தேடல் யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • Home
  • தேடல் யாதும் ஊரே யாவரும் கேளிர்

தேடல் யாதும் ஊரே யாவரும் கேளிர் Thambiluvil news Alart

தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் தைத் திருவிழா விநாயகபுரம் மண்ணில்.... பாரபரிய விளையாட்டு நிகழ்வுகளுடன் ...... மிகவும் ப...
08/01/2024

தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் தைத் திருவிழா விநாயகபுரம் மண்ணில்.... பாரபரிய விளையாட்டு நிகழ்வுகளுடன் ......

மிகவும் பிரம்மாண்டமாகவும்
கோலாகலமாகவும்
#முத்துலெட்சுமி நகைத் தொழிலகத்தின் பூரண அனுசரணையில் நடைபெற இருக்கின்றது...
#தைத்_திருவிழா 2024

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் எமது பிரதேச பாடகர்களின் குரலிலான பாடல்கள், பரிசு மழை என தைத் திருநாளை எம்முடன் கொண்டாடுங்கள்.

எதிர்வரும் 15.01.2024 தைப் பொங்கல் தினத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் எமது #விநாயகபுரம்_முகத்துவாரத்தில் இடம்பெற உள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பூரண அனுசரணை :
திரு. சி. சஞ்சீவன்
முத்துலெட்சுமி நகைத் தொழிலகம்.
மத்திய வீதி, விநாயகபுரம் - 04.

ஊடக அனுசரணை :
Solai FM & Media

🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

#தைப்பொங்கல் |
|

|

இலங்கை விமான நிலையத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவேரை அடையாளம் காண இயந்திரம்.....குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை ...
06/01/2024

இலங்கை விமான நிலையத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவேரை அடையாளம் காண இயந்திரம்.....

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இவ் முக அடையாளம் காணும் அமைப்பு ஆனது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.......

ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்....

பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கெதிரான புதிய அவசர இலக்கம் அறிமுகம்....பெண்கள் அல்லது சிறுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள...
04/01/2024

பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கெதிரான புதிய அவசர இலக்கம் அறிமுகம்....

பெண்கள் அல்லது சிறுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் புகாரளிக்க 109 என்ற புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.....

பொது பாதுகாப்பு அமைச்சகம் இந்த 24 மணி நேர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.....

இதன்படி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறையின் போது மற்றும் சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால்109 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.....

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிக்க முயற்சி.இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறி...
01/01/2024

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிக்க முயற்சி.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக இப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

2024ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோது பிரதான உரையாற்றிய உபவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் ஆரம்பமான இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க பதிவாளர் அ.பகிரதன் பல்கலைக்கழக கொடியினை ஏற்றி வைத்தார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, தேசிய கீதத்துடன், போர் வீரர்கள் உள்ளிட்ட தாய்நாட்டுக்கான உயிர்த்தியாகம் செய்த சகலரும் நினைவுகூறப்பட்டனர்.

பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசி உரை வழங்க, பொதுச் சேவை சத்தியப் பிரமாண உறுதி மொழியினை பதிவாளர் நிகழ்த்தி வைத்தார்.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்கு குறித்து புள்ளிவிபர தரவுகள் அடங்கிய உபவேந்தரின் விளக்கம் இந்நிகழ்வில் முக்கிய இடத்தினை பிடித்திருந்தது.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது இலங்கை பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 12வது இடத்தில் இருப்பதுடன், உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 5206 உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 1 வளாகம், 1 நிறுவகம் மற்றும் 10 பீடங்களை உள்ளடக்கி 355 கல்விசார் உத்தியோகத்தர்கள் அடங்கலாக மொத்தமாக 880 ஊழியர்களுடன் சிறப்பாக இயங்குவதாகவும் குறிப்பிட்டார்.

