Akpnews

Akpnews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akpnews, News & Media Website, .
(9)

உடனுக்குடன் நம்பகமான அக்கரைப்பற்று, தேசிய, சர்வதேச செய்திகளை அறிந்து கொள்ள Akpnews லைக் Like செய்யுங்கள்
ஜும்ஆ நேரலை மற்றும் மிக சிறந்த மார்க்க நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளையும் பார்க்கலாம் நம்பகமாக செய்திகளை அறிய எமது Akpnews பக்கத்தை லைக் செய்யுங்கள்

பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறோம் பேட்டி நிகழ்ச்சிகள், நேரலை நிகழ்ச்சிகள், வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரலை என பல நிகழ்ச்சிகளை எமது பக்கத்தில் வழங்

குகிறோம்

உங்களது விளம்பரங்களை எமது பக்கத்தில் விளம்பரப்படுத்துங்கள்

எமது பக்கத்தை லைக் மற்றும் பலோ செய்வதினுடாக எமக்கு ஆதரவு தாருங்கள்

�உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கூட எமக்கு எழுதலாம்

அக்கரைப்பற்றில் அறுசுவை உணவிற்கு....
18/11/2024

அக்கரைப்பற்றில் அறுசுவை உணவிற்கு....

நாம் ஏன் இவர்களை இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருந்தோம்?
18/11/2024

நாம் ஏன் இவர்களை இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருந்தோம்?

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெ...
18/11/2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவிக்கு எதிராக   ஒழுக்காற்று நடவடிக்கைபுதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் தம்மை தாமே நியமித்துள்ளதாகக் கூற...
18/11/2024

ரவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் தம்மை தாமே நியமித்துள்ளதாகக் கூறப்படும் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கூடவுள்ளனர்

♦அநுர குமார திஸாநாயக்க மனம் திறக்கிறார்...என் அப்பா அரச ஊழியர்.அம்மாவால் இன்றும் எழுத முடியாது.தொலைதூர கிராமங்களில் வாழ்...
18/11/2024

♦அநுர குமார திஸாநாயக்க மனம் திறக்கிறார்...

என் அப்பா அரச ஊழியர்.
அம்மாவால் இன்றும் எழுத முடியாது.

தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்.

எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை. வந்த ஆசிரியர்கள் பலர், விரைவாக இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர்.

மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி, எங்களுக்காக அர்ப்பணித்தனர். அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை.

பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்றேன்.

மஹாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்தபோது, மஹாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்ட வேண்டி வந்தது. அப்போது ஒரு வடிகால் வெட்ட இருபது ரூபாய்.
நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம்.

அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது.

எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர்.
கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல-
குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால்.

வறுமையின் காரணமாக, சிலர் குடிபோதைக்குப் பழகி அகால மரணம் அடைந்தனர்.
அவர்கள் இறக்கும் வயது வரவில்லை.
சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன.

இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

வறுமையை ஃபெஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள்
அல்ல நாம்.

நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள் உள்ளனர்.

தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த, கொழும்பை மையமாகக் கொண்ட, இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில், தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன்.

என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர்.

வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய, மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக அரசியல் செய்கிறோம்.

ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்.

-அனுரகுமார திஸாநாயக்க

18/11/2024

20துக்கு கை தூக்கிய அனைவரையும் மக்கள் நிராகரித்துள்ளார்கள்

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு  மற்றும் சுற்றுலாத்தூறை அமைச்சர்!-விஜித ஹேரத்
18/11/2024

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்தூறை அமைச்சர்!
-விஜித ஹேரத்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம்பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சுவிஜித ஹே...
18/11/2024

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு

விஜித ஹேரத் - வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்

சந்தன அபேரத்ன -
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

சரோஜா சாவித்திரி போல்ராஜ்-
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

லால் காந்த -
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்

ராமலிங்கம் சந்திரசேகர் -
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

உபாலி பன்னிலகே -
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சுனில் ஹந்துன்னெத்தி -
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர்.-பிமல் ரத்நாயக
18/11/2024

துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர்.
-பிமல் ரத்நாயக

வர்த்தக வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்.-வசந்த சமரசிங்ஹ
18/11/2024

வர்த்தக வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்.
-வசந்த சமரசிங்ஹ

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிறிசாந்த அபேசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !
18/11/2024

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிறிசாந்த அபேசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !

18/11/2024

வேதாந்தி சேகுவின் வைர வரிகள்

இருபத்தி நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது
18/11/2024

இருபத்தி நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது

🚨 இலங்கையில் ஊனமுற்ற சமூகத்திற்கான வரலாற்றுப் பிரதிநிதித்துவம் ⭕ NPP இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத...
18/11/2024

🚨 இலங்கையில் ஊனமுற்ற சமூகத்திற்கான வரலாற்றுப் பிரதிநிதித்துவம்

⭕ NPP இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது.

⭕ 2012 ஆய்வின்படி, 1.7 மில்லியன் இலங்கையர்கள் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். இவர்களது சமூகம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது இதுவே முதல் முறை.

⭕ பல ஆண்டுகளாக அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தேசியப் பட்டியல் முதலில் உருவாக்கப்பட்டது, உள்வாங்குதலை ஊக்குவிப்பதற்காகவும், ஆளுகையில் விளிம்புநிலை சமூகங்களின் குரல்களை வலுப்படுத்துவதற்காகவும். இது NPPயின் உண்மையிலேயே பாராட்டத்தக்க நியமனமாகும்

Akkaraipattu Book Fair-20245 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி டிசம்பர் 13-16 வரை இடம் பெறும்.
18/11/2024

Akkaraipattu Book Fair-2024
5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி டிசம்பர் 13-16 வரை இடம் பெறும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் கா...
17/11/2024

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காணப்பட்டது.

இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆதம்பாவா  சேருக்கு வாழ்த்துக்கள்
17/11/2024

ஆதம்பாவா சேருக்கு வாழ்த்துக்கள்

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வேண்டாம்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப் ப...
17/11/2024

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வேண்டாம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ITAK வழங்கியது, ஆனால் அவர் அந்தப் பதவியை நிராகரித்துள்ளார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Akpnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akpnews:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share