர்த்து சென்னை யின் புகழ் டம்கா ரோட் ஹல்வா வும் கிடைக்கும் என்பதை மிகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இது கால் கிலோ ½ கிலோ அட்டை பெட்டியில் கிடைக்கும்.

இதன் சுவை வேற எந்த சுவையுடனும் ஒப்பிட முடியாது.
இது தனி சுவை. கண்டிப்பாக பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும்.

ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்தால் மறுபடி மறுபடியும் வாங்க தோன்றும்.

உங்கள் நேசத்துக்கு உரியவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தால் அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு வாட்ஸ் அப் செய்தால் போதும் உங்கள் வீடுகளுக்கு பண்டம் போய் சேரும். gpay வசதியும் உண்டு.

பொண்ணு வீட்டு அல்லது மாப்பிள்ளை வீட்டு காரர்கள் வந்தால் வாங்கி வையுங்கள். மனம் குளிர்ந்து போவார்கள்.

இந்த ஹல்வா மற்றும் ரொட்டி எங்க வாங்கினீங்க ன்னு கேட்டால் இந்த நம்பர் யை கொடுங்கள் 63809 35300 வீடு தேடி ரொட்டி மற்றும் ஹல்வா வரும் இன்ஷா அல்லாஹ். டெலிவரி சார்ஜ் 30 மட்டுமே.

வெளிநாட்டுக்கு கொடுத்து விடுவதாக இருந்தால் 2 நாள் முன்னால் சொல்லி வச்சீங்கன்னா fresh ஆ ஆர்டர் செய்து தருகிறோம். 2 க்கும் மொத்த கால அவகாசம் 7 நாள் அதிக பட்சம்.

குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடு செய்து சாப்பிட்டால் ஹல்வா & ரொட்டியின் சுவை அதே தன்மையோடு இருக்கும்.

கிடைக்கும் இடங்கள் :

S.M. சாயா பஜார் ஏயன்னா மாட்டு கறி கடை சந்து மற்றும் S.M. சாயா (ஆசுரா தெரு கடைசி சந்தை IOB பேங்க் பின்புறம்) இடங்களில் கிடைக்கும்.

அல் அமீன் ஸ்டோர் பலசரக்கு கடை கொடி மரம் அருகில் (ரேசன் கடை எதிரில்) கிடைக்கும். நேரம் காலை (10-2) & (மாலை 7 முதல் 10 வரை)
மற்றும் பழைய எண் 67, காஜா நாயகம் தெரு (கொடி மரம்) எனது வீட்டிலும் கிடைக்கும்.

ஆதரவு தாருங்கள். நன்றி.

தொடர்பு எண்கள் : மசூத் : +91 63809 35300 (வீட்டு டெலிவரி)
பஷீர் : +91 98945 48535
அமீன் (S.M.Chai) : +91 96552 65659.
Gpay : 93635 49459 (Hithaya)
கஸ்டமர் கேர் & மேலதிக தகவல்களுக்கு.
வாட்ஸ் அப் எண் : முஹம்மது மைதீன் : 00966 569912455.

*சாலை அமைக்கும் பணி, ஆக்ரமிப்பு அகற்றம் !*மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு ஹாமீம்புரம் 6வது தெருவில் தார்சாலை அமைக்க அட...
24/09/2023

*சாலை அமைக்கும் பணி, ஆக்ரமிப்பு அகற்றம் !*

மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு ஹாமீம்புரம் 6வது தெருவில் தார்சாலை அமைக்க அடிப்படை பணிகள் நேற்று 23.9.2023 மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவ்வமயம் தெருவில் வீடுகள் முன்பு உள்ள ஆக்ரமிப்பு படிக்கட்டுகள் உள்ளிட்ட இதர ஆக்ரமிப்புகள் அளவீடு செய்து மாமன்ற உறுப்பினர் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று மேலப்பாளையம் வார்டு 45 அமைந்துள்ள " அம்மா உணவகத்தில் ஆபத்தான ...
23/09/2023

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று

மேலப்பாளையம் வார்டு 45 அமைந்துள்ள " அம்மா உணவகத்தில் ஆபத்தான மேற்கூரையை சரிசெய்ய கோரிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கும் & மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கும் SDPI கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

O.M.S.காதர்மீரான்
SDPI கட்சி
மேலப்பாளையம்

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு SDPI கட்சியின் கோரிக்கை மேலப்பாளையம் மண்டலம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்மாஉணவகம் உள்ளது. ...
19/09/2023

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு SDPI கட்சியின் கோரிக்கை

மேலப்பாளையம் மண்டலம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள
அம்மாஉணவகம் உள்ளது. கட்டிடத்தின் உள்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கே வயதானவர்கள் சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வந்து காலை மாலை உணவுசாப்பிட வரகூடிய இடத்தில் ஆபத்தான மேற்கூரைகள் உள்ளன. இதை மாவட்டநிர்வாகம் உயிர் சேதம் அடையும்முன்பாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு SDPI கட்சியின் சார்பாக கேட்டுகொள்கிறேன்.

