Senthee News - செந்தீ செய்திகள்

  • Home
  • Senthee News - செந்தீ செய்திகள்

Senthee News - செந்தீ செய்திகள் செந்தீயே பொய்மையை எரிக்காயோ

07/02/2023

Student visa பெற்று ஜரோப்பா செல்ல அருமையான வாய்ப்பு,
தகமை O/L சாதாரண தரம் மாத்திரமே. குறைந்த கட்டணத்தில் இரண்டு வாரகாலத்தில் பயணம். வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
எங்களது சேவை
IELTS தேவை இல்லை,
வங்கி மிகுதி தேவை இல்லை,
சொத்து மதிப்பு தேவை இல்லை.
முன்பணம் இல்லை
தொடர்புகளுக்கு #0767760459

04/02/2023
வவுனியாவில் 1/2 ஏக்கர் உறுதி காணி. புதிதாக கட்டிய வீடு, கிணறு, தென்னை மரம், மாமரம், ஜம்பு மரம் என்பன உள்ளன. ரூபாய் 70 லட...
28/01/2023

வவுனியாவில் 1/2 ஏக்கர் உறுதி காணி. புதிதாக கட்டிய வீடு, கிணறு, தென்னை மரம், மாமரம், ஜம்பு மரம் என்பன உள்ளன. ரூபாய் 70 லட்சம் செட்டிகுளம் வீதி, பூவரசங்குளம்,
வவுனியா. தொடர்புக்கு 0776288923

கட்டார் AireFort Cleaning Work, சம்பளம் 180000, ஆங்கில அறிவு அவசியம் 0767760459
26/01/2023

கட்டார் AireFort Cleaning Work, சம்பளம் 180000, ஆங்கில அறிவு அவசியம் 0767760459

25/01/2023

கட்டார் விமான நிலையத்தில் Cleaning Work சம்பளம் 180000 ஆங்கில அறிவு அவசியம், English அறிவு உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 0767760459

பதிவு செய்யப்பட்ட தாதியருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு (ஆண், பெண் இருபாலரும்) அடிப்படை  சம்பளம் 5 இலட்சத்து 38 ஆயிரம்,...
23/01/2023

பதிவு செய்யப்பட்ட தாதியருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு (ஆண், பெண் இருபாலரும்) அடிப்படை சம்பளம் 5 இலட்சத்து 38 ஆயிரம், டிப்புளோமா சான்றிதழ், தாதியர் அடையாள அட்டை உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும் 0776288923

கட்டார் நாட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு 4 இலட்சம் சம்பளம், கத்தாரில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி ...
13/01/2023

கட்டார் நாட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு 4 இலட்சம் சம்பளம், கத்தாரில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி யவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 0767760459

11/01/2023

வவுனியாவில் செய்தி சேவை ஒன்றில் பணியாற்ற ஆண் அறிவிப்பாளர்கள் (RJ) தேவை சம்பளம் வழங்கப்படும்
0776288923

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!!வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் ந...
10/01/2023

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!!
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10-01-2023) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்துக்கல்லூரிக்கு புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒழுக்கமற்றவர் என்பதுடன் அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர், அத்துடன் ஏற்கனவே குறித்த நபர் ஆசிரியராக பணியாற்றிய பாடசாலையில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என தெரிவித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், எல்லா வகையிலும் தகுதியான அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டும், மாணவர்களை பாதுகாக்கும் மதிப்பு மிக்க அதிபர் வேண்டும், மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் அதிபர் எமக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம் தகுதியற்ற அதிபர் எமக்கு வேண்டாம் போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கு குறித்த நியமனத்தை நிறுத்துமாறு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரிவடபுலத்து வாழ்வியலையும் மண்வாசனையையும் பதிவு செய்துள்ள  பாலை நிலம் திரைப்படம்பி.மாணிக்கவாசகம்(யாழ்ப்பாணத்த...
07/01/2023

நன்றி வீரகேசரி

வடபுலத்து வாழ்வியலையும் மண்வாசனையையும் பதிவு செய்துள்ள பாலை நிலம் திரைப்படம்

பி.மாணிக்கவாசகம்

(யாழ்ப்பாணத்துக்கு அடுத்ததாக பாலை நிலம் திரைப்படம் வவுனியாவில் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதி களில் திரையிடப்படுகின்றது)

ஈழத்து சினிமா என்பது வெறும் கலைமுயற்சி அல்ல தமிழ் மக்களின் விடுதலை மற்றும் உரிமைகள் சார்ந்த ஒரு அசைவியக்கம் என்று ஈழத்து சினிமா செயற்பாட்டாளர் காசிநாதர் ஞானதாஸ் கூறுகின்றார். இவர் ஈழுத்து சினிமா படைப்புலக முன்னோடியாகவும் கருதப்படுகின்றார். அந்த வகையில் பாலை நிலம் திரைப்படம் பற்றிய அவரது கருத்து கவனத்துக்கு உரியதாகின்றது.

