ZAM News

ZAM News இலங்கையின் நாளாந்த செய்தித்தாள்களு?

06/03/2024

அகில இலங்கை சேவைகளுக்குக்காக 2023 இல் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகள் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.results.exams.gov.lk/viewresultsforexam.htm

21/11/2023

வரவு செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

08/07/2023
பிறை தென்பட்டது: உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இ...
21/04/2023

பிறை தென்பட்டது:

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2023 சனிக்கிழமை 22 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

නවසඳ දිස්විය

හිලාල් අනුකමිටුවල වාර්තාවන්ට අනුව, හිජ්රි 1444 ෂව්වාල් මාසයේ හිලාල් (නවසඳ) 2023 අප්‍රේල් මස 21 වැනි සිකුරාදා දිස්විය.

කොළඹ මහපල්ලිය, සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවේ හිලාල් අංශය හා මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව 1444 ෂව්වාල් මාසයේ පළමු දින අප්‍රේල් 22 වැනිදා බවට ඒකමතිකව ප්‍රකාශ කරන්නේය.

HILAAL SIGHTED:

The Hilaal (Crescent) of the Month of Shawwaal 1444 AH, was sighted on Friday, 21st of April 2023, as per the reports of the Hilaal Subcommittees appointed around the country.

The Colombo Grand Mosque, ACJU Hilaal Division and the Department of Muslim Religious and Cultural Affairs (DMRCA) unanimously declare that the 01st of Shawwaal 1444 is on the 22nd of April 2023.

ZAM Maths Academy இனால் நடாத்தப்படவிருக்கும் 2023 இல் க.பொ.த சா/த  பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள் வகுப...
05/02/2023

ZAM Maths Academy இனால் நடாத்தப்படவிருக்கும் 2023 இல் க.பொ.த சா/த பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள் வகுப்புக்கள்

அலகுரீதியாக கடந்த கால வினாக்களை உள்ளடக்கியதாக zoom தொழிநுட்பத்தின் ஊடாக முற்றிலும் PowerPoint and Smart Board தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறவிருக்கும் இவ்வகுப்பு எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை இடம்பெறும்.

8 வகுப்புகளுக்கு 500/- மட்டுமே அறவிடப்படும். கட்டணங்களை eZ Cash அல்லது வங்கி முறை மூலம் அனுப்பலாம். கட்டணம் அனுப்பும் விபரங்கள் வட்சப் ஊடாக வழங்கப்படும்.

எமது ZAM Maths Academy வட்சப் குழுவில் இணைந்து கொள்ள கீழ்வரும் லிங்க் கூடாக இணைந்து கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களை 0772240822 என்ற எண்ணுக்கு மாணவர் பெயர், பாடசாலை, மாவட்டம் என்பதை வட்சப் ஊடாக அனுப்புவதன் மூலம் இணைந்து கொள்ள முடியும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (2022.12.09) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது.கல்வியமைச்சு
08/12/2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (2022.12.09) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது.
கல்வியமைச்சு

எரிபொருள் விலை குறைப்பு.2022.10.17இன்று 9.00 pm முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ...
17/10/2022

எரிபொருள் விலை குறைப்பு.
2022.10.17

இன்று 9.00 pm முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் விலை
Octane-92 40/- குறைவு (புதிய விலை 370/-)
Auto Diesel 15/- குறைவு (புதிய விலை 415/-)

- கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை - யு.எல்.அலி. ஜமாயில்அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட ...
16/10/2022

- கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை -

யு.எல்.அலி. ஜமாயில்

அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வன். MM றிஹான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கதையும், பெண்களுக்கான 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வி MNF ஸஜா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கதையும் சுவீகரித்துக்கொண்டனர். மேலும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான அஞ்சலோட்டப்போட்டியில் செல்வி. MSF. ஸும்றா, MNF. ஸஜா, JF. லுபாப், NF. மின்ஹா உள்ளிட்ட குழுவினர் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய மட்ட போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றில் சாதனைக்குரிய மைல்கல்லாகும். இந்த வெற்றியாளர்களுக்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய, உடற்கல்வி ஆசிரியர்களான MH. பழீல், UL ஸிபான் ஆகியோரும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான, MAM. றியால், AWM. அஸாட்கான், JA. அல் அஸ்ரார் ஆகியோருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றனர். மேலும், இவர்களுக்கு பல வழிகளிலும் வழிகாட்டல்களையும் உதவிகளையும் பாடசாலையின் அதிபர் MSM. பைஷால் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியாளர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பக்க பலமாயிருந்த அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதன் போது, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள், பள்ளிவாயல் நிர்வாகங்கள், விளையாட்டு கழகங்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனவந்தர்கள், பெற்றோர், பிரதேசத்தின் ஏனைய பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் , சாதனையாளர்களை கெளரவித்து பரிசில்கள் வழங்கி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு.2022.10.01இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கொ நிறுவனம் ஒக்டேன் 92 மற்றும் 95 ர...
01/10/2022

எரிபொருள் விலை குறைப்பு.
2022.10.01

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கொ நிறுவனம் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 40 ஆல் குறைக்கப்பட்டு புதிய ரூபா 410 ஆக விற்பனை செய்யபடும் எனவும் ஒக்டேன் 95 மற்றும் யூரோ 4 ரக பெற்றோலின் 30 ஆல் குறைக்கப்பட்டு புதிய விலை ரூப 510 ஆக விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஏனையவற்றின் விலைகளில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.(பிராந்திய செய்தியாளர்)எமத...
30/09/2022

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

(பிராந்திய செய்தியாளர்)

எமது நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கையாள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிவதற்கான ஆலோசனை செயலமர்வானது இறக்காமம் பிரதேச சபையில், UNDP அணுசரனையில் பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 2022.09.29 ஆம் திகதி வியாழக் கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

கௌரவ தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு கமல் நித்மினி பிரதம அதிதியாகவும் செயலமர்வின் சிறப்பு வளவாளராகவும் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி பாஹிமா மற்றும் நிர்மலா, Asia Foundation செயற்திட்ட உத்தியோகத்தர் ஏ.ஜவாஹிர் ஆகியோர் கலந்துகொண்டார்.

01. உள்ளுர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல்

02. உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்

03. உள்ளுாராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல்

மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால நெருக்கடி நிலையில் இருந்து மீளும் வகையில் அதற்கு பங்களிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் அல்லது திட்டங்களின் பட்டியலை, பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இனம்காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை தெரிவு செய்யப்பட்ட துறைசார் திட்டமிடல் குழுவுடன் இணைந்து முன்னுரிமைப்படுத்தல் மற்றும் சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு " உள்ளுர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் " ( LDSP ) கீழ் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நிதி நவம்பர் 2022 மாதப் பகுதில் " உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் " (LDSP Project) கீழ் 14-35 மில்லியன் ரூபாய் வரையான நிதியை இறக்காமம் பிரதேச சபை பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டப் போட்டியில் இறக்காமம் பிரதேச சபை அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களில் 100 புள்ளிகளைப் பெற்ற 05 சபைகளுள் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டு 17 மில்லியன் ரூபாவினை பரிசாகப் பெற்று அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இச்செயலமர்வில், கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி Dr. எம்.ஐ.எம். நிஜாமுடீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் ஆகியோர் உட்பட அம்பாரை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், துறைசார் நிபுனர்கள் மற்றும் சனசமூக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

முழுநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படும் 14 வேலைத்திட்டங்களுக்கு உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டம்" (LDSP Project) இன் நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப் படவுள்ளது.

27/09/2022

பாலத்துரை தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க, ஜப்பானில் இருந்து ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு.

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில்,, பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
27.09.2022

ICC T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
16/09/2022

ICC T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19, 2022 அன்று பாடசாலை விடுமுறையாகக் கருதப்படுகிறது19 செப்டம்பர் 2022 அரச சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு...
15/09/2022

செப்டம்பர் 19, 2022 அன்று பாடசாலை விடுமுறையாகக் கருதப்படுகிறது

19 செப்டம்பர் 2022 அரச சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நாளை அரசு பாடசாலை மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை களுக்கும் விடுமுறை நாளாகக் கருதுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.என்.ரணசிங்க செயலாளர்

கல்வி அமைச்சு

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக குறைத்தல் தொடபான பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூ...
14/09/2022

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக குறைத்தல் தொடபான பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறைகளில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம்.2022.09.14இலங்கையின் சுற்ற...
14/09/2022

சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறைகளில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம்.
2022.09.14

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நேபாள தூதுவர் பாசு தேவ் மிஷ்ரா கலந்து கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை இரு நாட்டு இளைஞர், யுவதிகளுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்க இளைஞர் பரிமாற்றத் திட்டமொன்றை (Youth Exchange Program) நடைமுறைப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.

