The Competitive Exams - Srilanka

The Competitive Exams - Srilanka We provide guides and Tips for All government competitive exams in Srilanka

15/09/2021

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்றார்…

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
15.09.2021

25/08/2021

Time and work | வேலை மற்றும் நேரம்.
More Question 👇👇👇👇
https://youtu.be/T7hg4K9nQCE

22/08/2021

IQ & Aptitude Exam practice Questions

19/08/2021

IQ Practice Question

உலகளாவிய கற்கைப் பங்களிப்புக்களுக்காக நோர்வேயின் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் நிதியனுரணையின் கீழ் நோர்வே ஆக்ரிக் பல்கலைக...
04/08/2021

உலகளாவிய கற்கைப் பங்களிப்புக்களுக்காக நோர்வேயின் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் நிதியனுரணையின் கீழ் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகத்தால் 'கடற்றொழில், நீர் வேளாண்மை மற்றும் நீர் விஞ்ஞானம் தொடர்பான புத்தாக்க வலையமைப்பு' எனும் பெயரிலான கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த கருத்திட்டத்தின் எமது நாட்டின் பங்காளர்களாக உருகுணை பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தேசிய நீர் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) போன்ற நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த நிறுவனங்கள் மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் மற்றும் எமது நாட்டு நிறுவனங்களுக்கிடையே கூட்டு ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பினருக்கும் பயன்கள் கிடைக்கும் வகையில் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்துதல், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் சர்வதேச புரிந்துணர்வுகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் ...
04/08/2021

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் மற்றும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகைகளை கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• உயிரிழப்புக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்சம் ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

• முழுமையான அங்கவீனத்திற்கு ஆளாகும் நபரொருவருக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்ச ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

• பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் காயங்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 75,000/- ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை 150,000/- ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

• காட்டு யானைகளின் தாக்குதல்களால் இடம்பெறும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த ஒரு இலட்ச ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகபட்ச 02 இரண்டு இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

30/07/2021

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு…

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இது பற்றி பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு, சில தினங்களுக்குள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையில் செயற்படுவதும் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகுமென, ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வருகை தரும் மக்கள், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் கொவிட் குழு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயக்கொடி. சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.30

உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு…இம்முறை இடம்பெறும் மெய்நிகர் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி ...
17/07/2021

உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு…

இம்முறை இடம்பெறும் மெய்நிகர் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் பங்குபற்றினார்.

தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகள் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஜம்போரி மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மூன்று நாட்கள் (16, 17 மற்றும் 18)> உலகெங்கிலும் இருந்து நூறு நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட சாரணர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

“கலாசார ரீதியாக ஒரே சாரணர் உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரியின் மூலம், தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில், வீடுகளில் இருக்கும் சாரணர்களுக்கு கலாசார ரீதியாக பல்வேறு புத்தாக்க நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள், எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சவால்களாகும். இந்த எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்தார்.

எமது வாழ்வொழுங்கை மாற்றிக்கொள்வதற்கு எம்மைக் கட்டாயப்படுத்தும் உலகளாவிய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில், அதனை ஒரு சவாலாகக் கருதாது, தற்போதைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரணர் இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு, எளிய ஆனால் ஆழமான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது” என, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு நாடுகளுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பெறுமானங்களை உள்ளடக்கிய ‘உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி’, இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (16) பிற்பகல் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனித்துவமான கலாசார வேறுபாடுகள் மற்றும் பாரம்பரியங்களை ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்வது, எதிர்கால உலகளாவிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அடித்தளமாக அமையும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும இடையில் ஏற்படுத்தப்படும் உறவுகள், எதிர்காலத்தில் தெளிவான உலகளாவிய நிலைப்பாட்டுக்கு காரணமாக அமையும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சாரணர் வரலாற்றில் முதன் முறையாக இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறும் சர்வதேச சாரணர் ஜம்போரிக்கு, சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளதாக, ஜம்போரி ஆலோசகர் உலக சாரணர் குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் விசேட அதிதியாக, உலக சாரணர் குழுவின் தலைவர் கிரேக் டேர்பி (Craig Turpie) பங்குபற்றினார். உலக சாரணர் சங்கத்தின் தலைவர்கள், ஏனைய நாடுகளின் சாரணர் ஆணையாளர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.17

