Thuraiyoor News

Thuraiyoor News இது துறையூரின் அடையாளம்...

21/11/2023

மோடி மிக மோசமானவராக இருக்கலாம், ஆனால் தோல்வியில் துவண்ட வீரர்களை தட்டிக் கொடுக்கும் மனநிலை பாராட்டத்தக்கது..!!!

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் நாடு சவூதி அரேபியா;பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண சவூதி அரேபியா முன்னெடுத்த நடவடிக்கை...
20/11/2023

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் நாடு சவூதி அரேபியா;
பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண சவூதி அரேபியா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி விளக்கம்!

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை மாறாது நிலையாக இருந்து வருகிறது. இதனை வரலாற்றைப் படிக்கும் எவரும் முழுமையாக அறிவர்.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் நாடக சவூதி அரேபியா வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளதோடு இந்தப் பிரச்சினையானது அரேபியர்களின் முதன்மையான பிரச்சனை என்றும் பாலஸ்தீனியர்கள் தாம் விரும்புவது போல் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட அவர்களின் சுதந்திர நாட்டை மீளப் பெறுதல் என்ற இலக்கை அடைந்து கொள்ளும் வரை அனைத்து அரேபியர்களும் மற்றும் முஸ்லிம்களும் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. சவூதி அரேபியா ஒரு தனி இராச்சியமாக ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை அதன் இஸ்லாமிய மதம் மற்றும் அரபு கலாச்சார கட்டமைப்பிற்குள் பாலஸ்தீனிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உழைத்து வருகிறது. பாலஸ்தீனிய பிரச்சனைத் தீர்ப்பதற்க்கான அதன் முயற்சியில் அதன் தேசிய பாதுகாப்பை பல முறை ஆபத்துக்குள்ளாகியுள்ளது. எடுத்துக்காட்டாக, பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் :

1- 1945ஆம் ஆண்டு, சவூதி அரேபியா இராச்சியத்தின் நிறுவனர், மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு கூறினார்: “பாலஸ்தீனப் பிரச்சினை முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துள்ள மிக முக்கியமான விடயமாகும்”

2- 1945ஆம் ஆண்டில் மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆகியோருக்கு இடையேயான புகழ்பெற்ற வரலாற்றுச் சந்திப்பின் போது, பாலஸ்தீனப் பிரச்சினையானது பல ஆண்டுகளாக இராச்சியத்தின் கொள்கைகளில் முதன்மையான, நிலையான பிரச்சினையாக இருக்கும் என்று புத்தகங்கள் மற்றும் கடிதங்களில் பதிவுசெய்யப்பட்ட இராச்சியத்தின் பார்வையை முன்வைத்தார்.

3- 1967 ஆம் ஆண்டு ஜூன் மாத பின்னடைவுக்குப் பிறகு, முஜாஹிதீன்கள் மற்றும் பாலஸ்தீன உயிர்த் தியாகிகளின் குடும்பங்களுக்கு உதவ, மன்னர் ஸ{ஊத் பின் அப்துல் அஸீஸ் பொதுக் குழுக்களை உருவாக்கி, அதன் தலைமையப் பொறுப்பை அப்போது ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக இருந்த இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடம் ஒப்படைத்தார். இக்குழுக்கள் பன்னிரண்டு அலுவலகங்கள் ஊடக, இராச்சியத்தின் பெரும்பாலான நகரங்களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.

4- 1964 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டிரியாவில் நடைபெற்ற இரண்டாவது அரபு உச்சி மாநாட்டில், பாலஸ்தீன் தோற்றம் பெறுவதன் அவசியத்தையும், அது தொடர்ந்து நீடித்து நிலைப்பதற்க்காக அனைத்து வழிகளிலும் உதவவேண்டியதன் அவசியத்தை மன்னர் பைசல் வலியுறுத்தினார். அது மட்டுமல்லாது , அவர் பாலஸ்தீனத்தை விடுவிக்க ஐந்து கொரில்லா பட்டாலியன்களை உருவாக்க ஐந்து மில்லியன் பிரிட்டிஷ் பவுண்களை நன்கொடையாக வழங்கினார். அவ்வாறே அக்டோபர் போரின்போது மேற்குலகிற்கு எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்தினார்.

5- 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்காவில் நடந்த உலக முஸ்லிம் லீக் மாநாட்டில் மன்னர் பைசல் இவ்வாறு கூறினார்கள் “உங்களின் பிரச்சினைகளில் ஒன்றான பாலஸ்தீன் பிரச்சினையை என்னால் புறக்கணிக்க முடியாது. அதன் அரசியல் கண்ணோட்டத்தில் நான் முன்வைக்கவில்லை, அதை இப்புவியில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் பிரச்சினையாக முன்வைக்கிறேன். சகோதரர்களே, இந்த பிரச்சினையானது திருடப்பட்ட பாலஸ்தீனத்தின் பிரச்சினையாகும்.

6- 1982 ஆம் ஆண்டில் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தபோது, பாலஸ்தீனியப் போராளிகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆயுதக்களஞ்சிய சாலையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குமாறு மன்னர் காலித் உத்தரவிட்டார். அவ்வாறே மேலதிக ஆதரவைக் கேட்ட யாசிர் அராபத் அவர்களுக்கு தனது சொந்தக் கணக்கில் இருந்து ஐந்து மில்லியன் டாலர்களை வழங்கினார்.

