SYF - Kalmunai

  • Home
  • SYF - Kalmunai

SYF - Kalmunai Sunnath Jama’ath Youth Federation

சுன்னத் ஜமாஅத் இளைஞர் பேரவை.
(1)

தடால் மடால் திடால்ஒட்டுமொத்த உம்மத்தும் ஒரே திடலில்
13/04/2024

தடால் மடால் திடால்
ஒட்டுமொத்த உம்மத்தும் ஒரே திடலில்

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களை இணை வைக்கும் இடம் அங்க தொழுவது கூடாது என்று கூப்பாடு போட்ட குரூப்பு.. தியேட்டர் பார்க்கிங் ...
12/04/2024

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களை இணை வைக்கும் இடம் அங்க தொழுவது கூடாது என்று கூப்பாடு போட்ட குரூப்பு.. தியேட்டர் பார்க்கிங் "திடலில்" பெருநாள் தொழுகை

அற்புதம்

12/04/2024
நபிவழித் திடலில் அநுராதபுர கிளிக்.  ஆண்டி நபிவழிக் கழுத்துடன் கெத்து. Zoom 24 ultra
11/04/2024

நபிவழித் திடலில் அநுராதபுர கிளிக். ஆண்டி நபிவழிக் கழுத்துடன் கெத்து. Zoom 24 ultra

இதுதான்டா திடல்…🤣🤣🤣
11/04/2024

இதுதான்டா திடல்…🤣🤣🤣

11/04/2024
பிறை பெரியதாக தெரிந்தால் அது எந்த நாளின் பிறை?1 -  இன்று சிலர் பிறை பெரியதாக இருப்பதாக இருப்பதை பார்த்து விட்டு, இது இரண...
11/04/2024

பிறை பெரியதாக தெரிந்தால் அது எந்த நாளின் பிறை?

1 - இன்று சிலர் பிறை பெரியதாக இருப்பதாக இருப்பதை பார்த்து விட்டு, இது இரண்டாவது பிறை, மூன்றாவது பிறை என்று கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் சில ஆலிம்களும் இருப்பது தான் வருத்தமாக உள்ளது.

2 - நபி ஸல் அவர்கள், இந்த விஷயத்தை எப்படி அணுகினார்கள். பிறரை அணுக சொன்னார்கள் என்ற வழிகாட்டுதலை அறிந்துக் கொண்டால், கேலி கிண்டல் உருவாகாது.

عَنْ أَبِي الْبَخْتَرِيِّ. قَالَ:
خَرَجْنَا لِلْعُمْرَةِ. فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ قَالَ: تَرَاءَيْنَا الْهِلَالَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ. وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ. قَالَ: فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ. فَقُلْنَا: إِنَّا رَأَيْنَا الْهِلَالَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ. وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ. فَقَالَ: أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ؟ قَالَ فَقُلْنَا: لَيْلَةَ كَذَا وَكَذَا. فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ. فَهُوَ لليلة رأيتموه".

அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை" என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது பிறை" என்று கூறினர்" என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்" என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1984.

3 - இந்த ஹதீஸிற்கு, இமாம் நவவி ரஹ் பாடத் தலைப்பிட்டுள்ளார்கள்,

باب بيان أن لَا اعْتِبَارَ بِكُبْرِ الْهِلَالِ وَصِغَرِهِ، وَأَنَّ اللَّهَ تَعَالَى أَمَدَّهُ لِلرُّؤْيَةِ فَإِنْ غُمَّ فَلْيُكْمَلْ ثَلَاثُونَ

முதல் பிறை பெரியதாக, சிறியதாக இருப்பதை பொருட்படுத்த வேண்டியதில்லை. அல்லாஹ்வே, அதனை பார்ப்பதற்காக நீட்டிக்க செய்கிறான்.

4 - பிறை விஷயத்தை அறிஞர்கள், எப்படி அணுகி உள்ளார்கள் என்பதை பாருங்கள்.

