tamil rocket & தமிழ் ரோக்கேட்

tamil rocket & தமிழ் ரோக்கேட் Tamil Rocket முதன் முதலாக செம்மொழியான தமிழ் மொழியில், ஜனநாயக செயல் கட்சியின் தகவல் களஞ்சியம்...
(1)

எங்கெங்கும் “வீர வேல் – வெற்றி வேல்” என்ற முழக்கங்கள் ஒலிக்க, நாடெங்கிலும் கொண்டாடப்படும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கான தைப...
24/01/2024

எங்கெங்கும் “வீர வேல் – வெற்றி வேல்” என்ற முழக்கங்கள் ஒலிக்க, நாடெங்கிலும் கொண்டாடப்படும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் ஜசெக சார்பில் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

Selamat Hari Thaipusam! Semoga semua yang menyambut dikurniakan kebahagiaan dan kesihatan yang baik 🥰

மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலை வரிசையில் தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு, தண்ண...
24/01/2024

மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலை வரிசையில் தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் திகழ்கிறது. இந்த ஆண்டு 238-வது முறையாக தைப்பூசத் திருவிழா பினாங்கில் பிரமாண்டமான முறையில் கொண்டாடத் தொடங்கியது.
தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் தங்க இரத ஊர்வலம் லெபோ பந்தாய் குயீன் ஸ்திரிட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு இன்றிரவு ஆலயத்தை சென்றடையும்.
மேலும், இந்த வருடம் அணுசரிக்கப்படும் ஒற்றுமை தைப்பூச விழாவில் தங்கம் மற்றும் வெள்ளி இரத ஊர்வலம் ஒன்றிணைந்து ஊர்வலம் செல்கிறது. வெள்ளி இரதம் லெபோ பினாங்கில் இருக்கும் கோவில் வீட்டிலிருந்து அதிகாலை புறப்பட்டு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தை வந்தடையும்.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குப் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்கள் செலுத்துவது மட்டுமின்றி இரதம் பவணி வரும் சாலை முழுவதும் தேங்காய்கள் குவிக்கப்பட்டு உடைக்கப்படும். பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில் அன்னதானமும் இடம்பெறும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, வாகன உரிமையைத்...
22/01/2024

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, வாகன உரிமையைத் தவிர்த்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கத்தை நீட்டித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அடங்கும் என்று புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 44(1) (b) இன் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளலாம், இதற்க்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே சட்டத்தின் பிரிவு 42 இன் கீழ் அவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளலாம், இதற்க்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 15,000 ரிங்கிட் வரை அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும்.

மேலும் பேசிய அவர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு மலேசியாவில் “மறுக்க முடியாத அவசரம்” இருப்பதாகக் கூறி, கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த முன்மொழிந்தார்.

"Championing stricter penalties is imperative as an unwavering solution to combat drunk driving. This could encompass protracted driver’s license suspensions spanning decades or the establishment of blacklists, effectively prohibiting individuals found guilty of manslaughter from ever regaining vehicle ownership"

Syerleena Abdul Rashid

Read more here - https://dapmalaysia.org/en/48664/zero-tolerance-enforcing-stringent-drunk-driving-regulations/

22/01/2024
மேன்மைமிகு கேசும நிகழ்வுமலைக் கோயில் ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன...
22/01/2024

மேன்மைமிகு கேசும நிகழ்வு

மலைக் கோயில் ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் அவர்கள் வருகை தந்தார்.
2024-ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர் மேன்மைமிகு கேசும திட்டத்தை அறிவிக்கும் போது, ​150 தன்னார்வலர்களை அமைச்சர் அனுப்புகிறார்.
இந்த ஆன்மிக மையத்திற்கு சேவை செய்யும் அனைத்து ஊழியர்களுக்காக மனித வள அமைச்சகத்தால் ஒரு கூடார நிவாரண மையம் தயார் செய்யப்படும்.
தைப்பூச நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இந்திய இளைஞர்களுக்கான, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET ) மற்றும் இளைஞர் நிகழ்ச்சி தகவல்களுக்கான ஒரு நிறுத்த மையமாகவும் இந்த கூடாரம் இருக்கும்.
தைப்பூச சமய விழாவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கூடாரத்தில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள், இது மனித வள அமைச்சகத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) முழுமையாக ஏற்பாடு செய்யப்படும்.
பராமரிப்பு பொருளாதாரம் உண்மையானது மற்றும் மிக முக்கியமானது.
அந்த வகையில் அனைத்து இல்லத்தரசிகளும் வந்து, இல்லத்தரசிகள் நலன் மற்றும் சமூக திட்டங்களுக்கு சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுமார் ஒரு மில்லியன் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்...
19/01/2024

இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுமார் ஒரு மில்லியன் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அவர்கள் சிலாங்கூர் மாநில அளவில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் முன்னேற்பாடுகள் பற்றி RTM இல் செலமட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

Dijangka lebih kurang sejuta orang termasuk pelawat dan penganut Hindu akan mengunjungi Batu Caves sempena sambutan Thaipusam pada tahun ini.

EXCO Selangor, Tuan Papparaidu Veraman menceritakan sedikit tentang persiapan sambutan Thaipusam peringkat Negeri Selangor pada sesi Selamat Pagi Malaysia di RTM.

மாற்றம் செய்யப்பட்டு முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சியின் காணொளி செய்தியை நீக்கும் படி, தொட...
19/01/2024

மாற்றம் செய்யப்பட்டு முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சியின் காணொளி செய்தியை நீக்கும் படி, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்,MCMC, META நிறுவனத்தைக் கேட்டுக்கொள்ளும்.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் மாற்றம் செய்யப்பட்ட அந்த காணொளி, “ முகநூலில் உள்ள இரு கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி, பெர்னாமா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வாசிக்கும் போலியான அந்த காணொளி குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருப்பதாகத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

"செயற்கை நுண்ணறிவு கொண்டு தீயவர்கள் இது போன்ற காணொளிகளைத் தயாரிக்கின்றனர். நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராயிமின் காணொளி பயன்படுத்தப்பட்டதை நானும் பார்த்தேன். அதில் அவரை உரை மாற்றியமைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி 90 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளதால், தற்போது அப்பகுதியில் ஏற்பட...
18/01/2024

தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி 90 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளதால், தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய வடிகால் கட்டுமானம் மற்றும் வடிகால் சுத்திகரிப்பு திட்டத்தின் முன்னேற்றத்தைத் தனது தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ் கூறினார். இப்பணி ஜனவரி 24 ஆம் தேதி முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக எங்களுக்கு மேலும் புகார்கள் வந்தாலும், கனமழையின் போது நீரோட்டத்தை எளிதாக்குவதற்கு லோட் 1325, ஜாலான் பத்து லாப்பனில் உள்ள தாழ்வான பகுதியைச் சுத்தம் செய்வதன் மூலம் குறுகிய கால தீர்வுகள் உட்பட முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்.

“வீடு எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து, திடீர் வெள்ளத்தைத் தவிர்க்க ஒன்றாக இணைந்து வேலை செய்ய குடியிருப்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

குடியிருப்புப் பகுதிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்குமாறு சுற்றுவட்டார குடியிருப்பாளர்களைப் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 11 அன்று, சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்கும் நோக்கத்துடன், ஜூலை 2021 முதல் தாமான் ஸ்ரீ மூடாவில் 6.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி தொடங்கப் பட்டதாகத் தெரிவித்தார்.

திட்டத்தின் முக்கிய நோக்கம் தடுப்பு பாதுகாப்பு, திருகு பம்புகளை நிறுவுதல், குவாட்டர்ஸ் கட்டுமானம், ‘காம்பாக்ட் சப்’ மற்றும் மின் பொருட்களை உள்ளடக்கியது.

இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) கூட்டு முயற்சியின் மூலம் பிறை சட...
18/01/2024

இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) கூட்டு முயற்சியின் மூலம் பிறை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் RAC இன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார் அஹ்மாட் மற்றும் LPNPP பொது மேலாளர் அய்னுல் ஃபாதிலா சம்சுதி ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது. இதனை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

மேலும் கொன் இயோவ் பேசுகையில், லாட் 286 (கம்போங் மானிஸ்) இல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை (RMM) உருவாக்க RAC மற்றும் பினாங்கு மாநில அரசு இடையிலான முதல் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று கூறினார்.

நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) இறுதி செய்யப்பட்ட பிறகு கூடுதல் தேவைகள் இருந்தால், வாக்குறுதி ஒப்பந்தமாக (MOA) மாற்றப்படலாம், என்றார்.

“LPNPP-இன் லாட் 671, பண்டார் பிறையின் 9.33 ஏக்கர் பரப்பளவில் அருகிலுள்ள தளத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு இருப்பதால், இந்தப் பகுதியின் வளர்ச்சியை முழுமையாக மதிப்பாய்வு செய்கிறது. இது அத்தளத்திலிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
“உண்மையில், இத்திட்டத்திற்கு விரிவான வளர்ச்சி முக்கியமானது, ஏனெனில், இந்தப் பகுதி திட்டமிடப்படாத குடியிருப்பு இடமாகும், முறையான வடிகால் அமைப்பு இல்லாமல் வெள்ளப் பிரச்சனைகளுக்கு நேரிடுகிறது.

“எனவே, இந்தப் பகுதியில் உள்ள RAC மற்றும் LPNPP திட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உள்ளூர் சமூகத்தின் நல்வாழ்வுக்காக, தற்போதுள்ள குடியிருப்பின் வடிவமைப்பை மாற்றியமைக்கும்,” என்று அவர் தி லைட் தங்கும்விடுதியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கூறினார்.

இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) கூட்டு முயற்சியின் மூலம் பிறை சட...
18/01/2024

இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) கூட்டு முயற்சியின் மூலம் பிறை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

லாட் 286 (கம்போங் மானிஸ்) இல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை (RMM) உருவாக்க RAC மற்றும் பினாங்கு மாநில அரசு இடையிலான முதல் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பினாங்கு துறைமுக ஆணையமும் PENANG PORT நிறுவனமும், ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி தொடங்கி ஜனவரி 26-ஆம் தேதி காலை 2 ...
16/01/2024

பினாங்கு துறைமுக ஆணையமும் PENANG PORT நிறுவனமும், ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி தொடங்கி ஜனவரி 26-ஆம் தேதி காலை 2 மணி வரை இலவச ஃபெர்ரி சேவையை வழங்கவுள்ளன.

தைப்பூசத்தைக் கொண்டாடும் இந்துக்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு இச்சலுகை வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஃபெர்ரி சேவையின் மூலம் தீவுப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்
எதிர்பார்க்கப்படுவதாக என்று அந்தோணி லோக் கூறினார்.

அவர்கள் பங்கலான் ராஜா துன் உடா ஃபெர்ரி முனையத்திற்கு வந்த பிறகு,
நாங்கள் தண்ணீர்மலை கோவிலுக்கு இலவச பேருந்து சேவை வழங்குவோம். இப்பேருந்து பாதை நெடுகே இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் பகுதிகளில் பயணிகளை நின்று ஏற்றிக்கொள்ளும். நிறைவாக தண்ணீர்மலை கோவிலைச் சென்றடையும் என்றார் அவர்.

இதனிடையே, பினாங்கு ரேபிட் பேருந்து சேவையும், ஜனவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணி தொடங்கி காலை 1 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾
15/01/2024

தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾

Selamat menyambut hari Ponggal 🌾

தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾

Utk Pengetahuan anda:

Hari Ponggal merupakan perayaan semasa musim menuai yang diraikan secara meluas oleh masyarakat etnik Tamil di negeri Tamil Nadu, Sri Lanka, Malaysia, Singapura, Afrika Selatan, Amerika, United Kingdom, Perancis, Seychelles, Australia, Kanada dan tempat-tempat dengan penduduk etnik Tamil ramai.

Ponggal juga dikenali sebagai Makara Sankranthi yang disambut di seluruh India. Pongal dalam bahasa Tamil bererti "melimpah-ruah."

