News Junction

  • Home
  • News Junction

News Junction உறுதிப்படுத்தப்பட்ட உள்நாட்டு வெளி?

04/05/2023
30/01/2023

கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை!  |   |
11/01/2021

கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை!

| |

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் தந்தை மற்றும் மகன்சில நேரங்களில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து சிறிது விலகி...
06/01/2021

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் தந்தை மற்றும் மகன்

சில நேரங்களில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து சிறிது விலகி நிற்க நமக்கு இசை தேவைப்படுகிறது. அந்த இசையில் நாம் நம்மையே சில நேரங்களில் மறந்துவிடக்கூடும். அப்படி தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள் இன்று.
ஏ.ஆர்.ரஹ்மான் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவரின் குடும்பம் இசைக் குடும்பம் என்பதால் சிறு வயதிலிருந்தே இசையில் இவருக்கு ஆர்வம் அதிகம். தனது 11 வது வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் பல இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார். பின்னர் 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச்சென்ற அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அதை தொடர்ந்து காதலன், மின்சார கனவு இப்படி பல திரைப்படங்களில் இசையின் மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான slum dog millionaire என்ற படத்திற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான இரண்டு ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அன்றிலிருந்து ஆஸ்கார் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இதேவேளை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனுக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.அமீன் ஓ காதல் கண்மனி உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். வளர்ந்து வரும் பின்னணி பாடகர் என்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்
28/12/2020

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்

21/08/2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் : மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சாமியாடினார்"

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வந்தது எப்படி?பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சியில் கடந...
21/08/2020

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வந்தது எப்படி?

பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 31-ம் தேதி சிறப்பு விருந்தினராக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் பலருக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமே எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி மாளவிகா தனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து வேண்டுமென்றே அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அதனாலேயே பலருக்கும் கொரோனா பரவியதாகவும் செய்தி வெளியாகி வேகமாக பரவத் துவங்கியது. ஆனால் இதை மறுத்திருக்கும் மாளவிகா தற்போது இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
எஸ்.பி.பி-க்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 8ம் தேதி தான் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னரே தான் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வரும் செய்தியில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று வீன் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING | மேலும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை - இதய செயல்பாடுகளும் குறைய தொடங்கியதுகொரோனா தொற்று காரணம...
21/08/2020

BREAKING | மேலும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை - இதய செயல்பாடுகளும் குறைய தொடங்கியது

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அவரது உடல் மேலும் கவலைக்கிடமாக நிலைக்கு சென்றுள்ளது. நுரையீரலை தொடர்ந்து இதய செயல்பாடுகளும் குறைய தொடங்கியது.

20/08/2020

There will be no daily power cut after Tomorrow(21).
-CEB

நுளம்புகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.உலகின் பல ந...
20/07/2020

நுளம்புகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இந்தப் பரவலைத் தங்கள் நாட்டில் அதிகரிக்கவிடாமல் தவிர்க்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் உலகம் முழுவதும் இதுவரை 1,46,40,326 பேரை பாதித்துள்ளது. அதேபோல் கரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை 87,30,348 ஆக உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலமும், மூடிய அறையில் உள்ள காற்றின் மூலமும் பரவும் எனக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த வைரஸ் நுளம்புகளின் மூலம் பரவுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் நுளம்புகளின் மூலம் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும், இதுதொடர்பாக அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரைக் கடித்த நுளம்பு சாதாரண மனிதரைக் கடித்தாலும் அது வைரஸ் பாதிப்பை உண்டாக்காது எனத் தெரியவந்துள்ளது

க.பொ.த உயர்தர பரீட்சையை  ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பிப்பதற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை  ஒக்டோபர் மாதம் 11ம்...
20/07/2020

க.பொ.த உயர்தர பரீட்சையை ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பிப்பதற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை…. வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்....
09/07/2020

மூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை…. வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்.

வனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வனிதா அவரின் குக்கிங் யூடியூப் சேனலில் திருமணம் குறித்து சர்ச்சைகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசியிருந்தார்.
எனினும், சமூகவலைத்தளத்தில் சர்ச்சை நாயகியாவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். சர்ச்சைகளை கடந்து யூடியூப் சேனலில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றார்.

இறுதியாக வெளியிட்ட காணொளியில் ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், சமூகவலைத்தளத்தில் சர்ச்சை நாயகியாவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். சர்ச்சைகளை கடந்து யூடியூப் சேனலில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றார்.