ஆனால் இன்று தங்களை அறிஞர்களாக சொல்லிக் கொள்பவர்கள், எப்படி கேலி செய்கிறார்கள் பாருங்கள்.

பிறை தொடர்பான விஷயத்தில் அடிப்படையான அம்சங்களை, தமிழ் பேசும் ஆலிம்களில் பலர் அறியாமல் இருப்பது, வேதனையாக உள்ளது.

அன்புடன்
ஹசன் அலி உமரி

09/04/2024

நைஜர் நாட்டில் நேற்று தலைப்பிறை கண்ட செய்தி தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளதால் சர்வதேச பிறைத் திடல்களில் இன்று அசர் தொழுகையின் பின்னர் நோன்பும் பெருநாள் தொழுகை இடம்பெறும். லோலா வஹ்ஹாபி😩

https://www.facebook.com/share/p/wc1Ac8ZdTFDubWir/?mibextid=WC7FNe
19/03/2024

https://www.facebook.com/share/p/wc1Ac8ZdTFDubWir/?mibextid=WC7FNe

வாருங்கள்... அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த..., அதை தொடர்ந்து சபீழுள் முஃமினீன்கள் சென்ற பாதையில்... நாங்களும் பயணிப்போம்...!!

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ وَسَآءَتْ مَصِيْرًا‏

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் : 4:115)

தராவீஹ் விடயத்தில், ரசூலுல்லாஹ் முதல், 1300 நூற்றாண்டுகள் வரை, அனைத்து முஃமின்களும் பயணித்த அதே பாதையில் பயணிப்பதே நேர்வழியாகும்....

அல்ஹம்துலில்லாஹ் அதற்குரிய சான்றுகள்...

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள்
ரமலான் மாதத்தில் தொடர்ச்சியாக 20 ரக்அதுகள் தராவீஹ் மற்றும் 3 ரக்அத்
வித்ரையும் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். [முஸன்னப் இப்னு
அபூ ஸைபாஹ் 002/ 7692]

தராவீஹ் 20 ரக்அத்துகள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கும் ஹதீது 'மர்பூஃ' என இப்னு அபீஷைபா முஸன்னிபில் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இப்றாஹீம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர்.

மர்பூஃ ஆன பலவீனமான ஒரு ஹதீது நபிமணித் தோழர்களின் செயல்கள்
மூலம் உறுதி செய்யப்படும் போது அந்த பலவீனமான ஹதீது ஆதாரமாக
எடுக்கத் தகுதிபெற்று விடுகிறது.

பைஹகீ (ரஹ்) அவர்கள்
தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமான ஸனதுடன் ஸஹாபாக்கள் தராவீஹ் 20
ரக்அத்துகள் தொழுதனர் என்று பதிவு செய்துள்ளார்கள். அநேக நபிமணித்
தோழர்கபள் மூலம் இவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன.

நாற்பெரும் இமாம்களும் மேற்படி ஸஹாபாக்களின் கருத்தையே பின்பற்றுகின்றனர்
என்று... ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திதுத் திஹ்லவி (ரஹ்) அவர்கள் தமது பதாவா அஸீஸிய்யாவில் பாகம் 1 பக்கம் 111, 119
ல் கூறுகிறார்கள்.

ஸயீப் பின் யஜீத் (ரலி) :
"உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் 20
ரக்அது தொழுதார்கள்".
[பைஹகீ சுனன் குப்ரா
002/ 698-9, ஹதீஸ்
நம்பர் 4617 [

இமாம் அல்-நவவி (ரஹ்) அவர்கள்: "தராவீஹ் 20 ரக்அத்" என்பதை 'ஸஹீஹ்'
என்கிறார்கள்.
[அ ல்- குலஸா அல்-அஹ்கம் 1961] ۰۰

ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து
அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி
பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்
தொழுவித்தார்கள் .

(அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் ஸலமி [சுனன் பைஹகி2/ 699,4620])

*உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,* உமர் (ரலி) அவர்கள் நான் தொழுகையை வழிநடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். அதன் பிறகு, *“மக்களுக்காக இருபது ரக்அத்கள் தொழுவியுங்கள்”* என்று எனக்கு பணித்தார்கள்.. .

