Ceylon Nanban

Ceylon Nanban Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ceylon Nanban, Digital creator, Rakwana.

08/04/2024

கவரி மான் பரம்பரை | Explained

22/03/2024

க. பொ. உயர்தர பரீட்சை 12ம் வகுப்பில்!! | Hot news | Ceylon Nanban

19/03/2024

09/03/2024

நாங்க இறக்குவானை | Nanga Rakwana

11/02/2024

தவறு இளைஞர்களது மட்டுமா!! | Hariharan live in concert Jaffna | Explained #யாழ்ப்பாணீஸ்

27/01/2024

பணம் 😶

23/01/2024

#அயோத்தி ராமர் vs பாபர்

எனக்குத் தெரிந்த #ராமர், எங்க ராமர் மாமா, அவர் இறைபதம் அடைந்துட்டார்,

நான் அறிந்த #பாபர்
எனக்கு சிறுவயதில் முடி வெட்டிய பாபர் மாமா, அவரும் இறைபதம் அடைந்துட்டார்.

நன்றி

18/01/2024

One day...

31/12/2023

2023ன் ஞாபகங்கள் சில | Welcome 2024 | Happy New year to you all.

Captain 😔🤍🙏நமக்கு ரொம்பவே நெருங்கிய ஒரு உறவு மறைந்தது போல் ஓர் உணர்வு...
28/12/2023

Captain 😔🤍🙏
நமக்கு ரொம்பவே நெருங்கிய ஒரு உறவு மறைந்தது போல் ஓர் உணர்வு...

16/12/2023

நீங்களும் middle bencher ah🙄

11/12/2023

U1 concert க்கு யாராச்சும் 2 டிக்கெட் வாங்கி தாங்கப்பா😶😑☺

We're not same. காலையில் தூய சிந்தனையில் வீட்டிலிருந்து புறப்பட்டு..., வழி நெடுகிலும் பூக்களையும், அழகிய முகங்களையும் பா...
21/11/2023

We're not same.
காலையில் தூய சிந்தனையில் வீட்டிலிருந்து புறப்பட்டு..., வழி நெடுகிலும் பூக்களையும், அழகிய முகங்களையும் பார்த்துக்கொண்டு செல்லும் உங்கள் உலகம் வேறு.... 🌻❤,

பாதை நெடுகிலும் நாய் பீ யை பார்த்துக் கொண்டு செல்லும் எங்கள் உலகம் வேறு 🙄🤮.

தமிழ் சினிமா Actors பொதுவா action, comedy னு படம் பன்றப்போ,   மட்டும் வேற வழில போறாப்ல,            அண்மைல வந்த அவரோட எல்...
18/10/2023

தமிழ் சினிமா Actors பொதுவா action, comedy னு படம் பன்றப்போ, மட்டும் வேற வழில போறாப்ல,

அண்மைல வந்த அவரோட எல்லா படங்களும் feel good movies தான்.
தமிழ் சினிமா ல feel good movies வாரது ரொம்பவே குறைவு, bt #அசோக்செல்வன் da கதை selection superb,
அவரோட படங்கள்(feel good movies) பார்த்து முடிய.... நம்ம மனசுல உள்ள பாரமே குறைஞ்ச feel வரும்.

13/10/2023

#பெண்
பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-.

●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்…….

●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்….

●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்….

●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்…

நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?ஒரு பைத்தியக்காரன் மீது கருணைக் கொண்ட சீடன், அவரை தனது மடாலயத்து குருவிடம் அழைத...
11/10/2023

நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு பைத்தியக்காரன் மீது கருணைக் கொண்ட சீடன், அவரை தனது மடாலயத்து குருவிடம் அழைத்துச் சென்றான்.

குரு சொன்னார், ”அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவையும், நீரையும் அருகில் வையுங்கள். ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம். பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார். அவருக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம், நீங்கள் யாரும் கண்டுக் கொள்ளவும் வேண்டாம்,” என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார். அவரை யாரும் அங்கு கண்டுக் கொள்ளவில்லை. சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.
அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.

நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், ”எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?” என்று கேட்டான்.
இது இன்றும் திபெத்திய புத்தமடாலயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

”எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்” என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.
"மற்றவர்கள் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்துக் கொண்டே போகாது”!!!

தர்க்கம் பண்ணாதீர்கள்..
நம்முடையப் பேச்சே தர்க்கத்திற்கு தீனி...! நம் அமைதியே அதற்கு பட்டினி..!!!
அமைதியாக இருங்கள், எல்லாம் சரியாகும்.
ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை...! நீங்கள் சரியாக இருப்பீர்கள்,
நிதானம் நீளமானது...!!!

நான் வெறும் கால்களில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,அவன் ஷூ அணிந்து கொண்டு பள்ளி வேனில் இருந்து எனக்கு டாட்டா...
09/10/2023

நான் வெறும் கால்களில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,
அவன் ஷூ அணிந்து கொண்டு பள்ளி வேனில் இருந்து எனக்கு டாட்டா காட்டியவன்..