2023ம் ஆண்டில் இது பல்வேறு முக்கிய அடைவுகளை எட்டியுள்ளதுடன், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான பகுதியில் பட்டப்பின் கற்கைகள் பீடம் நிறுவப்பட்டுள்ளதுடன், திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு திணைக்களங்கள் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

தற்போது காணப்படுகின்ற பீடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மேலதிகமாக சட்டம், பொறியியல் உள்ளிட்ட பல பீடங்களும், திணைக்களங்களையும் உருவாக்கும் முன்மொழிவுகள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்றதுடன் அவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகமானது கோப் சிற்றி, உளவள ஆலோசனை நிலையம் மற்றும் தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான பிரத்தியேக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு இந்த மாவட்டத்தில் சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் இந்தப் பிராந்திய மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முகமாக 'திறந்த தினம்' எனும் பெயரில் பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கான நிகழ்வை நடாத்தியமை பற்றியும் விபரித்தார். பிராந்திய அபிவிருத்தியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை பொதுமக்களும் மற்றும் மாவட்டத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளில் பல்கலைக்கழகத்தின் வகிபாகத்தை மாணவர்களும் நேரடியாக அவதானிக்க வாய்ப்பு இதனூடாக ஏற்பட்டுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

2023ம் ஆண்டு, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தலில் கிழக்குப் பல்கலைக்கழகம் 'பீ' தரத்தினை பெற்றுக் கொண்டமை மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு நிகழ்வை தலைமையேற்று நடாத்தியமை என்பன இந்த பல்கலைக்கழக வரலாற்றில் மைல்கற்கள் எனக் குறிப்பிட்டார்.

உலக வங்கி நிதி உதவியின் கீழ் இப்பல்கலைக்கழகத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் உலக வங்கியால் பாராட்டத்தக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வெறியேறும் பட்டதாரிகள் பல்வேறு தொழிற்துறைகளில் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாற்றி வருவதுடன், இப்பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளின் வேலையின்மையை குறைக்கும் செயற்பாடுகள் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கல்விச் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு 2023ம் ஆண்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதாகவும், வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் பொருட்டு வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2023 ஆண்டைய கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளின் முக்கிய அடைவுகளாக இப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் 54 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச தளங்களில் வெளிவந்துள்ளதுடன், விஞ்ஞான ஆராய்சிக்கான 3 ஜனாதிபதி விருதுகள் கிடைக்கப் பெற்றதாகவும், இதில் இரு விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக முதுமானி மாணவர் ஒருவருக்கும் விருது கிடைத்துள்ளது.

இப்பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவிலாக காப்புரிமை கிடைத்துள்ளது. அத்துடன் பனை ஓலையில் எழுதப்பட்ட 27000 கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன உலகிற்கு ஏற்றால்போல் தயார்படுத்தல் மற்றும் ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் நிதி நிலையைக் கவனத்திற் கொண்டு பல்கலைக்கழக செயற்பாடுகளை குறைந்தளவு நிதிகளைப் பயன்படுத்தி உச்ச அளவிலான அடைவுகளை எட்ட முயற்சித்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதில் பிரதி உபவேந்தர், நிதியாளர், பீடாதிபதிகள், நூலகர், சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், திணைக்கள தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்..

அம்பாறை மாட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும  அடைமழையினால் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில்04 ...
30/12/2023

அம்பாறை மாட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும அடைமழையினால் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில்04 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 04 மற்றும் காயத்திரி கிராமம் சேவகர் பிரிவு 01 குடியிருப்புகளிலும் தற்போது பெய்து வரும் அடைமழையினால் வெள்ளநீர் உட்புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது ...

சிலர் உறவினர்களின் வீடுகளிலும தஞ்சம் புகுந்துள்ளார்கள்....

தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவகின்றது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது l.

அதிகாரி இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க்வேண்டுஎன பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....

JK.JATHURSAN
THAMBILUVIL

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பவில்லை......இந்து சமுத்திரத்தில் இன்று (30) மு.ப. 10.49 மணியளவில் 6.6 ரிச...
30/12/2023

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பவில்லை......

இந்து சமுத்திரத்தில் இன்று (30) மு.ப. 10.49 மணியளவில் 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்துனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் (2.50N, 92.84E) கடலிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

ஜே.கே.யதுர்ஷன்...
தம்பிலுவில்...

DMC Ampara......2023/12/30

மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்...
29/12/2023

மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பு இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது.

முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஏந்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன.

இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவு 5.2 மற்றும் 5.0) 10 கிலோ மீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவு) 7.7 கிலோ மீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது......

ஜே.கே.யதுர்ஷன்....
தம்பிலுவில்...

29/12/2023

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் கரடிதாக்குதலுக்கு இலக்காகிய தந்தை மகன்.....