(அதருள் சுண்ணன் பக்கம் 255)

மேலும் இமாம் மாலிக் (ரஹ் ) அவர்கள் முஅத்தாவில் "யசீத் இப்னு அப்துர் ரஹ்மான், யஹ்யா இப்னு யசீத் ஆகிய இருவரின் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.. அதில் உமர் (ரலி ) அவர்களின் காலத்தில் 20 ரகாதுக்கள் தொழுததாக கூறியுள்ளார்கள்.

இப்னு தைமிய (ரஹ்) எழுதுகிறார்கள் :

*"ரமளானில் இருபது ராக்கத்துக்கள் மற்றும் மூன்று ரக்காத்துக்கள் வித்ருமாக உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்" என்பது ஏற்றுக்கொலப்பட்ட செய்தி*. அதன் படி பெரும்பாலான உலமாக்கள் *இருபது ராக்கத்துக்கள் தொழுவதை சுன்னாஹ்வாக ஏற்றுகொண்டனர்*.

ஏனெனில், உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் முஹாஜ்ரீன்கள் மற்றும் அன்சாரிகள் கூட்டத்தினருக்கு தலைமை தாங்கினார், அவர்களின் யாரும் அவருடைய செயலை நிராகரிக்க வில்லை..

(பாதாவ இப்னு தைமியா - பாகம் 23 - பக்கம் 112)

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களன் காலத்தில் ஒரு ரவாபிலி (ஷியா) ஒருவன், உமர் (ரலி) அவர்கள் மீது 20 ராக்ஆத்துக்களின் பித்ஹத்தான நடைமுறையை உருவக்கியதற்காக குற்றம் சாட்டினான். இந்த குற்ற சாட்டுக்கு இப்னு தைம்மியா பதில் அளித்தார்கள்.

அதிலே, ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக எழுதி விட்டு., *உமர் (ரலி) அவர்கள் 20 ராக்ஆத்துக்கள் தராவீஹ் இஸ்தாபித்து, ஒரு மோசமான நடைமுறையை கடைபிடித்ததாக, அன்று கருதப்பட்டு இருந்தால்.. ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பார்கள். இது அவர்களின் கிலாபாத்திலும் இருந்தது., அவரது கிலாபத்தில் அவரும் குஃபாவில் 20 ராக்ஆத்துக்கள் தராவீஹ் தொழுகை நடத்தி இருக்கிறார்கள்.*

(என்று பதில் அளித்து அவனுடைய வாதத்ததை முறியடித்தார்கள்..)

(பதாவா இப்னு தைமியா)

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள் : *தரவீஹ் இருபது (20) ராக்கத்துக்களை கொண்டதே,* அதன் வழிமுறைகளும் நன்றாகவே அறியப்பட்டதாகும். அது ஒரு சுன்னதுள் முஅக்கதாவாகும்.

(இஹ்யா உல் உலூம், பாகம் : 1, பக்கம் : 139)

அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் :

*தராவீஹ் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவில் உள்ளதாகும். மேலும் அது 20 ரக்காத்துக்களை கொண்டதாகும்.*

(குன்யதுத் தாலிபீன், பக்கம் : 464)

இமாம் இப்னு குதாமா ஹம்பலி (ரஹ்) அவர்கள் எழுதி இருக்கிறார்கள் :
"இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் கருத்தின் பிரகாரமும் மிகவும் ஏற்புடையதான கருத்து.. *தராவீஹ் இருபது (20) ராக்கத்துக்கள்* என்பதே."

(அல்-முஃனி, பாகம் : 1, பக்கம் : 802)

*இருபது ராக்கத்துக்கள் தராவீஹ் தொழுகை என்பது சஹாபாக்களின் இஜ்மாவில் உள்ள பழக்கமாக.* இருந்தது.

(முல்லாஹ் அலி காரி : மிர்காத் பாகம் : 3 - பக்கம் : 194)

பெரும்பாலனா அறிஞர்கள் உமர் மற்றும் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஒன்று படுகிறார்கள்.

