WINN TV

WINN TV WINN TV is the web hosting News Media in Srilanka Founded 2023.

04/12/2024

உதவிக்கரம் கோர்க்க இணைந்திடுவீர்..

04/12/2024

கடந்த தேர்தல் தந்த பாடம் என்ன??உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்..

04/12/2024

Aged just number...expert football player..

02/12/2024

வெள்ளத்தினால் ஏற்ப்பட்ட மாவடிச்சேனை விபத்தில் சிக்கி உயிர்தப்பிய மாணவரின் உருக்கமான கண்ணீர் கதை!!!

உச்சம் தொட்ட தேங்காய் விலை...200/=
02/12/2024

உச்சம் தொட்ட தேங்காய் விலை...
200/=

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குச்சவெளி மக்களுக்காக எவர்கிரீன் எனும் அமைப்பினர்களின் உதவியுடன் உணவு பார்சல்கள் இன்று (29)க...
29/11/2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குச்சவெளி மக்களுக்காக எவர்கிரீன் எனும் அமைப்பினர்களின் உதவியுடன் உணவு பார்சல்கள் இன்று (29)கொடுக்கப்பட்டது.

29/11/2024

மட்டக்களப்பு வெள்ளக்காடு..

26/06/2024

பெண் வேடம் அணிந்து வந்த ஆண்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூதுரைச் சேர்ந்த நபர் என சந்தேகிக்கப்படுகின்றது..முள்ளிப்பொத்தானையில் சம்பவம்.

26/06/2024

பெண் வேடம் அணிந்து வந்த ஆண்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூதுரைச் சேர்ந்த நபர் என சந்தேகிக்கப்படுகின்றவர் முள்ளிப்பொத்தானையில் கைது.

 : ஐ.நா வில் பாலஸ்தீன தீர்மானம் பெரும் வெற்றி - பாலஸ்தீன மக்கள் கொண்டாட்டம்.ஐ.நா.வில், பாலஸ்தீனத்தின் உரிமைகளை விரிவுபடு...
11/05/2024

: ஐ.நா வில் பாலஸ்தீன தீர்மானம் பெரும் வெற்றி - பாலஸ்தீன மக்கள் கொண்டாட்டம்.

ஐ.நா.வில், பாலஸ்தீனத்தின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான

தீர்மானம் 143 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது -

143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன,

ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன,

25 வாக்களிக்கவில்லை.

சுமார் 5கோடி பெறுமதிவாய்ந்த "குஷ்"போதைப்பொருளுடன் இலங்கை  கட்டுநாயக்க விமாண நிலையதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்..சந்தேக...
10/05/2024

சுமார் 5கோடி பெறுமதிவாய்ந்த "குஷ்"போதைப்பொருளுடன் இலங்கை கட்டுநாயக்க விமாண நிலையதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்..சந்தேக நபர் தமது பயணப்பொதிக்குள் மிகவும் சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்தார்.

FOLLOW THE TRUTHLogoHome  உள்நாடுஉள்நாடுபேருவளையில் பாரிய குப்பை மேடு – உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்By Shahira...
08/05/2024

FOLLOW THE TRUTH

Logo
Home உள்நாடு
உள்நாடு
பேருவளையில் பாரிய குப்பை மேடு – உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்
By Shahira -08/05/2024 18:34219

பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளை அகற்றும் முறையினால் பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குப்பை மேட்டினால் மீத்தொட்டையில் நடந்ததைப் போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்தக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளதாக தெரிவித்தார்.

பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

08/05/2024
05/05/2024

யாருக் தெரியும் ...இந்த விசில் மொழி...துருக்கி நாட்டின் சில கிராமத்தவரின் தொடர்பாடல்..

குறிஞ்சான்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவிகளுடனும் பெண் ஆசிரியைகளுடனும் பாலியல் சேட்டை செய்து பாதிக்கப்பட்ட தரப்பி...
04/05/2024

குறிஞ்சான்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவிகளுடனும் பெண் ஆசிரியைகளுடனும் பாலியல் சேட்டை செய்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறையிட்டு விசாரணை நடத்தி காம லீலை மன்னன் உடற் கல்வி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் என்ன என்பதை வலயக் கல்வி அலுவலகம் மக்களுக்கு தெளிவு படுத்துமா ?
விசாரணைக்கு தலமை தாங்கிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் காம ஆசிரியருக்கு சார்பாக நடந்து கொண்டாராம் காரணம் அந்த ஆசிரியர் இவரின் நெருங்கிய உறவு முறையாம்.
அதிகாரிகளே இன்று மாணவிகளுக்கு நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கலாம் உரியவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரைக்கும் நாம் அவதானிப்புடன் இருப்போம்

உலக பத்திரிகை சுதந்திர நாள்.======================உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை...
03/05/2024

உலக பத்திரிகை சுதந்திர நாள்.
======================

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம்  *110டிகிரி வரை* அதிகரிக்க வாய்ப்பு!!! வெயில் அதிகரிக்கும் போது...
01/05/2024

இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் *110டிகிரி வரை* அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.
காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.
மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.

உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம்.

மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

_அரசு சுகாதாரத் துறை

25/04/2024

வேன் மோதி மாணவி காயம்
--------------------------------------
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றையதினம் குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த 32 வயதுடைய வேன் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Address

Trincomalee
31000

Telephone

+94715736975

Website

http://www.winntv.lk/, http://www.winntv.lk/, http://www.winntv.lk/

Alerts

Be the first to know and let us send you an email when WINN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WINN TV:

Videos

Share