O.M.S.காதர்மீரான்
SDPI கட்சி
மேலப்பாளையம்

மேலப்பாளையம் 45வது வார்டில் அல்லப்படாமல் கிடந்த குப்பைகளை திமுக சேர்மன், கவுன்சிலரின் தந்தை குப்பைகளை அள்ளிய வீடியோ வைரல...
18/09/2023

மேலப்பாளையம் 45வது வார்டில் அல்லப்படாமல் கிடந்த குப்பைகளை திமுக சேர்மன், கவுன்சிலரின் தந்தை குப்பைகளை அள்ளிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் முறையாக குப்பைகள் அல்ல படாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், மேலப்பாளையம் மண்டல சேர்மனின் தந்தை தனது மகளின் வார்டு பகுதியில் இருக்கும் குப்பைகளை அள்ளி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது வாட்ஸ் அப்பில் வீடியோ வைரலாகி வருகிறது. நெல்லை மாநகராட்சியின் 45 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கதிஜா இக்லாம் பாசிலா. இவர் நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்தில் சேர்மன் ஆகவும் உள்ளார். நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் குப்பைகளை எடுப்பதற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலப்பாளையம் மண்டலத்தில் துப்புரவு பணியாளர்கள் எனது மகளின் வார்டில் பல நாட்களாக குப்பைகள் அல்லாமல் இருப்பதாகவும், குற்றச்சாட்டை முன்வைத்து அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் இருப்பதாக பொதுமக்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மேலப்பாளையம் சேர்மனின் தந்தையும், திமுக பகுதி செயலாளர் துபயி சாகுல் தனது சகாக்களுடன் சேர்ந்து 45 வது வார்டு பகுதியில் இருக்கும் குப்பைகளை அள்ளி வண்டி மூலம் மாற்று இடங்களில் கொண்டு தட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்களின் பற்றாக்குறை தொடர்ந்து பல மாதங்களாக இருந்து வருகிறது. ஒரு வார்டுக்கு ஐந்து நபர்கள் குப்பை அள்ளிய நிலை மாறி, இரண்டு அல்லது மூன்று நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பல பகுதிகள் குப்பைமேடாகவே காட்சியளித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க நெல்லை மாநகராட்சியின் மேயர் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் திமுகவை சேர்ந்த ஆளுங்கட்சி பகுதி செயலாளர் மாநகராட்சியை கண்டித்து இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் 100 சேட் பீடி நிர்வாகத்தால் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு சாக்கடை நீர் தேங்கி நோய் பரவு...
17/09/2023

*மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் 100 சேட் பீடி நிர்வாகத்தால் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு சாக்கடை நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்*

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் பல ஆண்டுகளாக சாக்கடை நீர் சாலையில் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

சாலையில் தொடர்ந்து சாக்கடை நீர் சென்றதால் பொதுமக்களின் நீண்ட போராடத்திற்க்கு பிறகு ரெட்டியார்பட்டி சாலையில் மாநகராட்சி சார்பில்
புதிதாக தார் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலையில் அமைந்துள்ள வடக்கு பகுதியில் *100 சேட் பீடி குடோனை ஒட்டி* பல ஆண்டுகளாக மழை நீர் செல்லும் கால்வாய் இருந்து வந்துள்ளது. இந்த கால்வாயில் சாக்கடை நீர் தடைபடாமல் சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

தற்போது திடீரென *100 சேட் பீடி நிர்வாகத்தின்* சார்பாக தங்களுடைய சுய லாபத்திற்காக நீண்ட காலமாக சாக்கடை நீர் செல்லும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சாக்கடை நீர் செல்லும் வழி தடைபட்டு தற்போது சாக்கடை நீர் முழுவதும் 3 அடி உயரத்திற்கு தேங்கி கொசுப்புழு உருவாகும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் *நூர் சேட் பீடியின் ஆக்கிரமிப்பால்* சாக்கடை நீர் முழுவதும் ரெட்டியார்பட்டி சாலையில் ஆறாக ஓடும் நிலை ஏற்படும்.

தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. அதிலும் முக்கியமாக, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் *ஏ.டி.எஸ் கொசுக்கள்* தண்ணீரில் உற்பத்தியாகி பொது சுகாதாரத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்துகின்றன.