இன்று வெள்ளிக்கிழமை (29) காலை திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டு பகுதியில் தந்தையும் மகனும் விறகு எடுப்பதற்காக வனப்பகுதியினூள் சென்ற வேளை இருவருக்கும் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் ...

இவர்களுக்கு தலை ,கழுத்து , கால் மற்றும் கையிலும் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் விரைவாக பிரதேச வாசிகளின் உதவியுடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

மேலும் இத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் கரடி தாக்குதலுக்குள்ளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அப்பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்....

இவர்கள் இருவரும் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 14வீதியை தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றுது....

JK.JATHURSAN
THAMBILUVIL

நாம் மறந்த தமிழர் பாரம்பரிய உணவு மீண்டும்....இதோ தம்பிலுவில், மத்திய சந்தை சதுக்கத்தில் Sri Sathya Sai Overseas Organiza...
27/12/2023

நாம் மறந்த தமிழர் பாரம்பரிய உணவு மீண்டும்....இதோ தம்பிலுவில், மத்திய சந்தை சதுக்கத்தில் Sri Sathya Sai Overseas Organization.SL அனுசரணையுடன் நாளை 28.12.2023 காலை 9.30 மணியளவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு பாரம்பரிய உணவு....

திருகோணமலையில் உயரமான கிறிஸ்மஸ் மரம்!கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில...
26/12/2023

திருகோணமலையில் உயரமான கிறிஸ்மஸ் மரம்!

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

JK.JATHURSAN
THAMBILUVIL...✍️

அம்பாறையில் பாரியளவான ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது...அம்பாறை பொலிஸ்  நிலையப் பொலிஸ் பரிசோதகருக்கு  தனி நபர் ஒருவர் வழங...
25/12/2023

அம்பாறையில் பாரியளவான ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது...

அம்பாறை பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகருக்கு தனி நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை பிரதேசத்திற்கு பாரியளவான ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்து விற்பனை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...

இவரிடம் இருந்து இருபது இலட்சத்திற்கும் அதிக பெறமதியான ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா போதை பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளதா அம்பாறை தலைமை பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் . .

மேலும் இவ் விசேட நடவடிக்கையில் போதைப்பொருளை பெற்று கொள்ள வந்த ஏழு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இவ் நடவடிக்கையினை அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் அசேல கே.ஹேரத் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளர்.
இச் கைது தொடர்பில் கிழக்குமாகாண பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் திரு.ஜயபத்ம ஆகியோர் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.....

ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...

மதுபான சாலைகள் பூட்டு...🚨🚫🚫கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, கிறிஸ்மஸ் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன...
23/12/2023

மதுபான சாலைகள் பூட்டு...🚨🚫🚫

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, கிறிஸ்மஸ் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் மூடப்படும்.....

The BOC ATM (BOC SMART) located in the Alaiyadivembu Divisional Secretariat premises is officially opened for public use...
21/12/2023

The BOC ATM (BOC SMART) located in the Alaiyadivembu Divisional Secretariat premises is officially opened for public use today......
2023/12/21...✍️❤️🇱🇰

2024ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தெரிவு......2024ஆம் ஆண்டுக்கா...
21/12/2023

2024ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தெரிவு......

2024ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உபதலைவராக நீதிபதி எஸ்.எச்.எம்.என்.லக்மாலி, செயலாளராக நீதிபதி எச்.ஏ.டி.என். ஹேவாவாசம், பொருளாளராக நீதிபதி கே.ஏ.டி.கே.ஜெயதிலக்க மற்றும் உப செயலாளராக நீதிபதி டபிள்யூ.டி.விமலசிறி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நீதிபதி இளஞ்செழியன் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஜே.கே.யதுர்ஷன்
தம்பலுவில்....

අසභ්‍ය දර්ශන නැරඹීමට හසුවීමේ නව පුරුද්ද!* 2023 වසරේ සයිබර් අවකාශය හරහා ළමා අපචාර 98,000ක් වාර්තා වී ඇති බව නියෝජ්‍ය පොලි...
20/12/2023

අසභ්‍ය දර්ශන නැරඹීමට හසුවීමේ නව පුරුද්ද!*

2023 වසරේ සයිබර් අවකාශය හරහා ළමා අපචාර 98,000ක් වාර්තා වී ඇති බව නියෝජ්‍ය පොලිස්පති රේණුකා ජයසුන්දර මහත්මිය පැවසුවාය.

