Ara fm

Ara fm தமிழால் ஒன்றினைவோம்.
(9)

இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோத...
09/03/2024

இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளது.சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டி...
01/03/2024

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளது.

சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டியவரது சகல ஆவணங்களுடன் மைத்துனர் விமானநிலையத்தில் காத்திருக்கிறார்.

ஆனால் Air bill இல் பெற வேண்டிய பெயரில் இறந்தவரின் பெயரை போட்டு விட்டதால் அவரே வந்தால் தான் பெறலாம் என்ற நிலையில் அந்த பற்றுச் சீட்டை மீள் திருத்துவதற்காக 4 மணித்தியாலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

28/02/2024

தேசப்புதல்வன் சாந்தன்.!

காந்தி தேசத்தில் 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து தன் தாயையும் தாய் மண்ணையும் காண ஆவலோடு காத்திருந்த உறவை இழந்து தவிக்கின்றது தமிழினம் ..!

சென்று வா வரலாற்று நாயகனே ..!

நேரலை நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ 👇👇👇👇akswisstamilfm வானொலி. 24 மணிநேர சேவையோடு இனைந்து இருக்க உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே உல...
10/02/2024

நேரலை நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ 👇👇👇👇
akswisstamilfm வானொலி. 24 மணிநேர சேவையோடு இனைந்து இருக்க உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்

www.Akswisstamilfm.com 👈👈

Download

AKSWISSTAMILFM APPS android

https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈

AKSWISSTAMILFM APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈👈



உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும்
👉👉

www.akswisstamilmedia.com


https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media 👈👈

“தமிழக வெற்றி கழகம்”: புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
02/02/2024

“தமிழக வெற்றி கழகம்”:

புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

 #தமிழகத்தின் மக்கள் அபிமானி ,நடிகர்,அரசியல்வாதி இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந் அவர்களின் நினைவாக வடமராட்சியி...
01/02/2024

#தமிழகத்தின் மக்கள் அபிமானி ,நடிகர்,அரசியல்வாதி இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந் அவர்களின் நினைவாக வடமராட்சியில் (உடுப்பிட்டி இலகடி)ஒருகிராமத்திற்கு உணவளித்து திருப்தி பட்ட குடும்பம் சுவிஸ் மண்ணிலிருந்து தங்கராசா -சுசிலா

மாத்தறை - பெலியத்தை பகுதியில்  துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு
22/01/2024

மாத்தறை - பெலியத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

கூத்தாடிகளை கூட்டி வந்த 20 லட்சம் ரூபாய் காசுக்கு மலையகத்தில் ஏதோ ஒரு மூலையில் நலிந்த 200000 குடும்பங்களுக்கு ஒரு நேரம் ...
21/01/2024

கூத்தாடிகளை கூட்டி வந்த 20 லட்சம் ரூபாய் காசுக்கு மலையகத்தில் ஏதோ ஒரு மூலையில் நலிந்த 200000 குடும்பங்களுக்கு ஒரு நேரம் சாப்பாடோ.. உலர் உணவோ வழங்கியிருந்தா அந்த உயிர்கள் சாகும் வரை வாழ்த்தும்..

கலைக்கலாசாரத்தை காக்க வேண்டும்தான் அதற்காக நம்நாட்டில் மறைக்கப்பட்ட எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள்.. அவர்களை தேடியறிந்து சீர்தூக்கிவிடலாம்...

மலையகத்திலோ, இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ, எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சாதனை படைத்தவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், உலக அளவில் சாதனை படைத்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை அழைத்து வந்து இளைய சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டை ஏற்படுத்தி அவர்களை கௌரவித்திருந்தால் நாளைய மலையகம் உங்களைப் போற்றி இருக்கும்.

தங்கள் புகழுக்காக மலையக ரத்தத்தை உறிஞ்ச வேண்டிய அவசியமில்லை...

மலையக மக்களும் திருந்தப் போவதில்லை... இவ்வாறான தலைவர்களும் மாறப் போவதில்லை...