(திர்மிதி, பாகம் : 1, பக்கம் : 166)

அல்லாமா கசாணி (ரஹ்) அவர்களும் அறிவிப்பு செய்கிறார்கள்.. *சஹாபாக்களின் இஜ்மா.., இருபது ராக்கத்துக்களை அமல் செய்வதாகவே இருந்தது..*

(பாதியுஸ் ஸனாய் பாகம் : 1, பக்கம் : 644)

காதி இமாம் அபூ யூசுப் (ரஹ்) என்பவரிடம் இருந்து அசாத் பின் அமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : "நாம் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் தராவீஹ் விஷயத்தை பற்றியும்.., உமர் (ரலி) அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கேட்டேன்.

அதற்கு இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் பதில் அளித்தார்கள் : *20 ரக்ஆத்துக்கள் தராவீஹ் என்பது சுன்னத் முஅக்கதா, உமர் இந்த வடிவத்தை சுயமாக நிறுவவில்லை.., அல்லது, தீனில் புதுமைகளை உருவாக்கவும் இல்லை.*

(மராஃகில் பாலாஹ் பக்கம் : 334)

இதை ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், *‘ரமலான் மாதத்தில் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் உமர் (ரலி) அவர்கள், மக்களைக் கூட்டி, இருபது ரக்அத்கள் தொழுதார்கள்*.

(முஸ்னத் அல் இமாம் ஜைத் 158, 159)

ஷாஹ் அப்துல் ஹசீஸ் முஹத்தித் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு நபி (sal) அவர்களின் தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதே.*

(பத்வா அசீசிய்யஹ் பக்கம் 125)

அபுல் குசைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், *சுவைத் இப்னு கப்fலாஹ் (ரஹ்) அவர்கள் 5 தர்வீஹ்களில், 20 ராக்கத்துக்கள் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள்.*

(அல் சுன்னனுள் குப்ரா லில்-பைஹாகி, பாகம் : 2, பக்கம் : 496)

ஷுதைர் இப்னு ஷகல் (ரஹ்) அவர்கள் பதிவு செய்கிறார்கள் : *தான் ரமளானில் 20 + 3 ராக்கத்துக்கள் தொழக்கூடியவராக இருந்ததாக.*

(முசன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் : 5, பக்கம் : 222)

இப்ராஹீம் அன்னக்ஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *மக்கள் ரமளானில், 5 தர்வீஹ்களில் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.*

(கிதாபுல் அதர் அபீ-யூஸுப், பக்கம் 41)

அதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *"மக்கள் 23 ராக்ஆத்துக்கள் வித்ரோடு சேர்த்து தராவீஹ் தொலக்கூடியவர்களாக இருந்தார்கள்..*

(குறிப்பு : *அதா (ரஹ்) அவர்கள் ஒரு தாபிஈ*)

(முசன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் : 5, பக்கம் : 224)

எனவே.., அன்று முதல் இன்றுவரை...

மக்காவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!

மதினாவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!

அக்ஸாவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!

இதுவே... 1300 வருடங்களாக சபீலுல் முஹ்மினீங்கள் சென்ற பாதை... என்பது தெள்ளத்தெளிவான உண்மை...

எங்களுடைய எந்த முன்சென்று முஃமினாண அறிஞரும்... தராவீஹ் 8 ரக்கத்துகள் என்று விளங்கும் இல்லை... அதை அப்படி அமல் செய்யவும் இல்லை...

----------------------------------------------

இந்த நவீன குழப்பவாதிகள்.., தங்களது மடமையை நிலைநாட்ட தூக்கிக் கொண்டுவரும், ஆதாரத்தை பாருங்கள்...!

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : உமர் (ரலி) அவர்கள் மக்களை ஜமாத்தாக ஒன்று சேர்த்து தொழ வைத்தது.., அது 11 ரகதுக்களே .