2022 දී සයිබර් අවකාශය හරහා ළමා අපචාර පිළිබඳ පැමිණිලි 146,000 ක් ලැබී ඇති බව ඔහු සඳහන් කළේය.

ඊයේ (19) පැවති ප්‍රවෘත්ති සාකච්ඡාවට එක්වෙමින් ඔහු ඉහත අදහස් පළ කළේය....

*ஆபாச படங்களை பார்த்தால் கையும் களவுமாக சிக்கும் புதிய நடைமுறை!*

2023 ஆம் ஆண்டில் சைபர் ஸ்பேஸ் ஊடாக 98,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், சைபர்ஸ்பேஸ் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 146,000 முறைப்பாடுகள் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்,

“சைபர் ஸ்பேஸ் மூலம் எங்கள் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் பராமரிக்கப்படும் டேட்டா சிஸ்டம் தொடர்பாக காவல்துறையின் குழந்தைகள் மற்றும் மகளிர் துறையினர் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தரவு அமைப்பு ‘காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச மையம்’ என்று அழைக்கப்படுகிறது.”

“ஒரு நபர் ஒரு குழந்தையின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனைத்து சமூக ஊடகங்களிலும் அல்லது சைபர்ஸ்பேஸிலும் வெளியிட்டு, அவற்றை இந்த சமூக ஊடகங்களில் விநியோகித்தால், அல்லது இதுபோன்ற வீடியோக்களை அடிக்கடி பார்த்தால், அந்தத் தகவல் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்படும். சைபர்ஸ்பேஸில் அந்த தகவலை கணினியுடன் பகிர்ந்து கொள்கிறது.

“இந்த தரவு அமைப்பு இந்தத் தகவலை தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் குழந்தை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்புகிறது.”

“இந்த நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது… உங்கள் நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கின்றன. இணையதளம் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதன் மூலம் இலங்கைக்கும் இந்த தொடர்பு கிடைத்துள்ளது”

“2022 ஆம் ஆண்டில், குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்களை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிட்டது தொடர்பான 146,000 அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

11போதை மாத்திரைகள் மற்றும் 55 தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக வீஞ்ஞான பீட மாணவன் விசேட அதிரடி படையினரால் கை...
20/12/2023

11போதை மாத்திரைகள் மற்றும் 55 தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக வீஞ்ஞான பீட மாணவன் விசேட அதிரடி படையினரால் கைது.....

போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் புகையிரத கடவைக்கு அண்மித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையில் முற்றுகையிட்டு விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை இவ் பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...

ஜே.கே.யதுர்ஷன்....

ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் கஞ்சன...!!!!🚨🚨🚨🚨ஜனவரி மாதம்  மின் கட்டண மறுசீரமைப்பு இடம்பெறும் போது மின் க...
19/12/2023

ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் கஞ்சன...!!!!🚨🚨🚨🚨

ஜனவரி மாதம் மின் கட்டண மறுசீரமைப்பு இடம்பெறும் போது மின் கட்டணம் குறைக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் கல்வி வலயத்தின் 18 புதிய அதிபர்கள்....நாளை (18) முதல் 18 அதிபர்கள் பாடசாலைகளுக்கு... மிக நீண்ட காலத்தின் பி...
17/12/2023

திருக்கோவில் கல்வி வலயத்தின் 18 புதிய அதிபர்கள்....

நாளை (18) முதல் 18 அதிபர்கள் பாடசாலைகளுக்கு...

மிக நீண்ட காலத்தின் பின் அதிகளவு அதிபர்கள் தெரிவாகி உள்ளமை இவ்வாண்டாகும்... ஒரு மாத கால பயிற்சிகளின் பின்னதாக இணைக்கப்படும் அதிபர்களில் 4 பேர வலயத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கும் ஏனையோர் மாகாணப் பாடசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு எமது பிரதேச சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். .

திருக்கோவில் பிரதேசத்தில் வளவு ஒன்று விற்பனைக்கு.....வீடு வளவு விற்பனைக்கு உண்டு               இடம் : காயாத்திரி கிராமம்...
16/12/2023

திருக்கோவில் பிரதேசத்தில் வளவு ஒன்று விற்பனைக்கு.....

வீடு வளவு விற்பனைக்கு உண்டு இடம் : காயாத்திரி கிராமம் திருக்கோவில் :04. 14ம் வீதி தொடர்புக்கு: 0753441778

நீளம் 95....
அகலம்50....