Susu lembu yang melimpah apabila dipanaskan dalam periuk belanga tanah liat melambangkan kekayaan yang melimpah ruah. Thaiponggal, dirayakan ketika masa menuai, secara tradisi bertujuan berterima kasih kepada Dewa Matahari (Suryabagawan)🌞 dan ternakan ladang yang membantu menghasilkan kekayaan harta benda.




பொங்கல் தினத்தை மகிழ்ச்சியுடனும் அரவணைப்புடனும் கொண்டாடும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் வாழ்த்துக்கள். உலகம் முழுவது...
15/01/2024

பொங்கல் தினத்தை மகிழ்ச்சியுடனும் அரவணைப்புடனும் கொண்டாடும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று.
பொங்கலின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், இனிமையையும், நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்பும் என்று நம்புகிறோம்.
நம்மிடையே மரியாதை உணர்வை வளர்க்கும் அதே வேளையில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை ஒன்றாகக் கொண்டாடுவோம்.
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்! இந்தத் திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் தரட்டும்!

பொங்கல் தினத்தை மகிழ்ச்சியுடனும் அரவணைப்புடனும் கொண்டாடும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று.
பொங்கலின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், இனிமையையும், நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்பும் என்று நம்புகிறோம்.

நம்மிடையே மரியாதை உணர்வை வளர்க்கும் அதே வேளையில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை ஒன்றாகக் கொண்டாடுவோம்.

இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்! இந்தத் திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் தரட்டும்!

Selamat Menyambut Hari Ponggal kepada seluruh masyarakat India yang merayakannya dengan penuh keceriaan dan kehangatan. Hari Ponggal merupakan salah satu perayaan tradisional yang dihargai oleh masyarakat Tamil di seluruh dunia.

Kami berharap bahwa kedatangan Hari Ponggal dapat mengisi kehidupan kita dengan kegembiraan, kemanisan, dan kesihatan yang baik.

Mari kita bersama-sama merayakan kepelbagaian budaya dan tradisi, sambil memupuk semangat saling hormat-menghormati di antara kita.

Selamat Hari Ponggal! Semoga perayaan ini membawa keberkatan dan kesejahteraan kepada anda dan keluarga!

பினாங்கு இந்து அறவாரியம் 2024-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் திட்டத்தின் தொடக்கத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.விண்ணப்...
15/01/2024

பினாங்கு இந்து அறவாரியம் 2024-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் திட்டத்தின் தொடக்கத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
விண்ணப்பங்களின் மதிப்பீடு மற்றும் ஒப்புதல் ஆண்டு முழுவதும் அவ்வப்போது செய்யப்படும். கடந்த ஆண்டு மொத்தம் RM 376,250 வெள்ளி கல்வி நிதி வழங்கப்பட்டது, மொத்தம் 318 மாணவர்கள் இதில் பயனடைந்தனர்.
இது பினாங்கு இந்து அறவாரியத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று.
தகுதி:
*பினாங்கில் பிறந்தவர் அல்லது
*பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அல்லது/ பினாங்கில் பதிவு செய்யப்பட்ட, பினாங்கில் வசிக்கும் வாக்காளர்
பெற்றோர்கள்
நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு இந்த திட்டம் சேரும். அதாவது,
உள்ளூர் உயர் கல்விக்கூடங்களின் சான்றிதழ், டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டப்படிப்புகள்.
17 விண்ணப்பங்களின் முதல் தவணையில் மதிப்பீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உதவியில் 3 சான்றிதழ் மாணவர்கள், 7 டிப்ளோமா மாணவர்கள் மற்றும் 7 பட்டப்படிப்பு மாணவர்கள் பயன்பெற்றனர்.
தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பப் படிவங்களை PENANG HINDU ENDOWMENTS BOARD, LEVEL 30, KOMTAR 10000, PULAU PINANG-இல் பெறலாம் அல்லது www.hebpenang.gov.my
என்ற அகப்பக்கத்திலிருந்து பாரத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் ஜசெக தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
14/01/2024

தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் ஜசெக தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

வெற்றி வேல் முருகனுக்கு!!!இன்று காலை பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் மாண்புமிகு ஆர்.எஸ்.என். இராயர் மற்றும் அறங்காவலர்கள...
13/01/2024

வெற்றி வேல் முருகனுக்கு!!!