அதற்கான அடுத்த கட்டப் பணிகள் இந்நாட்டு வெளியுறவு அமைச்சுக்கும் நேபாள அரசாங்கத்துக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ளன.

14/09/2022

ஐந்தாண்டு விடுமுறை திட்டம் – ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பொருந்தாது !

அரச ஊழியர்கள் ஐந்தாண்டு கொடுப்பனவு இல்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் நிபுணர்கள் போன்ற பிரிவினருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களில் உள்ள மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையை அறிமுகம் செய்த ஜனாதிபதி!• உணவுப் பாதுகாப்பு...
13/09/2022

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையை அறிமுகம் செய்த ஜனாதிபதி!

• உணவுப் பாதுகாப்புக்காக 07 குழுக்கள்

• போஷாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், உணவுப் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை

• விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள்

• பெரும்போகத்தில் பெரும் விளைச்சலைப் பெற தேவையான விவசாயப் பொருட்கள்

• 2025 ஆம் ஆண்டுக்குள் உணவுத் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய திட்டம்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்காக சமூக – பொருளாதார சூழலை உருவாக்குவதே இதன் எதிர்பார்ப்பாகும்.

“உணவு இன்மையால் எந்தவொரு குடிமகனும் பட்டினியால் வாடக்கூடாது” மற்றும் “எந்தவொரு குழந்தையும் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கக்கூடாது” என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

இந்தப் பொறிமுறை ஏழு குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குச் சபை இயங்குகிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான தேசிய கூட்டுப் பொறிமுறை, ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பிரதமரின் செயலாளரின் தலைமையில் இயங்கும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான ஒருங்கிணைந்த மாகாண பொறிமுறை, மாகாண ஆளுநர்கள் தலைமையில் இயங்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் செயற்படும். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான பிரதேச கூட்டுப் பொறிமுறை பிரதேச செயலாளர்களின் தலைமையில் செயற்படுத்தப்படும்.

14,022 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தலா, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், குடும்ப நல செவிலியர், அருகில் உள்ள பாடசாலை அதிபர் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் இருவர் அடங்களாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

அதன் மூலம் கிராம அலுவலர்கள் பிரிவுகளில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, வறுமையை ஒழித்து, போஷாக்குக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்து, பிரதேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்து, அப்பகுதியில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில், தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் முதல் கிராம உத்தியோகத்தர் வரை உள்ளடங்கியுள்ள முழுமையான அரச துறையுடன், தனியார் துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுனர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 3.6 மில்லியன் மெட்ரிக் டொன்கள், வருடாந்த வெங்காயத் தேவையில் 50% மற்றும் உருளைக்கிழங்குத் தேவையில் 35% என்பவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் வருடாந்தம் தேவைப்படும் 250,000 மெட்ரிக் டொன் சோயாவில் 20% வீத்தை, 2025 ஆம் ஆண்டளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யவும், காய்ந்த மிளகாய்த் தேவையில் 20% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் திட்டமிடக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் குரக்கன், பயறு, கௌபி, எள்ளு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் முழுத் தேவையை உற்பத்தி செய்யவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான கால்நடைகளின் மேம்பாட்டுக்காக வருடாந்தம் தேவைப்படும் 650,000 மெட்ரிக் தொன் சோளத்தில், 80% வீதத்தை இந்த ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், இலங்கைக்கு அவசியமான மொத்த சோளத் தேவையை உள்நாட்டில் பயிரிடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளம் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தேவையான 230,000 மெட்ரிக் டொன் இரசாயன உரத்தையும், 100,000 மெட்ரிக் டொன் TSP மற்றும் 182,000 மெட்ரிக் டொன் MOP, ஆகியவற்றை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் வசதிகளுடன் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய உணவு உற்பத்திக்குத் தேவையான உரத்தை தனியார் துறையினர் மூலம் இறக்குமதி செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 50 கிலோகிராம் யுரியா உரத்தை தற்போது சந்தையில் உள்ள விலையைவிட குறைவாக பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்குத் தேவையான இரசாயன மற்றும் இயற்கை உரங்கள், கிருமி நாசனிகள், விதைகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்வதற்கும் தற்போது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் கால்நடைத் துறை உற்பத்தி அளவை, 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட உற்பத்தி அளவுக்குக் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு தேவையான விதைகள், இரசாயனப் பொருட்கள், இரசாயன உரங்கள், கால்நடை தீவனம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட விவசாயத்துக்கு அவசியமான அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் வழங்கப்படும்.