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டம் பற்றி மஹா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்…கொவிட் - 19 ஒழிப்ப...
17/07/2021

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டம் பற்றி மஹா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்…

கொவிட் - 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பில், பௌத்த மஹா சங்கத்தினருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.

ஜனவரி மாதம் 28ஆம் திகதியன்று, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி கிடைக்கப்பெற்றது முதல், இதுவரையில் கிடைத்துள்ள அனைத்துத் தடுப்பூசிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மூலம், ஓகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் வழங்கி முடிக்க முடியுமெனவும், ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், “கண்டி ஸ்ரீ தலதா பெரஹராவுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம், நாட்டின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளைபட பாராட்டியுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில், தெற்காசிய நாடுகளின் வரிசையில், இலங்கையே முன்னணியில் இருக்கின்றது” என்றும், ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பௌத்த ஆலோசனை சபை, 11ஆவது தடவையாக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதுபற்றித் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகுமென்றும், ஜனாதிபதி அவர்கள் இதன்போது எடுத்துரைத்தார்.

“கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்க வேண்டி ஏற்படும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இதன்போது, கொவிட் ஒழிப்புக்காக ஆரம்பம் முதல் ஜனாதிபதி அவர்கள் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பாராட்டிய மஹா சங்கத்தினர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நோக்கங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டி, சமூகத்தில் பரவி வரும் பிழையான தகவல்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

பெளத்த ஆலோசனைச் சபையின் உறுப்பினர்களான மஹா சங்கத்தினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.17

நோய்வாய்ப்பட்டு, வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை…நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு ...
16/07/2021

நோய்வாய்ப்பட்டு, வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை…

நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தகவல்களைப் பெற்று, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில், கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இனங்காணப்பட்டுள்ள கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களில் அதிக சதவீதமானோர், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது தொடர்பில் அறிவூட்டுவது குறித்தும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்ற முடியுமென, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் எடுத்துரைத்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளன. எனவே, குறித்த துறைகளில் விசேடமான எழுச்சியைக் காண முடியுமென, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எந்தவொரு துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்குத் தடுப்பூசி ஏற்றும் எந்தவோர் இடத்திலும், இலகுவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஆயுர்வேத மத்திய நிலையங்களில் கொவிட் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடிந்துள்ளதாக, சுதேச மருத்துவத்துறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். இங்கு சிகிச்சைப் பெற்ற எவரும் மரணமடையவில்லை என்பதுடன், விரைவாகக் குணமடைந்திருப்பது பற்றிய விசேட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அமைச்சர் ரமேஷ் பத்திரன எடுத்துரைத்தார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, சுதேச ஔடதங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன, ரோஹித்த அபேகுணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே. திளும் அமுனுகம, சிசிர ஜயக்கொடி, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.16

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பம்; கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்...“தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உரு...
15/07/2021

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பம்; கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்...

“தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவேன்”