இறுதியாக வெளியிட்ட காணொளியில் ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

தாயின் கருத்தடை சாதனத்தை பிடித்தபடி பிறந்த குழந்தை இந்த உலகத்தை என்னானு பார்க்காம விடமாட்டேன்..! வடக்கு வியட்நாம் மருத்த...
09/07/2020

தாயின் கருத்தடை சாதனத்தை பிடித்தபடி பிறந்த குழந்தை இந்த உலகத்தை என்னானு பார்க்காம விடமாட்டேன்..! வடக்கு வியட்நாம் மருத்துவமனையில் விநோதம்

ஹைபோங்: பிரசவித்த பெண்ணின் கருத்தடை சாதனத்தை பிடித்தபடி வடக்கு வியட்நாம் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை, பலரும் விநோதமாக பார்த்தும், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
வடக்கு வியட்நாமில் உள்ள ஹைபோங் சர்வதேச மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கையில் அவரது தாயின் கருத்தடை சாதனமும் இருந்தது. அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மகப்பேறியல் நிபுணர் டிரான் வியட் பூங், கருத்தடை சாதனத்துடன் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுத்தார்.

அவர் தற்போது அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த குழந்தை இந்த உலகத்திற்கு தாயின் தோல்வியுற்ற கருப்பை கருவியை (ஐ.யு.டி) பிடித்துக் கொண்டே பிறந்தது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘தாயின் பிரசவத்திற்குப் பிறகு, அந்த குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். இது மிகவும் சுவாரஸ்யமானது என்று நினைக்கிறேன். அதனால், குழந்தையை புகைப்படம் எடுத்தேன். அது இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. குழந்தையை பெற்ற 34 வயதான தாய், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் கருத்தடை சாதனம் பொருத்திக்கொண்டார்.

ஆனால் ஆச்சரியமான முறையில் கர்ப்பமடைந்தார். அந்த சாதனம் சரியாக பொருத்தப்படாமல் விட்டிருக்கலாம். அதன் அசல் நிலையில் இருந்து நகர்த்தப்பட்டிருக்கலாம். அதனால் தாயின் கருத்தடை ஒரு பயனற்ற வடிவமாக மாறி, தாயின் கர்ப்பப் பையில் சென்றுவிட்டது. கருத்தடை சாதனம் குழந்தையின் உடலில் காயப்படுத்தவில்லை. பிறந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக 3.2 கிலோ எடையுடன் உள்ளது. அந்த பெண்ணுக்கு இது மூன்றாவது குழந்தை. உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், இந்த குழந்தை கருத்தடை சாதனத்தை புறம்தள்ளி பிறந்துள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மறுபதிவிட்டு பலரும் தங்களது கருத்தை ெதரிவித்து வருகின்றனர்.

இந்த குழந்தை இந்த உலகிற்கு பெரும் பங்களிப்பு அளிக்கும் என்றும், இந்த குழந்தை பிறக்க விதிக்கப்பட்டது என்றும் தெரித்துள்ளனர். மற்றொரு பதிவர், ‘எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இதேபோல் குழந்தை பிறந்தது’ என்றும் கூறியுள்ளார். சிலர் இது அதிர்ஷ்டம் என்று சொன்னார்கள்’ என்றார். இந்த புகைப்படத்தை பார்த்த அந்த குழந்தையின் தாய், அதன் நம்பகத்தன்மை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுபோன்று குழந்தை பிறப்பது என்பது இது முதல் தடவையல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இது தாயின் தோல்வியுற்ற கருத்தடை என்றே கூறலாம். 2017ம் ஆண்டில், டெக்ஸ்டர் என்ற ஆண் குழந்தை இதேபோல் கருத்தடை சாதனத்துடன் பிறந்தது.

பொதுவாக ‘ஐயுடி’ (Intrauterine device) என்று அறியப்படும் கருத்தடை சாதனங்கள், பெண்கள் கர்ப்பமடையாமல் தடுக்க கருப்பையில் செலுத்தப்படும் ‘T’ வடிவ பிளாஸ்டிக் கருவியாகும். இது ஒரு முறை பொருத்தப்பட்டால் 12 ஆண்டுகள் பலனளிக்க வல்லது மற்றும் முழுவதுமாக மீளக் கூடியது. அதாவது, இக்கருவியை நீக்கிய பின்னர் மீண்டும் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும். இந்த கருவியை பொருத்துவதால், கர்ப்பப்பையில் கருத்தரிப்பைத் தடை செய்து கரு அணுகவும், கரு முட்டையும் இணைவதையும் தடை செய்கிறது. ஆனால், அவை சரியாக பொருத்தப்படாமை போன்ற காரணங்களால், இதுபோன்ற விநோதங்கள் நடப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share