Divisional Secretariat - Akkaraipattu

  • Home
  • Divisional Secretariat - Akkaraipattu

Divisional Secretariat - Akkaraipattu This is the Official page of Divisional Secretariat - Akkaraipattu

நலன்புரி நன்மைகள் சபையின் *அஸ்வெசும* இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக  இன்று (23.01.2025)  பிரதேச...
23/01/2025

நலன்புரி நன்மைகள் சபையின் *அஸ்வெசும* இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக
இன்று (23.01.2025) பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் T.M.M அன்சார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் Y. றாஷித், நிருவாக கிராம உத்தியோகத்தர் S.M.M. நசீர்
மற்றும் WBIU உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இரண்டாம் கட்ட எண்ணீட்டுக்கான பணிகள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் அக்கரைப்பற்று-14 மற்றும் அக்கரைப்பற்று -13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சேனாநாயக்க சமுத்திரம் தொடர்பிலான அறிவிப்பு – 2025 ஜனவரி 22.சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் இன்று மதியம் 12:00 மணி...
22/01/2025

சேனாநாயக்க சமுத்திரம் தொடர்பிலான அறிவிப்பு – 2025 ஜனவரி 22.

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் இன்று மதியம் 12:00 மணிக்கு 2.5 அடி அளவிற்கு திறக்கப்படும். வான் கதவுகள் மூலம் 2,380 கியூசெக் அளவிலான நீர் கல்லோயா ஆற்றிற்கு திறக்கப்படும். மேலதிகமாக, மின்நிலையம் மூலம் 750 கியூசெக் நீர் கல்லோயா ஆற்றிற்கு வெளியேற்றப்படுகிறது.

மக்கள் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
அக்கரைப்பற்று.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் 2025 ஆம் ஆண்டுக்கான பின்வரும் கற்கை ந...
18/11/2024

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் 2025 ஆம் ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

> Diploma in Needleworks and Home science

> Bridal Saree, Blouse, Ari Works

> Cake, Icing cake, Rich Cake, and Pastry items

> Beautician courses

> Hotel management

> Information technology

> Nursing assistant and Care giver

> Computer and Electronic Device Repairing

இணைந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே காணப்படும்Google Form இனை நிரப்பி விண்ணப்பத்தை சமர்பப்பிக்கவும்.

ஆறு மாத கால விசேட சான்றிதழ் பயிற்சி நெறிகள் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நடைபெறும்.
Closing Date : 10.12.2024

https://forms.office.com/r/NuaNqSBiWs

Warmest congratulations to His Excellency Anura Kumara Dissanayake on being elected  as the 9th Executive President of S...
22/09/2024

Warmest congratulations to His Excellency Anura Kumara Dissanayake on being elected as the 9th Executive President of Sri Lanka. The Divisional Secretary and staff of Akkaraipattu extend our best wishes for a prosperous tenure, as you guide our nation towards progress, unity, and lasting peace.
We wish all Sri Lankans a bright and prosperous future.

21/09/2024

ஜனாதிபதி தேர்தல் -2024
*அக்கரைப்பற்று*
மொத்த வாக்குகள் - 33492
அளிக்கப்பட்ட வாக்குகள் - 23059
விகிதம் - 68.85

09/09/2024
பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல் !
26/06/2024

பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல் !

இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு==========================இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று எமத...
04/02/2024

இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு
==========================
இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் TMM. அன்ஷார் அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எமது தாய் நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இலங்கையின் சுதந்திரம், இறைமை, தேசிய ஒருமைப்பாடு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் Y.ராசித் யஹ்யா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், நிருவாக உத்தியோகத்தர் MS. பாறூக் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூபாய் 45,000/= போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் - 2024.                        ...
03/01/2024

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூபாய் 45,000/= போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் - 2024.

மேற்படி விடயம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு பொதி வழங்குவதற்குரிய கடைகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை 04 ம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்படுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்த, விருப்பம் உடைய கடையின் உரிமையாளர்கள் தவறாது அன்றைய தினம் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்:
கணக்காளர்
பிரதேச செயலகம்
அக்கரைப்பற்று

முதியோர் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்.நவம்பர், டிசம்பர் - 2023 இற்குரிய முதியோர் கொடுப்பனவு, நாளை மற்றும் நாளை மறுநாள் த...
27/12/2023

முதியோர் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்.

நவம்பர், டிசம்பர் - 2023 இற்குரிய முதியோர் கொடுப்பனவு, நாளை மற்றும் நாளை மறுநாள் தபாலகங்கள் ஊடாக காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை வழங்கப்படும். உரிய பயனாளிகள் இக்கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று.

ப‌யிற்சி மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - 2024கிழக்கு மாகாண  கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செய...
27/10/2023

ப‌யிற்சி மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - 2024

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்களுக்கு 2023இற்கான தையல், கைவினை மற்றும் மனையியல் பயிற்சி நெறி, அக்கறைப்பற்று மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது . கற்கைநெறியில் இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு நாளாந்தம் 300/-கொடுப்பனவு வழங்கப்படும்.

தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமைகள்
* விண்ணப்பதாரி 2024.01.31ம் திகதியன்று 17 வயதிற்கு குறையாதவராகவும் 35வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

அத்துடன் ஆண்டு 10 கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்

மேலும் விண்ணப்பதாரி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டும்

இணைய விரும்புவர்கள் 2023.11.15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்

விண்ணப்பப்படிவங்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Closing Date : 15.11.2023
Contact No :0752681840(teacher), 0750123450(rural development officer)
Age Limit : 16 - 35
Full-time course - Free

*வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பான பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்*
27/09/2023

*வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பான பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்*

*பிரத்தியேக வகுப்புக்கள்  தொடர்பாக பொது மக்களுக்கான அறிவித்தல்.* அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் அ...
25/08/2023

*பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பாக பொது மக்களுக்கான அறிவித்தல்.*

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக.
வலயக் கல்விப் பணிமனை, சுகாதார பணிமனை, மாநகர சபை, அனைத்து நிறுவனங்களின் சம்மேளனம், பள்ளிவாயல் பிரதிநிதிகள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்களின் முகாமையாளர்கள் , பாடசாலை அதிபர்கள் பங்குபற்றுதலோடு 2023.08.10 ஆம் திகதி பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் மாணவர்களின் நலன்கள் குறித்து பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

1. தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு மாலை 6.00 மணிக்கு பிறகு எந்தவிதமான பிரத்தியேக வகுப்புக்களை நடத்தாமல் இருத்தல். உயர் தர வகுப்பு மாணவர்களில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கும் மாணவர்களுக்கு மட்டும் பி.ப 7.00 மணிவரை வகுப்புக்களை நடாத்த முடியும்.

2. பெண்பிள்ளைகள் பாடசாலை சீருடையில் மாத்திரம் தனியார் வகுப்புக்களுக்கு வருதல்.

3. தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு பாடம் தொடர்பாக 8 மணித்தியாலங்கள் மாத்திரம் ஒதுக்கப்படுதல் வேண்டும்.

4. ஒரு மணித்தியாலயத்திற்கு அதி கூடிய கட்டணமாக ரூபா 60 அறவிடுதல் வேண்டும்.

5.மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனையினால் தர நிர்ணயத்திற்கு உட்பட்ட சொகுசு வசதிகளுடன் நடாத்தப்படும் தனியார் நிறுவனங்கள் மாத்திரம் ரூபா 70 வரை அறவிடலாம்.

6. ஞாயிற்றுக் கிழமையில் 6-11 வரையான மாணவர்களுக்கு முழு விடுமுறை நாளாக அறிமுகப்படுத்தல். அரச சுற்று நிருபத்திற்கமைவாக இந்நாளில் அகதியா வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் மார்க்க விழுமியங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தல்.

7.பாடசாலை நேரங்களில் எவ்வித பிரத்தியேக வகுப்புக்களையும் நடத்தாமல் இருத்தல்.

8. பிள்ளைகளுக்கு மாலை, இரவு நேரங்களில் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்தல்.

9. தரம் 1-3 வரையான மாணவர்களுக்கு எவ்வித பிரத்தியேக வகுப்புக்களும் நடத்தப்படாமல் குர்ஆன் மத்ரஸாவிற்கும் மார்க்க ரீதியான கல்விக்கும் வாய்ப்பளித்தல்.

10.வளப்பற்றாக்குறையுடைய தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் நலன் கருதி உரிய உட்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல். இவை மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனை போன்றவற்றினால் பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில் போதிய வசதிகளை வழங்காது நடாத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே மேற்குறித்த தீர்மானங்கள் அனைத்தும் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனபதுடன் பொற்றோர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைத்து மாணவர்களின் கல்வி, விளையாட்டு, ஓய்வு, மார்க்க விழுமியங்கள், ஒழுக்க மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று.

*Certificate Awarding Ceremony* அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவினால் வருடாந்தம் ரமழான் மாதத்த...
09/08/2023

*Certificate Awarding Ceremony*

அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவினால் வருடாந்தம் ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்டு வரும்
*Blessed Ramadhan students' programme* கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் TMM. அன்சார் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் ராசித் யஹ்யா அவர்களின் தலைமை மற்றும் முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் MHM. முக்தார் ஹுசையின் அவர்களின் ஒருங்கிணைப்பில் 2023 08.08 செவ்வாய் கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து நடைபெற்ற இக் கற்கை நெறியின் முடிவில் 49 மாணவர்கள் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதிதிகளாக
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், உதவி வலயக் கல்வி பணிப்பாளர் MM. சித்தி பாத்திமா சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் MJM. நிஹ்மதுள்ளாஹ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.உவைஸ் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் SM. சபீஸ், செயலாளர் MB. அப்துல் ஹமீட் நிர்வாக கிராம உத்தியோகத்தர் AL. தாஹிர், கலாசார உத்தியோகத்தர்களான AL. தெளபீக், IL. றிஸ்வான், N. நவப்பிரியா, மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் MH. ஜெய்னுதீன், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் MAM. இப்றாலெப்பை, மத்தியஸ்த சபை உத்தியோகத்தர் MMM. ஹமீட், பல் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் M. சங்கீதன்
, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மத், அந்நூர் நிறுவன செயற்பாட்டாளர் MAM. ஜனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மேற்படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுசரணை வழங்கிய அக்கரைப்பற்று பறகத் பவுன்டேஷன் நிறுவனர்களான BA. பைசால், BA நைசல், வர்த்தக சங்க தலைவர் AM. அப்துஸ் ஸலாம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் AL. முஸாதிக், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் MC. ஜலால்தீன், வர்த்தகர் JM. அனஸ் உள்ளிட்ட வளவாளர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Address


Opening Hours

Monday 08:15 - 16:15
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94672277380

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat - Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Divisional Secretariat - Akkaraipattu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share