7- ஹிஜ்ரி 1407ஆம் ஆண்டில் ஹஜ் பிரசங்கத்தின் போது மன்னர் ஃபஹ்த் கீழ்வருமாறு உறுதிப்படுத்தினார்: “இஸ்லாமிய மற்றும் அரபு தேசத்தின் பிரச்சினைகளில் கூட்டு நடவடிக்கைகள் ஊடக நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம், அப்பிரச்சினைகளில் பாலஸ்தீன பிரச்சினை முதன்மையானது.”

8- 2000ஆம் ஆண்டு ஜெருசலம் உச்சி மாநாட்டில், மன்னர் அப்துல்லா, அப்போது பட்டத்து இளவரசராக இருந்தபோது இவ்வாறு கூறினார்: “கிழக்கு ஜெருசலம் பிரச்சனையானது ஒரு அரேபிய பிரச்சனை, அதனை விட்டுக்கொடுக்கவோ, அது தொடர்பாக சமரசம் செய்யவோ முடியாது, எந்த சூழ்நிலையிலும் அதனைக் கைவிட முடியாது. ஜெருசலமைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்".

9- சவூதி அரேபியாவின் தார்மீக நிலைப்பாடு மன்னர் சல்மானின் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிகிறது: “அரபு அமைதி முயற்சிகளுக்கிணங்க, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் காண்பதே அரசின் கொள்கை மற்றும் கொள்கைகளின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். பாலஸ்தீனிய அரசை அதன் தலைநகரான ஜெருசலத்தில் நிறுவுவதற்கும், சகோதர பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்த பிரச்சினைக்கு ஆதரவாக இராச்சியம் தனது முயற்சிகளைத் தொடரும்.

1982 ஆம் ஆண்டு மொராக்கோவில் பெஸ் நகரில் நடைபெற்ற அரபு உச்சி மாநாட்டில் மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் சமாதானத் திட்டம் உட்பட, பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான பல மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் சவூதி அரேபியா அங்கம் வகித்துள்ளது. மன்னர் அப்துல் அஸீஸ் சமாதான திட்டமானது அரபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதோடு அரபு அமைதி திட்டத்திற்கும் பின்னர் 1991 இல் மெட்ரிட் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. அரபு - இஸ்ரேலிய முரண்பாட்டுக்கான ஒரு தீர்வைக் காண்பதை நோக்காக கொண்டு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் (அப்போதைய பட்டத்து இளவரசர்) அவர்களால் முன்மொழியப்பட்ட அரபு அமைதி முன் முயற்சியானது 2002 மார்ச் மாதம் பெய்ரூத் உச்சிமாநாட்டில் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாக அரபு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இம் முயற்சியானது அமைதிக்கான சர்வதேச மட்டத்திலான தீர்மானங்களை இஸ்ரேல் செயற்படுத்தவும் பின்பற்றவும் வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. ஜெருசலம் நகரம் உட்பட 1967 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து அரபு பிரதேசங்களிலிருந்தும் முழுமையாக வெளியேறுதல், குடியேற்றங்களை அகற்றுதல் மற்றும் புனித ஸ்தலங்களில் அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு சுதந்திரம் மற்றும் மத சடங்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற முக்கிய விடயங்களை இந்த உடன்படிக்கையானது உள்ளடக்கியிருந்தது.

1967 ஆம் ஆண்டு ஜெருசலமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சுதந்திரமான, முழு இறையாண்மையை நிறுவுவதற்கான உரிமையையும், அகதிகள் மீண்டும் திரும்புவதற்கான உரிமையையும் சவூதி அரேபியா உறுதிப்படுத்தியதோடு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டும் மற்றும் கவனத்தை செலுத்த வேண்டும் என சவூதி தொடர்ந்து வலியுறுத்தியும் சர்வேதேச சமூகங்களுக்கு அழைப்பு விடுத்தும் வந்துள்ளது. இந்தச் சூழலில், இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களை இணைத்த ஒரு பிரிப்புச் சுவர் கட்டும் பணி இடம்பெற இருந்ததை கண்டித்ததோடு ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கண்டன அறிக்கை ஒன்றையும் சவூதி அரேபியா சமர்ப்பித்தது. இந்தச் சுவர் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அதை இஸ்ரேல் அகற்ற வேண்டும் என்று ஆணையிட்டது.

இன்றைய சவூதி அரேபிய - பாலஸ்தீன உறவை நாம் நோக்கினால், மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் செய்த பாரிய மாற்றங்களை அவை பிரதிபலிக்கின்றன. அவர் பாலஸ்தீனுடனான உறவை அதிக ஆக்கப்பூர்வமான தொடர்புகளாக மாற்றியுள்ளதை தெளிவாக எம்மால் காண முடிகின்றது என்பதே உண்மை. அவர் பாலஸ்தீனிய பிரச்சினையை ஆன்மீக, தேசிய, உளவியல் மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தார். அவர் தனது இளம் பராயத்திலிருந்தே பாலஸ்தீனியப் பிரச்சினை மீதான நுணுக்கமான பார்வையை கொண்டிருந்ததோடு பாலஸ்தீனிய பிரச்சினையில் பலஸ்தீனுக்கான ஆதரவாளராக அர்ப்பணிப்போடு இணைந்திருந்தார். இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனையில் பலஸ்தீனின் பக்கம் உள்ள நியாயத் தன்மைகளை நன்றாக அறிந்தவர் என்ற வகையிலும் கள நிலவரங்களை பற்றிய நுணுக்கமான அறிவின் பின்னனியிலும் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் பலஸ்தீனுக்கான தனது ஆதரவில் உறுதியாக இருப்பதோடு பலஸ்தீன மக்களின் பக்கம் சர்வ வல்லமை பொருந்திய இறைவனும் இருக்கிறான் என்பதையும் அவர் கூறியிருந்தார்.

