முல்லைத்தீவு Mullaitivu

முல்லைத்தீவு Mullaitivu முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறு?

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது 🪔❤️முள்ளியவளை துயிலும் இல்லம், முல்லைத்தீவு ©️Kumanan Kanapathippillai
27/11/2022

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது 🪔❤️

முள்ளியவளை துயிலும் இல்லம், முல்லைத்தீவு

©️Kumanan Kanapathippillai

மாறாத வடுக்களோடு தமிழ் இன அழிப்பு வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்! 2009 இல் இறுதிக்கட்ட எடுக்கப்பட்ட இப்படங்கள் போரில் எ...
18/05/2022

மாறாத வடுக்களோடு தமிழ் இன அழிப்பு வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்!

2009 இல் இறுதிக்கட்ட எடுக்கப்பட்ட இப்படங்கள் போரில் எங்கள் இனம் எப்படியெல்லாம் துன்பத்தை அனுபவித்தார்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சான்றாதாரங்கள்...

இருவரும் சகோதர பெண்கள்...இருவரும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள்.ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக பலரால் வாழ்த்தியதும் கௌரவக...
23/01/2022

இருவரும் சகோதர பெண்கள்...
இருவரும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக பலரால் வாழ்த்தியதும் கௌரவகிக்கப்பட்டதும் முகநூலில் கான முடிந்தது
பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது.

மற்றவர் முல்லை சகோதரியான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவும் இன்றுவரை வழங்கப்படவில்லை பெரிமையான பாராட்டுக்களும் கிடைக்கப்பெறவும் இல்லை ...

ஏனெனில் பாடல் பாடியவர் பெரின்பான்மை சிங்களவர்....
தங்கப்பதக்கம் பெற்றவர் சிறுபான்மையை சேர்ந்த ஈழத் தமிழர்.

இப்படி எல்லாவற்றிலும் இனவாதம் பார்க்கும் நாட்டில் தமிழர் ஆகிய நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்.....?

02/09/2021
19/08/2021

முல்லைத்தீவு மாவட்டம் கடந்த 4 நாட்களின்
78 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் காணிக்கு உரிமையாளர் நாங்களே 😂😂
04/08/2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் காணிக்கு உரிமையாளர் நாங்களே 😂😂

கோத்தாபாய கடற்படை முகாம் காணி அபகரிப்பு; கலந்துரையாடலின் பின்னரே நிலஅளவைதொடர்பில் முடிவெடுக்கப்படும், அதுவரை நில அளவைச் ...
30/07/2021

கோத்தாபாய கடற்படை முகாம் காணி அபகரிப்பு; கலந்துரையாடலின் பின்னரே நிலஅளவைதொடர்பில் முடிவெடுக்கப்படும், அதுவரை நில அளவைச் செயற்பாடுகள் நிறுத்திவைப்பதாக முடிவு