டெங்கு காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசு தலைமை செயலாளர் அவர்கள் *12.09.2023* அன்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

தற்போது நூர் சேட் பீடியின் இந்த ஆக்கிரமிப்பால், தேங்கியுள்ள சாக்கடை நீரினால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளார்கள்.

மேலும் இந்த சாலையை ஒட்டி பள்ளிக்கூட வாகனங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சிறுவர், சிறுமியர் நடந்து செல்கிறார்கள். *நூர் சேட் பீடி நிர்வாகத்தால்* ஆக்கிரமித்து தளம் அமைத்துள்ளதால் இங்கு தேங்கி நிற்கும் சாக்கடையில் பள்ளிக் குழந்தைகள் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி ஆக்கிரமிப்பு பாதையை ஒடுங்குபடுத்தி, பொது சுகாதாரத்தை காக்க மாநகராட்சியும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பார்களா ?? என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு...

வாழ்த்துக்கள். 💐💐💐
14/09/2023

வாழ்த்துக்கள். 💐💐💐

14/09/2023

அஸ்ஸலாமு அலைக்கும்!
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50- வது வார்டு ஏரியா ⅱ பாத்திமா நகர் ⅱ, ஹபீப் நகர்,சித்திக் நதர்,நேரு நகர்,பூங்கா நகர்,ஹாஜிரா நகர்,ஹாஜரா காலேஜ் ரோடு,ஹாமிம் புரம் 12,11,10,8,7 தெருக்களுக்கான சபா கூட்டம் நாளை (15.09.2023) வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் பாத்திமா நகர் ⅱ வில் வைத்து நடைபெறுகிறது.

இச்சபா கூட்டத்திற்கு 50- வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.S ரசூல் மைதின் MC அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்.

மாநகராட்சி அதிகாரிகள்,ஏரியா சபா தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள்,புகார்கள் ஏதும் இருப்பின் அதனை மனுவாக கொடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

K.S ரசூல் மைதின் MC
50- வது வார்டு
மேலப்பாளையம் மண்டலம்
நெல்லை மாநகராட்சி

மீள் பதிவு…. 29/05/2023.எவ்வளவோ பதிவுகள் போட்டோம். நமது ஊரில் இருக்கும் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அதை மேம்படுத்தி தார...
11/09/2023

மீள் பதிவு…. 29/05/2023.

எவ்வளவோ பதிவுகள் போட்டோம். நமது ஊரில் இருக்கும் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அதை மேம்படுத்தி தாருங்கள். பள்ளி வகுப்புகள் குறைவாக இருக்கின்றனர். மாணவ மாணவிகள் அதிகமாக இருக்கின்றனர்.

வயதுக்கு வந்த பெண்கள் அதிகமாக படிக்கிறார்கள், கழிவறை வசதி ஏற்படுத்தி தாருங்கள். அருகில் 3 மாடி கட்டிடம் கட்ட ஒப்புதல் பெற்று பணமும் ஒதுக்க பட்டு கோப்புகள் திரும்ப சென்று விட்டது. அதை திரும்ப கொண்டு வந்து கட்டிடம் கட்டி தாருங்கள்.

கடந்த 2 வருடத்தில் 50 முறை கல்யாண வீட்டுக்கு வந்தீங்களே. ஒரு முறையாவது இந்த பள்ளிக்கூடம் மருத்துவமனை அரசு நிலையங்கள் வந்து ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுத்து இருந்தால் தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு ஒரு கை மாறாக இருந்து இருக்கும்.

மாவட்ட செயலாளர் பதவி எவ்வளவு பெரிய பதவி இனி கிடைக்குமா? எப்போதுமே நமக்கு சிங்கி அடிப்பவர்களை மட்டுமே கூட வைத்து இருக்க கூடாது நமது குறைகளை சுட்டி காட்டுபவர்களையும் நம்மை பற்றி நம் தொகுதி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தை நம்ம ஊரை சேர்ந்த ஒருவர் நிரப்பினால் மட்டுமே இனி நம்ம ஊருக்கு ஏதாவது நடக்கும்.

ஊரில் உள்ள எல்லாரும் இவர் கோஷ்டியாக இருந்ததனால் நம்மால் தேர்ந்தெடுக்க பட்ட பாராளமன்ற உறுப்பினர் ஜான திரவியம் அய்யா அவர்கள். தன்னால் ஆனா தொகுதி நிதியை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்தது என்று இருந்து விட்டார்.

அப்போ அப்போ தொகுதி ஆய்வுக்கு வந்து இருக்கலாம். யாரும் துணைக்கு இல்லாமல் போனாலும் உங்க ஊர்காரங்க பத்து பேரை கூட்டிட்டு வந்து இருக்கலாம்.

Address


Telephone

+966575201979

Website

Alerts

Be the first to know and let us send you an email when மேலப்பாளையம் நிகழ்வுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share