பதில் :
இந்த ஹதீஸ் மிகமிக பலவீனமானதாகும் . இதன் ராவிகள் வரிசையில் பாரிய இடைவெளி இருக்கிறது .இமாம் மாலிக் (ரஹ் ) அவர்களிடமிருந்து கூறுபவர் "அல் ஜுவரீ "என்பவர் . அவர் பிறந்தது ஹிஜ்ரி 238. இமாம் மாலிக் (ரஹ் ) வாபாதாகியது ஹிஜ்ரி 179.

*இரண்டு ராவிகளுக்கு இடையில், 59 வருட இடைவெளி* குழப்பவாதிகளுக்கு போதுமா..??

இவர்களின் அடுத்த பலமான ஆதாரம்..

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும், ஹதீஸில் ரசூலுல்லாஹ், ராமலானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் 8+3 தொழுதார்கள்... என்பதே...

இந்த ஹதீஸ் ரமளானில் மட்டும் தொழப்படும் ஒரு விசேட தொழுகை பற்றியது அல்ல... மாறாக இது ரசூலுல்லாஹ்வின் வழமையான தஹஜ்ஜதையே குறிக்கும்...

இதை நாங்கள் சொல்லவில்லை... சொல்பவர்கள் யார் யார் என்று பாருங்கள்...

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகின்ற "ரமலாம் , ரமலான் அல்லாத மாதத்தில் 11 ரக்அது தொழுதார்கள் " என்ற ஹதீஸ் "தஹஜ்ஜத்தை குறிக்கும் என புஹாரின் விரிவுரையாளரான இப்னு ஹஜர் அல் அஸ்கலனி (ரஹ்) கூறுகிறார்கள். .
(பதுஹுல் பாரி 3/328)

காதி இயால் மலிகி (ரஹ்) அவர்களும் *ஆயிஷா (ரலி) அவர்களின் (11 ராக்கத்துக்கள் பற்றிய ஹதீஸ்) ரசூலுல்லாஹ்வின் தஹஜ்ஜுத் பற்றியதே*. என்று கூறியுள்ளார்கள்.

(ஷரஹ் முஸ்லிம் நவவி : பாகம் 01 - பக்கம் : 253)

கைர முகல்லிதுகளில் ஒருவரான) காதி முஹம்மத் ஷவ்கானி அவர்கள் எழுதியுள்ளார்கள் : *ஆயிஷா (ரலி) அவர்களின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கும் 11 ராக்கத்துக்கள் என்ற செய்தி, அது ரமளானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் தொழப்பட்ட தஹஜ்ஜுத் சம்பந்தமான அறிவிப்பாகும்.*

(நைலுல் அவதார், பாகம் : 3, பக்கம் : 39)

*தான் பெரும் அளவு தண்ணி அடிப்பதாகவும், அதனால் தனக்கு கிக்கு வருவதில்லை என்றும், இந்த சவூதி வஹ்ஹாபிய சித்தாந்தி ஸலபி ஓலமா...
17/03/2024

*தான் பெரும் அளவு தண்ணி அடிப்பதாகவும், அதனால் தனக்கு கிக்கு வருவதில்லை என்றும், இந்த சவூதி வஹ்ஹாபிய சித்தாந்தி ஸலபி ஓலமா, இப்ப புதுசா ,ஒரு புதுப் புரளியை, யூடியுப், தொலைக் காட்சிகளில் கிளப்பிக்கிட்டு இருக்கான்.*

Wahabi M***i Assim Al Hakeem is proud of being an alcoholic, and gives his ridiculous explanation why him and his 'Saudi' scholars have said its permissible....

11/03/2024

நேன்புக் கஞ்சிக்கு இஸ்லாத்தில் ஆதாரமில்லையாம். ஹராமாம். சோட்டீஸ் வண்டப்பம் எல்லாம் பித்அத்தாம்.

