Fast Alert

Fast Alert நம்பகமான தகவல்களை துரிதமாக வழங்கும் செய்தி Fast Alert

 #மக்கள்_பாதிப்பு😢கந்தப்பளை, அல்மா தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை விடாது பெய்த அடைமழையால் மக்களின் குடியிருப்புகள், விவ...
30/01/2025

#மக்கள்_பாதிப்பு😢
கந்தப்பளை, அல்மா தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை விடாது பெய்த அடைமழையால் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், பிரதான சாலைகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன........

 #தான்சானியாவில்_மார்பர்க்_வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்...
16/01/2025

#தான்சானியாவில்_மார்பர்க்_வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் மூலமாகவோ மக்களிடையே பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 #மியன்மார்_படகு_103_பேருடன்  #முள்ளிவாய்க்கால்_கடற்கரையில்முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 ப...
19/12/2024

#மியன்மார்_படகு_103_பேருடன் #முள்ளிவாய்க்கால்_கடற்கரையில்

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று இன்று (19) கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகு திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கினர். படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

"  #இனவாதத்தை_ஒழிக்க_இணைந்து  #செயற்படுவோம்.  #நாமல்_தெரிவிப்புஅரசியலில் இருந்து இனவாதத்தை முற்றாக ஓரங்கட்டுவோம்." - என்...
04/12/2024

" #இனவாதத்தை_ஒழிக்க_இணைந்து #செயற்படுவோம். #நாமல்_தெரிவிப்பு
அரசியலில் இருந்து இனவாதத்தை முற்றாக ஓரங்கட்டுவோம்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

 #ஜனாதிபதி_அநுரவை_பாராட்டிய #ரணில்_விக்கிரமசிங்கஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு...
02/12/2024

#ஜனாதிபதி_அநுரவை_பாராட்டிய
#ரணில்_விக்கிரமசிங்க

ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும்.

வினில் மெனிக் நிறுவனத்தின் உரிமையாளர் டபிள்யூ.வினில் தலைமை தாங்குகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

 #மலையாள_நடிகை_திவ்யா_ஸ்ரீதரின்  #கல்யாண_புகைப்படம் ❤️😢Malayalam Actreess Divya Sreedhar marriage photo.
01/11/2024

#மலையாள_நடிகை_திவ்யா_ஸ்ரீதரின் #கல்யாண_புகைப்படம் ❤️😢
Malayalam Actreess Divya Sreedhar marriage photo.

 #எதிர்வரும்_பொதுத்_தேர்தலில்_போட்டியிட  #மாட்டார்....      #ரணில் #முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொத...
24/09/2024

#எதிர்வரும்_பொதுத்_தேர்தலில்_போட்டியிட #மாட்டார்.... #ரணில் #முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும், தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வரத் திட்டமிடவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்

 #இன்று #அனுர  #அம்பாரையில்
13/09/2024

#இன்று
#அனுர #அம்பாரையில்

 #அனுர  #குருநாகலில்
10/09/2024

#அனுர #குருநாகலில்

 #அனுர_குமார  #மாத்தளையில் 😮
10/09/2024

#அனுர_குமார #மாத்தளையில் 😮

10/08/2024

#பிரேஸிலில் 62 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்😥😥😥
அனைவரும் பலியாகி இருக்கலாம் என தகவல்

ப்ரேஸில் நாட்டில் சாவ் பாலோ மாகாணத்தில் 62 பேருடன் (58 பயணிகள் – 4 விமான பணியாளர்கள்) பறந்த விமானம் ஒன்று திடீரென மக்கள் குடியிருப்பில் விழுந்து தீ பிடித்து எரிந்ததில்,

அதில் பயணித்தவர்கள் உள்ளிட்ட கிராமவாசிகளும் உயிரிழந்திருக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இரவு பிரேஸில் நாட்டின் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

ART-72 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

 #வைத்தியர்_இராமநாதன்_அர்ச்சுனா  #மன்னாரில்_கைதுமன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து...
03/08/2024

#வைத்தியர்_இராமநாதன்_அர்ச்சுனா #மன்னாரில்_கைது

மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்று வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அண்மையில் மன்னார், தம்பன்னை குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு இன்று பிற்பகல் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டார்.

 #இன்னும்_ஒரு_சில_தினங்களில்_சாதாரண  #தரப்_பரீட்சையின்_பெறுபேறுகள்  #வெளியாகும்கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையி...
24/06/2024

#இன்னும்_ஒரு_சில_தினங்களில்_சாதாரண #தரப்_பரீட்சையின்_பெறுபேறுகள் #வெளியாகும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2023 (2024) பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

அதன்படி இந்த வாரத்திற்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்போம் என்றும் இந்த வாரத்திற்குள் அது முடியாவிட்டால்,

இந்த வாரம் முடிவடைந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிட்டிருப்பது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு 3527 மையங்களிலும் 535 ஒருங்கிணைப்பு மையங்களிலும் 33 வட்டார சேகரிப்பு மையங்களிலும் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 452, 979 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

 #இலங்கையில் தலைகீழாக மாறிய  #பிறப்பு   #இறப்பு  வீதம்_*...! #2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கு...
28/04/2024

#இலங்கையில் தலைகீழாக மாறிய #பிறப்பு #இறப்பு வீதம்_*...!

#2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக,

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வருடாந்த இறப்பு எண்ணிக்கை 140,000 இலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமை சனத்தொகை பெருக்கத்தை பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/EfZFk35j9WxDaqz4js3Zhe

 #ஞானசார_தேரருக்கு_நான்கு_வருட  #கடூழியச்_சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்  #ந...
28/03/2024

#ஞானசார_தேரருக்கு_நான்கு_வருட #கடூழியச்_சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் #நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

#இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற
எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/EfZFk35j9WxDaqz4js3Zhe

😲📱 #நவீன_கையடக்கத்_தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம...
05/01/2024

😲📱 #நவீன_கையடக்கத்_தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்,

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.

இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.

அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.

குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.

அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.

இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற எமது what's app குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇
https://chat.whatsapp.com/EfZFk35j9WxDaqz4js3Zhe

  கில்மிஷாஇந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான "Zee தமிழ்" நடாத்திய சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்திலிருந்து கலந்து கொண்ட கில்மி...
17/12/2023

கில்மிஷா
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான "Zee தமிழ்" நடாத்திய சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்திலிருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளரானார்
#ஈழத்துக்குயில்_கில்மிஷா 😍😘
2023

பார்வையிட👇👇👇👇👇👇👇👇www.doenets.lk
30/11/2023

பார்வையிட👇👇👇👇👇👇👇👇www.doenets.lk

Address


Telephone

+94762031245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast Alert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share