2018ஆம் ஆண்டில், ஜெருசல் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ‘னுநயட ழக வாந உநவெரசல’ என்ற ஒப்பந்தத்திற்கு அமைய பிரகடனம் செய்த போது மன்னர் சல்மான் சவூதியின் தஹ்ரான் நகரில் நடைபெற்ற 29வது அரபு உச்சி மாநாட்டுக்கு “ஜெருசலம் உச்சி மாநாடு” என்று பெயரிட்டதோடு அவ்வுச்சிமாநாட்டில் அமெரிக்காவின் முடிவை நிராகரிப்பதாகவும் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்திற்கு சொந்தமானது என்றும் அறிவித்தார். கிழக்கு ஜெருசலமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நாட்டைப் பெற உதவுவது அரபு நாடுகளுக்கு முதன்மையான முன்னுரிமை என்றும் அம்மாநாட்டில் அரபுத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தற்போது பாலஸ்தீனத்தின் காஸாவில், இஸ்ரேலியப் படைகளின் அத்துமீறல்களால் கடுமையான பிரச்சனைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளதோடு தங்கள் சொந்த இனங்களிள் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் சவூதி அரேபியா தலைமையில் நடைபெற்ற 32வது அரபு உச்சி மாநாட்டில் இந்த பிரச்சனைகளை சரி செய்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் ஏனைய பாலஸ்தீன பிரச்சனைகளோடு தொடர்பான பல விடயங்களையும் அரபு தலைவர்கள் கலந்துரையாடியனர். மே மாதம் 2023 அன்று வெளியிடப்பட்ட ஜித்தா பிரகடனத்தில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அவர்களது வழ்வாதாரம், சொத்துக்கள் மற்றும் உயிர்களை இலக்கு வைத்த இஸ்லேலியரின் கடுமையான வன்முறையை கண்டித்து அவர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்றும் அரபு தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாலஸ்தீன பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதையே அரபு தலைவர்கள் விரும்புகிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரு பிரதேசங்களை கொண்ட இரண்டு தனி நாடுகளைக் கொண்டிருப்பதன் மூலம் அமைதியை உருவாக்க முடியும் என்பதை அவர்கள் எதிர்பாரப்பதோடு கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக கொண்டும் குறிப்பாக 1967 முதல் பலஸ்தீனுக்கு சொத்தமாக இருந்த பகுதிகளிலும் பலஸ்தீனீன் பூரண கட்டுப்பாடு நிலவ வேண்டும் என்பதையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாலஸ்தீன நிலத்தின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரவும், தீர்வு காண்பதை கடினமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவும் உலக நாடுகளை ஜித்தா பிரகடனமானது வேண்டி நிற்கிறது.

காசா நகரில் அதிகரித்து வரும் வன்முறைகளைப் பார்க்க நாங்கள் இங்கு ஒன்று கூடியிருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களின் உயிர்களும் உடைமைகளும் காவுவாங்கப்படுகின்றன. எந்தவொரு சந்தர்பத்திலும் பொதுமக்களை குறிவைப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மனித உரிமைகளையும் கருத்திட்கொள்ள வேண்டும், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் நடைபெறுகின்ற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதன் அவசியம் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலைமைகளை உருவாக்குதல் வேண்டும். 1967ஆம் ஆண்டு இருந்த எல்லைகளுக்குட்பட்ட வகையில் பாலஸ்தீன அரசை அமைத்து அனைவரும் பாதுகாப்பையும் செழிப்பையும் அடையும் வகையில் நாட்டின் ஸ்திரத்தன்மை திரும்புவதற்கும் மற்றும் ஒரு நியாயமான தீர்வை அடைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர சமாதானத்திற்கான வழியையும் காண வேண்டும் என சவூதி அரேபியாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியான் உச்சி மாநாட்டில் அக்டோபர் 20, 2023 அன்று நிகழ்த்தப்பட்ட தனது உரையில் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்தார்.

நவம்பர் 11, 2023 அன்று ரியாத் நகரில் நடைபெற்ற அரபு - இஸ்லாமிய கூட்டு உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கையில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் காசா பகுதியில் போரை நிறுத்த முன்வருமாறு சவுதி அரேபிய இராச்சியத்திற்கு அழைப்பு விடுத்தனர், மேலும் அவர்கள் இஸ்ரேலியரின் பழிவாங்கும் வகையில் அமைந்துள்ள தாக்குதலை தற்காப்புத் தாக்குதல் என்று விவரிப்பதை நிராகரித்ததோடு எந்த அடிப்படையிலும் அல்லது சாக்குப் போக்குகளின் கீழும் அத் தாக்குதல்களை நியாயப்படுத்தவும் முடியாது எனவும் கருத்துத் தெரிவித்தனர்.

காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் திணிக்கப்பட்ட முற்றுகையை தகர்க்க வேண்டும் என்றும் அரேபிய, இஸ்லாமிய மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவித் தொடரணிகளை அந்தப் பகுதிக்குள் நுழைக்க வேண்டும் என்றும் அரபுத் தலைவர்கள் தெரிவித்தனர். அவ்வுச்சி மாநாட்டின் இறுதி அறிக்கையில் காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் காலனித்துவ ஆக்கிரமிப்பு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானமற்ற படுகொலைகள் ஆகியவற்றைக் கண்டித்ததுடன், உலக நாடுகளுக்கு, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறும் வழியுருத்தியது.