ஜனாதிபதி தெரிவிப்பு …

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்தின் மற்றுமோர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அடுத்த சில வாரங்களில், அதற்கான பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.cu.ac.lk), “2021 - உலக இளைஞர் திறன் தினம்” கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் (15), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள், பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்றனர். அவர்களில், பொருளாதார ரீதியாக வசதியுள்ள மாணவர்கள், தனியார் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறார்கள். உயர்தரத்தில் சித்தி பெற்றும், ஆனால் பொருளாதார ரீதியாக வசதியில்லாத திறமையான மாணவர்களுக்கு, தொழில் சந்தைக்கு ஏற்ற பட்டப்படிப்பினை வழங்குவதையே, இந்தப் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்க்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்துவமான, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தொழில் சந்தைக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பட்டப்படிப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். பட்டப்படிப்பின் நிறைவில், அறிவு மற்றும் தொழிற்றிறன் நிறைந்த எதிர்காலப் பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள் என்று, திறன் விருத்தி, தொழிற்கல்வி மற்றும் புத்தாக்கத்துறை இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு இன்மையானது, 2014இல் 4 சதவீதமாகக் குறைவடைந்த போதும், 2019ஆம் ஆண்டில் அது, 16 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய நிலைமை காரணமாக, இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 30 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்றும் பட்டப்படிப்பின் மூலம் திறமையான இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இளைய தலைமுறையினர், புதிய தொழில்நுட்பத்துடன் நவீனத்துவத்தை நோக்கி பயணிக்கின்றனர். இதன் போது, உலகுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்வது முக்கியம் என்றும் இறுதியில் வெற்றிகொள்ள வேண்டியது வாழ்க்கையையே அன்றி, தொடர்ச்சியாகக் கொண்டுவரும் பழக்கங்களை அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு பட்டதாரியின் எதிர்பார்ப்பு, ஒரு நல்ல தொழில் என்ற போதிலும், எந்தவொரு தொழிலுக்கும் பொருத்தமற்றதாக உள்ள சில பட்டப்படிப்புகளை சரி செய்வது காலத்தின் தேவையாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எடுத்துரைத்தார்.

“பட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் பல பட்டதாரிகள், அரச தொழிலை எதிர்பார்க்கிறார்கள். எனினும், அரசாங்கத்தின் பொறுப்பானது, தொழில்களை வழங்குவதல்ல. மாறாகத் தொழில்களை உருவாக்கும் ஒரு விரிவான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதேயாகும்” என்று, ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய அல்லது சுய தொழிலில் ஈடுபடக்கூடிய அறிவுள்ள ஒரு நபரை, பட்டப்படிப்பின் முடிவில் உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பாகும்” என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

“நூற்றுக்கு நூறு சதவீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது. இருப்பினும், தனியார்ப் பல்கலைக்கழகங்களை ஒரு வியாபாரமாக நடத்துவதைத் தான் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“தனியார்ப் பல்கலைக்கழகங்கள் ஈட்டும் வருமானத்தை, கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது” என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

கேகாலையில் ஆரம்பமாகும் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை, விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.15

Selected List SLAS III - (Open )
15/07/2021

Selected List
SLAS III - (Open )

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்...
13/07/2021

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கைப்பந்து, பாரம் தூக்கல், குத்துச்சண்டை, வாள் சண்டை, காற்பந்து மற்றும் ஸ்கொஷ் போன்ற விளையாட்டுத் துறைகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நிறுவனம், உயர்கல்வி விளையாட்டு நிறுவனம், விளையாட்டு சம்மேளனம் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற விளையாட்டு அமைப்புக்களுக்கிடையிலான நிகழ்ச்சித்திட்டங்கள், அனுபவங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவ...
13/07/2021

பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.

எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், குறித்த சாட்சிகள், ஒளிப்பதிவு செய்து பெற்றுக்கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999ஆம் ஆண்டு 32ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2001ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் காணொளிப் பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக, நாடளாவிய ரீதியில் ஒன்பது (09) மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டிறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்...
13/07/2021

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டிறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 08 மில்லியன்களைத் தாண்டியுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்களவு வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாக பழைய வாகனங்கள் ஆவதுடன், அவ்வாறான பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் நச்சு வாயுக்கள் வெளியிடப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மாசடைதலில் 60 வீதமானவை மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீள்பிறப்பாக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக அமைவதால், மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள் ஆரம்பம்...கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்...
12/07/2021

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள் ஆரம்பம்...

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பமானது.