இந்த உற்பத்தி இலக்குகளை அடைவதற்கு, நவீன நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உரப் பயன்பாடு குறித்த அரசாங்கத்தின் கொள்கையை பிரபலப்படுத்தி அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், விவசாயம் மற்றும் வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதம செயலாளர்கள், வங்கிகள், கூட்டுத்தாபனத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பிரித்தானிய மாகாராணியின் இறுதிக் கிரியை இடம்பெறும் செப்டம்பர் 19 ஆம் திகதி விசேட அரச விடுமுறையாக பிரகடனம்.2022.09.13பிரி...
13/09/2022

பிரித்தானிய மாகாராணியின் இறுதிக் கிரியை இடம்பெறும் செப்டம்பர் 19 ஆம் திகதி விசேட அரச விடுமுறையாக பிரகடனம்.
2022.09.13

பிரித்தானியாவின் மகாராணியாகவும் பொதுநலயவாய நாடுகளின் தலைவராகவும் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் 1972 ஆம் ஆண்டு வரை இலங்கையின் மகாராணியாகவும் இருந்த 2ஆம் எலிசபத் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் அதற்காக இலங்கையில் குறித்த தினத்தை ஏற்கனவே துக்கதினமாக பிரகடனம் செய்திருந்தனர்.

தற்போது குறித்த தினத்தை அரச அலுவலகங்களுக்கான பொது விடுமுறை தினமாகவும் பிரகடனம் செய்து பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

2022,2023 ஆம் ஆண்டுகளில் தரம் 5 மற்றும் க.பொ.த சாதாரண தரம் ஆகிய பரீட்சைகள், அத்தியவசிய கற்றல் உள்ளடக்கங்களை அடிப்படையாக்...
12/09/2022

2022,2023 ஆம் ஆண்டுகளில் தரம் 5 மற்றும் க.பொ.த சாதாரண தரம் ஆகிய பரீட்சைகள், அத்தியவசிய கற்றல் உள்ளடக்கங்களை அடிப்படையாக்க் கொண்டே இடம்பெறும்.

-கல்வி அமைச்சு-

12/09/2022

தாய் நாட்டை ஆசியாவின் உச்சத்திற்க்கு உயர்த்திய கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்ட சம்பியன்கள் நாளை(13) வாகனப் பேரணியாக கொழும்புக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
2022.09.13

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது.

நாளை காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை வரவேற்று உற்சாகப்படுத்துமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டிருந்தது.

இதன்மூலம் இலங்கை அணி 6 தடவைகள் ஆசியக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணி 63:53 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு-

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு Smart Board வழங்கிவைப்பு.2022.09.12கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்களில் குறுகிய வ...
12/09/2022

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு Smart Board வழங்கிவைப்பு.
2022.09.12

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்களில் குறுகிய வேண்டுகோளின் பேரில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கான சீனத் தூதுவரினால் கிழக்கு மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு Smard Board வழங்கி வைக்கும் நிகழ்வு ஆளுநரின் திருகோணமலை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் Smart Board களை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

வழங்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பட்டியல்:

1▪️Trincomalee zone - T/T/Peruntheru Vigneswara Maha Vidyalaya
2▪️Trincomalee North zone - T/Tn/ Sinhapura Vidyawardana Vidyalaya
3▪️Trincomalee North zone - T/Tn/ Ethabendiwewa Vidyalaya
4▪️Kanthale zone - T/Kn/ Kanthale Madya maha Vidyalaya
5▪️Muthur zone - T/Mu/ Barathi Maha Vidyalaya
6▪️Kinniya zone - T/Kin/ Al-Athan Maha Vidyalaya
7▪️Batticaloa zone - Bt/Bt/ Thannamunai St.Joseph College
8▪️Paddiripou zone - Bt/Pd/ Kurumanvely Sivasakthy Maha Vidyalaya
9▪️Batticaloa West zone - Bt/Bw/ Kokkadicholai RKM Maha Vidyalaya
10▪️Kalkudah zone - Kalkudah Siri Seelalankara Pirivena/ Kalkudah Sinhala Maha Vidyalaya
11▪️Kalkudah zone - Bt/Kk/ Chenkalady Vivekananda Vidyalaya
12▪️Batticaloa Central zone - Bt/Bc/ Millath Girl’s High School
13▪️Ampara zone - Am/Am/ Galapitagala Maha Vidyalaya
14▪️Ampara zone - Am/ Panama Maha Vidyalaya
15▪️Mahaoya zone - Am/ Mh/ Nuwaragalathenna Maha Vidyalaya
16▪️Sammanthure zone - Km/ St/ As-Siraj Maha Vidyalaya
17▪️Kalmune zone - Km/Km/ Pulavarmani Saturdeen Maha Vidyalaya
18▪️Dehiattakandiya zone - Am/ Dk/ Dolakanda Maha Vidyalaya
19▪️Thirukkovil zone - Km/Tk/ Thirukkovil MMT Maha Vidyalaya
20▪️Akkarapattu zone - Km/ Ak/ Al- Kalam Maha Vidyalaya

ஆளுநரின் ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாணம்.

12/09/2022

கல்முனையில் டியூட்டரிகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை..!
2022.09.12

கட்டணம், நேர காலம் தொடர்பிலும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்ற முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இதன்படி இப்பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையம் ஒன்றினை நடத்துவதாயின் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை கல்முனை மாநகர சபை வெளியிட்டியிருப்பதுடன் இவ்விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வியாபார உத்தரவுப்பத்திர அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

👉தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடல் அனர்த்த பாதுகாப்பு எல்லையிலிருந்து 100 மீற்றருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருப்பதோடு அனர்த்தங்கள் ஏற்படும்போது மாணவர்கள் இலகுவாக வெளியேறக்கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

👉பிரத்தியேக வகுப்புக்கள் யாவும் காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரையும் பிற்பகல் 3.15 மணி முதல் பிற்பகல் 6.15 மணி வரையுமே நடாத்தப்பட வேண்டும்.

👉வகுப்புக்கள் நடாத்தப்படுகின்ற கட்டடத்தின் கூரையானது ஓடு வேயப்பட்டதாகவும் வெப்பமேற்றலை தவிர்க்கக் கூடிய அமைப்பில் அமைந்திருத்தலும் வேண்டும்.

👉குறித்த கட்டடம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக திறந்த காற்றோட்டம் உள்ளதாகவும் அதன் உட்புறம் சுகாதார நடைமுறையினை பின்பற்றியதாகவும் கற்றல் நடவடிக்கைகளுக்குரிய சுவாத்தியமான சூழலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதுடன் டெங்கு நோய் பரவலுக்கு இடமளிக்காத வகையில் சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும்.

👉மாணவர்களுக்கான கதிரை, மேசைகள் வயது வித்தியாசத்திற்கேற்ப சொகுசானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும்.

👉ஆண், பெண் இருபாலாருக்குமுரிய மலசலகூட வசதிகள் வெவ்வேறாக அமையப் பெற்றிருத்தல் வேண்டும். மலசல கூட வசதியானது 25 மாணவர்களக்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

👉தேவை ஏற்படின் கொவிட்-19, மற்றும் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உட்புறமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளையும், அதன் கீழான வர்த்தமானி அறிவித்தல்களையும், சுகாதார விதிகளையும் அதனோடு தொடர்புபட்ட உப விதிகளையும் பின்பற்றல் வேண்டும்.