இந்த வகையில் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர், இளவரசர் பைசல் பின் பர்ஹான், செப்டம்பர் 2023 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 வது அமர்வுக்கு முன்னரான தனது உரையில், சவூதி அரேபியா, பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தடையாக நடவடிக்கைகள் மற்றும் அமைதி முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அத்தனை செயற்பாடுகளையும் நிராகரிப்பதை உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 18, 2023 அன்று இளவரசர் பைசல் பின் பர்ஹான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் செயற்குழுவின் கூட்டத்தில் பல வெளியுறவு மந்திரிகளுடன் அவசர அவசரமாக ஒரு தொடர் சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்புகளின் போது, தற்போதைய காஸா மீதான அத்துமீறலை தடுக்க அனைத்து சர்வதேச மற்றும் பிராந்திய தரப்பினர்களை தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை சவூதி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி, பாலஸ்தீன விவகாரம் உட்பட மத்திய கிழக்கின் நிலைமை குறித்த பிரேசில் தலைமை மாங்கும் பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்ட விவாத அமர்வில் பிரேசிலின் ஃபெடரல் குடியரசின் மாண்புமிகு வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேரா அவரது அழைப்பை ஏற்று இளவரசர் பைசல் பின் பர்ஹானும் கலந்து கொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் நிகழ்த்திய ஒரு உரையில், எந்தவொரு தரப்பினரும் பொதுமக்களை குறிவைப்பதற்கான சவூதி அரேபியாவின் தெளிவான கண்டனத்தை அவர் தெரிவித்ததோடு, அத்துமீறல் மற்றும் கொலைகளை நிறுத்துதல், பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் சர்வதேச மரபுகள் மற்றும் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை சவூதி வலியுறுத்தவதாகவும் தெரிவித்தார். சவூதி தலைமை, சகோதர மற்றும் நட்பு நாடுகளுடன் தொடர்பு கொள்ள தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றதாகவும் இது தீவிரமான இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவசர மற்றும் நடைமுறை தீர்வைக் கண்டறியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காசாவில் வசிப்பவர்களுக்கு எதிராக இஸ்ரேலியரால் நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் மெத்தனப் போக்கிலிருந்து நாங்கள் கண்டவை மற்றும் பலவந்தமான இடப்பெயர்வு நடவடிக்கைகள் என்பன நாம் எதிர்பார்க்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எங்களை நெருங்க விடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் நிறுவிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இஸ்ரேலிய அத்துமீறல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்து போன்ற மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் விரைவாக நுழைவதை உறுதி செய்வதற்கும் சர்வதேச சமூகம் உறுதியான மற்றும் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனபதையும் இளவரசர் பைசல் அவர் வலியுறுத்தினார். மனிதாபிமானம் உட்பட சர்வதேச மரபுகளை இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறுகின்றது. அந்த வகையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கை நிறைவேற்ற இயலாமல் போனது மற்றும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் தீர்மானத்தை எட்டத் தவறியது. நீதி, சர்வதேச சட்டபூர்வமான வழிமுறைகளின் நம்பகத்தன்மை, கவுன்சிலின் பாதுகாவலர்களின் நம்பகத்தன்மை மற்றும் அமைதியை அடைவதற்கான அதன் இயலுமையை இச் செயற்பாடு கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் நட்பு நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் சந்திப்புகள் மற்றும் அழைப்புகளை மேற்கொண்டார். அச்சந்திப்பில் அவர்கள் காசாவில் உள்ள இராணுவ நிலைமை குறித்துப் பேசினர் மற்றும் பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான சில ஐ.நா தீர்மானங்களை தொடர்ந்து வலியுறுத்தினர். குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு சவுதி அரேபியாவின் வலுவான எதிர்ப்பை அவர்கள் முன்னிலைப்படுத்தினர் மற்றும் உடனடி போர் நிறுத்தம், மனிதாபிமான உதவி அணுகல் மற்றும் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக இடம்பெயர்வதை நிறுத்துமாறு வலியுறுத்தினர். காசாவில் இஸ்ரேலியப் படைகளின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்த அமைச்சர், உடனடிப் போர்நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, பாலஸ்தீன அரசை நிறுவுவதன் மூலமே அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சவூதி அரேபிய இராச்சியம் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குகிறது. மேலும் பாலஸ்தீனிய பிரச்சனை மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு சவூதி அரசியல், இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ரீதியாக ஆதரவுகளை அளித்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேலியப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல் நாளில் இருந்து கடந்த நாட்களில் தொடர்தேர்ச்சியான உதவிகளை சவூதி அரேபியா வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆதரவின் சமீபத்திய வடிவமாக பட்டத்து இளவரசர் அவர்களின் வழிகாட்டல்களுக்கிணங்க, கிங் சல்மான் நிவாரண மையத்தின் “சஹேம்” தளத்தின் மூலம், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக நிதி சேகரிப்பதற்கான பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் 30 மில்லியன் சவூதி ரியால்களை தனிப்பட்ட நன்கொடையாக வழங்கினார். அதேவேலை பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் 20 மில்லியன் சவூதி ரியால்களை நன்கொடையாக வழங்கினார். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொதுப் பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக “சாஹிம்” தளம் சேகரித்த மொத்த நன்கொடைகளின் தொகை நவம்பர் 17, 2023 அன்று 518 மில்லியன் சவுதி ரியால்ககளையும் தாண்டியுள்ளது. நன்கொடைகள் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்தும் நடந்த வண்ணம் உள்ளன.