மக்கள் புறக்கணிக்கப் பழகினால் அனைத்தும் மாறும்... உதாரணமாக கரட் விலை அதிகரித்த போது யாரும் அதை கட்டாய உணவாக எடுத்துக் கொள்ளவில்லை.. அது போன்று இவ்வாறான நிகழ்வுகளை வாயைப் பிளந்து பாராமல் சற்று விலகி நின்று அல்லது புறக்கணித்தால்... இனி இது நடக்காது.... அந்த அறிவிப்பாளரை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது...

பாவம் நடிகைகளையே கண்டிராதவர் போல்.... அந்த நடிகைகளை அழைத்து வரச் சொல்லி மலையக மக்கள் கேட்டது போல் உள்ளது அவரது அறைகூவல்... “எங்களுக்கு ஆடல் சுத்தரியின் ஆட்டம் போட்டேடே ஆகனும்“ என்பது போல....

2024 புதுவருடம் கிரிபட்டி தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் உதயமாகியது -
31/12/2023

2024 புதுவருடம் கிரிபட்டி தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் உதயமாகியது -

Trm Picture பெருமையுடன் வழங்கும்புங்கை மண்ணின் பெருமையையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் புத்தம்புதிய காணொளிப்பாடல் வெளி...
30/12/2023

Trm Picture பெருமையுடன் வழங்கும்
புங்கை மண்ணின் பெருமையையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் புத்தம்புதிய காணொளிப்பாடல் வெளியீடு.

நாளை 30ஆம் திகதி மாலை 7 மணிக்கு
Trm Picture Youtube தளத்தில்

https://youtube.com/?si=YfmzUEhviCng8y1v

Punguduthive | புங்குடுதீவே

MUSIC & RAP : CV LAKSH
LYRICS : NITHIYATHAS
SINGER : N. RAMAMAN
CINEMATOGRAPHY : AK KAMAL
EDITOR : THANOJAN
DANCE : SWASTHIC FINE ARTS
MAKEUP ARTIST : DARIEN & LIVINGSHA
CAST : ITHAYARAJ - LAKSHANA & PAKIDIYA KATHAIPPAM TEAM

PRODUCED BY TRM-PICTURE CANADA INC

Cv Laksh CVL 06 Studio AK Kamal Photography Prasanna Priyatharshan Pakidiya Kathaippam Raam Ramanan Lakshana Ammu

நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த்  சென்னையில் காலமானார்
28/12/2023

நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் சென்னையில் காலமானார்

சொல்லுங்க கேப்போம்..😛😌
27/12/2023

சொல்லுங்க கேப்போம்..😛😌

சரிகமப மேடையில் முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை தமிழ் குயில் கில்மிஷா..
17/12/2023

சரிகமப மேடையில் முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை தமிழ் குயில் கில்மிஷா..

24/11/2023

Starring: Elankeeran Fernando & Risshi ParanStory & Direction: PrasannaDOP & Editing: DesubanProduction: AvatharamCo-Producer: SG studio Voice Recording: V-K...

AVATHARAM PRODUCTIONPRESENTS #இனி_வரும்_காலம்STARRINGELANKEER AN FERNANDORisShI ParanSTORY & DIRECTIONPRASANNADOP & EDIT...
23/11/2023

AVATHARAM PRODUCTION
PRESENTS

#இனி_வரும்_காலம்

STARRING
ELANKEER AN FERNANDO
RisShI Paran

STORY & DIRECTION
PRASANNA

DOP & EDITING
DESUBAN

ா_FM
www।arafm4d।com எனும் இணையம் ஊடாகவும்
https://play।google।com/store/apps/details?id=com।ara।fm4d
எமது Android செயலி ஊடாகவும் கேட்டு மகிழலாம்।



//

விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் . இந்தியா ஒரு சிறந்த அணியாக தொடர்ந்தும் இருப்பதற்கான காரணம் இது தான் . அவர்கள் வீரர...
20/11/2023

விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் . இந்தியா ஒரு சிறந்த அணியாக தொடர்ந்தும் இருப்பதற்கான காரணம் இது தான் . அவர்கள் வீரர்களை அடையாளம் காண்பது நாடு முழுவதிலும் இருந்து ஆகும் . திறமையை மாத்திரமே தகுதியாக பார்க்கிறார்கள் . ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை

11 பேர் இன்று 111,000 குரல்களை அமைதிப்படுத்தினர்11 men silenced 111,000 voices today 🤯
19/11/2023

11 பேர் இன்று 111,000 குரல்களை அமைதிப்படுத்தினர்

11 men silenced 111,000 voices today 🤯

இந்த தருணத்தில் இந்திய அணிக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
19/11/2023

இந்த தருணத்தில் இந்திய அணிக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பயணிகள் கப்பல் சேவையும் ஆரம்பித்த நிலையில், யாழ்ப்பாணம் தற்போது தரை, வான், கடல் வழி என அனைத்து போக்குவரத்து சேவையும் இடம...
08/10/2023

பயணிகள் கப்பல் சேவையும் ஆரம்பித்த நிலையில், யாழ்ப்பாணம் தற்போது தரை, வான், கடல் வழி என அனைத்து போக்குவரத்து சேவையும் இடம்பெறும் மாவட்டமாக மாறியுள்ளது.

பழகுவதற்கு மிகவும் எளிமையான நல்ல மனிதர் , இயக்குனரும்,  பன்முகம் கொண்ட                                                  ...
08/09/2023

பழகுவதற்கு மிகவும் எளிமையான நல்ல மனிதர் , இயக்குனரும்,
பன்முகம் கொண்ட நடிகருமான மாரிமுத்து இன்று காலமானார்.
ARA FM சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை
தெரிவித்துக் கொள்கிறோம் . 💐💐💐

 #வாழ்த்துகள்யாழ் வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரவசம்… இன்று (27.08.2023) யாழ்ப்பாண போதனா வைத்திய...
27/08/2023

#வாழ்த்துகள்

யாழ் வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரவசம்…

இன்று (27.08.2023) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையில் மருந்துவக் குழுவினர் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகள் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்..

சந்திராயன் 3 நிலவுப் பயணத்தின் மொத்த செலவு 75 மில்லியன் டொலர்கள்.இதென்ன பிரமாதம்...🤣🤣🤣🤣🤣ஆயிரம் முதலீட்டுத் திட்டங்கள் வக...
24/08/2023

சந்திராயன் 3 நிலவுப் பயணத்தின் மொத்த செலவு 75 மில்லியன் டொலர்கள்.

இதென்ன பிரமாதம்...🤣🤣🤣🤣🤣

ஆயிரம் முதலீட்டுத் திட்டங்கள் வகுத்தும் நிறைவேறாமல் இறுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் வசூலிக்கும் நமது தாமரைக் கோபுரத்தின் நிர்மாண செலவு 113 மில்லியன் டொலர்கள். மொத்தமும் கடன்

உலகில் பயணிகளே வராத விமான நிலையம் என்று பெயர் வாங்கியிருக்கும் மத்தள விமான நிலையத்தின் மொத்த செலவு 209 மில்லியன் டொலர்கள். அதுவும் கடன்.

இப்போது சொல்லுங்கள். அவங்க கெத்தா? நாம கெத்தா? 😊😊😊

யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோ...
19/08/2023

யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.



மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்             புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு  வத்தளையை  வதிவிடமாகவும் கொண்ட அமரர் பா...
12/08/2023

மரண அறிவித்தல் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் (பாலன்) பிரதாப் (பிரபு) 10/08/23 அன்று அகாலமரணம் அடைந்தார் இவர் அமரர் பாலன் லலிதா தம்பதியரின் இளைய மகனும் துரையப்பா அமரர் யோகலக்ஷ்மி அவர்களின் மருமகனும் அமரர் நல்லதம்பி பாக்கியம் ஆகியோரின் பேரனும் அமரர் முருகேசு தங்கம்மா (கண்மணி 2ம் வட்டாரம் ) அவர்களின் பேரனும் பிரியதர்சினி (றமா) ஆருயீர் கணவரும் பிரவின் பூமிகா தஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் தாஸ் (நோர்வே) சிவா(நோர்வே) ராசாத்தி (லண்டன்) செல்வி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சுபாவின் ஆசை மச்சானும் ஆவார் .. ஈமைகிரிகைகள் அன்னாரின் இல்லத்தில்13/08/23 அன்று நாளை காலை 10மணிக்கு நடைபெற்று தகனக்கிரிகை வத்தளை கெரவலப்பிடிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகின்றோம் தகவல் குடும்பத்தினர் வீட்டு முகவரி De alwis place, kerawalapitiya rd,
Hendala, wattala . Colombo ......

