SkyTamil

SkyTamil முக்கிய செய்திகளை விரிவாக விளக்கமாக நம்பதகுந்த ஆதாரங்களுடன் வழங்குதல்.

29/02/2024

தங்கத்துடன் சிக்கினார் அலி சப்ரிகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் புத்தளம் ...
23/05/2023

தங்கத்துடன் சிக்கினார் அலி சப்ரி

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றுக்குச் சென்று திரும்பும் போது மூன்றரை கிலோ தங்கத்தை தன்வசம் வைத்திருந்தார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதாகி உள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண இது விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தகவல் வழங்கினார்.இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் காரணமாகவே 225 உறுப்பினர்களையும் தவறாக சித்தரிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

, , , , , ,
, , ,
, , , ,
, , , , , ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளட...
12/12/2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் சந்திப்பின் போக்கு தொடர்பாக மீண்டும் கூடிக் கலந்துரையாட முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆரம்பித்த குறித்த கலந்துரையாடல் இரவு 10 மணிவரை நடைபெற்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இலங்கை அரசிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், தமிழர் தரப்பு எவ்விதமான நோக்கு நிலையில் அணுகுவது தொடர்பிலும் அதுசார்ந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், கருத்தியலாளர்களுக்கும் இடையே இந்த கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் பா.கஜதீபன், க.அருந்தவபாலன், கே.பி.தவராசா உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகை பிரதம ஆசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி யாழ் பிரதீபன்.

, , , ,
, , ,
, , , ,
, , , , , ,
, , ,

முத்து சிவலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்.மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்ன...
24/11/2022

முத்து சிவலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் 22.11.2022 நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார்.

அன்னார் நுவரெலியா மாவட்டத்தின் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் முத்துகருப்பன் வீராயி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாவார். தனது ஆரம்ப கல்வியை டலோஸ் தமிழ் வித்தியாலயத்திலும் பின்பு உயர் கல்வியை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கற்றவர்.

மனைவி ராஜேஸ்வரி இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

1959 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் சாதாராண ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு தனது தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் ஒருவராக அவர் மறையும்வரை அவருடன் இணைந்து செயற்பட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரசில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன் இறுதியில் அதன் தலைவராகவும் இருந்து ஒய்வுபெற்றவர்.

தனது அரசியலை நுவரெலியா பிரதேச சபையின் நியமன தலைவராக ஆரம்பித்து படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக என தனது அரசியலில் மிகவும் உச்ச நிலையை அடைந்த ஒருவர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜயவர்தன ரணசிங்ஹ பிரேமதாச டி.பி.விஜேதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மகிந்த ராஜபக்ச ஆகிய ஜந்து ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர். மலையக மக்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவர். அது மாத்திரமின்றி பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மலையக மக்களின் சார்பாக பல வெளிநாடுகளில் சென்று தொழிற்சங்க பிரதிநிதியாக கலந்து கொண்டவர். குறிப்பாக ஜெனீவா அமெரிக்கா இஸ்ரேல் இத்தாலி ஸ்பெயின் சுவிச்சர்லாந்து உட்பட பல நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

அரசியலுக்கு அப்பால் பல பொது அமைப்புகளின் தலைவராகவும் செயற்பட்டதுடன் உலக பிரசித்தி பெற்ற நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் ஆயுள் காப்பாளராக நீண்டகாலமாக இருந்து இந்த ஆலய்ஙகளின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (24.11.2022) மாலை 3 மணிக்கு நவரெலியா பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு.

, , , , , , , ,
, , , ,

அமரர் முத்து சிவலிங்கம் இரங்கல் செய்தியில் இராதாகிருஸ்ணன்.மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் முன்னாள் இ.தொ.க...
24/11/2022

அமரர் முத்து சிவலிங்கம் இரங்கல் செய்தியில் இராதாகிருஸ்ணன்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் முன்னாள் இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சரும் எனது அரசியலுக்கு வழிகாட்டியாக நின்று செயற்பட்டவருமான முத்தசிவலிங்கம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தள்ளார்.