சவூதி அரேபியா காஸா பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக தொடர்ந்தும் நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது. இதன் முதற்கட்டமாக , காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்காக, எகிப்தில் உள்ள அல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உள்ளடக்கிய பல்வேறு நிவாரண உதவிகளை சுமந்த நிவாரண விமானங்களை அனுப்பியது. அவ்வாறே நிவாரணப்பொருட்கள் அடங்கிய கப்பல்களையும் அனுப்பி வைத்தது. இவற்றுள் உணவு, மருந்து மற்றும் தங்குமிடம் பொருட்கள் அடங்கியுள்ளன. இவ்வுதவியானது, இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொது நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் . இது பாலஸ்தீனிய மக்களுடன் அவர்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்களில்களின் போது அவர்களுடன் நிற்பதாக வாக்களிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் வரலாற்றுப் பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

பாலஸ்தீனப் பிரச்சினையின் தொடக்கத்திலிருந்து, சவூதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு பல பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வழங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது அவ்வுதவிகளை துறைகளின் வகைகளுக்கு ஏற்ப கீழ்வருமாறு அட்டவணைப்படுத்தலாம் (முதல் பத்து துறைகள)

விளக்கம் தொகை (அமெரிக்க டாலர்களில்)

அபிவிருத்திக்கான உதவி-பட்ஜெட் ஆதரவு 2,343,666,667

பொது மனிதாபிமான உதவி - பல துறைகள் 1,063,938,530

அபிவிருத்திக்கான உதவி - பல துறை 675,000,000

பொது மனிதாபிமான உதவி - தங்குமிடம் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் 312,508,838

பொது மனிதாபிமான உதவி - ஆரம்ப மீட்பு 303.376.752

பொது மனிதாபிமான உதவி - சுகாதாரம் 188,074,543

பொது மனிதாபிமான உதவி - உணவு மற்றும் விவசாய பாதுகாப்பு 125,170,011

பொது மனிதாபிமான உதவி – கல்வி 63,748,185

அபிவிருத்திக்கான உதவி - அரசு மற்றும் சிவில் சமூகம் 50,000,000

பொது மனிதாபிமான உதவி - மனிதாபிமான நடவடிக்கைகளின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு 29,032,695

வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகை 5.187.114.254

துறை வகை வாரியாக பாலஸ்தீனத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மொத்த எண்ணிக்கை

விளக்கம் எண்ணிக்கை

பொது மனிதாபிமான உதவி - உணவு மற்றும் விவசாய பாதுகாப்பு 63

பொது மனிதாபிமான உதவி - சுகாதாரம் 40

பொது மனிதாபிமான உதவி - தங்குமிடம் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் 33

பொது மனிதாபிமான உதவி - பல துறைகள் 32

அபிவிருத்திக்கான உதவி-கல்வி 22

பொது மனிதாபிமான உதவி - ஆரம்ப மீட்பு 18

அபிவிருத்திக்கான உதவி-பட்ஜெட் ஆதரவு 18

பொது மனிதாபிமான உதவி – கல்வி 17

பொது மனிதாபிமான உதவி - மனிதாபிமான நடவடிக்கைகளின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு 15

பொது மனிதாபிமான உதவி - நீர் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் 4

திட்டங்களின் மொத்த எண்ணிக்கை 274

காலித் ஹமூத் அல்கஹ்தானி

20/11/2023

அன்றொருநாள் முஸ்லிம் player khawaja க்காக தங்களோட பாரம்பரிய celebrations நிப்பாட்டினான்..

இன்டைக்கு தன்னோட அணிக்காக வேலை பாக்குற ஊழியர்கள் கைல உலக கிண்ணத்தை கொடுத்து அழகு பாக்குறான்
அத்தனை ஆக்ரோசமான அவுஸ்ரேலிய கேப்டனுக்குல இவன் வேற மாதிரி
Pat Cummins.

 : 🇵🇸 🇮🇳 இன்றைய இறுதிப் போட்டியில் பாலஸ்தீன் மேற்சட்டை மற்றும் முகக்கவசத்தை அணிந்த ஒருவர் மைதானத்தில் ஓடிவந்து விராட் கோ...
19/11/2023

: 🇵🇸 🇮🇳 இன்றைய இறுதிப் போட்டியில் பாலஸ்தீன் மேற்சட்டை மற்றும் முகக்கவசத்தை அணிந்த ஒருவர் மைதானத்தில் ஓடிவந்து விராட் கோலியை அணைத்துக் கொண்டார்...

இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள வாய்ப்பு இலங்கை பரீட்சைத் திணைக்களம்  தற்...
19/11/2023

இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள வாய்ப்பு

இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.

https://certificate.doenets.lk/ என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளை பூரணப்படுத்தலாம்.

ஒரு பிரதிக்கு ரூபா 600.00 + தபால் செலவு ரூபா 100.00+ சேவை வரி ரூபா 12.50 ஆக மொத்தம் ரூபா 712.50 உடன் வேலை முடியும்.

கட்டணத்தை கடனட்டையை அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்திய பற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தி செலுத்த முடியும்.

