Tamil Quick News

  • Home
  • Tamil Quick News

Tamil Quick News உள்நாட்டு, வெளிநாட்டு, விளையாட்டு செ?

📰 Tamil Quick News 🇱🇰ஸஹ்ரானின் சகோதரனுக்கு வெடிமருந்துகள் விநியோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டார்.!உயிர்த்த ஞாயிறு தாக்...
30/04/2021

📰 Tamil Quick News 🇱🇰

ஸஹ்ரானின் சகோதரனுக்கு வெடிமருந்துகள் விநியோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டார்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

💁‍♂️ Join our WhatsApp Group:- https://chat.whatsapp.com/I6u9BBucTpB9xTbaD11mFI

💁‍♂️ Join our Telegram Channel:- https://t.me/tqnra

💁‍♂️ Like us on Facebook:- https://www.facebook.com/Tamil-Quick-News-106378208216243/

💁‍♂️ Follow us on Instagram:- https://instagram.com/tamil_quick_news?igshid=ssz1xrgsx0w

💁‍♂️ Follow us on Twitter:- https://twitter.com/tamil_quick?s=09

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - இராணுவத் தளபதியின் வ...
30/04/2021

📰 Tamil Quick News 🇱🇰

முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - இராணுவத் தளபதியின் விளக்கம்!

கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்படும் பகுதிகள் அபாயமுடையவை என்று சுகாதார தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டால் அவ்வாறான பிரதேசங்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தனிமைப்படுத்தப்படும். ஆனால் முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் , எனவே மக்கள் சகல பொருட்களையும் கொள்வனவு செய்து அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , அதிகூடிய தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர். அடுத்து வரும் வாரங்களில் இதனை விடவும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும். இன்று நாடு அவதான நிலையிலேயே உள்ளது. மிக முக்கியத்துவமுடைய கட்டத்தில் நாடு காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் எவ்வகையிலேனும் நாம் இதனை வெற்றி கொள்வோம். புத்தாண்டின் முன்னர் மக்களை பாதுகாப்புடன் செயற்படுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினோம். அதனையே இப்போதும் கூறுகின்றோம்.

ஏதேனுமொரு பிரதேசத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று இனங்காணப்பட்டால் உடனடியாக அந்த பிரதேசத்தையும் , அதற்கு அருகிலுள்ள பிரதேசங்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார தரப்பினரால் அறிவித்தல் கிடைக்கப் பெற்றவுடனேயே துரிதமாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் போது முன் அறிவித்தல்கள் எவற்றையும் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே ஏதேனுமொரு பிரதேசத்தை தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் துரிதமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைப் போன்று முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

📰 Tamil Quick News 🇱🇰அரசின் முக்கிய அறிவிப்பு: திருமணம் உள்ளிட்ட அனைத்து ஒன்றுகூடல்களுக்கும் தடை!திருமண நிகழ்வுகள் உள்ளி...
30/04/2021

📰 Tamil Quick News 🇱🇰

அரசின் முக்கிய அறிவிப்பு: திருமணம் உள்ளிட்ட அனைத்து ஒன்றுகூடல்களுக்கும் தடை!

திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விதமான நிகழ்வுகளையும் நடத்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வார காலத்திற்கு நிகழ்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

நாட்டில் கொவிட் தொற்று மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

💁‍♂️ Join our WhatsApp Group:- https://chat.whatsapp.com/I6u9BBucTpB9xTbaD11mFI

💁‍♂️ Join our Telegram Channel:- https://t.me/tqnra

💁‍♂️ Like us on Facebook:- https://www.facebook.com/Tamil-Quick-News-106378208216243/

💁‍♂️ Follow us on Instagram:- https://instagram.com/tamil_quick_news?igshid=ssz1xrgsx0w

💁‍♂️ Follow us on Twitter:- https://twitter.com/tamil_quick?s=09

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰மருத்துவமனைகளில் இடமில்லை - வீட்டிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி - இலங்கையில் ஆபத்தான நிலை!மேல் மாகாண...
30/04/2021

📰 Tamil Quick News 🇱🇰

மருத்துவமனைகளில் இடமில்லை - வீட்டிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி - இலங்கையில் ஆபத்தான நிலை!

மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பியுள்ளதாக மேல் மாகாண சுகாதாரத் துறை செயலாளர் காமினி தர்மசேன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தற்போது ஆபத்தான சூழ்நிலை என்றும், மறைக்க எதுவும் இல்லை என்றும் கூறினார்.

“கொரோனா நோயாளிகள் வெளியேறினால் மட்டுமே மருத்துவமனைகளில் இடத்தை கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.”என்றும் அவர் கூறினார்.