🔴 எதை எதையோ ஷேர் பண்றோம்Support பண்றோம் நம்ம ஊர் பிள்ளைக்கு நாம தானே பண்ணணும்!நீங்களும் முடிந்தால் கீழ்வரும் வங்கி இலக்க...
08/08/2023

🔴 எதை எதையோ ஷேர் பண்றோம்
Support பண்றோம் நம்ம ஊர்
பிள்ளைக்கு நாம தானே பண்ணணும்!

நீங்களும் முடிந்தால் கீழ்வரும் வங்கி
இலக்கத்துக்கு உங்களால் இயன்ற
தொகையை வழங்கி உதவுமாறு
அன்புடன் வேண்டி நிற்கின்றேன்.

•பாடசாலை அதிபர் இலக்கம்
Nayapana School Principal
Mobile:+94 77 918 6573


விரும்பினால் இதை ஏனையோருக்கு
பகிர்ந்து உதவுவோம்..

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கிழக்கு  ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) கோவில் மஹா கும்பாபிசேகம் 🙏🙏🙏 2...
25/06/2023

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கிழக்கு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) கோவில் மஹா கும்பாபிசேகம் 🙏🙏🙏 25.06.2023 📸

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று 25.06.2023 காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ...
26/05/2023

இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்!

புங்குடுதீவின் வரலாற்றுப்பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்குவிழா அடுத்த மாதம் 25 ஆம் திகதி (25-06-2023) வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது 🙏

இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்!புங்...
21/05/2023

இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்!

புங்குடுதீவின் வரலாற்றுப் பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்குவிழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக நிகழவுள்ளது.

கண்ணகி மதுரையை எரித்தபின் தென்னிந்தியாவில் இருந்து காவல் தெய்வமான பத்திரகாளி அம்பாள் துணையோடு பேழையில் வந்து புங்குடுதீவின் தென்கடலில் கோரியாவடிபகுதியில் கரையொதுங்கிட, பசுமாடுகள் கடலுக்குள்சென்று சுற்றிவர பாதுகாத்துநிற்க ..! தான் வளர்த்த பட்டி மாடுகளை தேடிச்சென்றவர் தனது பசுக்கள் ஒரு பேழையை சுற்றி நிற்பது கண்டு அதற்குள் பொன்னோ பொருளோ இருக்குமென்றும் , தனக்குப் புதையல் கிடைத்ததகாக எண்ணி கடற்கரையோரம் வீட்டுக்கு தலையில் பேழையை சுமந்தபடி தற்போதைய கண்ணகை புரம்வரை எடுத்துவருகிறார். வரும்வழியில் பாரம் வர வர அதிகமாகவே இரண்டு இடங்களில் இறக்கி வைக்கிறார் . (இறக்கி வைத்த இவ்விரு இடங்களிலும் இரு ஆலயங்கள் அமையப் பெற்றுள்ளன) மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறார். மூன்றாவது இடமாக தற்போது அமைந்துள்ள இடமான கண்ணகி அம்மன் ஆலயத்தின் தெற்குப்புறம் உள்ள தெற்பக்குளம் அருகே உள்ள பெரிய பூவரசு மரத்தின் அடியில் வைத்து மறுபடி தூக்க முயல்கையில் பேழையை அசைக்கமுடியாது போகவே பேழையைத்திறந்து பார்க்கிறார் அதற்குள் ஒற்றை மார்பகத்தோடு உள்ள கண்ணகி அம்மனும் பத்திரகாளி அம்மன் சிலைகளும் இருக்கக் கண்டு கைகூப்பி வணங்குகிறார்.

பாரம்சுமந்த களைப்பில் அவ்மரத்தடியில் சிறிது ஓய்வுக்காக துண்டை விரித்து தூங்கிவிடுகிறார். அவரது கனவில் எழுந்தருளி தான் கண்ணகி என்றும் மதுரையில் இருந்து வந்துள்ளேன் எனக்கு இவ்விடத்திலேயே கோவில் எழுப்புவாயாக என்று தெரிவித்துள்ளாள்.