காலை 9.30 மணியளவில் விண்ணப்பித்த 20 நிமிடத்தில் உங்கள் சான்றிதழ் பிரதியெடுக்கப்பட்டு விட்டதாகவும், தொடரும் 20 நிமிடத்தில் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது மட்டுமல்லாமல் இன்று காலையில் சான்றிதழ் கையில் கிடைத்தும் விட்டது.

உண்மையிலேயே தொழினுட்ப வளர்ச்சியை சிறப்பாக கையாளும் பரீட்சைத் திணைக்களத்தின் பணி பாராட்டப்பட வேண்டியதுடன், தொலைவில் இருந்து வருவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.
அலைச்சல், பிரயாணச் செலவு, மொழி தெரியாமை போன்ற பிரச்சனைகளின்றி உங்கள் பரீட்சை சான்றிதழை நீங்களும் பெற்றிட கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

https://certificate.doenets.lk

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை
மின்னஞ்சல் : [email protected]
நேரடி தொலைபேசி : 1911
தொலைபேசி இலக்கம் : +94 11 2786200, +94 11 2784203-4

19/11/2023

விபத்தொன்றில் காயப்பட்டவர்களை வைத்தியாசாலைக்கு எடுத்து செல்வதில் உள்ள சட்ட ஏற்பாடுகளை பற்றி சகோதரர் M.I. Iyasdeen சட்டத்தரணி அவர்கள் மிகவும் தெழிவாக கூறியுள்ளார், இந்த வீடியோவை ஸ்க்கிப் பண்ணி விட்டு செல்லாமல் கட்டாயமாக அனைவரும் முடியுமானவரை பாருங்கள் பார்த்து தெழிவு பெறுங்கள்.

இனிமேலாவது வீதிகளிலே விபத்துக்கள் ஏற்பட்டு காயங்களுக்குள்ளாகி கிடந்தால் வேடிக்கை பார்த்து விட்டு செல்லாமல் Fb யிலே லைவ் போட்டுக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் எவ்வளவு சீக்கிரம் அந்த உயிரை காப்பாற்ற எம்மால் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துச் செல்வோம், அப்போதும் நிதானமாக பயணியுங்கள்.

தாங்கள் ஒரு வாகனத்தை போட்டி போட்டுக்கொண்டு முந்திச் சென்று விட்டு, மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டு சிற்றின்பம் காண்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.!

கிரிக்கட்  உலகக் கோப்பையில்  2023: இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இன்று ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டியில் வ...
19/11/2023

கிரிக்கட் உலகக் கோப்பையில் 2023: இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இன்று ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது

இருதிப்போட்டியிலும் இந்தியா ஜெயித்து சாதனை படைக்குமா?

🇯🇴🇯🇴 ‘‘அமெரிக்க டிக் டோக்கர் {மேகன் ரைஸ்} பலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தை பார்த்து  குர்ஆனைப்படித்து முஸ்லீம் ஆனார்...!
17/11/2023

🇯🇴🇯🇴 ‘‘அமெரிக்க டிக் டோக்கர் {மேகன் ரைஸ்} பலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தை பார்த்து குர்ஆனைப்படித்து முஸ்லீம் ஆனார்...!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….மனது ஏற்க மறுக்கிறது….கனவாய் இருந்துவிடாதா என்று தோன்றுகிறது…..யா அல்லாஹ்……அகால மரண...
17/11/2023

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….
மனது ஏற்க மறுக்கிறது….
கனவாய் இருந்துவிடாதா என்று தோன்றுகிறது…..

யா அல்லாஹ்……
அகால மரணம் அடைந்த இரு நண்பர்கள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்குவாயாக….

ஆமீன்…. 🤲🏻😭🤲🏻😭

16/11/2023

*புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது*

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 பரீட்சை சற்றுமுன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

குறித்த பெறுபேறுகளை https://www.doenets.lk/examresult என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

13/11/2023

👉மாஷா அல்லாஹ்.!!
கால் பந்து விளையாட்டு வீரர்
ரொனால்டோ அவர்கள் புனித அல்குர்ஆனை படிக்கும் காட்சியே இது..
🤲 யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுப்பாயாக! ஆமீன்.!!
🤲இவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி விட்டார் என்ற செய்தியையும் எங்கள் காதுகளுக்கு எட்ட வைப்பாயாக..

13/11/2023

அரச ஊழியர்களுக்கு 2024 ஏப்ரல் முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரூ. 17,800/-

அரச ஊழியர்களின் வேதன உயர்வு 10,000/=  ஆல் அதிகரிப்பு!!
13/11/2023

அரச ஊழியர்களின் வேதன உயர்வு 10,000/= ஆல் அதிகரிப்பு!!

அதிகம் கொண்டாடப் பட மறந்தவன்
13/11/2023

அதிகம் கொண்டாடப் பட மறந்தவன்

உலகத்தை அதிர வைத்த ஹமாஸ்!;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;வரலாறு காணாத பல இழப்புகளைச் சந்தித்த ஹமாஸ், இஸ்ர...
12/11/2023

உலகத்தை அதிர வைத்த ஹமாஸ்!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

வரலாறு காணாத பல இழப்புகளைச் சந்தித்த ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பெரும் போரைச் செய்து கொண்டு வருகிறது.

இது வரையிலும், கண்ணயர்ந்து தூங்கிய உலகம், இஸ்ரேலின் கொடூரங்களைக் கண்டு துயில் கலைந்து எழுந்து அவர்களுக்கெதிராக போராட்டங்களை செய்து கொண்டிருக்கிறது!

