Zam Zam Dawah

  • Home
  • Zam Zam Dawah

Zam Zam Dawah எமது கடமை தெளிவாகச் சொல்வதே அன்றி வே?

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் 'அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 2:209)

21/10/2021

ஞானசாரர் மற்றும் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு அம்ஹர் மௌலவியின் பதில்

முகமது நபி கார்ட்டூனை வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்வீடன் நாட்டவர் விபத்தில் மரணம்!முகமது நபி கார்ட்டூனை வரைந்து பெரும் ...
04/10/2021

முகமது நபி கார்ட்டூனை வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்வீடன் நாட்டவர் விபத்தில் மரணம்!

முகமது நபி கார்ட்டூனை வரைந்து பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் விபத்தொன்றில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஸ்வீடனின் மார்கரிட் நகருக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ட்ரக்குடன் மோதி விபத்து இடம்பெற்றதாக ஸ்வீடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர். ட்ரக் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்த விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

2007-ஆம் ஆண்டில் முகமது நபியின் கார்ட்டூனை இவா் வரைந்தபோது அதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 இலட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

PCR பரிசோதனையும் வுளுவும் (முஸ்லீம்கள் தொழுகைக்கு முதல் தன்னை சுத்தப்படுத்தும் முறை)Covid19 பரவல் காரணமாக ஒருவருக்கு நோய...
09/11/2020

PCR பரிசோதனையும் வுளுவும் (முஸ்லீம்கள் தொழுகைக்கு முதல் தன்னை சுத்தப்படுத்தும் முறை)

Covid19 பரவல் காரணமாக ஒருவருக்கு நோய் தொற்று இருப்பதனை கண்டறிய PCR எனப்படும் பரிசோதனை முறை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் பரிசோதனையில் எமது உடலின் மூக்கினுலும் தொண்டையிலும் மாதிரிகள் எடுக்கபட்டு சோதனை செய்யபபடுகிறது.

ஆனால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறுகிறது நீங்கள் ஐவேளை தொழுகைக்கு தயாராகும் போது (முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவனை வணங்க வேண்டும்) மூக்கு மற்றும் வாயினுள் நன்றாக நீர் விட்டு கழுவி கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் 33:21)

எனவே நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.

வாய் கொப்பளித்தல்: – மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாசிக்கு (மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: – மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆகவே, ஒரு நாளைக்கு ஐந்து வேளை நாம் இவ்வாறு தம்மை தாம் சுத்தப்படுதும் போது எமது இவ்வாறான கொடிய நோய்க் கிருமிகளின் தாக்கதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சம்ஹர் சலாம்

Please like & share
30/07/2020

Please like & share

WhatsApp Group Invite

08/05/2020

💕💕💕💕
💕💕💕Masjid Al-Haram💕💕💕

27/03/2020
24/07/2019

وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ‏

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 4:119)

12/06/2019
19/02/2019

நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

(அல்குர்ஆன் 29:45)

18/11/2018
07/03/2018
31/01/2018

இலங்கை முஸ்லிகளுக்கு எதிராக பௌத்த சிங்கள காவிகள் மேற்கொண்ட இனவெறி தாக்குதல்களின் தொகுப்பு...

ஆக்கம்: BBC

28/07/2017

தெளிவான மார்க்கம்

'நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி), நூல்: அஹ்மத் 16519]

28/07/2017

وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏ 

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன் : 33:3)

22/07/2017

يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ‏ 

*அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.*

(அல்குர்ஆன் : 75:10)

20/07/2017

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.

அல்குர்ஆன் 2:172

20/07/2017
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்பு.முன்னால் ஜனாதிபதியும்...
19/07/2017

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்பு.