இன்று காலை பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் மாண்புமிகு ஆர்.எஸ்.என். இராயர் மற்றும் அறங்காவலர்களுடன் சேர்ந்து, 2024-ஆம் ஆண்டு தைப்பூச வழிபாட்டுத் தொடக்கப் பிரார்த்தனைகளை மேற்கொண்டோம்.

இந்த பிரார்த்தனை தைப்பூச சமய விழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

கோயில் தலைவர், கோயில் நிர்வாக உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

ஆன்மிக மற்றும் புனிதமான தைப்பூசத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

இனிவரும் திருவிழாக்கள் மற்றும் சமய விழாக்களில் பக்தர்கள் அனைவரும் அமைதியையும் தூய்மையையும் பேணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிள்ளை பெற்ற தாய்மார்கள், கருவுற்றுள்ள தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகிய அனைவருக்கும் கம்போங் பாரு மம்பாங்க...
12/01/2024

பிள்ளை பெற்ற தாய்மார்கள், கருவுற்றுள்ள தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகிய அனைவருக்கும் கம்போங் பாரு மம்பாங்கில் அமைந்துள்ள கிளினிக் டேசா சிறந்த முறையில் மருத்துவ சேவையை வழங்கிவகிறது.

மாத்ம்தோரும் இந்த கிளினிக் டேசாவில் சுமார் 60க்கும் மேற்பட்ட பிள்ளை பெற்ற தாய்மார்கள், கருவுற்றுள்ள தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகிய அனைவரும் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சேவைகளை வழங்கிவரும் இந்த கிளினிக்கில் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவதற்கென பிரத்தியேக அறை இல்லாதது வருத்தமளிப்பதாக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பவானி ஷாஷா தெரிவித்தார்.

இந்த கிளினிக் டேசா நான்கு அறைகளை உள்ளடிக்கியுள்ளது. அவை சிகிச்சைக்கு 2 அறைகளும் மீதம் உள்ள 2 அறைகளில் ஒன்று மருந்துகள் தயார் செய்வதற்கும், ஒன்று மருந்துகள் பத்திரப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுத்தப்படுத்தப் படுகிறது.

இதனால், பிள்ளைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காரணம், பிள்ளைகளுக்கு பாலூட்ட பலர் தங்களது வாகனஙகளிலும் மேலும் சிலர் சிகிச்சை அறையிலும் பிள்ளைகளுக்குப் பாலூட்டி வருகின்றனர்.

இதனை கேட்டு அறிந்ததும் ஒரு பெண்ணாகவும் தாயாகவும் தமக்கு பெரும் வேதனையளிப்பதாக பவானி கூறினார்.

தாய்மார்கள் எதிர்நோக்குகின்ற இந்த பிரச்சினையை களைவதற்காக நடவடிக்கை எடுக்க போகிறேன். இது குறித்து பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான மாண்புமிகு சிவநேசன் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று பவாணி உறுதியளித்துள்ளார்.

நீரழிவு நோய் காரணமாக தனது இரண்டு கால்களும்  துண்டிக்கப்பட்ட திரு.ஏகம்பரம், தனது இரு சக்கர மோட்டார் சைக்கிளை மாற்றியமைக்க...
12/01/2024

நீரழிவு நோய் காரணமாக தனது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட திரு.ஏகம்பரம், தனது இரு சக்கர மோட்டார் சைக்கிளை மாற்றியமைக்க பினாங்கு இந்து அறவாரியத்திடம் உதவி கோரினார்.

அவர் தற்போது தனது மனைவியுடன் மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் தங்கியுள்ளார், மேலும் சமூக நலத் துறையின் உதவித்தொகையை நம்பி அவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்து அறவாரியம் அவருக்கு உதவுவதற்காக RM2,500 வழங்கியது.

DE-CIX மலேசியா மற்றும் டிஜிட்டல் பினாங்கு (Penang Internet Exchange, powered by DE-CIX)  இந்த உருமாறும் திட்டத்தை உயிர்ப...
11/01/2024

DE-CIX மலேசியா மற்றும் டிஜிட்டல் பினாங்கு (Penang Internet Exchange, powered by DE-CIX) இந்த உருமாறும் திட்டத்தை உயிர்ப்பிப்பதில் அவர்களின் கூட்டு முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.