இதற்கான முக்கிய காரணிகள் பல இருந்தாலும்,
அங்கு குழந்தைகள் குறி வைத்துக் கொல்லப்படுவதை உலகத்தால் சகித்துக் கொள்ள முடியாது என்பதாகும்.

இஸ்ரேலானது பல நூற்றுக்கணக்கான போர் விமானங்களையும், அதி நவீன யுத்த டாங்கிகளையும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்களையும் வைத்துக் கொண்டு, உலகத்தில் முதல்தரத்தைக் கொண்ட. இஸ்ரேல், எந்த ஆயுதத்தரத்தையும் வைத்துக் கொள்ளாத வெறும் அறுபத்தையாயிரம் படையினரை வைத்துள்ள ஹமாஸிடம் இவ்வளவு அடி வாங்குவது ஏன் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுப்படும் நியாயமான கேள்விதான்.

பலஸ்தீனத்திற்கென்று ஒரு வராலாறு இருக்கிறது.
அந்த மண்ணுக்கென்று ஒரு விசேஷம் இருக்கிறது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் பிரார்த்தித்த பூமியும் இது!

இத் தேசத்தில் நபிமார்களின் வரலாறுகள் பதியப்பட்ட ஓர் இடமுமாகும்.

அதனால்தான் பலமான ஈமானோடு அம்மக்கள் நியாயத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பது.

அங்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக இருக்கிறது என்பதை ஹமாஸின் வீரமிக்கப் போராட்டத்தில் நாம் பல அத்தாட்சி மூலம் காண்கிறோம்.

அதிலும் குறிப்பாக உலகத்திலுள்ள கிறிஸ்தவ மக்கள் பலஸ்தீனுக்கு ஆதரவாக அகிம்சை வழியில் போராடி, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கிய ஆட்சியாளர்களை எதையும் செய்ய முடியாமல் திணற வைத்துள்ளது.

இது இவ்வாறிருக்க,
ஹமாஸின் சுரங்கப் பாதைகளை கண்டு பிடித்து அழிக்க, உலகத்திலுள்ள மிகப்பெரும் புத்திசாலி யூதர்களைக் கொண்டு வந்து அவர்கள் மேற்குக்கரைக்குள் நுழையும் போது ஹமாஸின் கண்ணி வெடியில் சிக்குண்டு சிதறிப் போனதையும் நாம் அறிவோம்.

ஹமாஸின் வீரியமிக்க தாக்குதல்கள் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பொது இடங்களையும், பொது மக்களையும் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும்
இஸ்ரேல், அழிந்து நாசமாக எல்லோரும் பிரார்த்திப்போம்.

விழ விழ
அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
நமது
ஹமாஸ் போராளிகள்
ஷாம் தேசம்
வெற்றி கொள்ளும் வரைக்கும்
எனது இறுதி மூச்சு
அவர்களுக்காக
பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
அல்லாஹ் பெரியவன்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை (13)  சமர்ப்பிக்கவுள்ளார்நிதியமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்ட...
12/11/2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை (13) சமர்ப்பிக்கவுள்ளார்

நிதியமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாளை (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழு நாள் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர்.

உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்  ஸ்பிரிங் வைத்த பந்துகளை பயன்படுத்தும் இந்திய அணி. ஜெய்ஷாவின் சதித்தி...
12/11/2023

உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஸ்பிரிங் வைத்த பந்துகளை பயன்படுத்தும் இந்திய அணி. ஜெய்ஷாவின் சதித்திட்டம் அம்பலம்.

ஜேம்ஸ் ஸ்டான்லி அறிக்கை.

11/11/2023

உண்மையான ஸ்பெயின் ரசிகர்கள் பாலஸ்தீனத்தை வித்தியாசமான முறையில் ஆதரிக்கின்றனர் 🇵🇸🇪🇸❤️💔

முதலில் இந்த "கண் வருத்தம்" எனும் Conjunctivitis/ Pink Eye / Madras Eye எனப்படுவது ஆபத்தான நோய் நிலைமை அல்ல.இது பொதுவாக ...
11/11/2023

முதலில் இந்த "கண் வருத்தம்" எனும் Conjunctivitis/ Pink Eye / Madras Eye எனப்படுவது ஆபத்தான நோய் நிலைமை அல்ல.

இது பொதுவாக வைரஸ் தொற்றினால் (Adeno Virus) ஏற்பட்டு பெரும்பாலும் 3/4 தினங்களில் தானாக குணமாகக் கூடியது.

சில நேரங்களில் பக்றீரியா தொற்று (Secondary Bacterial infection) ஏற்படும்போது Anti Bacterial eye drops / Ointment அவசியப்படலாம்.

⁉️ நோய் #அறிகுறிகள்:

✅ இதன் பிரதான அறிகுறியாக கண்ணின் Conjunctiva எனும் வெண்ணிறப்பகுதி சிவப்பு நிறமடையும். (இது ஒரு கண் / இரு கண்களிலும் ஏற்படலாம்)

✅ கண்ணிலிருந்து நீர் வடிதல்

✅ கண் அரிப்பு / எரிவு

✅ வெளிச்சத்தை பார்க்க முடியாமை

✅ தலைவலி

போன்றவை ஏற்படும்.

மேலதிக பக்றீரியா தொற்று ஏற்படும் போது

❌கண்ணிலிருந்து மஞ்சள்/பச்சை நிற பூளை வெளியாதல்

❌ கண் மடல்கள் வீங்கி தூங்கி எழும்போது கண்களை திறக்க முடியாமல் ஒட்டியிருத்தல்

போன்ற அறிகுறிகள் தென்படும்.