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுவிண்ணப்ப முடிவுத்திகதி 16/01/2024 Ext...
16/12/2023

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

விண்ணப்ப முடிவுத்திகதி 16/01/2024


External Degrees
B.A
BB.A
B.Com

மழை மற்றும் காற்று...!!!   15 டிசம்பர் 2023அலை வடிவ வளிமண்டல இடையூறு காரணமாக...!!!மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் எ...
15/12/2023

மழை மற்றும் காற்று...!!!
15 டிசம்பர் 2023

அலை வடிவ வளிமண்டல இடையூறு காரணமாக...!!!

மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மிமீ க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ள திருக்கைலாய ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் சிவநெறி ப...
15/12/2023

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ள திருக்கைலாய ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் சிவநெறி பிரச்சாரகர் அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்❤️ அவர்கள்
2023/12/17/18/19 ஆகிய தினங்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ள இடங்கள்.!!!!

👇👇👇👇👇👇❤️!!!!

JK.JATHURSAN
THAMBILUVIL.....

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்......✍️✍️தற்போது சுகததாச அர...
15/12/2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்......✍️✍️

தற்போது சுகததாச அரங்கில் இடம்பெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது......!!✍️✍️✍️

மலையகமலரின்  சாதனை....✍️✍️✍️குவியும் பாராட்டுக்கள்.....❤️🙏கம்பளையை சேர்ந்த  லெட்சுமணப் பெருமாள் தேவர் அவர்களின் பேத்தியு...
15/12/2023

மலையகமலரின் சாதனை....✍️✍️✍️
குவியும் பாராட்டுக்கள்.....❤️🙏

கம்பளையை சேர்ந்த லெட்சுமணப் பெருமாள் தேவர் அவர்களின் பேத்தியும் இராஜேந்திரன் உமாமகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியுமான கீர்த்தனா (LLB) அவர்கள்
இன்று கம்பளை மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

வாழ்த்துக்கள் சகோதரி...🎁❤️🙏🙏❤️

AL சித்தியினைப் பெற வழிகாட்ட யாழில் இருந்து அக்கரைப்பற்றுக்கு....2023/ AL BIO MATHS...பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களு...
29/11/2023

AL சித்தியினைப் பெற வழிகாட்ட
யாழில் இருந்து அக்கரைப்பற்றுக்கு....

2023/ AL BIO MATHS...பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான

இறுதிக் கருத்தரங்கு......2023

இடம் ஹல்லாஜ் மண்டபம் மாநகரசபை அக்கரைப்பற்று.....
காலம்11/12/2023 ,12/12/2023
ஆகிய தினங்களில்....

நேரம் காலை 8.00Am மணிமுதல்....

தொடர்புகளுக்கும் பதிவுகளுக்கும்
0775471333,0779285679

🚨வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் மழை நிலை அதிகரிக்க வாய்ப்பு- வடகீழ் பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக நிலைகொள்கி...
29/11/2023

🚨வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் மழை நிலை அதிகரிக்க வாய்ப்பு
- வடகீழ் பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக நிலைகொள்கிறது♦♦♦🇱🇰🇱🇰🇱🇰⛈️⛈️💦

– சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி⛈️⛈️⛈️

✍️தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

✍️வடகீழ் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

✍️வடக்கு, கிழக்கு, தென்,வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

✍️நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

✍️கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

✍️இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

JK.JATHURSAN. ...
2023/11/29

RN சொந்தங்களுக்கு வணக்கம் 🙏❤நன்றிகளுடன் 🙏உங்கள் நிகரற்ற அன்பினாலும் ஆதரவினாலும் " RN CD HOME "  2023 டிசம்பர் 01 திகதி த...
28/11/2023

RN சொந்தங்களுக்கு வணக்கம் 🙏❤

நன்றிகளுடன் 🙏

உங்கள் நிகரற்ற அன்பினாலும் ஆதரவினாலும்

" RN CD HOME " 2023 டிசம்பர் 01 திகதி தனது 15 வது அகவையில் தடம் பதிக்க இருக்கிறது.❤🎉🙏

இது வரையில் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் ஆலோசனைகளுக்கும்
விமர்சனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏❤

இதே போன்று உங்கள் ஆதரவினைத் தொடர்ந்தும் நாடியவனாக......!

