Ravana Tv

Ravana Tv செய்திகள்,நகைச்சுவைகள்,நிகழ்ச்சிக்? https://www.instagram.com/p/CIIWeG_l4rW/?igshid=zt3zzgzmw2gz

30/03/2023

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வர ஆலய அழிப்பு

இன,மத மோதல்கள் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர் இலங்கையின் அதிபர் ஆகவேண்டும் என்றால்..,அதற்க...
13/07/2022

இன,மத மோதல்கள் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர் இலங்கையின் அதிபர் ஆகவேண்டும் என்றால்..,

அதற்கு மிகவும் பொருத்தமானவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்"குமார சங்கக்காரா"

10/07/2022

Srilanka Historical day 🖤🇱🇰

கொழும்பு காலிமுகத்திடலில் முதல்முதறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டகாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது...
19/05/2022

கொழும்பு காலிமுகத்திடலில் முதல்முதறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டகாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் சுடர் ஏற்றப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில் சிங்கள மக்களும் கலந்துகொண்டுள்ளதுடன் நினைவேந்தல் உரையும் இடம்பெற்று வருகின்றது.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படவுள்ளது.

தங்கல்ல யில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் தந்தையார்  D.A ராஜபக்ச அவர்களின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது.
10/05/2022

தங்கல்ல யில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் தந்தையார் D.A ராஜபக்ச அவர்களின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது.

09/04/2022

21/02/2022
இன்றைய தினம் தனது  #21வது பிறந்தநாளை காெண்டாடிக்காெண்டிருக்கும் ராவணா தாெலைக்காட்சி தாெகுப்பாளினி    ிதாசாவிற்கு ராவணா த...
07/02/2022

இன்றைய தினம் தனது #21வது பிறந்தநாளை காெண்டாடிக்காெண்டிருக்கும் ராவணா தாெலைக்காட்சி தாெகுப்பாளினி ிதாசாவிற்கு ராவணா தாெலைக்காட்சி குழுமம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றாேம் 🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍰🎂

💢COVID UPDATE💢**🛑மேலும் 29 பேர் கொரோனாவுக்கு பலி.*♦️கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக...
05/02/2022

💢COVID UPDATE💢*

*🛑மேலும் 29 பேர் கொரோனாவுக்கு பலி.

*♦️கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*♦️அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.*

*♦️அதன்படி, நாட்டில் இதுவரை 15,544 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.*

*♦️இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.*

*♦️இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.*

*♦️இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 614,659 ஆக அதிகரித்துள்ளது. ​

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!*நாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு இன்று(புதன்க...
03/02/2022

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!*

நாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 13 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறித்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 492 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 471 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது ​

*🚨BREAKING NEWS🚨*_*🛑ஒமிக்ரோன் வைரஸ் பற்றிய புதிய தகவல்!.*🔹பிஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் ...
02/02/2022

*🚨BREAKING NEWS🚨*

_*🛑ஒமிக்ரோன் வைரஸ் பற்றிய புதிய தகவல்!.

*🔹பிஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர் என கூறப்பட்டது. ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.*

*🔹இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🔹கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கருதி வரும் நிலையில், அந்த எண்ணத்தை புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கேள்விக்குறியாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🔹இது குறித்து காலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறியதாவது:-*

*🔹ஒமிக்ரோன் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது. பி.ஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும்.*

*🔹பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும்.*

*🔹இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.* ​

26/01/2022

🔥 *BREAKING NEWS* 🔥

*இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா*

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி பெர்டினான்டோ இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ​

26/01/2022

உங்கள் சக வாழ்வில் தலை சிறந்த மனிதர்களாக இருங்கள் மாறாக சமூக வலைத்தளங்களில் மாத்திரம் அல்ல.
உங்களுக்கு நீங்களே முன்மாதிரி என்பதை என்றும் மறந்து விடவேண்டாம் நண்பர்களே.!.
புலம்புவதில் எந்த பயனும் இல்லை. நகர்ந்து செல்லுங்கள் வாழ்க்கையில் வழிகள் ஏராளம் என்பதை உணர்வீர்கள்...

*மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு*தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்பட...
25/01/2022

*மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு*

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் மூலம் எவ்வித மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவான எரிபொருள் விநியோகப்பட்ட காரணத்தினால் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அதன் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார். ​


I

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில்கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்...
25/01/2022

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில்
கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நாட்டிற்கும், ஊரிற்கும்
பெருமையை பெற்று தந்த சகோதரனுக்கு வாழ்த்துகள்! ​
.

*இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோனின் உப பிரிவுகள் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்*இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வானது வேகமா...
24/01/2022

*இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோனின் உப பிரிவுகள் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்*

இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வானது வேகமாகப் பரவும் கொவிட் -19 வகையாக மாறியுள்ளது.

இலங்கையில் தற்போது ஒமிக்ரோன் வகையின் இரண்டு உப பிரிவுகள் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு கொவிட் -19 க்கான 78 மாதிரிகளைப் பரிசோதித்தபோது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 75 ஒமிக்ரோன் பிறழ்வுகளாகவும் உள்ளது.