நான் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது,
அவன் புதிதாய் வாங்கிய MRF கிரிக்கெட் மட்டையுடன் உலா வந்தவன்..

நான் என் சைக்கிளுக்கு காற்றடிக்க காசில்லாமல் அலைந்த போது,
என் முன்னால் புதிய Bike க்குடன்
வந்து நின்றவன்..

நான் எழுத்துக்கூட்டி தமிழ் படித்து கொண்டிருந்தபோது,
அவன் கவிதைகளை எழுதியவன்..

நான் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லத் திணறிக் கொண்டிருந்த போது,
பல பெண்களால் ஒரு தலையாய் காதலிக்கப் பட்டுக் கொண்டிருந்தவன்..

நான் கையேந்தி பவனில் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும் பொழுது,
அவன் எதிரே இருந்த சரவண பவனில் இருந்து எனக்கு கையசத்தவன்..

நான் வீட்டுக் கடனுக்காக வங்கியில் காத்துக் கொண்டிருந்த போது,
அவன் கை நிறைய பணக் கட்டுகளை Deposit செய்து கொண்டிருந்தவன்..

நான் விடுமுறைக்கு என் ஊருக்கு
Train ஏறிய போது,
அவன் Vocation க்காக வெளிநாட்டுக்கு Flight பிடித்துக் கொண்டிருந்தவன்..
.........

அவன் வேறு யாரும் அல்ல..

நான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நான் கண்ட கனவுகளின்
பிம்பம் அவன்..

இதுவரை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை..

என்றோ ஒரு நாள் இருவரும்
ஒரு புள்ளியில் சந்திப்போம் என்ற
அதீத நம்பிக்கையில்..

அன்று வரை,

நானும் அவனும் தினமும் கனவில் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி
கதை பேசிக் கொள்வோம்..

📌©️

அந்த உரையாடல் போதும் எனக்கு..

05/09/2023

Official Trailer of Murali's Biopic... "800"
Goosebump ra dei 🔥

05/09/2023

Feel the Nature

04/09/2023

நல்லாத்தான் இருக்குல.....

27/08/2023

என் தாயின் mindset😇 | Ceylon Nanban

26/08/2023

"Nan ready than" Korean version...
நான் ரெடிதான் பாடல் கொரியன் மொழியில்.......

நாட்டில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக...
26/08/2023

நாட்டில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் Natural Hazards Early warning Centre, அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய 8 மாவட்டங்களை அறிவித்துள்ளது. அவையாவன:

✨அம்பாரை
✨மட்டக்களப்பு
✨திருகோணமலை
✨வவுனியா
✨முல்லைத்தீவு
✨பொலன்னறுவை
✨அனுராதபுரம்
✨மொனராகலை

கண்டி, மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பத் தாக்கம் அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 8 மாவட்டங்களிலும், மனித உடல் உணரும் வெப்பத் தாக்கத்தின் அளவு, மிகவும் அதிகமாக உள்ளது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

வெப்பச் சுட்டியானது (Heat Index), அதிகூடிய வெப்பநிலை, சாரீரப்பதன், மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு ஆகிய காரணிகளால் அளவிடப்படுகிறது.

மேற்படி மாவட்டங்களில் வெப்பச் சுட்டி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெப்ப தசைப் பிடிப்புகள் (Heat Cramps), உடற்சோர்வு (Exhaustion), வெப்ப பக்கவாதம் (Heatsroke) ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது செய்ய வேண்டியவை:

♦அடிக்கடி அதிகளவு நீர் அருந்துதல்.
♦வீட்டிலுள்ள குழந்தைகளையும் வயோதிபர்களையும் நோயாளிகளையும் கூடுதல் கவனத்தோடு கண்காணித்தல்.
♦வெயிலில் வேலை செய்வோர் அதிக இடைவேளைகளை- Break எடுத்தல்.
♦முடிந்த வரை வெயிலில் வெளியேறுவதை, அலைவதைத் தவிர்த்தல்.
♦வெளியில்/வெயிலில் வேலை செய்வோர், நிழல் பெறக்கூடிய ஏற்பாடுகளைச் செய்தல்.
♦பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வெடுத்தல்.

நன்றி: Daily Mirror

25/08/2023

இன்னும் கொஞ்ச காலம் இந்த உலகத்துல வாழணுமேனு நினைக்கும்போதே Tired ஆகுது.

19/08/2023

Nan Rakwana❤

மாசத்துல ஒரு நாள் சம்பளம் வாங்க.., 25-30 நாட்கள் வேலை செய்றம்😤💔. வேலை செய்யவா பிறந்தோ... ம்!
18/08/2023

மாசத்துல ஒரு நாள் சம்பளம் வாங்க.., 25-30 நாட்கள் வேலை செய்றம்😤💔. வேலை செய்யவா பிறந்தோ... ம்!

Address

Rakwana
70300

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Nanban:

Videos

Share


Other Digital creator in Rakwana

Show All