Penang Internet Exchange என்பது இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான எங்கள் பரந்த நோக்கத்தில் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக செயல்படுகிறது.

இந்த முன்முயற்சியானது மலேசியாவை டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்முயற்சிகளுடன் தடையின்றி இணைந்துள்ளது.

இன்று நமது தேசிய மூலோபாயத்தின் சில முக்கிய அம்சங்களையும் இந்த பார்வைக்கு PIX எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.

மேலும் நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

முந்தைய தேசிய இழைமயமாக்கல் மற்றும் இணைப்புத் திட்டம் (NFCP) மற்றும் தற்போதைய தேசிய டிஜிட்டல் நெட்வொர்க் (Jendela) போன்ற முன்முயற்சிகள், நமது நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

PIX, டிஜிட்டல் பினாங்குடன் இணைந்து, இந்த நோக்கத்தை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக வெளிப்படுகிறது.

இன்னும் நெருக்கமாக, MyDigital ID (National Digital Identification) மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட The Central Database Hub - Pangkalan Data Utama (PADU) போன்ற முன்முயற்சிகளும் ஒரு டிஜிட்டல் அரசாங்கமாக மலேசியாவின் முயற்சியை பட்டியலிடுவதில் ஒரு ஊக்கியாகக் கருதப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

அதோடு, குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அமைச்சு மேற்கொள்ளும் என்றார் அவர்.

இவ்வாண்டு சிலாங்கூரில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சிகளின் (பிபிடி) சேவைகளை மேலும் வலுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும் ...
11/01/2024

இவ்வாண்டு சிலாங்கூரில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சிகளின் (பிபிடி) சேவைகளை மேலும் வலுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாகக் கையாளுவதற்கான வழிமுறை மேம்படுத்த முன்னாள் ஊராட்சி தலைவர்கள், துறை இயக்குநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) அமைப்பு உருவாக்கப்படும் என டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

https://selangorkini.my/ta/499195/

இபிஎப் சந்தாதாரர்களுக்கு வெ.500 ஊக்குவிப்பு தொகை!தேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) 40 முதல் 55 வயதிற்குட்பட்ட சந...
11/01/2024

இபிஎப் சந்தாதாரர்களுக்கு வெ.500 ஊக்குவிப்பு தொகை!

தேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) 40 முதல் 55 வயதிற்குட்பட்ட சந்தாதரர்களுக்கு அரசாங்கத்தின் கூடுதல் பங்களிப்பாக தளா வெ.500 கூடுதல் இருப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் தொகை 1.4 மில்லியன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மொத்தமாக வெ.708 மில்லியன் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இந்த சலுகை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வரை இபிஎப் முதல் கணக்கில் வெ.10 ஆயிரத்திற்கும் குறைவாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெ.500 ஒருமுறை பங்களிப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறைந்த சேமிப்பு மற்றும் ஓய்வூதிய வயதை நெருங்கி வரும் இபிஎப் உறுப்பினர்களை தொடர்ந்து தங்கள் ஓய்வூதிய சேமிப்பை சேமித்து வலுப்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிக்கையின் வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தாதாரர்களின் சேமிப்பை அதிகரிக்கவும் நிதி சுமையற்ற எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதாக இபிஎப் அறிவித்துள்ளது.