முன்னால் ஜனாதிபதியும், ஒருங்கிணைந்த எதிர் கட்சியின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக்ஷ MP க்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாம் பற்றிய நூல்களும், இஸ்லாம் பற்றிய மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னால் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது அரசாங்கமும் அதற்குக் துணையாக இருந்து மவ்னம் காத்தமைதான் இனவாதிகள் அலுத்கமை கலவரத்தை உண்டாக்குவதற்க்கே காரனமாக அமைந்தது என்பது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளின் போது, முஸ்லிம்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வில்லை என்பதுடன் இது அனைத்து அரசுகளும் முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும் என்பதும் முன்னால் ஜனதிபதியிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டதுடன், திருக்குர்ஆன் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இனவாதிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

-ஊடகப் பிரிவு-
தவ்ஹீத் ஜமாத் – SLTJ

ஒருவர் நமக்கு நல்லது செய்கின்ற போது அவரைப் பார்த்து "ஜஸாகல்லாஹு ஹைரன்" என்று சொல்வது அவருக்கான துஆப் பிரார்த்தனை ஆகும். ...
18/07/2017

ஒருவர் நமக்கு நல்லது செய்கின்ற போது அவரைப் பார்த்து "ஜஸாகல்லாஹு ஹைரன்" என்று சொல்வது அவருக்கான துஆப் பிரார்த்தனை ஆகும். இதன் பொருள் அல்லாஹ் உங்களுக்கு நலவை நாடட்டும் என்பதாகும்.

இதனை சுருக்கமாக "ஜஸாகல்லாஹ்" என்று சொல்கின்ற போது "ஹைரன்" அதாவது நலவு என்ற சொல் விடுபட்டுவிடுகிறது. துஆ முழுமை பெறவில்லை. ஆகவே முழுமையாகச் சொல்வதே சிறந்தது.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

14/07/2017

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.

அல்குர்ஆன் 98:7

13/07/2017

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி {ஸல்} அவர்கள் தனதருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரக்குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்கள். இருவரும் இல்லை மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது
விளையாடச் சென்றிருப்பார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி {ஸல்} அவர்கள்
பேரக்குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள்.
மதீனாவின் எந்த ஒரு பகுதியிலும் இருவரையும் காணவில்லை.

மதீனாவிற்கு வெளியே பாலைவனத்தை நோக்கி நபி {ஸல்} அவர்கள் ஒரு வித பதற்றத்தோடு
அங்கு வருவோர் போவோரிடம்
விசாரித்த வண்ணம் சென்றார்கள். ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி {ஸல்} அவர்களின் முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார்.

நபி {ஸல்} அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.
அப்போது, நாயகமே! கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும்
இருப்பார்கள். சற்று முன்னர் தான் இங்கு அவர்களை நான் கண்டேன்” என்று கூறிய அவர் அல்லாஹ்வின் தூதரே! ஒரு விஷத்தை நான்
உங்களிடம் நான் சொல்லலாமா” என
வேண்டினார்.

நபி {ஸல்} அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார் "அல்லாஹ்வின் தூதரே! சற்று
முன்னர் தான் இருவரும் இங்கே வந்தனர்.
அவர்கள் முகத்தில் நான் பசியின் ரேகை படர்ந்திருந்ததை பார்த்து விட்டு, என் ஆட்டிலிருந்து பால் கறந்து தரவா? என்று
இருவரிடமும் கேட்டேன்.

அப்போது, அவர்கள் இருவரும் "நீங்கள் இந்த மந்தையின் உரிமையாளரா?” என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன்.

அப்படியென்றால் உங்கள் உரிமையில் இல்லாத இந்த மந்தையில் உள்ள ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று
கூறி மறுத்து விட்டு, அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி {ஸல்} அவர்கள் அந்த தோடத்திற்கு வந்து பார்க்கின்றார்கள். அங்கே ஓர் மரத்தின்
நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் இருவரையும் எழுப்பி, வாரி அணைத்து முத்தமிட்டு இருதோள்புஜங்களிலும் இருவரையும் சுமந்தவர்களாக தங்களது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து

“ஃபாத்திமாவே! உம் தந்தை முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்! என
ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்.

( நூல்: துர்ரியத்துத் தாஹிரா )

Address


Alerts

Be the first to know and let us send you an email when Zam Zam Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share