👉மாணவர்களுடைய வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகளை பாதையோரங்களில் நிறுத்தி வைத்து பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது. தேவை ஏற்படின் தங்களுடைய வளாகத்தினுள்ளேயே வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.

👉கல்விச் செயற்பாடுகள் எவையும் சுற்றியுள்ள அயலவர்களுக்கு ஒருபோதும் இடையூறாக அமையக் கூடாது.

👉பாடசாலையில் பரீட்சை மற்றும் தவனை விடுமுறை வழங்கப்பட்டு, கட்டாயம் ஆகக்குறைந்தது ஒரு வாரகாலத்திற்கு பின்னரே தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

👉மாதத்தில் வரும் எந்தவொரு பொது விடுமுறை தினத்திலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளைகளிலும் வகுப்புக்களை நடாத்துவது கூடாது.

👉ஒரு பாடம் ஆகக்குறைந்தது 50 நிமிடங்களுக்கு குறையாதவாறு நடாத்தப்பட வேண்டும்.

👉50 நிமிடங்களுக்கு குறையாதவாறு நடாத்தப்படும் ஒரு பாட வேளைக்கான கட்டணமாக தரம் 01 முதல் தரம் 05 வரையான வகுப்புக்களுக்கு 40 ரூபாவும் தரம் 06 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்புக்களுக்கு 50 ரூபாவும் க.பொ.த. உயர்தர வகுப்புக்களுக்கு 80 ரூபாவுமே அறவிடப்பட வேண்டும். இத்தொகையானது குறைக்கலாமே தவிர கூடுதலாக அறவிட முடியாது.

👉கல்வி நிலையங்களில் சேர்வதற்காக மாணவர்களிடம் அனுமதிக் கட்டணம் அறவிடப்படக் கூடாது.

👉கற்பிக்கின்ற பாடங்களின் நேர அட்டவணைகள், ஆசிரியர்களின் விபரங்கள் என்பன உறுதிப்படுத்தப்பட்டு கல்முனை மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

👉கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்தினை நடத்துனர் வேறு நபரிடம் வாடகைக்கு பெற்றிருந்தால் 02 வருட கால ஒப்பந்தம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியை அனுமதிக்காக சேர்த்து இணைக்கப்படும் ஆவணங்களுடன் இணைத்து மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

👉குறித்த கல்வி நிறுவனம் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்படும் பொருட்டு வியாபார உரிமக் கட்டணங்கள், சோலைவரி, திண்மக் கழிவு முகாமைத்துவ சேவைக் கட்டணம், விளம்பரக் கட்டணம், பரிசோதனைக் கட்டணம் என்பவற்றை முறையாக செலுத்தி அனுமதிக்கான சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.

👉மேற்கூறப்பட்ட அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதனை கல்முனை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வருமான பரிசோதகர்கள் களப்பரிசோதனை அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்திய பின்னரே குறித்த கல்வி நிறுவனத்திற்கான அனுமதியும், சான்றிதழும் வழங்கப்படும்.

👉தனியார் கல்வி நிறுவனங்களை கொண்டு நடாத்துவது தொடர்பாக, கல்முனை மாநகர சபையினால் அவ்வப்போது வெளியிடப்படும் சுற்று நிரூபங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்- என்பனவே அவ்விதி முறைகளாகும்.

-முதல்வர் ஊடகப் பிரிவு

12/09/2022

#காதலியை பார்க்க #பேருந்து ஒன்றை கடத்திச் சென்ற 15 வயது சிறுவன்: #பிலியந்தலையில் சம்பவம்!

பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண தமது பேருந்துகளில் நேற்று (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​அப்போது பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்கு பொலிஸார் உடனடியாக தலையிட்டு இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்தனர்.

பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளை அவதானிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ - பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, ​​கடத்தப்பட்ட பேருந்துதான் சம்பந்தப்பட்ட பேருந்து என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.

விரைந்து செயல்பட்ட பொலிஸார், பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர்.

பின்னர், அவர் தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.