கற்புக்கரசியான கண்ணகித்தாய் கரை வந்துசேர்ந்த செய்தி புங்குடுதீவெங்கும் காட்டுத்தீபோல் பரவ ஊர் மக்கள் அங்கு கூடிடவே அனைத்து மக்களும் கண்ணகிக்கு ஒரு சிறு குடில் அமைத்து வழிபட்டு வரலாயினர்.

ஒருமுறை பூசை நடைபெறும் நாளொன்றில் ஒரு பெண்ணை வசப்படுத்திய கண்ணகி ,உருக்கொண்டு கலையாடி இங்கு எனக்கு மக்கள் துயர் துடைக்க பெரிய ஆலயம் எழுப்புங்கள் என்று கூறியதும் , ஊர் பெரியவர்களும் கோவில் தர்மகர்த்தாவாகிய இராசரெத்தினம் அவர்களது பேரனாரும் இணைந்து ஊர்மக்களிடம் கோவிலை பெரிதாக கட்ட வீட்டுக்கு சில பனை மரங்களை தந்துதவுமாறு கேட்கவே அனைவரும் அன்னையின் அருமை பெருமைகளையறியாது சடுதியாகவே மறுதலித்தனர்.

மனசு சஞ்சலத்தோடு வீடுதிரும்பிய ஊர் பெரியவர்கள் அன்று இரவு தூக்கத்தில் இருக்கும்போது பேரிடியுடன் பெருமழை பெய்ய புயலென எழுந்து அன்னை தாண்டவமாட, காலையில் ஒவ்வொரு வீட்டிலும் 3 - 4 பனைமரங்கள் நிலத்திலும் வீதிகளிலும் வீடுகள் மேலும் சரிந்து கிடந்திட .. ஊர்மக்கள் தாமாக எங்கள் வீட்டில் பனைமரம் எடுத்துக்கொள்ளுங்கள் என எல்லோரும் வேண்டுதல் வைக்க மரங்களும் கற்களும் குவிய, பணம்படைத்தோர் பொற்காசுகள் கொடுக்க இந்த ஆலயம் பாண்டிய மன்னன் அரசவையிலே நீதிகேட்டுத் தீயிட்டெரித்த கற்புக்கரசி கண்ணகியாகி புங்கையூர் தென்பதியில் கோவில்கொண்டு எழுந்தருளினாள் .

மதுரையை எரித்த கனலோடு அவள் இருப்பதால் தென்திசையில் இந்து மகாசமுத்திரத்தில் தன் பார்வையை செலுத்தி அமைதிகொண்டபடி இருப்பதே சிறப்பெனக்கருதி இலங்காபுரி மண்ணையும் , லெமூரியா கண்டத்தி்ல் கடற்கோள் கொண்ட முதற்சங்கம் , இடைச்சங்கம் காலத்து மதுரையையும் பார்த்தவண்ணம் அருளாட்சி புரிகிறாள்.

காலப் போக்கில் ஆகம முறைப்படி மூல விக்கிரகமாக ஆதிசக்தியின் வடிவமான அன்னை மகிஷாசுரனை சங்காரம் செய்தபின் எடுத்த அவதாரமான இராஜ இராஜேஸ்வரியாகி புவியனைத்தும் காத்தருளி நிற்கிறாள் .

பின்னொரு நாளில் கட்டுத்தேரில் பவனிவந்த அன்னைக்கு சித்திரத்தேர் கட்டியபோது தேர் வெள்ளோட்டம் செய்வதற்கு முதல்நாள் எந்த இடத்தில் பேழையாக வந்தடைந்தாளோ அதே இடத்தில் தேர் வடக்கயிறு வட்டமாக சுற்றிய படி வந்தடைந்தது.