ஈழத்து சினிமா கலைக்கு அப்பால் ஈழத் தமிழர்கள் சார்ந்த நிறைய விடயங்களைப் பதிவு செய்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே பாலை நிலம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது என்பது காசிநாதரின் பார்வை.

பாலை நிலம் திரைப்படம் தமிழகத் திரைப்படங்களுக்கு ஒப்பான வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது, தமிழகத் திரைப்படங்களுக்கே உரித்தான பாடல்கள் நிறைந்த தன்மையை இந்தத் திரைப்படமும் கொண்டிருக்கின்றது. ஆயினும் வடபுலத்தின் மண்வாசைன திரைப்படமெங்கும் நிறைவாக வியாபித்திருக்கின்றது. இந்தப் படத்தயாரிப்பின் கமரா அந்த மண்வாசனையை மிக நுண்ணிய நிலைகளிலெல்லாம் அழகுறப் பதிவு செய்திருப்பதைக் காண முடிகின்றது.

கதை மாந்தர்களுடைய வாழ்வியலைக் குறிக்கின்ற இந்த மண்வாசனை அம்சங்கள் அனைத்தும் அந்தப் பிரதேசத்து மக்களின் பாரம்பரிய வாழ்வியல் நிலைமைகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்திருப்பது இந்தத் திரைப்படத்தின் சிறப்பு.

போர்ச்சூழலின் பின்னணியில் விளைந்த ஒரு காதல் கதையே திரைப்படத்தின் கரு. மனம் முழுதும் வியாபித்துள்ள காதலி ஒரு பக்கம். வாழ்க்கையின் மிகுந்த அன்புக்குரிய தாயார் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடையில் தவிக்கின்ற அமுதனே படத்தின் கதாநாயகன். கதாநாயகனின் தோன்றாத் துணையாக வருகின்ற மூர்த்தி அவனுடைய மாமா. உறவு முறையில் மாமனும் மருமகனுமாக இருப்பினும் தலைமுறை இடைவெளியையும் வயது வித்தியாசத்தையும் கடந்ததோர் இணை பிரியாத தோழமையே கதையை நகர்த்திச் செல்கின்றது.

போர்ச்சூழலின்; வைத்திய வசதிகளற்ற நிலைமை கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் வாழ்க்கையில் குறுக்கிடுவது திரைக்கதையின் முதுகெலும்பாக மறைநிலையில் காணப்படுகின்றது. இளவயதினரிடையே முகிழ்க்கின்ற காதல் மொட்டவிழும் வகைமுறை இதமாக இனிமையாகப் பதிவாகியிருக்கின்றது. அதேவேளை, தசாப்தம் கடந்தும் நிலைத்து நீடித்திருக்கின்ற காதலின் வலிமையையும் அதன் வலிகளையும் படம் அழகுற பிரதிபலித்திருக்கின்றது. அமுதன் நித்தியா இருவரினதும் காதல் நிறைவேறுகின்றதா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.

போரினால் சிதைந்து போன கிராமத்தின் காட்சிகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்த படத்தில் கமரா முயற்சித்திருக்கின்றது. அந்த அழிவுக் காட்சிகள் திரைப்படத்தின் தலைப்பை நினைவூட்டுகின்றன. அமுதனும் அவனது மாமா மூர்த்தியும் கிராமத்தவர்களைச் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் வடபுலத்து மக்களின் அடிப்படை வாழ்வியல் அம்சங்களும் அவர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்களும் அழகுற இரண்டறக் கலந்திருக்கின்றன.
வயலும் வயல் சார்ந்த நிலப்பரப்பும் காதல் காட்சிகளிலும்கூட கவினுறப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

போர் தின்ற நிலம் பொலிவிழந்து வளமிழந்து பாலை நிலமாகியிருப்பதைப் படம் மிக நேர்த்தியாகத் தொனி செய்திருக்கின்றது. ஆயினும் பாலை நிலம் என்ற படைத்தலைப்பு அதனையும்விட ஆழமான கருவைப் பதிவு செய்திருப்பது கதைப்போக்கின் முக்கிய அம்சமாகும்.