78 மாதிரிகளில் 3 மாதிரிகளில் மாத்திரமே டெல்டா பிறழ்வு உள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

குறித்த மாதிரிகள் இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் பெறப்பட்டுள்ளன.

ஒமிக்ரோன் BA.1 உப பிரிவானது கொழும்பு, அவிசா வளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம் பிட்டிய ஆகிய இடங்களிலிருந்து பதிவாகியுள்ளது.

அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொலன்னாவ, கல்கிசை மற்றும் நுகேகொட ஆகிய இடங்களில் ஒமிக்ரோனின் BA.2 உப பிரிவுகள் பதிவாகியுள்ளன. ​

24/01/2022

உண்மை காதலால் உயிரை மாய்த்துக்காெண்ட ஒரு ஆணின் இறுதி காதல் கடிதம்.

*நாட்டில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் -24/01* நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 838 பேர் நேற்றைய நாளில் அடையாளம்...
24/01/2022

*நாட்டில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் -24/01*

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 838 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 114 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆயிரத்து 473 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 299 ஆக உயர்வடைந்துள்ளது. ​

சிங்கப் பெண்  சர்வதேச மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற  இந்துகாதேவியையும் இலங்கை அரசு யொகானியைப்போல கௌரவிக்குமா என கேள்வி ...
23/01/2022

சிங்கப் பெண்
சர்வதேச மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவியையும் இலங்கை அரசு யொகானியைப்போல கௌரவிக்குமா என கேள்வி ஒரு புறமிருக்க....

மறுபுறம் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பு

18-01-2022 அன்று பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 25 வயதுக்குட்ப்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் கணேஸ் இந்துகாதேவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து கணேஷ் இந்துகாதேவியுடன் குறித்த போட்டியில் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.

இவ்வாறான நிலையில் குறித்த இலங்கை அணி நேற்று மாலை இலங்கையை வந்தடைந்திருந்தது இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ள கணேஸ் இந்துகாதேவி இன்று காலை மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள தனது வீடு திரும்பும் வழியில் அவருக்கு அமோக வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த யுவதிக்கு பாகிஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள 105000 ரூபா நிதியினை ஏற்பாடு செய்து வழங்கிய தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் அவர்களது ஏற்ப்பாட்டில் இன்று காலை வவுனியாவில் வரவேற்ப்பளிக்கப்பட்டு வவுனியா கந்தசாமி கோயிலில் வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளார்

இதனை தொடந்து மாங்குளம் நகருக்கு வருகை தந்த யுவதிக்கு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய வரவேற்ப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டு மகத்தான வரவேற்ப்பளிக்கப்பட்ட்து

22/01/2022

எறும்புக்கே கவிதையா? கவிஞர்னா இவர் தான் கவிஞர்...

*புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் தினம்!*கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021...
22/01/2022

*புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் தினம்!*

கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெற்றது.

இதன்போது கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விசேட முறைமையின் கீழ் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இன்று பரீட்சை நடைபெற்றது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இது 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

20/01/2022

இலங்கை ஜனாதிபதியின் வெறித்தன ஆட்டம்.

*கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!* இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
19/01/2022

*கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!*

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் மேலும் 12 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. ​

✅நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்...!🟥In Sri Lanka - On, January 18, 2022 நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார ச...
18/01/2022

✅நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்...!

🟥In Sri Lanka - On, January 18, 2022


நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,231 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,506 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🟥தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்மோடு மேலும் பல தகவல்களுக்கு. #

இன்று மாலை 4 மணி முதல் 10 மணிவரை,சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பு ஏற்படும்...!In Sri Lanka - On, January 18, 2022...
18/01/2022

இன்று மாலை 4 மணி முதல் 10 மணிவரை,

சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பு ஏற்படும்...!

In Sri Lanka - On, January 18, 2022


இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால்; பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மின்சார தேவையில் 70 சதவீதமான உற்பத்தி அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக்கப்படுகின்றது.

சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன.

களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும்.

நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது.

இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.

அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும்.

இதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேநேரம், சப்புகஸ்கந்தை, நிலையத்திற்கான எரிபொருள் இன்று நண்பகலுடன் தீர்ந்துவிடும்.

இதனால் மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார பொறியியலாளர்கள் சங்கம் இன்று காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்

புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்மோடு மேலும் பல தகவல்களுக்கு. #

*ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு*தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், ...
18/01/2022

*ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு*

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

*ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை*ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்துள்ளார்.ஒன்பதாவது பாரா...
18/01/2022

*ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை*

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) இடம்பெறுகின்றது.

அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று மு.ப. 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

மேலும், அனைத்துவிதமான சுகாதார முறைகளையும் பின்பற்றி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது

Address

Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Ravana Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ravana Tv:

Videos

Share

Category


Other TV Channels in Vavuniya

Show All

You may also like