Qtv Network

Qtv Network QTV NETWORK
(108)

18/08/2023

சூரா அர்ரஹ்மான் ஒரு சில வசனங்கள் ♥️

06/07/2023

யார் உண்மையில் சிறந்த நண்பன்..?

01/07/2023

விரும்புவதெல்லாம் விரைவாக கிடைப்பது அருளல்ல 🙂

02/03/2023

நீங்கள் ஏன் தொழவில்லை..?

22/02/2023

“என் கடைய விற்று பள்ளிவாசலக் கட்டுங்க” (நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்) Tamil Nadu | India 🇮🇳

மீண்டும் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டிருப்பதாக (CNN) தகவல் வெளியிட...
20/02/2023

மீண்டும் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டிருப்பதாக (CNN) தகவல் வெளியிட்டுள்ளது.

பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

18/02/2023

உம்றாவிற்கு செல்ல பத்து நாட்களே இருக்கும் நிலையில் - அந்த முழு பணத்தையும் துருக்கி மக்களுக்காக தானம் செய்த 74 வயது முதியவர்

17/02/2023

உம்றாவுக்கு சேர்த்த பணத்தை இந்த முதியவர் என்ன செய்துள்ளார் தெரியுமா..?

உம்றாவுக்கு சேர்த்த பணத்தை இந்த முதியவர் என்ன செய்துள்ளார் தெரியுமா.! Keep Support our page ♥️
17/02/2023

உம்றாவுக்கு சேர்த்த பணத்தை இந்த முதியவர் என்ன செய்துள்ளார் தெரியுமா.!
Keep Support our page ♥️

உம்றாவுக்கு சேர்த்த பணத்தை இந்த முதியவர் என்ன செய்துள்ளார் தெரியுமா..?Emotional: He Donated his ENTIRE Umrah Savings to Earthquake Victims

16/02/2023

இரண்டு பெண்கள் - இரண்டு சூழல்கள் ஆனால் ஒரே ஈமான்
இலங்கை மற்றும் துருக்கியில் பதிவான இரண்டு பெண்களின் காணொளிகளில் இருந்து நமக்கான படிப்பினை

இலங்கை மற்றும் துருக்கியில் பதிவான இரண்டு பெண்களின் காணொளிகளில் இருந்து நமக்கான படிப்பினை
16/02/2023

இலங்கை மற்றும் துருக்கியில் பதிவான இரண்டு பெண்களின் காணொளிகளில் இருந்து நமக்கான படிப்பினை

இரண்டு பெண்கள் - இரண்டு சூழள்கள் ஆனால் ஒரே ஈமான்

15/02/2023

எதிர்பாரா உதவிக்கு எதிர்பாரா அன்பளிப்பு

14/02/2023

துருக்கிக்கு 10,000 மொபைல் வீடுகளை உதவியாக வழங்கியது கட்டார்.

28/01/2023

பெற்றோர்களே! பிள்ளைகளே!
வாசித்துப் பாருங்கள்... உணர்வு பெறுவீர்கள்.
எமது நிலை என்ன? அல்லாஹ் போதுமானவன்
✍️✍️✍️✍️✍️✍️
சவூதியைச் சேர்ந்த பொறுமையின் சிகரமான அப்துல்லா Bபானிஃமா என்ற மிகப்பெரும் ஆளுமை நேற்று இறையடி சேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 31 வருடங்கள் சக்கர நாற்காலியில் வாழ்வை கழித்தாலும் பொறுமையை கைவிடவில்லை.
தலையைத் தவிர கை, கால்கள் எதையும் அசைக்க முடியாத நிலை இருந்தும் சோர்ந்து போகவில்லை. விதியை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றார். கற்றதை மக்களுக்கு போதித்து வந்த நிலையில் இறையடி சேர்ந்தார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக.