மிலேனிய வஹ்ஹாபி

கிடா மாட்டு வஹ்ஹாபிகளின் பிறை தேடும் கொள்கை இது. நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் பிறை தேடப் பாவித்த கருவி தற்போது எங்கே ...
11/03/2024

கிடா மாட்டு வஹ்ஹாபிகளின் பிறை தேடும் கொள்கை இது.
நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் பிறை தேடப் பாவித்த கருவி தற்போது எங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது? அந்தக் கருவி பற்றிய ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் வந்துள்ளது?

பதில் சொல்லும் பால்போத்தல் வஹ்ஹாபிகளுக்கு 101/= ரூபா பரிசு வழங்கப்படும். இதுக்குள்ள சர்வதேச பிறை எருமை மாடுகள் வேறலெவல்.😂😂😂😂

04/03/2024

பலஸ்தீன மக்களுக்காக உலக முஸ்லிம் மக்கள் பிரார்த்தனை செய்யவேண்டிய கட்டாய காலத்தில் “கூட்டு துஆ” கூடாது என்ற சர்ச்சையை ஆரம்பித்து வைத்ததும் ஒரு வகை சியோனிஸ கைக்கூலிச் செயல்தான்.

நான்கு மத்ஹப்களை வெறித்தவர்களே 400 ஜமாஅத்தாக பிளவுபட்டனர். ஷாபிஈ மத்ஹபை கட்டிப்பிடிக்க தேவையல்லாம். நீங்க எதவேணுமென்றாலு...
01/03/2024

நான்கு மத்ஹப்களை வெறித்தவர்களே 400 ஜமாஅத்தாக பிளவுபட்டனர். ஷாபிஈ மத்ஹபை கட்டிப்பிடிக்க தேவையல்லாம். நீங்க எதவேணுமென்றாலும் கட்டிப்பிடிங்க! தயவுசெய்து மத்ஹபை விட்டிடுங்கோ..! Mr. ரஊப் ஹகீம்

பிரபல மாக்க அரிஞ்சர் ஊசுபு முத்தி ஸம்ஸம் பௌண்டேசனால்  “பெமிலி நைட்”  நிகழ்ச்சி கொண்டாடியுள்ளார். இது எந்த பத்துவாவோ தெரி...
28/02/2024

பிரபல மாக்க அரிஞ்சர் ஊசுபு முத்தி ஸம்ஸம் பௌண்டேசனால் “பெமிலி நைட்” நிகழ்ச்சி கொண்டாடியுள்ளார். இது எந்த பத்துவாவோ தெரியாது. ஆனா மீலாத் ஹராம்.

ழயீஃப் ஹதீஸ் குறித்து அபுத்தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விவாத களத்தில் முன் வைத்த கேள்விகளுக்கு பதில்...
27/02/2024

ழயீஃப் ஹதீஸ் குறித்து அபுத்தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விவாத களத்தில் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எங்கே?

இன்று வரை அந்தக் கேள்விகள் கேள்விகளாகத்தானே இருக்கின்றன.

என் ஹதீஸ் ழயீஃபாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸாவது உள்ளதா?

ஹதீஸ்கள் ழயீஃப் என்று உங்களுக்கு சொன்னது யார்?

குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ஃபிக்ஹு சார்ந்த இமாம்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் ஹதீஸ் சார்ந்த இமாம்களின் சொல்லை ஏற்றுக் கொண்டு ழயீஃப் ழயீஃப் என்று பேசுவதும் எழுதுவதும் ஏன்?

அப்படியானால் ழயீஃப் ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கும் அதே இமாம்களின் கூற்றுகளை என்ன செய்யப் போகிறீர்கள்.

ழயீப் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி நீங்கள் பேசியதும் எழுதியதும் இல்லையா?

சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் மாற்றிப் பேசியதும் இல்லையா?

நீங்கள் கூறும் ழயீஃப் ஹதீஸில் அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸின் தரம் என்ன?

அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸை வைத்து அமல் செய்தோரின் நிலை என்ன?

இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லட்டும்.

Seyyed Abu Thahir Halrath

Address


Telephone

+94779545804

Website

Alerts

Be the first to know and let us send you an email when SYF - Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SYF - Kalmunai:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share