இதேவேளை வைத்தியசாலையில் இடம் இல்லாத காரணத்தினால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

💁‍♂️ Join our WhatsApp Group:- https://chat.whatsapp.com/I6u9BBucTpB9xTbaD11mFI

💁‍♂️ Join our Telegram Channel:- https://t.me/tqnra

💁‍♂️ Like us on Facebook:- https://www.facebook.com/Tamil-Quick-News-106378208216243/

💁‍♂️ Follow us on Instagram:- https://instagram.com/tamil_quick_news?igshid=ssz1xrgsx0w

💁‍♂️ Follow us on Twitter:- https://twitter.com/tamil_quick?s=09

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் - ஜனாதிபதி திட்டவட்டம்! கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், வி...
30/04/2021

📰 Tamil Quick News 🇱🇰

முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் - ஜனாதிபதி திட்டவட்டம்!

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல், இரசாயன பசளைகளைப் பயன்படுத்துவதை, முழுமையாக இல்லாதொழித்த உலகின் முதல் நாடாக, இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் என்பனவற்றை பயன்படுத்தல் மற்றும் இறக்குமதி என்பனவற்றின் மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Join our WhatsApp Group:-
https://chat.whatsapp.com/I6u9BBucTpB9xTbaD11mFI

Tamil Quick News

📰 Tamil Quick News 🇱🇰நீராடும் போது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்து சென்றது - சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்!15 வயது சிறு...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

நீராடும் போது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்து சென்றது - சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்!

15 வயது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சாம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்திகுளம் வாவியில் நேற்று (27) நீராட சென்ற மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவனே இவ்வாறு முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, ஹசலக பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 43 வயது தந்தை மற்றும் 13 வயது அவரது மகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பின்னர் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையை தேடி பணி தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰 இ.தொ.காவின் மே தின பணம் கல்விக்காக செலவிடப்படும் - ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

இ.தொ.காவின் மே தின பணம் கல்விக்காக செலவிடப்படும் - ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேதின நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. அதற்காக பல இடங்களில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்களை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதற்காக நாம் பாரிய அளவில் நிதியினை செலவிட்டு வருகிறோம். ஆகவே, இனிவரும் காலங்களில் மே தினத்திற்காக செலவிடும் பணத்தினை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்போவதாக தோட்ட வீடமைப்பு மற்று சமூக உட்கட்டமைப்புகள் வசதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை ஊடுகு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எத்தனையோ மே தினங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகின்றது.

அவ்வாறான சூழ் நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்து பிள்ளைகள் கல்வியினை தொடர முடியாது உள்ளனர். பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்தற்கு வாய்ப்பிருந்தும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் பொருளாதார கஷ்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே, அவற்றிக்கு தீர்வு காண வேண்டும். ஆகவே, கடந்த காலங்களைப் போல் அல்லாது உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது. அதற்காகத் தான் நீங்கள் எனக்கு அங்கிகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிப்பேன்.

கடந்த காலங்களில் தோட்டத்தில் உள்ள தலைவிகள் காங்கிரஸ் மறந்த நிலையே காணப்பட்டது இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது. காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம் அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளிர் தினம் நேற்று (27) பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் மற்றும் விவாத போட்டிகளும் இடம்பெற்றன.

இதன்போது வருகை தந்திருந்த இ.தொ.கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு அமைச்சரினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதுபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰ஐந்து தடவை தாக்குதலுக்கு இலக்கானேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!விடுதலை புலிகளால் நான் ...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

ஐந்து தடவை தாக்குதலுக்கு இலக்கானேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

விடுதலை புலிகளால் நான் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்கானேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நான் எல்லா விதமான அவமானங்களையும், தடுமாற்றங்களையும் அனுபவித்து இருக்கிறேன். எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான மரணங்களையும் சந்தித்து இருக்கிறேன்.

1971, 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை விடுதலை புலிகளால் தாக்கப்பட்டேன். அனைத்து தாக்குதல்களில் இருந்தும் தப்பித்தேன்.

ஆனால் என்னை தாக்கிய விடுதலை புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். சிலர் சயணைட் உண்டு இறந்தனர். ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவ்வாறானவர்களுக்கு நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தேன். அவர்களது குடும்பத்தை பாதுகாத்தேன்.

ஆனால் இந்த சமுதாயத்தின் நிலைமைக்கு பொறுப்புக்கூறல் அடிப்படை என்பதை நாம் அறிவோம். அதேபோல் இந்த ஈஸ்டர் தாக்குதலின் சூழ்நிலைகள் தொடர்பாக என்னைப் பற்றிய விசாரணை கோட்பாட்டின் படி நடந்த ஒன்று. சில சமயங்களில் அரசியல் வெறுப்பில், இந்த சூழ்நிலைகளில் என்னை பற்றி நிறைய தவறான விளக்கங்கள் இருந்தன.