தனக்கு பக்கவாதம் ஏற்பட்டது பற்றி அவர் கூறுவதைப் பாருங்கள்:
நான் ஆரோக்கியமாக இருந்த போது எனது தந்தையின் பேச்சை கேட்கவில்லை. பல தீய வேலைகள் செய்தேன்.
நான் சிகரெட் புகைத்தது என் தந்தைக்கு எப்படியோ தெரிந்து விட்டது.
" நீ சிகரெட் புகைக்கின்றாயா" எனக் கேட்டார். "இல்லை" என்று பொய் சொன்னேன்.
அவருக்குக் கோபம் வந்து " நீ புகைத்தால் உன் கழுத்தை அல்லாஹ் உடைத்து விடட்டும் என்றார்.
நான் அவர் பேச்சை காதில் வாங்கவேயில்லை.
அடுத்த நாள் நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் உயரத்தில் இருந்து பாய்ந்து நீந்த முற்பட்ட போது தலை நிலத்தில் அடிபட்டு கழுத்து உடைந்து விட்டது.
எத்தனையோ சத்திர சிகிச்சைகள்... எதுவும் பயனளிக்கவில்லை.
👉 ஆரோக்கியம் ஒரு நிமிடத்தில் பறிபோகும்...
👉 பெற்றொருக்கு மரியாதை செய்யுங்கள்.
👉 பிள்ளைகளை திட்டாதீர்கள்...

அவர் தனது ஆசைகள் பற்றி கூறும்போது:
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. ஆசைகள் என்பதைவிட கைசேதங்கள் என்று சொல்லலாம்.
1- ஆரோக்கியமாக இருந்த போது நான் தொழவில்லை;சுஜூது செய்யவில்லை. இப்போது ஆசையாக உள்ளது. ஆனால் என்னால் முடியவில்லை.
2- அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்ட ஆசை. முடியவில்லை.
3- பெருநாள் போன்ற தினங்களில் வீட்டுக்குச் சென்று எனது தாயை ஆரத்தழுவ ஆசை. ஆனால் முடியவில்லை.
அவரது கண்கள் கலங்குகின்றன. துக்கத்தை அடக்கிக் கொள்கிறார்.

👉சகோதரர்களே!
இரு கைகள், இரு கால்களுடன் நடமாடி ஆரோக்கியமாக வாழும் நாம் இறைவனின் அருள்களின் பெறுமதியை உணர்ந்துள்ளோமா?
அதற்காக நன்றி கூறுகின்றோமா? அவனுக்கு சுஜூது செய்கின்றோமா?
ஆரோக்கியம் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளோமா?
விழித்துக் கொள்வோம்...
இறைவனின் பக்கம் திரும்புவோம்.
சிறுசிறு துன்பங்களை விடுவோம்...
எம்மைவிட பல சோதனைகளால் பாதிக்கப்பட்டோர் எத்தனையோ பேர் உள்ளனர்.
அருள்களுக்காகவும்
ஆரோக்கியத்திற்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோம்.

- பாஹிர் சுபைர் -

23/12/2022

வெள்ளிக்கிழமையின் 5 சிறப்புக்கள்

Like | Comment | Share 👍

19/12/2022

Kylian Mbappe குறித்து கடந்த 2018 இல் வெளியான காணொளி

கால்ப்பந்தாட்டத்தில் நேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய எம்பாப்பே, ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த மனிதநேயமிக்கவரும் ஆவார்.

17/12/2022

உங்களுக்கு இடையில் அன்பை விதைத்திருப்பதும் இறைவனின் அருளாகும்.

13/12/2022

நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..!

13/12/2022

எத்தனை அவமானங்கள்,
எத்தனை அவமதிப்புகள்,
எத்தனை அபாண்டங்கள்,
எத்தனை குற்றச்சாட்டுக்கள்,
எத்தனை குறைபிடிப்புகள்

அத்தனையையும் தாண்டி வளர்த்தெடுத்த பக்கம் இது
“அல்லாஹ் அவ்வளவு எளிதாக எம்மை விட்டு தூரமாக்க மாட்டான்” என்ற உறுதியான நம்பிக்கைக்கு அல்லாஹ் விடை கொடுத்துவிட்டான்.