இதுகண்ட ஒருவர் கப்பல் கயிறுபோலும் இதை எடுத்துச்சென்று யாழ்ப்பாணம் கயிற்றுக்கடையில் விற்றால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம் என் எண்ணி கையை வைத்து எடுக்க முற்படுகையில் கருநாகம் கடலலைக்குள் கயிற்றின் வளையத்தினுள் இருந்து சீறியது !
அதுகண்டு நிலைகுலைந்த குடியானவன் கண்ணகித்தாயே ,உனக்கே கொண்டுவந்து தருகிறேன் என்னை மன்னித்துவிடு என்று கைகூப்பி வணங்கியதும் நாகம் மறைந்தது! அதன்பின் இன்றுவரை அதே வடம்கொண்டுதான் அம்பாளின் இரதம் இழுக்கப்படுகிறது. அந்த நாகம் நெடுங்காலமாக தலவிருட்சமான பூவரசமரப் பொந்தில் வாழ்ந்ததாக பலர் கூறக்கேட்டுள்ளோம்.

வெள்ளி இரதம் ஒன்று அம்பாளுக்கு என நேர்ந்து செய்தது ஆழிக்கடலுக்குள் கிடப்பதாகவும் . அது கண்ணகிக்கா ..? அல்லது நயினை நாகபூசணிக்கா..? என அறியாது இரண்டு ஆலயங்களிற்கும் நடுவில் நிற்பதாகவும், இவ்ஆலயங்களில் வருடாவருடம் நடைபெறும் ஆலயதீர்த்த உற்சவதினம் அன்று ,கடலுக்குள் தீர்த்தமாடும் வேளை வெள்ளித்தேர்முடி கடல் மட்டத்தின்மேல் வந்து இரு அம்பாள்களையும் வணங்கி மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்வதாகவும் அந்தக்காலத்தில் இருந்து எமது இளமைக்காலம்வரை இரண்டு ஆலயங்களிலும் கடலைநோக்கி பஞ்சாலாத்தி குருக்கள்மாரால் காட்டப்படுவதாகவும், ஊர்ஜிதமில்லாத செவிவழிக்கதையுமுண்டு!

புங்குடுதீவின் ஆதிகாலத்தில் 1-12 வட்டார மக்களும் வண்டில் மாடுகட்டி கண்ணகி அம்பாள்மேல் பக்திகொண்டு விரதமிருந்து அம்பாள் ஆலய இரவுபகல் உற்சவங்களில் கலந்துகொண்டு தம்வாழ்வில் சக்தி உபாஷகர்களாக வாழ்ந்து, கல்வி , செல்வம் , வீரம் என அனைத்திலும் மேன்மையடைந்ததாக கண்ணகி அம்பாளின் பக்தர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்வர் .

மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் வவுனிக்குளத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழப்புமுல்லைத்தீவு மாவட்ட...
26/04/2023

மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் வவுனிக்குளத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

இன்று (26) மல்லாவி பகுதியில் இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இருந்து கலந்து கொண்ட சகோதரர்கள் இன்று பகல் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்ற போது ரவிச்சந்திரன் சுரேஸ் என்ற 16 வயது சிறுவன் துரிசு பகுதியில் நீரில் மூழ்கியுள்ளார் இதன்போது மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற ரவிச்சந்திரன் சுமன் ( வயது 27) என்ற சகோதரனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த இருவரது உடல்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரது உடலங்களையும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகைதந்து பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்..

கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொட...
23/04/2023

கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, “குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள் என நினைத்து, சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்.

நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

பொலிஸ் குழுவினர் துரித விசாரணை

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன். அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.”என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள், ஆடைகள் மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(22.04.2023) நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமிற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

மேலும் 100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன. அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேகநபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Ara fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ara fm:

Videos

Share

Category

OUR STORY

சவூதி அரேபியாவிலிருந்து இணையத்தினூடாக நேயர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்த Ara வானொலியானது உலகளாவிய ரீதியில் மிக மிக வித்தியாசமான 4D ஒலி நயத்தில் உங்களுக்காக 24/7 மணிநேரமும் ஒலிக்கும் ஓர் வானொலி. இசையாலும் நிகழ்ச்சிகளாலும் சொந்தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு புதுமைகள் படைக்க காத்திருக்கிறது. என்றும் உங்களுக்காய் படைப்புக்கள் பலவற்றால் காதோரம் தேனிசைக்கிறார்கள். காதலுக்குப் பிடித்த கானங்களோடு காற்றுவெளியிடையை நிரப்பும்..


Other Radio Stations in Riyadh

Show All