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடுதொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.
காணி அளவீடுதொடர்பில் நிலஅளவைத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கோத்தாபாய கற்படை முகாம் கடற்படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குரிய சுமார் 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக சுவீகரித்து கடற்படையினருக்கு வழங்குவதுதொடர்பில், முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை காணி உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
குறிப்பாக அக் கடிதத்திலே, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டுப்பம்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை அவரவரது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும், குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த கடிதத்தின் அறிவிப்பினை ஏற்கமறுத்த காணிகளுக்குரிய தமிழ் மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 29.07.2021இன்று ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளும் முடிவிற்கும்வந்திருந்தனர்
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்
அதற்கமைய காலை 07.00மணியளவில் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணிகளுக்குரிய மக்கள்சிலர் உள்ளிட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு முன்பாக இவ்வார்பாட்டத்திற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு வருகைதந்த இராணுவத்தினர் சிலர் , ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திற்கான முயற்சிகளை குழப்புகின்றவகையிலும் செயற்பட்டிருந்தனர்.
நில அளவீட்டுத்திணைக்கள வாகனத்தை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.
நில அளவீடுகளைச் செய்வதற்காக அவணங்களுடன் 09.00மணிக்கு வருகைதருமாறு கடிதத்தின் மூலம் காணிக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் வழங்கியிருந்ந நில அளவைத் திணைக்களம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் 07.30மணிக்கே நில அளவீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் வளாகத்திற்கு வருகைதந்திருந்தனர்.
நில அளவைத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாடானது காணிகளுக்குரிய தமிழ்மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து அங்கு நில அளவீட்டிற்கென வருகைதந்திருந்த முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் தலைமையிலான குழுவினர் கடற்படை முகாமிற்குள் செல்லமுற்பட்டபோது அவர்கள் வருகைதந்த வாகனத்தினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வழிமறித்தனர்.
அவர்கள் வாகனத்தை வழிமறிப்பதற்குள் வாகனத்தை விட்டிறங்கிய நிலஅளவையாளர் பா.நவஜீவன் கடற்படை முகாமிற்குள் சென்றிருந்தார்.
தொடர்ந்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி, கோசங்களை எடுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்புத்தரப்பு.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் இம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கடற்படை முகாமின் உட்புறமாக கலகம் அடக்கும் கடற்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை போலீசார் மற்றும், விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், புலனாய்வாளர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச்சூழ நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும், காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டிருந்தனர்.
இணக்கப்பாட்டிற்குவந்த போலீஸ் மற்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள்
இவ்வாறாக தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பதெனவும், பிறிதொருநாளில் மாவட்டசெயலகத்தில் இக் காணிப் பிரச்சினைதொடர்பில் காணி உரிமையாளர்கள், கடற்படை மற்றும் உரிய அரசதிணைக்கள அதிகாரிகள் ஆகியோர் ஒன்றுகூடி கலந்துரையாடி, அக்கலந்துரையாடலின் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதுவரை நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பது என்ற இணக்கமான கருத்தை போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த இணக்கமான கருத்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளும் முடிவிற்குவந்தனர்.
நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்.
தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டையீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்பாட்ட இடத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
மக்கள் பிரதிநிகளை தனியே அழைத்த போலீசார்; ஏற்க மறுத்த மக்கள் பிரதிநிகள்
இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக தனியே பேசவேண்டுமென, மக்கள் பிரதிநிகளான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரை போலீசார் கடற்படை முகாமிற்குள் அழைத்தனர்.
போலீசாரின் இந்த அழைப்பை ஏற்கமறுத்த மக்கள் பிரதிநிதிகள் எதைத் தெரிவிப்பதாக இருந்தாலும் மக்களுக்குமுன் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தனர்.
நில அளவையாளரை கடற்படை முகாமிற்கு வெளியே அழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்....
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் கடற்படை முகாமிற்குள் இருந்த நிலையில் அவரை வெளியே வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைத்தனர்.