We got our page back

Alhamthulillaah ♥️

21/08/2022

உரிமை இல்லாதவர்களிடத்தில் அன்பும், கோபமும் அனாவசியமானது.

Qtv தமிழின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் பரீட்சார்த்தமாக ஆரம்பம்,முழுமையாக வாசிக்க : https://tinyurl.com/2ny4c5bm
13/08/2022

Qtv தமிழின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் பரீட்சார்த்தமாக ஆரம்பம்,

முழுமையாக வாசிக்க : https://tinyurl.com/2ny4c5bm

30/07/2022

அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தை அடைந்துள்ளோம்.

(அல்ஹம்துலில்லாஹ்)

25/07/2022

நிச்சயமாக துன்பத்துக்குப் பின்னால் இன்பம் இருக்கின்றது 😌

அரபா தினம் ♥️🤲அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்
08/07/2022

அரபா தினம் ♥️🤲

அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்

அல்ஹம்துலில்லாஹ் எத்தனை சிறப்புக்கள் இன்று சூரியன் உதயமாகும் நாட்களிலேயே சிறந்த வெள்ளிக்கிழமை நாள்,துஆக்களில் சிறந்த துஆ...
07/07/2022

அல்ஹம்துலில்லாஹ் எத்தனை சிறப்புக்கள்

இன்று சூரியன் உதயமாகும் நாட்களிலேயே சிறந்த வெள்ளிக்கிழமை நாள்,

துஆக்களில் சிறந்த துஆ கேட்கும் அரபா நாள்,

முந்தைய ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக நோன்பு நோற்கும் நாள்,

“அல்லாஹு அக்பர்”

அந்த சிறப்புமிக்க நாளுக்காக ஹாஜிகள் மினாவில் தரித்திருக்கும் தருணம்

யா அல்லாஹ் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை வழங்கிவிடு யா அல்லாஹ் 🤲

📷Haramain

இன்று துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சவுதி அரேபியாவில் தென்பட்டுள்ளது. 🌙அன்பானவர்களே துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ...
29/06/2022

இன்று துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சவுதி அரேபியாவில் தென்பட்டுள்ளது. 🌙

அன்பானவர்களே துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நாட்களாகும் அந்த நாட்களில் அதிக நன்மையில் ஈடுபடுவோம். 🌘

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் செய்யும் நற்காரியங்கள் மற்ற நாட்களில் செய்யும் காரியங்களை விட அல்லாஹ்விடம் மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.

(ஸஹீஹ் அல் பஹாரி)

23/06/2022

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னாள் பங்கலாதேஷ் சென்றிருந்தோம். அப்போது பங்கலாதேஷுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 ஆண்டுகள் முன்னோக்கி இருந்தது இலங்கை

ஆனால் இன்று…! ஒரு அனுபவப் பகிர்வு 🥲🥲

22/06/2022

வெளிநாட்டில் வாழ்ந்தாலே சொகுசாக இருப்பதாக பொருளல்ல

Address


Telephone

+94771178117

Alerts

Be the first to know and let us send you an email when Qtv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qtv Network:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Qtv Network (Pvt) Ltd.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளும் ஊடகமாக Qtv எனும் நாமத்துடன் சமுக ஊடகங்களில் எமது பயணம் ஆரம்பமானது.

உலகில் நடைபெறும் ஊடக ஆக்கிரமிப்புகளுக்கு ஈடுகொடுத்து உண்மையாகவும் நேர்மையாகவும் பக்காச்சார்பின்றியும் மக்களுக்கு நேர்த்தியானதொரு ஊடகமாக செயற்படுதல்.

சமுக வலைத்தளங்களில் நேர்த்தியான நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்கி தனித்துவம் பேணும் நமக்கான ஊடக அடையாளமாக மிளிருதல்.