அப்போது நடந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் ஆனால் அப்போது பேருந்துகள் இல்லாததால், பல பேருந்துகளில் ஏறி சோதனை செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் ஹோமாகம பகுதியில் பேருந்து ஒன்றை கடத்திச் சென்ற சந்தேகநபர் மொரகஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலியை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

08/09/2022

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:
1. ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - நிதி
3. லசந்த அழகியவன்ன - போக்குவரத்து
4. திலும் அமுனுக - முதலீட்டு ஊக்குவிப்பு
5. கனக ஹேரத் - தொழில்நுட்பம்
6. ஜானக வக்கும்புர - மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள்
7. செஹான் சேமசிங்க - நிதி
8. மொஹான் டி சில்வா - விவசாயம்
9. தேனுக விதானகமகே - நகர அபிவிருத்தி, வீடமைப்பு
10. பிரமித பண்டார - பாதுகாப்பு
11. ரோஹண திஸாநாயக்க - விளையாட்டு, இளைஞர் விவகாரம்
12. அருந்திக பெனாண்டோ - நகர அபிவிருத்தி, வீடமைப்பு
13. விஜித பேருகொட - பிரிவெனா கல்வி
14. லொஹான் ரத்வத்தே - பெருந்தோட்ட கைத்தொழில்
15. தாரக பாலசூரிய - வெளிவிவகாரம்
16. இந்திக அநுருத்த - மின்சக்தி, வலுசக்தி
17. சனத் நிஷாந்த - நீர் வழங்கல்
18. சிறிபால கம்லத் - பெருந்தெருக்கள்
19. சாந்த பண்டார - வெகுசன ஊடகம்
20. அநுராத ஜயரத்ன - நீதி, சிறைச்சாலைகள்
21. எஸ். வியாழேந்திரன் வர்த்தகர்
22. சிசிர ஜயகொடி - சுதேச மருத்துவம்
23. பியல் நிஷாந்த - மீன்பிடி
24. பிரசன்ன ரணவீர - சிறு, நடுத்தர தொழில் முயற்சி
25. டீ.வி. சானக - வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு
26. டீ.பி. ஹேரத் - கால்நடை அபிவிருத்தி
27. ஷசீந்திர ராஜபக்ஷ - நீர்ப்பாசனம்
28. சீதா அரம்பேபொல - சுகாதாரம்
29. காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதாரம்
30. அசோக பிரியந்த - உள்நாட்டு அலுவல்கள்
31. அரவிந்த் குமார் - கல்வி
32. கீதா குமாரசிங்க - பெண்கள், சிறுவர் விவகாரங்கள்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் - கிராமிய வீதி அபிவிருத்தி
34. சுரேன் ராகவன் - உயர் கல்வி
35. டயானா கமகே - சுற்றுலா
36. சாமர சம்பத் தஸநாயக்க - ஆரம்பக் கைத்தொழில்
37. அனூப பஸ்குவல் - சமூக வலுவூட்டல்

22/07/2022

புதிய அமைச்சரவை

1. தினேஷ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
2. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்
3. சுசில் பிரேமஜயந்த- கல்வி அமைச்சர்
4. பந்துல குணவர்த்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்
5. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதாரம், நீர் வழங்கல்
6. மஹிந்த அமரவீர- விவசாய, வனஜீவிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு
7. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
8. ஹரின் பெர்ணான்டோ- சுற்றுலா மற்றும் காணி
9. ரமேஷ் பத்திரன- பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்
10. பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி
11. அலி சப்ரி- வெளிநாட்டு அலுவல்கள்
12. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்
13. காஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி
14. நசீர் அஹமட்- சுற்றுச்சூழல்
15.ரொஷான் ரணசிங்க- விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்
16. மனூஷ நாணயக்கார- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
17. டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
18. நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு

2019 மற்றும் 2020ம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றியோருக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.22.0...
21/07/2022

2019 மற்றும் 2020ம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றியோருக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

22.07.2022 அன்று வர்த்தமானி வெளியிடப்படும்.

Online Application : (https://ncoe.moe.gov.lk/ncoe/)

21/07/2022

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் அறிவித்தார்.

பிரதமரின் செயலாளராக கடமை புரிந்த சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தர் சமன் ஏக்கநாயக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ...
21/07/2022

பிரதமரின் செயலாளராக கடமை புரிந்த சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தர் சமன் ஏக்கநாயக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Address


Telephone

+94772240822

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZAM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZAM News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share