RN CD HOME ன் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

2023/11/29
புதன்கிழமை
2023/11/30 வியாழக்கிழமை
2023/12/01
வெள்ளிக்கிழமை

இம் மூன்று நாட்கள் மட்டுமே...

அனைத்து Unlimited (Dialog, Airtel, Hutch & Mobitel)
Data & Voice SIM Card
200/= ரூபாவிற்கு வழங்கப்படும்.

அத்துடன் 15 வகையான பொருட்களுக்கு விசேட விலைக் கழிவு

01.Duckbill Mask 3 Ply With Earloop - 10/=

02.KN 95 5 Layers Protection Mask - 20/=

03.Card Reader - 50/=

04.Pubg & Free fire Finger Gloves-100/=

05.OTG-150/=

06.Audio Video high quality cable - 150/=

07.Mi Earphones Basic(with Mic) Ultra - Deep Bass - 200/=

08.Fashion Phone Case -250/=

09.Intellect Charging Cable (Type C,Micro & Lightning) - 300/=

10.Nokia 5c,4c Phone Battery - 300/=

11.Phone Charger Top - 450/=

12.Sun Glass-450/=

13.Super Fast Home Charger (Type C,Micro & Lightning) - 650/=

14.32GB Pen Drive-1350/=

15.Nokia 105 Phone - 3250/=

இதுவரைகாலமும் வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அன்பினை மேலும் பன்மடங்கு நாடியவனாக......!🙏

நன்றிகளுடன் 🙏❤

N.A.LOJAN,

CD HOME,
MAIN STREET,
THAMBILUVIL_ 2

0772858406

28/11/2023

இந்தியா தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான திருவள்ளுவர் சிலை....

கன்னியாகுமாரியின் மிக சிறப்பான அம்சமாக கன்னியாகுமரி பல்வேறு வழிகளில் சிறப்பு வாய்ந்த இடமாகும். இது இந்தியாவின் பெருநிலப்பரப்பின் தென்கோடி முனையாகும். மூன்று முக்கிய நீர்நிலைகள் - அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் - கன்னியாகுமரியில் இங்கே சங்கமிக்கிறது. இத்தகைய புவியியல் ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்ட இடம் அரிதானது மற்றும் இந்த அம்சங்கள் கன்னியாகுமரியை இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக ஆக்குகின்றன.

Kanniyakumari is a special destination in many different ways. It is the southernmost tip of the mainland of India. Three major water bodies – the Arabian Sea, Bay of Bengal and the Indian Ocean – converge right here in Kanniyakumari. Such a geographically blessed destination is rare and these features make Kanniyakumari one of the most visited places in India annually.

கிருஷ்ணரின் சகோதரியாகக் கருதப்படும் இந்து தெய்வமான கன்னியாகுமரியின் பெயரால் இந்த இடம் அதன் பெயரைப் பெற்றது. டச்சு கிழக்கிந்திய கம்பெனி போர்த்துகீசிய கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து போர்த்துகீசிய இலங்கையைக் கைப்பற்றியபோது, ​​கன்னியாகுமரி என்ற பெயர் கொமோரின் என்று சுருக்கப்பட்டது. இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​இந்த இலக்கு கேப் கொமோரின் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு இதனை கன்னியாகுமரி என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.....

The place gets its name from the Hindu goddess Devi Kanniyakumari, who is considered to be the sister of Lord Krishna. When the Dutch East India Company conquered Portuguese Ceylon from the Portuguese East Indies, the name Kanniyakumari was shortened to Comorin. Eventually during the British regime in India, the destination began to be called Cape Comorin. Later, the Government of India renamed it as Kanniyakumari.

தேடல்...✍️✍️✍️🇱🇰❤️🇮🇳

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்...தனிப்பட்ட விஜயமாக தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவு முன்னாள் ஜ...
28/11/2023

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்...

தனிப்பட்ட விஜயமாக தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பானது நேற்றைய தினம்(27)இடம்பெற்றுள்ளது.....

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு  பகுதியில் இடம்பெற்ற போரில் உயிர் நீர்த்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொட்டும் மழை...
28/11/2023

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற போரில் உயிர் நீர்த்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாது இடம்பெற்றது.....

Address


Telephone

+94755090027

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேடல் யாதும் ஊரே யாவரும் கேளிர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share