09/01/2024
இடையன்குடி - IDAIYANGUDI
இடையன்குடியின் தந்தை பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். 1841 இல் எஸ்.பி.ஜி யின் அதிகாரம் பெற்ற திருத்தொண்டராக இடையன்குடிக்கு வந்தார். கால்டுவெல் ஐயர் இடையன்குடிக்கு வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக், சத்தியநாதன் போன்றவர்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருந்தார்கள்.
கால்டுவெல் ஐயரின் இடையன்குடி கிராம சீரமைப்பு பணி :
கால்டுவெல்லுக்கு இடையன்குடி ஊரின் அமைப்பு ஒழுங்கற்றதாகவும் திட்டமிடப்பெற்ற குடியிருப்பதாகவும் தோன்றவில்லை. இடையன்குடியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்கள் எல்லாம் ஒழுங்கினமாக காணப்பட்டன. இந்த நிலையை மாற்றி, நேரான தெருக்களும், அகலமான இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட காற்றோட்டமான வீடுகளும் உடையனவாகக் மாற்ற கால்டுவெல் அவர்கள் 1842 ஆண்டு திட்டம் தீட்டி செயல்படுத்தத் தொடங்கினார். அங்குக் குடிசைகள், சிறிய ஆலயம் போன்றவை ஏற்கனவே இருந்தன.
கால்டுவெல் அவர்கள் இடையன்குடி கிராமத்தை வடிவமைக்க மரம் ஒன்றின் மீது ஏறி வரைபடம் தயாரித்ததாகச் சொல்லப் படுகின்றது. நிலம் வாங்குவதற்கும் நிலத்தைச் சீர் செய்வதற்கும் தனது நண்பர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்றார். இடையன்குடியைப் புதியதொரு ஒழுங்கமைப்பில் அகலமான தெருக்களோடு நேர்த்தியாக வடிவமைத்தார். சாலைகளின் இருபக்கமும் மரங்களை நட்டுவித்தார். சரியான இடைவெளி விட்டு வீடுகளை அமைத்தார்.
கல்விக்கூடம் :
சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்க பாடசாலைகள் நிறுவினார் கால்டுவெல்லுக்கு இடையன்குடியில் கல்விக்கூடம் அமைப்பதற்கு இடம் வசதியாக அமைந்தது. அவர் 9 பள்ளிக்கூடங்கள் நிறுவியதாகக் குறிப்புகள் உளளன பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். பெண்கல்விக்கு இடையன்குடியில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் கால்டுவெல் ஊர்ப்பெரியவர்களை வாரம் ஒரு முறை சந்தித்துப் பெண்கல்வியின் இன்றியாமையை எடுத்துரைத்து அவர்களைத் தெளிவடையச் செய்தார். அவரது மனைவி எலிசாவின் உதவியுடன் பெண்களுக்குத் தையல் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தார். இடையன்குடியில் 1844இல் பெண்களுக்காக உறைவிடப் பள்ளி ஒன்றைக் கால்டு வெல்லின் மனைவி எலிசா அவர்கள் தொடங்கினார்கள்.
Csi இம்மானுவேல் மருத்துவமனை :
கால்டுவெல் ஐயர் பொது மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க வழிவகை செய்தார். சென்னை மாகாண கவர்னர் நேப்பியரிடம் பேசி1870 இல் இடையன் குடியில் மருத்துவமனை ஒன்று தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்தார். 2009 ஆண்டு முதல் திருநெல்வேலி திருமண்டலம் மற்றும் இம்மானுவேல் மருத்துவமனையும் இணைந்து ( C.S.I Eliza Caldwell Nursing College ) சி.எஸ்.ஐ. எலிசா கால்டுவெல் நர்சிங் கல்லூரி தொடங்கபட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
http://csielizacaldwell.org/
திரித்துவ ஆலயம் :
இடையன்குடியைில் கால்டுவெல் பிரமாண்டமான திரித்துவ ஆலயம் ஒன்று எழுப்ப விரும்பினார். இங்கிலாந்தில் உள்ள ஆலய நிர்மாண சங்கத்தாரிடம் இருந்து திரித்துவ ஆலயத்திற்கான வரைபடத்தை பெற்றுக்கொண்டார். கால்டுவெல் ஆலயம் எழுப்ப உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதிதிரட்டத் தொடங்கினார். ஆலயத்திற்கான அடிக்கல்லை 1847 இல் நாட்டினார். கால்டுவெல் திட்டமிட்டபடி சில ஆண்டுகளுக்குள் ஆலயத்தைக் கட்ட இயலவில்லை. ஆலயத்தைக் கட்டிமுடிக்க 33 ஆண்டுகள் ஆகின. அவர் திருநெல்வேலியின் உதவி பிஷப்பாகப் பொறுப்பேற்ற பின் 1880 இல் அவர்கட்டிய திரித்துவ ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டது. ஆலயத்தின் அமைப்பு, கலை நுட்பங்கள் போன்றவை கலைத்திறன் மிக்கவை.
இடையன்குடி ஆலயம் கோதிக் கட்டடக்கலை மரபைச் ((Gothic Architecture)) சார்ந்து கட்டப்பட்டது.
ஒரு கிராமத்தை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல. நிலத்தைப் பிரித்து, தெருக்கள், வீட்டு மனைகள், கோயிலுக்கான இடம் போன்றவற்றை உருவாக்கினாலும் அது ஒரு கிராமமாகிவிடாது. அங்கு மக்கள் குடியமர வேண்டும். வீடுகள் அமைய வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆலயம், பள்ளிகள், மருத்துவமனை, கிணறுகள், வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை அனைத்தும் ஒருங்கே அமைந்தால்தான் அது வாழிடக் கிராமம் ஆகும். இதனை இடையன் குடியில் கால்டுவெல் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். கால்டுவெல்லின் 33 ஆண்டுக்கால உழைப்பில் உருவாகிய திரித்துவ ஆலயமும் இடையன்குடி கிராமமும் என்றும் போற்றுதல்குரியது.
, Idaiyangudi
http://csielizacaldwell.org/
https://en.m.wikipedia.org/wiki/Robert_Caldwell
#பேராலயஅணிநாசரேத்
https://m.facebook.com/story.php?story_fbid=393854539667046&id=100071275083371&mibextid=Nif5oz