குறும்படங்களில் கவனம் குவித்திருந்த இளம் கலைஞர்கள், இப்போது முழு நீளத் திரைப்பட முயற்சியில் ஆழமாகக் காலூன்றியிருக்கின்றனர். அந்த வகையில் தூவானம், பாலை நிலம், வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் மனதில் நிழலாடுகின்றன.

பாலை நிலம் திரைப்படத்தின் கதநாயன், கதாநாயகி உள்ளிட்டவர்கள் திரைப்பட நடிப்புலகத்திற்குப் புதியவர்களாயினும் நடிப்புத் திறனை அழகுற வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இது ஈழத்து முழுநீளத் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கான அடையாளமாக வெளிப்பட்டிருக்கின்றது.

குறுந்திரைப்படப் படங்களிலும், தமிழகத் திரைப்படங்களின் குறுங்காட்சிகளிலும், தமிழகத் திரைப்படங்களின் டிவிடிகளிலும் மூழ்கியுள்ள ஈழுத்து சினிமா ரசிகர்களுக்கு முழு நீளத் திரைப்படம் என்ற புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கியுள்ள பாலை நிலம் உள்ளிட்ட திரைப்படங்கள் புதிய திரைப்பட இரசiனையை அள்ளி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் திரைப்பட இரசனை ரசிகர்கள் மத்தியில் சென்றடைவது புதிய படைப்புக்களாகிய முழு நீளத் திரைப்படங்களின் விளம்பர உத்திகளிலேயே அதிகம் தங்கியிருக்கின்றது. அதுவே இரசிகர்களை சினிமா தியேட்டர்களை நோக்கிக் கவர்ந்த இழுக்க வல்லது. இதுவே இன்றைய ஈழத்து சினிமாவின் யதார்த்தம் என்று துணிந்து கூறுலாம்.

வவுனியாவில் பாலை நிலம் திரைப்படம் எதிர்வரும் 7 சனிக்கிழமை மாலை 6.30 விசேட காட்சிகளாகவும்,  மற்றும் 8/01/2023 ஞாயிறு 2.30...
05/01/2023

வவுனியாவில் பாலை நிலம் திரைப்படம் எதிர்வரும் 7 சனிக்கிழமை மாலை 6.30 விசேட காட்சிகளாகவும், மற்றும் 8/01/2023 ஞாயிறு 2.30 மற்றும் 6.30 காட்சிகள் காண்பிக்கப்படும். முற்றிலும் உள்நாட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரைக்காவியம் அனைவரும் அணி திரண்டு வந்து ஆதரவு தாருங்கள். நுழைவு சீட்டு அரங்க வாயிலிலும் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புக்கு 0776288923

*நற்ச்செய்தி* மிக்ஸ் பாக்சிங் தரங்கணிப்பு பயிற்சி..எதிர்வரும் 18.12.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 4 ...
15/12/2022

*நற்ச்செய்தி*
மிக்ஸ் பாக்சிங் தரங்கணிப்பு பயிற்சி..

எதிர்வரும் 18.12.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நகர சபை மைதானத்தில் "மிக்ஸ் பாக்சிங் தற்காப்பு கலை விளையாட்டின்" தரங்கணிப்பு (முதலாவது வர்ணப்பட்டிக்கானது) பயிற்சியும், தற்ப்பாதுகாப்பு பயிற்சிகளும் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலிருந்தம் கலந்தேகொள்ள முடியும்

சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாமிற்கான கட்டணம் : 3000/=

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால் ஏற்ப்படும் நன்மைகள்

01. கலந்துகொள்ளும் அனைவருக்கும் சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

02. ஆர்வமுள்ள திறமையான வீர,வீராங்கனைகளை நடைபெற இருக்கின்ற மாகான, தேசிய, சர்வதேச போட்டிகளுக்காக இப் பயிற்ச்சி முகாமினூடாக தெரிவுசெய்யப்படுவீர்கள்.

03. நீங்கள் ஒரு பாடசாலை மாணவர்களாக இருந்தால் கல்வியற் கல்லூரி, பல்கலைகழகங்களுக்கான அனுமதிகளில் முன்னுரிமைகள் பெறுவீர்கள் ( வெட்டுப்புள்ளிகளிலா சலுகைகளை பெறுவீர்கள், குறைந்தது மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்றால் 15 புள்ளிகளை பெறலாம் கல்வியற் கல்லூரி அனுமதியில்)

04. முப்படை, காவல்துறை வேலைவாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

05. சர்வதேச போட்டிகளுக்காக மேற்க்கத்தேய, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை பெறலாம்.

