29/12/2022
கலப்பு முறை உள்ளூராட்சி தேர்தல் விளக்கம்
1. கலப்பு முறை தேர்தல் என்பது வட்டாரமும்(60விகிதம்) விகிதாசாரமும் (40விகிதம்)அடங்கியது.
2. வட்டாரத்தில் இருந்து வெற்றி அடையும் கட்சி அல்லது சுயேட்சைக்குழு உறுப்பினர் தெரிவாவார்.
3. வட்டாரத்திற்க்கு வேறான வேட்பு மனுவும் விகிதாசாரத்திற்க்கு வேறு வேட்புமனுவும் சர்ப்பிக்க வேண்டும். விகிதாசாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர்கள் அல்லாதவர்களும்,வட்டாரத்தில் தோற்றவர் கூட தெரிவு செய்யும் அதிகாரம் கட்சிக்கு உண்டு.
4 வேட்புமனுவில் குறைந்தது 25விதமான பெண்கள் பெயரை குறிப்பிட வேண்டும் , இளைஞர்கள் பெயர் கட்டாயமில்லை.
அங்கத்தவர்களை தெரிவு செய்யும் முறை
1. வட்டாரத்தில் அதிகூடிய வாக்கைப்பெற்ற அணியின் வட்டாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டவர் தெரிவாவார்.
2. இவ்வாறு ஒவ்வொரு வட்டாரமும் தேர்வு நடைபெற்று மொத்த வாக்கு மொத்த தொகை கணக்கிடப்படும் உ+ம் தம்பலகாம பிரதேச சபையில் அளிக்கப்பட்ட மொத்தவாக்கு 15,000 எனில் அந்த பிரதேச சபை மொத்த உறுப்பினர் 15 எனில் ஒரு ஆசனத்திற்கான வாக்கு 1000 . இந்த 1000 தால் கட்சி பெற்ற வாக்கு பிரிக்கப்படும் உ+ம் SLMC 10,000 வாக்குகள் பெற்றால் அவர்களுக்கு கிடக்க வேண்டிய மொத்த ஆசனம் 10 ஆகும் ஆனால் SLMC ஏழு வட்டாரத்தில் வெற்றியடைந்து 7உறுப்பினர் கிடத்தால் 3உறுப்பினர்கள் மட்டுமே விகிதாசாரத்தில் வழங்கப்படும்
3. ஒரு வட்டாரமும் வெற்றியடையாமல் உ+ம் ACMC மொத்தாமாக 1000 அல்லது பெற்றால் அவர்களுக்கும் விகிதாசாரத்தில் ஒரு ஆசனம் வழங்கப்பட வேண்டும்.
4. இதில் பெண் பிரதி நிதித்துவம் 25% விகிதம் எனில் 4 அங்கத்தவர் எனில் , மூன்று அங்கத்தவர்களுக்கு குறைவாக உறுப்பினர்கள் கொண்டவர்களுக்கும்,மொத்த வாக்கில் 20வ விகித வாக்கிற்க்கு குறைவான வாக்கை பெற்ற கட்சிக்கும் அவசியமில்லை. சில வேளை 25 % விகிதத்திற்க்கும் குறைவான பெண் அங்கத்தவர்கள் அமையவும் சந்தர்ப்பம் உள்ளது
5. மொத்த ஆசனத்தில் அதிக ஆசனம் 50% அரைவாசிக்கு மேல் அங்கத்தவர்களை கொண்ட கட்சி தவிசாளரும் ஆட்சியும் அமைக்கும்
6. இந்த முறையால் அதிகமான சபைகள் தனித்து ஆட்சி அமைப்பதில் பல சிக்கல் நிலை காணப்பட்ட வாய்ப்புகள் உள்ளது . இதனால் சிறு சிறு கட்சிகளின் ஆதரவு அவசியமாகலாம்.
7.இரட்டை அங்கத்தவர் அல்லது மூன்று அங்கத்தவர் வட்டாரத்தில் இருந்து வெற்றிபெற்ற கட்சியில் இருந்து இருவ்ர் ,அல்லது மூவர் தெரிவாவர்.