⁉️ #சிகிச்சை:
ஏற்கனவே சொன்னது போல் இது Virus தொற்றினால் உண்டாவதால் 3/4 நாட்களில் தானாக குணமாகக் கூடியது.

மஞ்சள்/பச்சை நிற Discharge, கண்மடல்கள் வீக்கம், தூங்கி எழுந்து கண்களை திறக்க கடினமாதல் போன்றவை பக்றீரியா தொற்றின் அறிகுறிகளாதலால் வைத்திய ஆலோசனைப்படி Antibacterial Eye Drops பாவிக்க வேண்டி ஏற்படலாம்.

🛑 5 நாட்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் வைத்திய ஆலோசனையை பெற வேண்டும்.
(அரிதாக 5 நாட்களுக்கு மேற்பட்ட தொற்று கண்மணியை (pupils) பாதித்து சிறுவர்களின் பார்வையை பாதிக்கலாம். அவ்வாறான அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக கண் வைத்திய நிபுணரை நாட வேண்டும்.)

⁉️ பரவலை #தடுத்தல்:

பொதுவாக இந்நோய் தொடுகை மூலமே பரவுகிறது.

Conjunctivitis/ pink eye கண் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரிப்பு காரணமாக கண்களை சொறிந்து அதே கையை பாடசாலை மேசை,கதிரை, பொதுப் போக்குவரத்து Bus போன்றவற்றில் பிடிக்கும்போது
அதனை இன்னொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.

(அல்லது உடல்கள் நெருக்கமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பரவலாம்.)

எனவே:
✅ கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல்

✅Hand Sanitizer பாவித்தல்

✅ கண்களை கைகளால் தொடுவதை தவிர்த்தல்
போன்றவற்றை கையாளலாம்.

✅ அதேபோல் கண் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அத்தகையவர்கள் பாடசாலை/ வேலைத்தளங்களுக்கு விடுமுறை பெறுவதன் மூலம் ஏனையவர்களுக்கு இத்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.

சுகாதார அமைச்சும் நோய் அறிகுறிகளை காண்பிக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.

✅ வீடுகளில் நோய் அறிகுறிகள் காண்பிப்பவர்களின் தலையணை , Bedsheets என்பவற்றை பகிராதிருப்பதோடு சுடுநீரில் கழுவுவதன் மூலம் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் பரவுவதை தவிர்க்கலாம்.

🛑⁉️ பி.கு:
இந்த Conjunctivitis/ Pink eye எனும் தொற்றுக்கு ஏன் Madras eye என பெயர் வந்தது?

1918ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவின் Madras (இன்றைய சென்னை)யில் இந்த நோய் பரவல் முதன்முதலாக அவதானிக்கப்பட்டது.

கோடைக்கால விடுமுறையில் Madras சென்ற பலருக்கு இத்தொற்று ஏற்பட்டதால் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் Madras Eye என்பது ஒரு பிராந்திய சொல் வழக்கே. மருத்துவ பெயர் Conjunctivitis. இருப்பினும் இந்திய Mediaக்களில் Madras Eye ( மெட்ராஸ் ஐ ) என்பது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

By: Dr. A I A Ziyad
Clinical Informatics & Research Fellow,
University of Southampton




#மெட்ராஸ்_ஐ

இப்படியான பொலிஸாரும் இருக்கதான் செய்கிறார்கள்...❤ பாராட்டப்பட வேண்டியவர்கள்!👍
11/11/2023

இப்படியான பொலிஸாரும்
இருக்கதான் செய்கிறார்கள்...❤

பாராட்டப்பட வேண்டியவர்கள்!👍

10/11/2023

#இமாத் அல் நஜ்ர் என்ற இளைஞர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவர் புனித குர்ஆனோடு வந்தார்..

Write-up வாசிகளே சற்று ஓய்வெடுங்கள்!! இன்னொரு Board Appointment பண்ணா அங்கத்துவம் திரும்ப வந்துரும்.. இதுக்கு எதுக்குடா ...
10/11/2023

Write-up வாசிகளே சற்று ஓய்வெடுங்கள்!!

இன்னொரு Board Appointment பண்ணா அங்கத்துவம் திரும்ப வந்துரும்..

இதுக்கு எதுக்குடா இவ்ளோ Write-upppp uhh…

இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித...
10/11/2023

இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஐசிசியின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக இன்று (10) ஐசிசி சபை கூடி தீர்மானித்துள்ளது.

விசேடமாக, இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தல் தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடு இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Thuraiyoor News Disney+ Hotstar

A LONG TEA BREAK– The creamiest sweetest glass of tea I’ve ever had, in a land known for its sweet strong tea. At least ...
10/11/2023

A LONG TEA BREAK
– The creamiest sweetest glass of tea I’ve ever had, in a land known for its sweet strong tea. At least half sweetened condensed milk, the boiling tea is whipped up into a froth by being poured back and forth from a great height. Sammanthurai, Sri Lanka. October 2023.*

EDIT: Aman Ashraff tells me this guy’s name is Jaleel, and his milk tea brings all the boys to the yard. Or to his shop, rather. From a all the surrounding villages.

• 24mm • f/2.8 • 1/125 • ISO1000 • Canon R6 & RF24-70/2.8L •

́

*to see this and other photos full size, go to https://wp.me/p331hA-5eX

Address

Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thuraiyoor News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thuraiyoor News:

Videos

Share


Other News & Media Websites in Sammanthurai

Show All