06. சமூகத்தில் சிறந்த அந்தஸ்திை்னை பெறமுடியும்.

07. தற்ப்பாதுகாப்பினை பேணமுடியும்

08. பொழுதுபோக்கினை சிறந்த முறைகளில் கழிக்கமுடியும்

09. விளையாட்டு துறைசார்பான அரச, தனியார் வேலைவாய்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

10. உடல், உள, ரீதியாக ஆரோக்கியமாக வாழலாம்.

ஆர்வமுள்ள வீர, வீராங்கனைகள் விரைவாக 0763753788 என்ற இலக்கத்திற்கு நேராகவோ அலாலது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்று 11/12/2022 மாலை 6.30 க்கு காண்பிக்கப்படுகிறது
11/12/2022

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்று 11/12/2022 மாலை 6.30 க்கு காண்பிக்கப்படுகிறது

மக்களின் அமோக வரவேற்பை தொடர்ந்துஅனேகரின் வேண்டுகோளிற்கிணங்க,மீண்டும் திரையரங்கில் நாளை மாலை 6.30 மணிக்கு #பாலைநிலம்
10/12/2022

மக்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து
அனேகரின் வேண்டுகோளிற்கிணங்க,
மீண்டும் திரையரங்கில்
நாளை மாலை 6.30 மணிக்கு
#பாலைநிலம்

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை காட்சி பிற்போடப்பட்டு, ஞாயிறு 11/12/2022 மாலை 06.30 க்கு காட்சிகள் காண்பிக்...
09/12/2022

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை காட்சி பிற்போடப்பட்டு, ஞாயிறு 11/12/2022 மாலை 06.30 க்கு காட்சிகள் காண்பிக்கப்படும்.

05/12/2022

துபாயில் "சுப்பர் மார்க்கட்" இல் வேலைவாய்ப்பு, சம்பளம் 130000+ஓவர் டைம் தங்குமிடம் சாப்பாடு இலவசம் , 0776288923

பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியு...
01/12/2022

பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.
யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது ஈழத்து காவியமான 'பாலைநிலம்' திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 04-12-2022/ காலை 10.30, மதியம் 2.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் காட்சிபடுத்தப்படுகின்றது.
முற்று முழுதாக ஈழத்து கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 'பாலைநிலம்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்து திரைப்படங்கள் மக்களின் யுத்த அவலங்களை நீக்கம் செய்து கடந்து சென்றுவிட முடியாது. அந்தவகையில் யுத்தத்தின் கூர்மையை தாங்கிய எம்மக்களின் காயங்கள் ஆறியபோதும் யுத்தத்தின் வடுக்களுடன் பயணிப்பதை சித்தரிக்கின்றது 'பாலைநிலம்'
கதாநாயகனாக எம்.ஜி.ஆர்.காந்தன் நடித்துள்ளார். இவர் புதியவன் ராசையாவின் ஒற்றைபனைமரம் படத்திலும் நடித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டவர், கலைச்சுடர், கலைஇளவல் போன்ற விருதுகளை பெற்றவர். கதாநாயகியாக அபிரா நடித்திருக்கும் இத்திரைப்படம் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியையும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியையும் பேசுகிறது.
'பாலைநிலம'; திரைப்படத்திற்கு பிரசாந் கிருஸ்ணப்பிள்ளை இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவான நான்கு பாடல்களும் வெளிவந்து பலரின் பாராட்டை பெற்று வருகின்றது. 'பாலைநிலம்' என்ற வார்த்தைக்குள்ளே உள்ள கொடுமை, தனிமை, துன்பம், வெறுமை, வெப்பம் எல்லாவற்றையும் தனது இசைமூலம் வெளிக்கொணர்ந்துள்ளார் இசையமைப்பாளர்.
பாலைநிலம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மகேந்திரசிங்கம். இவர் ஈழத்து சினிமாவில் நீண்ட அனுபவத்தை கொண்டவர். ஈழத்தில் வெளியான அனேக படங்களில் நடித்து பிரசித்தமானவர், நடிப்பிற்காக கலைஞானசுடர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளை பெற்றவர்.
யூட்சுகியின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள 'பாலைநிலம்' திரைப்படம் ஈழத்து மண்ணில் மறைந்துள்ள அழகிய இடங்களை எமது கண்முன்னே நிறுத்தியுள்ளது. பாலை நிலங்களையும், பசுமை நிலங்களையும் தனது ஒளிப்பதிவினூடாக எமது கண்கள் வியக்கத்தக்க அளவிற்கு விருந்தளித்துள்ளார்.
'பாலைநிலம்' திரைப்படமானது நடிகர்களான, மகாலிங்கம்,சாயா, விமல்றோய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ளது.
பாடல்வரிகள் ரதி தனஞ்சயன் மற்றும் ரொனால்ட், படத்தொகுப்பு கி.பிரசாந் மற்றும் நிவீன் செய்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகம் ராஜாமகேந்திரசிங்கம் மற்றும் யூட்சுகி, சண்டைபயிற்சி நந்தா, வர்ணக்கலவை தங்கவேல் சிவனேசன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