அதற்கு குறித்த நில அளவையாளர், தனக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாக்குவார்களோ என்ற அச்சம் இருப்பதாத் தெரிவித்து வெளியே வருவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
நில அளவையாளரின் கருத்தை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் தாக்கமாட்டோம் எனவும் வெளியே வந்து தமக்கு ஒரு முறையான முடிவைத் தெரிவிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அழைத்தனர்.
எனினும் அவர் வெளியே வராததுடன், தாம் மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிவிட்டு வருவதாகக்கூறி கடற்படை முகாமிற்குள்ளேயே இருந்தார்.
பிரதானவாயில் அருகில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச்செல்ல உத்தரவிட்ட கடற்படை
கோத்தாபாய கடற்படை முகாம் பிரதான வாயில் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகி பிரதான வாயிலுக்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு வரிலுக்கு வெளியே செல்லுமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர்.
அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு வெளியே செல்லமுடியாதென மறுத்து கோசங்களை எழுப்பினர். பின்னர் மெதுவாக அங்கிருந்து விலகி பாதுகாப்பு வரியலுக்கு வெளியேவந்தனர்.
இந் நிலையில் உட்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் கடற்படையினர் வெளியே கொண்டுவரப்பட்டு பாதுகப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தந்திரமாக அளவீடுசெய்ய முயன்ற நில அளவையாளர்கள்; வீதிமறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நில அளவைத் திணைக்களத்திலிருந்து வேறு வாகனம் ஒன்றில் நில அளவையாளர்கள் ஏற்றிவரப்பட்டு, கடற்படை முகாமின் பிறிதொரு வாயிலூடாக அவர்கள் கடற்படை முகாமிற்குள் நுழைந்து, அளவீடுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த ஆர்பாட்டக்காரர்கள் நில அளவையாளர்கள் வெளியே வரவணே்டுமென கோசங்களை எழுப்பினர்.
குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பிரதேச நில அளவையாளர் பா.நவஜீவனின் பெயரைக்குறிப்பிட்டு " துரோகி நவஜீவனே.. வெளியே வா.." என கோசம் எழுப்பினார்.
அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் அமர்ந்து, சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் சிலமணிநேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டிருந்தது.
ஆர்பாட்டக்காரர்களுக்கும், பயணிகள் சிலக்கும் முறுகல்...
இவ்வாறாக சில மணிநேரம் சாலைமறியலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதால், வெய்யிலில் வீதியில் நின்ற பயணிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய முறுகல் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக சில பயணிகள் வழியை விடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கோரியபோது, தமது காணிக்கு தீர்வுகிடைத்தால்தான் வீதியை விட்டுவிலகுவோமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனால் கொதிப்படைந்த பயணிகள் சிலர் ஆர்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வாறு செல்லவேண்டுமாயில் தமக்கு மேலால் வாகனங்களை ஏற்றிச்செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் தெரிவித்தனர்.
அத்தோடு ஆர்பாட்டக்காரர்கள் வீதியின் குறுக்கே தகரப் பந்தல் அமைத்து அமரவுள்ளதாகத் தெரிவித்து, பந்தல் அமைப்பதற்குரிய பொருட்களும் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட நிலையில் போலீசாரின் அழுத்தத்தினால் பந்தல்பொருட்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய போலீசார்
இவ்வாறு தொடர்ச்சியாக வீதிமறியலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த தொடர்ச்சியான அழுத்தங்காரணமாக கடற்படைமுகாமிற்குள் அளவீடச்சென்ற முல்லைதீவு பிரதேச நிலஅளவையாளர் பா.நவஜீவன், அளவீட்டு முயற்சியைக் கைவிட்டு கடற்படை முகாமிற்கு வெளியே வந்தார்.
இந் நிலையில் அவரின் வாகனத்தினைச் சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புத்தரப்பினர் தள்ளியதுடன், தாக்கியுமிருந்தனர்.
இவ்வாறாக ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து நில அளவையாளர் பா.நவஜீவனையும் அவரின் வாகனத்தினையும் போலீசார் மீட்டு, அவரை புதுக்குடியிருப்பு ஊடாக, கேப்பாப்புலவு வழியே அவரை அனுப்பிவைத்திருந்தனர்.
கடற்படை முகாமிற்குள் நடந்தது என்ன; முறையான முடிவு வேண்டும் ஆர்பாட்டக்காரர்கள் கோிக்கை.
இராணுவ முகாமிற்குள் அளவீடு நடந்ததா? என்பது தொடர்பில் தங்களுக்கு நிலஅளவையாளர் வருகைதந்து தமக்கு விளக்கமளிக்கவேண்டுமெனவும், இந்தப் பிரச்சினைக்கு முறையானதொரு முடிவினையும் உரியவர்கள் தெரிவிக்கவேண்டுமெனத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி அளவீடுதொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதெனவும்; அதுவரை நில அளவீடுகள் நிறுத்திவைப்பதாகவும் முடிவு
இந் நிலையில் அங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், நில அளவைத்திணைக்கள மாவட்ட அதிகாரியுடன் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்ட இடத்திற்கு அவரை அழைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரியும், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியிருந்தனர்.
அதிலே குறிப்பாக கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடுதொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸவரன், க.ஜெனமேஜயந், விஜயகுமார், தி.இரவீந்திரன், சட்டத்தரணி இ.தனஞ்சயன் ஆகியோருடன், காணிக்குரிய மக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#முல்லைத்தீவு