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE) மற்றும் இலங்கை மூலதனச் சந்தை ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டின் முதற்கட்டம், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் பங்குக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக உறுதிப்படுத்துதல், நிறுவனச் செயற்பாடுகள் குறித்து முதலீட்டாளர்களை அறிவூட்டுதல், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுப்பது இதன் நோக்கமாகும்.

டிஜிட்டல்மயப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை விவரங்களைத் தரவிறக்கம் செய்வது விரைவுபடுத்தப்படுவதால், 65,000 புதிய முதலீட்டாளர்களையும் கடந்து, 17,000 புதிய மத்திய வைப்புத்திட்ட முறைமை கணக்குகள் (CDS) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த டிஜிட்டல்மயப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு உலகில் எந்தவோர் இடத்திலிருந்தும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், மாதாந்தக் கூற்றுகளைப் பெற்றுக்கொள்ளல், தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் என்பவற்றுடன், உள்நாட்டு நிறுவனங்களால் கணக்குகளைத் திறப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் தலைவர் துமித் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.12

சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண - மில்லேவ தோட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்…பொரளையில் உ...
09/07/2021

சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண - மில்லேவ தோட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்…

பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண - மில்லேவ தோட்டத்துக்குச் சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (09) பார்வையிட்டார்.

சிதைவடைந்த பழைய கட்டிடங்கள், அதிக நெரிசல் மற்றும் வேறு வெளிப்புறக் காரணிகளால், குறித்த சிறைச்சாலையை வேறு ஓர் இடத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டிய தேவை, நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதி மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த வீடியோ விளக்கக் காட்சியொன்று முன்வைக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, இது பற்றி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார்.

புதிய சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஹொரண - மில்லேவ தோட்டத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் சமுதாயச் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை, இந்த உத்தேச வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட உள்ளன. 'சிபிரி சுவசெத் உதான' “மில்லேவ தடுப்புக்காவல் மற்றும் சீர்த்திருத்த மத்திய நிலையம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்காக, திறைசேரியின் மூலம் நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்மொழியப்பட்டுள்ள சிறைச்சாலைத் திட்டத்தில், சிறைக் கைதிகளின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைக் கட்டிடத்தொகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை, ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

இதன்போது, ஜனாதிபதி அவர்கள் அத்தோட்டத்தில் வசிப்பவர்களைச் சந்தித்து, அவர்களது விவரங்களைக் கேட்டறிந்தார். நிர்மாணப் பணிகள் காரணமாக அவர்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடு மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர்களான அலி சப்ரி, ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, ஜயந்த சமரவீர, பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, அனூப பெஸ்குவல், லலித் எல்லாவல, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.09

இரு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு…இரண்டு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான இராஜாங்க அமைச...
08/07/2021

இரு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு…

இரண்டு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்த வகையில், சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதைகள் உற்பத்தி, உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக, சஷிந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, மொஹான் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் பிரசன்னமாகி இருந்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.08

131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வு (நேற்று) 07ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களின் தலைமையில் கௌரவ பி...
08/07/2021

131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வு (நேற்று) 07ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டடன. அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சோமாவதிய ரஜ மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் ஆகியோருக்கு அதற்கான சன்னஸ பத்திரம் வழங்கப்பட்டது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,பிரதமரின் செயலாளர் திரு காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் K.A.D.R.நிசாந்தி உள்ளிட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
202.07.08

நிதி அமைச்சராக பெசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்…பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சு பிரதமரின் கீழ்…பெசில் ராஜபக...
08/07/2021

நிதி அமைச்சராக பெசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்…

பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சு பிரதமரின் கீழ்…

பெசில் ராஜபக்ஷ அவர்கள், இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்களின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பெசில் ராஜபக்ஷ அவர்களைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பெசில் ராஜபக்ஷ அவர்கள், 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பெசில் ராஜபக்ஷ அவர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.

கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்த பெசில் ராஜபக்ஷ அவர்கள், கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.

பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பெசில் ராஜபக்ஷ அவர்கள், உள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.08

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when The Competitive Exams - Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Trincomalee

Show All