வடக்கு மாகாணம், யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் முதலாவது பதக்கத்தை வடக்கு மாகாணம் வென்றுள்ள...
29/11/2022

வடக்கு மாகாணம், யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் முதலாவது பதக்கத்தை வடக்கு மாகாணம் வென்றுள்ளது.
இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய போட்டியில், முல்லைதீவு அளம்பில் பகுதியை சேர்ந்த ஜெயதாஸ் அல்வின் தேசிய ரீதியிலான யூடோ விளையாட்டில் வெள்ளி பதக்கத்தினை வென்று முதல் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்து எமது வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பொலநறுவை மாவட்டத்தில் தேசிய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில், முப்படை வீரர்கள் மற்றும் தென்கிழக்கு வீரர்களுடன் 100 கிலோகிராமிற்குட்பட்ட எடை பிரிவில் போட்டியிட்டு வடக்கு மாகாணம் வரலாற்றில் தேசிய ரீதியில் முதலாவது யூடோ பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.
யூடோ பயிற்றுவிப்பாளரான வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்களாகியிருந்தும் இதுவரை தேசிய மட்ட ரீதியில் நடாத்த பட்ட யூடோ போட்டியில் வட மாகாணத்தில் இருந்து ஒரு வீரனும் பதக்கம் பெற்றிருக்கவில்லை, வடக்கு மாகாண யூடோ விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட யூடோ சங்கத்தின் சார்பாக தனது பயிற்றுவிப்பினூடாக அவரது அதீத திறமையால் இவ் வெற்றியினை வென்ற வீரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை செயலாளராக திருமதி  விமலவேணி நிசங்க  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.வவுனியா நகர சபையின் புதிய செயலாளராக...
29/11/2022

வவுனியா நகரசபை செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வவுனியா நகர சபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க இன்று காலை அலுவலகத்தில் தமது கடமைகளும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வவுனியா நகர சபையின் முதல் பெண் செயலாளராக கடமைகளும் பொறுப்பேற்ற திருமதி விமலவேணி கிளி சென். தெரேசா மகளிர் மகாவித்தியாலயம் பழைய மாணவியும் பேரதெனியா பல்கலைக்கழக கலைமானி பட்டதாரி
கிளி பொது வைத்திய சாலை, வவுனியா வடக்கு வலயக்கல்வி, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நகரசபை ஆகிய இடங்களில் நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமையிற்றி முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையில் 16வருடங்கள் அதிசிறப்பாகவும் அரசசேவையில் 28வருடங்களாகவும் கடமையாற்றி வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

23/11/2022

ஓமான் நாட்டு Restaurant ஒன்றுக்கு பரோட்டா போடத் தெரிந்த ஒருவர் தேவை சம்பளம் 150000 தொடர்பு 0776288923

21/11/2022

சீற் குசன் தையல் வேலை தெரிந்தவர்கள் தேவை ஓமான் நாடு சம்பளம் 2 இலட்சம்
தொடர்புக்கு 0776288923

21/11/2022

சவூதியில் சாரதி வெற்றிடங்கள் 2 இலட்சம் சம்பளம். தங்குமிடம் சாப்பாடு இலவசம். 0776288923

20/11/2022

சவூதியில் கல்யாண மண்டபத்தில் அலங்கார வேலைக்கு ஆட்கள் தேவை
சம்பளம் 2 இலட்சம் தங்குமிடம் சாப்பாடு இலவசம்
0776288923

15/11/2022

சேர்பியா (ஐரோப்பா) நாட்டில் தையல் வேலை தெரிந்த ஆண் பெண் இருபாலருக்குமான வேலைவாய்ப்பு 0776288923

Address


Alerts

Be the first to know and let us send you an email when Senthee News - செந்தீ செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Senthee News - செந்தீ செய்திகள்:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share