கோத்தாபாயகடற்படை முகாம் உடனடியாக அகற்றப்படவேண்டும்; எமது மக்களின் காணிகள் எமது மக்களிடமே கையளிக்கப்படவேண்டும் - ரவிகரன்ம...
29/07/2021

கோத்தாபாயகடற்படை முகாம் உடனடியாக அகற்றப்படவேண்டும்; எமது மக்களின் காணிகள் எமது மக்களிடமே கையளிக்கப்படவேண்டும் - ரவிகரன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் எமது மக்களின் காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும். எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களிடமே கையளிக்கவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால்கிழக்கு, வட்டுவாகல்பகுதியில் தமிழ்மக்களின் காணிகளை கோத்தாபாய கடற்படைத்தளம் அபகரித்துள்ள நிலையில், 29.07.2021 இன்று குறித்த காணிகள் கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றிருந்தது.
இந்த அளவீட்டு முயற்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கோத்தாபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் என்பதுதொடர்பிலே கடந்தகாலங்களிலும் பலதடவைகள் நான் மாகாணசபை அமர்வுகளிலும், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்திருக்கின்றேன்.
இதுதவிர பலதடவைகள் மக்களோடு சேர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றோம். குறிப்பாக கடந்த 22.02.2018ஆம் திகதியன்றும் இந்த கடற்படைமுகாம் அகற்றப்படவேண்டும் எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 28.02.2018 அன்று நான் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தேன். என்னோடு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீது தொடரப்பட்டுள்ள குறித்த வழக்குவிசாரணை தற்போதும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே இடம்பெற்றுவருவதையும் நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
இதிலே கோத்தாபாய கடற்படை முகாம் அபகரித்துள்ள காணிகளிலே, 379ஏக்கர் காணிகள் தனியார்காணிகளாக காணப்படுகின்றன. 291ஏக்கர் காணிகள் அரச கட்டளைச்சட்டத்தின்படி எமது தமிழ் மக்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகளாகக் காணப்படுகின்றன.
இந்தக்காணிகளை மக்களுடைய சம்மதம் இல்லாமல் கடற்படை அபகரிப்பது பிழையான செயற்பாடாகும்.
இங்கே காணிகள் மாத்திரமல்ல மக்களுடைய வாழ்வாதார வழிகளை பலவழிகளிலும் கடற்படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
குறிப்பாக இந்த கடற்படைமுகாம் அரிச்சல்பாதை எனப்படுகின்ற ஒரு பிரதான வீதியை முடக்கிவைத்திருக்கின்றது. இந்த அரிச்சல்வீதிவழியே செல்லும்போது அங்கே எமது மீனவ மக்களுக்குரிய கரவலைப்பாடுகள், இறங்குதுறைகள் என்பவற்றுக்குச் செல்லலாம். தற்போது இவ்வாறு இராணுவமுகாம் அபகரித்திருப்பதால் அந்தமீனவமக்கள் இறங்குதுறைகளையோ, கரவலைப்பாடுகளையோ பயன்படுத்தமுடியாத நிலைகாணப்படுகின்றது.
அத்தோடு வட்டுவாகல் அக்கரை என்று சொல்லப்படும் பகுதியில், குறிப்பாக தற்போது கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் நந்திக்கடலாற்றின் கரையோரமாக மீனவர்கள் வீச்சுத்தொழில் உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்வதற்கு கடற்படையினர் தடையாக உள்ளனர்.
இப்படியாக எங்களுடைய மக்களின் வாழ்வாதாரம் அத்தனையையும் முடக்கி இந்த அரசானது கடற்படைத் தளத்திற்காக எங்களுடைய மக்களுக்குச் சொந்தமான இந்தக்காணிகளை அபகரித்து வைத்திருப்பதால் இந்த மக்களுடைய வாழ்வாதாரம் பொய்த்துப்போகின்றது.
அத்தோடு தென்னிலங்கையைச் சேர்ந்த சேர்ந்த சீனப் பிரஜை ஒருவருக்கும் இங்கே 49 ஏக்கர் அளவில் காணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் காணியை கடற்படைக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார் இதற்கு நாம் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தோம். இவ்வாறாக அவர்கள் பலவழிகளிலும் எமது மக்களுடைய காணிகளை அபகரிக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வட்டுவாகல் பகுதியைப் பொறுத்தவரையில் 617 ஏக்கர் காணிகளில் கோத்தாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை மறுபக்கம், கிட்டத்தட்ட 400ஏக்கருக்குமேல் இராணுவத்தினர் அபகரித்து அங்கு பாரிய அளவில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக வட்டுவாகல் முழுவதும் படையினர் வசமாகின்றது. இதைத் தடுக்கவேண்டும் என்பதுதான் இப்பகுதிமக்களின் கோரிக்கையாகவுள்ளது.
வட்டுவாகல்என்பது தமிழர்களின் பூர்வீக வாழ்விடமாகும், அங்கே அமைந்துள்ள சப்தகன்னியர் ஆலயத்திலிருந்து சைவ இறை இசைப் பாடல்கள் மாதிரமே கடந்தகாலங்களில் ஒலிபரப்பப்படும்.
இவ்வாறு சைவ இறை இசைப்பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில் தற்போது பௌத்த இறைஇசைப்பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றது.
பௌத்த மக்களே இல்லாத வட்டுவாகலில் இராணுவத்தினரே இவ்வாறு பௌத்த இறைஇசைப்பாடல்களை ஒலிக்கவிடுகின்றனர்.
இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக வாழிடத்தை அபகரிப்புச்செய்து இராணுவத்தினர் பௌத்த விகாரைகளை அமைத்து, பௌத்த இறைஇசப்பாடல்களை ஒலிக்கவிட்டு பௌத்தத்தைத் திணிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அந்தவகையில் தமது பூர்வீக காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் வெளியேறவேண்டும் எனத் தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறான நிலையிலே இங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரி மற்றும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன் ஆகியோர் இந்த நிலஅளவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதெனவும், இதன்பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரையும் திரட்டி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட பின்னரே நிலஅளவீடுதொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் எமக்கு வாக்குறுதியளித்துளார்.
நிச்சயமாக இந்தவிடயத்திலே எமது மக்களுக்கு நிரந்தரமானதோர் தீர்வு வேண்டும். எனவே இந்தப் பகுதியில் எமது மக்களின் காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும். எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களிடமே கையளிக்கவேண்டும் என்றார்.