அமரர் முத்து சிவலிங்கம் என்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்.அதனை நான் என்றும் மறக்கமாட்டேன். அவர் எனக்கு பல்வேறு நிலைகளிலும் நின்று வழிகாட்டியாக செயற்பட்டவர். என்னுடைய இன்றைய இந்த அரசியல் வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணகர்த்தா என்றால் அது மிகையாகாது.

அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து ஒய்வு பெறுகின்ற வரை அந்த அமைப்பிற்காக முழுமையான நின்று உழைத்தவர். இந்த அமைப்பின் சாதாரண ஒரு உறுப்பினராக உள்வாங்கப்பட்டு பின்பு படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு உயர்த்தப்பட்டு பின்பு நிதிச் செயலாளராக அதன் தலைவராக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஒருவர்.

நான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தலைமைத்துவம் வகிக்கின்ற நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் ஆயள் காப்பாளராக செயற்பட்டு பல்வேறு சிக்கலான நிலையிலும் எங்களுடன் நின்று மிகவும் துணிச்சலாக செயற்பட்டவர்.

அவருடைய பிரிவானது அவருடைய குடும்பத்திற்கு மாத்திரம் அன்றி இந்த முழு மலையக சமூகத்திற்குமே ஒரு பெரும் இழப்பாகும். அவர் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் பிறந்து உயர்ந்த நிலையை அடைந்தவர். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

, , , ,
, , , , , ,

22/11/2022

வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் மனோ கணேசன் உரை.

இருளில் மூழ்குமா கொழும்பு?வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 15 மில்லியன் ரூபாய் க...
21/11/2022

இருளில் மூழ்குமா கொழும்பு?

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 15 மில்லியன் ரூபாய் கட்டண நிலுவை தொடர்ந்து செலுத்தப்படாமல் இருக்கும்பட்சத்தில் கொழும்பு நகர வீதி விளக்குகள் மற்றும் வீதி சமிங்கை விளக்குகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்ப நிகழ்வு!
20/11/2022

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி
ஆரம்ப நிகழ்வு!

வடக்கே போன ஜனாதிபதி மலையகத்துக்கும் வருவதாக சொன்னார்வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை எதிர்பார்கிறேன்- மனோ கணேசன்!“இப்போத...
20/11/2022

வடக்கே போன ஜனாதிபதி மலையகத்துக்கும் வருவதாக சொன்னார்
வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை எதிர்பார்கிறேன்- மனோ கணேசன்!

“இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்”, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார்.

வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் "தள வேறுபாடு" களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது.

இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன்.

ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது.

காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே.

ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை.

ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன.

ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும்.

200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும்.

அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள்.

ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

, , , ,
, , , ,
, , , ,
, ,

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் ...
18/11/2022

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது. கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துக்கொண்டனர். ஐநா சபையின் சார்பாக இலங்கையின் ஐநா நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐநா உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன. இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என கொழும்பில் உள்ள ஐநா காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

, , , ,
, , , ,
, , , ,
, ,

18/11/2022

நவம்பர் 19ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யவும்
முன் பதிவு +94 -742 575 214
அனுமதி இலவசம்
Radio, TV, YouTube
எத்தளத்திலும் பிர்காசிக்க முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டல் வகுப்புகள் தொடர்பான அறிமுக கருத்தரங்கு..
20/11/2022 ஞாயிறு
Future Media College இல்
காலை 10 மணிக்கு
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மட்டுமே.
அனுமதி இலவசம்.

மொட்டில் இருந்து விலகி சஜித்துடன் இணைந்த குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெருமன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று என்று ஐக்கிய ம...
14/11/2022

மொட்டில் இருந்து விலகி சஜித்துடன் இணைந்த குழு

ஸ்ரீலங்கா பொதுஜன பெருமன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று என்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளது.

அனுர பிரியதர்சன யாப்பா,சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே,
சந்திம ,ஜயரத்ன ஹேரத், உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு இணைந்துள்ளனர்.