இந்த அவமானங்களை பொறுத்துத்தான் ஆகவேண்டும்.புத்தர், யேசு போன்றவர்களும் துன்பத்தையும், பழிச் சொற்களையும் தாங்கிக் கொண்டு இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!அம்பாறை மாவட்டத்தில் மேலும் 2...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன. முதலாம் கட்டத்தில் 18 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இரண்டு கட்டஙங்களிலுள்ள பாடசாலைகள் ஏக காலத்திலேயே அமுலுக்கு வரும் வகையில் செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

மத்திய அமைச்சின் உயரதிகாரிகள் குழுவினர், திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் மாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் கூட்டத்தில் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன.

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰மியன்மாராக மாறிவரும் இலங்கை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!அரசாங்கம் படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்ச...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

மியன்மாராக மாறிவரும் இலங்கை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

அரசாங்கம் படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளி, மியன்மார் நாட்டைப் போல் மாற்றி வருவதாக சிவில் அமைப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அச்சலா செனவீரத்ன எச்சரித்துள்ளார்.

விசாரணை இன்றி தடுப்புக்காவலை பயன்படுத்தும் அரசாங்க கொள்கைக்கு போதுமான எதிர்ப்புக்கள் நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவ மயமாக்காதீர்கள், மக்களின் எதிர்பார்ப்புக்களை அழிக்க வேண்டாம், இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்த வேண்டாம், இனக்குழுக்களிடையே பாகுபாடு காட்ட வேண்டாம், சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுத்தாதீர்கள் என சட்டத்தரணி அச்சலா செனவீரத்ன, "இலங்கை தேசத்தின் நீதி, நேர்மைக்காக மக்களின் போராட்டம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் இடம் பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰 இன்று மாலை வேளையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

இன்று மாலை வேளையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், மேல், மத்திய வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை:

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

TAMIL QUICK NEWS

📰 Tamil Quick News 🇱🇰சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர்! நஸீர் ஹாபிஸை கடுமையாக விமர்சித்...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர்! நஸீர் ஹாபிஸை கடுமையாக விமர்சித்த ஹக்கீம்!

சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவையில்லாமல் வாய் உலம்பி பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். இப்போது தேவையில்லாமல் தலைவரையும் வம்புக்கு இழுக்கின்றார்கள். கட்சியை பல தடவை நீதி மன்றங்களில் நிறுத்தியவர்களும் கட்சிக்குள் உள்ளனர். நான் யாரையும் அவசரப்பட்டு விரட்டுவதில்லை. அவர்களை அவர்களே விரட்டபடக்கூடிய வழியை தேடிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. இப்போது புதிய எஜமான்களை கண்டதும் அதையெல்லாம் மறந்து விட்டார்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

Tamil Quick News

📰 Tamil Quick News 🇱🇰சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை❔சூயஸ் கால்வாயில் சிக்கியுள...
28/03/2021

📰 Tamil Quick News 🇱🇰

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை❔

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பலால் அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் சூய்ஸ் கால்வாய் பாதையைப் கடல் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் சிக்கிக் கொண்டுள்ளது. குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1869 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சர்வதேச வர்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

400 மீட்டர் நீளமும் 2 இலட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினர் இருக்கின்றனர்.

இந்நிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு 2,900 கோடி ரூபா அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவதாக மேயர்ஸ்க் ஒஹாயோ எனும் சரக்குக் கப்பலின் தலைமைப் பொறியாளர் ஜோ ரெனால்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு கப்பல் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்பதால், உலகெங்கும் உள்ள கப்பல்களின் போக்குவரத்து அட்டவணையில் தாக்கம் உண்டாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இன்னும் அதிக அளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், தம்மாலோ தமது குழுவினராலோ அருகில் இருக்கும் கப்பல்களின் குழுவினருடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டுகளையும் மீறி எம்.வி. எவர் கிவன் கப்பலில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த 25 ஊழியர்களின் மன நிலையை நினைத்து கவலைப்பட்டார்.

"கடலோடிகளாக நாங்கள் எண்ணற்ற விவகாரங்கள் குறித்து புகார் கூறுவோம். ஆனால், கடலோடிகள் சிலர் சிக்கி இருக்கும்போது, வேறு சில கடலோடிகள் நிலையை சரி செய்ய இரவு பகலாக முயற்சிக்கிறார்கள். நாங்கள் பலரும் அந்த நிலையை அனுபவித்துள்ளோம், " என்று அவர் கூறினார்.

தரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.

இந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைந்து வருகின்றன.

உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு சுமார் 2 வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.

பனாமாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் எவர்கிரீன் என்ற கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல், சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://chat.whatsapp.com/Ifqr3ndDNcL178eUGyF1Xf

TAMIL QUICK NEWS

Address


Telephone

+94705222963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Quick News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share