𝐂𝐚𝐫𝐮𝐦𝐚𝐧 𝐭𝐚𝐦𝐛𝐚𝐡𝐚𝐧 𝐬𝐞𝐛𝐚𝐧𝐲𝐚𝐤 𝐑𝐌𝟓𝟎𝟎 𝐮𝐧𝐭𝐮𝐤 𝐩𝐞𝐧𝐜𝐚𝐫𝐮𝐦 𝐊𝐖𝐒𝐏!

melalui Kumpulan Wang Simpanan Pekerja (KWSP) pada hari ini telah mengumumkan Insentif Caruman Tambahan Kerajaan yang telah mula dikreditkan kepada 1.4 juta ahli KWSP 👏👏

Insentif khas ini diberi dalam bentuk RM500 sekali bayaran dan ia khusus kepada ahli KWSP yang berumur dari 40 tahun sehingga bawah 55 tahun yang mempunyai simpanan KWSP berjumlah RM10,000 dan ke bawah dalam Akaun 1 setakat 24 Feb, 2023 ✔️✔️

Caruman tambahan ini dilihat sebagai inisiatif KWSP untuk menggalakkan ahli KWSP untuk terus menyimpan pengumpulan persaraan, meningkatkan kecukupan simpanan, dan pada masa yang sama membina masa depan kewangan yang lebih stabil agar masa depan pesara rakyat Malaysia terbela 🫡🫡

மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும்: கணபதிராவ்மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகர...
11/01/2024

மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும்: கணபதிராவ்

மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இனங்களுக்கிடையேயான ஒற்றுமை நிகழ்ச்சிகளுக்கான பல பரிந்துரைகளை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்.

ஏற்கனவே கிள்ளான் பகுதியைப் பற்றிய சிறப்புத் திட்டங்களையும் விரிவான தகவல்களையும் கொண்டுள்ள அமைச்சரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

அதன் அடிப்படையில் கிள்ளான் பகுதி மக்களின் நலனுக்காக நடத்தப்படக்கூடிய சில நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப்படும் என தாம் நம்புவதாக கணபதிராவ் கூறினார்.

10/01/2024

ஆயர் தாவாரில் உள்ள புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் ங்கே கூ ஹாம் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இச்சம்பவத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் சேதமடைந்த வேளையில் இதர இரு கார்கள் அதிக
உஷ்ணம் காரணமாகப் பாதிக்கப்பட்டன என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் காருக்கு சேதத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் உள்துறை அமைச்சும் அரசாங்கமும் கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் முன்னதாகக் கோரிக்கைவிடுத்திருந்தார்.

பொது மக்களின் பாதுகாப்பும் பொது ஒழுங்கும் எப்போதும் பாதுகாக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ங்கோவுக்கு அனுதாபம் தெரிவிப்பதோடு அவரின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் புலப்படுத்துவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரில் மக்களுக்கான சேவைகளை வலுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சிகளின் தரம் உயர்த்தப்படும்!இவ்வாண்டு சிலாங்கூரில் உள்...
10/01/2024

சிலாங்கூரில் மக்களுக்கான சேவைகளை வலுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சிகளின் தரம் உயர்த்தப்படும்!

இவ்வாண்டு சிலாங்கூரில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சிகளின் (பிபிடி) சேவைகளை மேலும் வலுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாகக் கையாளுவதற்கான வழிமுறை மேம்படுத்த முன்னாள் ஊராட்சி தலைவர்கள், துறை இயக்குநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) அமைப்பு உருவாக்கப்படும் என டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

எனவே, எந்த வொரு பயன்பாட்டு முறையையும் தரப் படுத்துதல் உட்பட சமூகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த குழு சிறந்த முறையைக் கண்டறியும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கிள்ளான் நகராண்மை கழகத்தை மாநகரமாக மாற்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விழா அடுத்த பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (LRA) அருகில் நீர் கசிவு ஏற்பட்டு கொண...
10/01/2024

பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (LRA) அருகில் நீர் கசிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் பிரதான சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாயில் இரண்டு 1,200 மில்லிமீட்டர் (மிமீ) வால்வுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

எனவே, மாநிலம் முழுவதிலும் உள்ள 22 இடங்களில் குழாய்களை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.
வருகின்ற ஜனவரி 10 முதல் 14 வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள, மாநில அரசாங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பல முன்னெடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

ஜார்ச்டவுன் – நாளை முதல் ஜனவரி, 14 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள நீர் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்....

Address

Jalan Yew , Off Jln Pudu
K. L
55100

Alerts

Be the first to know and let us send you an email when tamil rocket & தமிழ் ரோக்கேட் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to tamil rocket & தமிழ் ரோக்கேட்:

Videos

Share