ஹிருனிகா கைது ஹிருனிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் கருவாத்தோட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டமொன்றை மேற...
14/11/2022

ஹிருனிகா கைது

ஹிருனிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் கருவாத்தோட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும்  - ஜனாத...
12/11/2022

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும் - ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் "வறுமை" பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் "உணவின்மை", நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கு பாதுகாப்புத் துறை மற்றும் மூலோபாய திறன்களின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினா...
12/11/2022

நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கு பாதுகாப்புத் துறை மற்றும் மூலோபாய திறன்களின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
ஆயுதப் படைகள் மற்றும் 2030 பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறது என சிலர் கேள்வி எழுப்பலாம், ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம். நாம் பிறந்த போது இந்து சமுத்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது இந்து சமுத்திரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்தை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் ஏற்றுமதி பொருளாதாரத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, பொருட்களைக் கொண்டு செல்வதில் தடைகள் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாம் இருக்கும் சூழல் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலும், பொருட்களை கொண்டு செல்லும் திறனிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஏனைய தரப்பினரின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனினும் அதன்போது, அரசியல் மற்றும் இராஜதந்திர திறன்களைப் போன்று இராணுவத் திறன்களையும் நாம் பயன்படுத்தி எமது குடிவரவு உரிமைகள் மற்றும் தரை மற்றும் கடல் மார்க்கமாக பயணிப்பதற்கான எமது உரிமைகள் என்பன எவ்வகையிலும் தடைபடாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.
சாதாரணப் பல்கலைக்கழகத்தை விட சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சேர்வதையே பலரும் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தமது பாராட்டைத் தெரிவித்ததோடு, சமூக பாடங்களுக்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வளாகத்தை குருநாகலில் ஆரம்பிக்குமாறு நிதியமைச்சிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ஜெராட் டி சில்வா, உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

, , , , , , , , , , , , , , ,

12/11/2022

அரசுடன் இணையும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்!

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அரசுடன் இணைந்து சுகாதார அமைச்சர் பதவியை பொறுப்பேற்க இருப்பதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

, , , , , , , , , , , ,

எரிபொருள் விலை அதிகரிப்பு.நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாயினாலும் மண்ணெண்ணெய் விலை லிட்டர் ஒன...
12/11/2022

எரிபொருள் விலை அதிகரிப்பு.

நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாயினாலும் மண்ணெண்ணெய் விலை லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிபெட்கோ மற்றும் ஐ ஓ சி இரு தரப்பிலும் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

டீசல் லிட்டர் ஒன்றின் புதிய விலை 430 ரூபாயும் மண்ணெண்ணெய் லீட்டரொன்றின் புதிய விலை 365 ரூபாயும் ஆகும்.

, , , ,
, , , , ,
, , , , , ,

அதிக விலைக்கு முட்டை விற்பனை 2 லட்சம் அபராதம்.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த இரண்டு வர்த...
12/11/2022

அதிக விலைக்கு முட்டை விற்பனை 2 லட்சம் அபராதம்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு பலங்கொட நீதிமன்றம் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

, , , , , , , , ,

மரக்கறி விதைகளின் விலையில் புதிய கட்டுப்பாடு!நாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குபடுத்...
09/11/2022

மரக்கறி விதைகளின் விலையில் புதிய கட்டுப்பாடு!

நாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குபடுத்தலொன்று இல்லாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் புலப்பட்டது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது.

இதன்போது மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதில் கமத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.
1997 இல் "விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் கைத்தொழில் தொடர்பான அரச கொள்கை" தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதனை 2021 ஜனவரி 01 வரை வர்த்தமானி ஊடாக வெளியிடாமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், 2003 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதைச் சட்டம் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் காணப்படுவதுடன் அந்த நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலைகளை கட்டுப்படுத்த தேவையான முறைமையொன்று இந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என இங்கு புலப்பட்டது.

