02/06/2024
தனது உயர்தர தேர்வு முடிவுகளை பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த பதிவில் உங்களுக்கான சில குறிப்புகள்...
1) இந்த நாள் முதல் நீங்கள் பல சவால்களை முகம் கொடுக்க உள்ளீர்கள். அதற்காக நீங்கள் உங்களின் உள்ளத்தை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
2) பொறுப்புக்களை ஏற்று கொள்ள தயாராகுங்கள். Fun life style என்ற மன பதிவிலிருந்து, அர்த்தமுள்ள வாழ்வொழுங்கு என்ற பதிவுக்கு வாருங்கள்.
3) ஓர் பாடநெறியை தெறிவுசெய்ய முதல் ஓர் தொழில் அல்லது உங்களுக்கான வாழ்வாதாரத்தை உழைப்பதுக்கான ஓர்
வழியை தெரிவுசெய்யுங்கள். ஓர் கம்பனி, உற்பத்தி, கடை, சுய தொழில், E Business, Transport, Tourism, விவசாயம், கால்நடை மற்றும் Freelancer என எந்த ஒரு துறையிலாவது Fulltime or Parttime Employee, Trainee, Apprenticeship and Internship என எதாவது ஓர் தரத்தில் இனைந்துக்கொள்ளுங்கள்.
4) குறிப்பிட்ட சில துறைகளை தவிர மற்றைய துறைகளில் தொழில்சார் கல்வி தகைமையை பெற்று பிறகு பட்டப்படிப்பு தகைமைகளை பெற்றுக்கொள்ளுங்கள். பல்கலைக்கழக துறைகள் அதுப்பற்றியான விடயங்களை அதில் கல்வி கற்கும் நபர்களுடன் ஆலோசனை செய்துக்கொள்ளுங்கள்.
5) வீணாக Private Campus, Educational Exhibitions, Workshops என காலத்தை வீணாக்காமல் நீங்கள் தெறிவு செய்த துறையில் தொழில்புரிகின்ற குறிப்பிட்ட சிலரிடம் தனிப்பட்ட ரீதியில் ஆலோசனைகளைப்பெற்று சிறந்த தீர்மானங்களை பெற்றோரிடமும் ஆலோசனைப் பெற்று முடிவெடுக்கவும்.
6) Jop Market ல் இல்லாத துறைகள் அல்லது அதற்கான தொழில் வாய்ப்புக்கள் குறைத்து வரும் துறைகளில் பணத்தை வீசி பிறகு கஷ்டப்பாடதீர்கள்.
7) வெளிநாடுகளில் கல்விகற்க விரும்புவர்கள் அதற்கான சரியான திட்டமிடல்களை செய்து நிதி நிலைமைகளை கவனித்து ஓர் கால எல்லைக்குள் அதற்கான விடயங்களை செயற்படுத்துவதோடு மேற் சொல்லப்பட்ட விஷயங்களிலும் கவனமாக இருங்கள். மற்றும் வெளிநாடுகளில் கல்விகற்க விரும்புவோர் அங்கு சென்று குறிப்பிட்ட காலத்துக்கு கடினமாகவும், எந்த தொழிலை செய்யும் மன நிலையும், தனியாக யாரிடமும் எந்த உதவியும் கிடைக்காத போதும் தன்னை முகாமை செய்துகொள்ளும் திறமையை இருக்க வேண்டும்.
8) சமூக ஊடகங்கள், தொழில் வழிக்காட்டல் கருத்தரங்குகள் என உங்கள் முன் வரும் அதிகப்பட்ட தகவல்கள் விளம்பரங்கள் என குவியும் விடயங்களில் ஏமாறாமல். நீங்கள் தெறிவு செய்த துறைக்கான தகவல்களை மட்டும் எடுத்து சரியான நபர்களுடன் அதை கலந்துரையாடி சரியான தீர்மானங்களை எடுங்கள்.
9) காதல், அதீத தொலைபேசி பாவனை, Gym, இயக்க அல்லது மார்க்க விவகாரங்கள் மற்றும் நட்பு என வாழ்க்கையின் அதி தீவிர நிலைகளுக்கு அடிப்பட்டு செல்லாமல் அல்லாஹ்வுடனான தொடர்ப்பை அதிகரித்து உங்களுக்கான ஓர் சிறந்த நம்பிக்கையான, அறிவான ஆலோசனையாளரை தெரிவு செய்து அவருடன் கலந்துரையாடி வாழ்ககையின் அடுத்தவரும் சவால்களை இலகுவாகவும் கடந்து செல்லுங்கள்.
10) போதை மற்றும் விபச்சார வாழ்வொழுங்கில் சிக்கிக் கொள்ளாமல் இந்த சமூக அமைப்பில் உங்களுக்கான பங்களிப்பை உங்களின் துறைகள் அல்லது சக்திக்கு உட்பட்ட வகையில் வழங்குங்கள்.