இதுவொரு பாரதூரமான நிலைமை என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் உள்நாட்டு மரக்கறி விவசாயிகள் கடுமையான அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் இது ஒரு மாபியாவாகும் என்றும் உறுப்பினார்கள் சுட்டிக்காட்டினர். அதனால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும், அதன்மூலம் உள்நட்டு மரக்கறி விவசாயிகளுக்கு மலிவு விலையில் மரக்கறி விதைகளை பெற்றுக்கொள்ள முடியுமான முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று உள்நாட்டு மரக்கறி விவசாயிகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி விதைகளை வழங்குவதன் விகிதாசாரம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்று இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது. உள்நாட்டு மரக்கறி விதைகளின் தேவையில் அதிகமான அளவு உற்பத்தி செய்வதற்கும் மலிவு விலையில் வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட அரச துறை நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும் ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வது ஒரு சில காலநிலை நிலைமைகளின் கீழ் முடியாமல் உள்ளதால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதாகவும் இதற்குப் பதிலளிக்கும் வகையில் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் உற்பத்தி செய்வதற்கு கடினமான கலப்பு விதை வகைகளை தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். விசேடமாக ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுமார் பத்து வருடங்கள் செல்வதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, விதைகளை உற்பத்தி செய்வதற்குக் காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், விதைகளின் கேள்விக்கு அமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதை வகைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதை வகைகளின் விகிதாசாரங்கள் தொடர்பில் மூன்று வருடகால தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றையும், விதைகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக உரிய சட்டம் மற்றும் கொள்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பரிந்துரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அசோக் அபேசிங்க, புத்திக்க பதிரன, சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, ஜே.சி. அலவதுவல, ஹெக்டர் அப்புஹாமி, மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தில் மேலும் மூன்று நிலையியற் குழுக்கள்!பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலை...
09/11/2022

பாராளுமன்றத்தில் மேலும் மூன்று நிலையியற் குழுக்கள்!

பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு ஆகிய மூன்று குழுக்களுமே இவ்வாறு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ.த சில்வா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோரே இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயதானங்களுடன் மேற்படுகை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்தக் குழு முன்வைக்கும்.

இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி இந்தக் குழுவின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 2023ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதத்திற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குழுநிலை விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஒன்றரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற விவாதங்கள் பி.ப 7.00 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன், இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய டிசம்பர் 08ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கும் நடத்தப்படவுள்ளது.

, , , , , , , , , , , , , , , , , ,

மேலும், நாளாந்தம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பாலை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கு அமைய நாளொன்றுக்கு ஆகக் கூடியது பாடசாலை மாணவ மாணவியர் 500 பேருக்கு அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைக்குக் கொண்டுவரவும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க  குணத்திலக்க மீண்டும் நீதிமன்றத்திற்கு!பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...
09/11/2022

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க மீண்டும் நீதிமன்றத்திற்கு!

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலகவை மீண்டும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சார்பாக ஆஜராவதற்கு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் காத்திருப்பதாகவும் இன்றைய தினத்திலும் அவருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட இருப்பதாகவும் மேலும் அறிய முடிகின்றது.

, , , , , , , , , , , , , , ,
, ,

கடவுச்சீட்டு வழங்குதல் வழமைக்கு.குடிவரவு குயகல்வு திணைக்களத்தில் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு ...
09/11/2022

கடவுச்சீட்டு வழங்குதல் வழமைக்கு.

குடிவரவு குயகல்வு திணைக்களத்தில் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு இன்று முதல் வழமை போல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

, , , ,
, , , ,

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இன்று இடம்பெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசி...
09/11/2022

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இன்று இடம்பெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தெருவாகி இருக்கிறது.

, , ,
, , , , , , , , , ,

வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த ...
08/11/2022

வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்

இன்று ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடபகுதியில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது ஆனால் அந்த போதை பொருள் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,

எனவே கடற்தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தமது படகுகளில் ஏதாவது போதை பொருள் கடத்தப்படுவது தொடர்பில் தகவல் இருந்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்

அத்தோடு மீனவர்களாகிய நீங்கள் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போகக்கூடாது இந்த விடயம் தொடர்பில் மீனவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்,
செய்தி யாழ் பிரதீபன்

, , , ,
, , ,

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடய...
08/11/2022

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசியல் தலைவர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் கடலட்டை பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்
மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசியல் தலைவர்களை அணுகுவதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கடற்றொழிளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் சகல மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
செய்தி யாழ் பிரதீபன்

, , , ,
, , ,

Address


Alerts

Be the first to know and let us send you an email when SkyTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SkyTamil:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share