#முல்லைத்தீவு

கோத்தாபாய கடற்படை முகாம் காணி அபகரிப்பு; கலந்துரையாடலின் பின்னரே நிலஅளவைதொடர்பில் முடிவெடுக்கப்படும், அதுவரை நில அளவைச் ...
29/07/2021

கோத்தாபாய கடற்படை முகாம் காணி அபகரிப்பு; கலந்துரையாடலின் பின்னரே நிலஅளவைதொடர்பில் முடிவெடுக்கப்படும், அதுவரை நில அளவைச் செயற்பாடுகள் நிறுத்திவைப்பதாக முடிவு.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடுதொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.

காணி அளவீடுதொடர்பில் நிலஅளவைத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கோத்தாபாய கற்படை முகாம் கடற்படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குரிய சுமார் 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக சுவீகரித்து கடற்படையினருக்கு வழங்குவதுதொடர்பில், முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை காணி உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.

குறிப்பாக அக் கடிதத்திலே, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டுப்பம்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை அவரவரது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும், குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த கடிதத்தின் அறிவிப்பினை ஏற்கமறுத்த காணிகளுக்குரிய தமிழ் மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 29.07.2021இன்று ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளும் முடிவிற்கும்வந்திருந்தனர்

ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்

அதற்கமைய காலை 07.00மணியளவில் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணிகளுக்குரிய மக்கள்சிலர் உள்ளிட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு முன்பாக இவ்வார்பாட்டத்திற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்திற்கு வருகைதந்த இராணுவத்தினர் சிலர் , ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திற்கான முயற்சிகளை குழப்புகின்றவகையிலும் செயற்பட்டிருந்தனர்.

நில அளவீட்டுத்திணைக்கள வாகனத்தை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.

நில அளவீடுகளைச் செய்வதற்காக அவணங்களுடன் 09.00மணிக்கு வருகைதருமாறு கடிதத்தின் மூலம் காணிக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் வழங்கியிருந்ந நில அளவைத் திணைக்களம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் 07.30மணிக்கே நில அளவீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் வளாகத்திற்கு வருகைதந்திருந்தனர்.

நில அளவைத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாடானது காணிகளுக்குரிய தமிழ்மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து அங்கு நில அளவீட்டிற்கென வருகைதந்திருந்த முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் தலைமையிலான குழுவினர் கடற்படை முகாமிற்குள் செல்லமுற்பட்டபோது அவர்கள் வருகைதந்த வாகனத்தினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வழிமறித்தனர்.

அவர்கள் வாகனத்தை வழிமறிப்பதற்குள் வாகனத்தை விட்டிறங்கிய நிலஅளவையாளர் பா.நவஜீவன் கடற்படை முகாமிற்குள் சென்றிருந்தார்.

தொடர்ந்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி, கோசங்களை எடுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#முல்லைத்தீவு

வட்டுவாகலில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்வட்டுவாகலில் நிலசுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக போர...
29/07/2021

வட்டுவாகலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

வட்டுவாகலில் நிலசுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர் என மக்கள் காணி ஆணைக்குழு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

#முல்லைத்தீவு

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துமுல்லைத்தீவுகோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக  போராட்டம்காணி சுவீகர...
29/07/2021

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துமுல்லைத்தீவுகோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக போராட்டம்

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள்
தமிழ் அரசியல்வாதிகள் போராட்டம்

#முல்லைத்தீவு

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

டயகம சிறுமியின்  இறப்பிற்கு நீதிகோரி விஸ்வமடுவிலும் ஆர்ப்பாட்டம்முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற...
27/07/2021

டயகம சிறுமியின் இறப்பிற்கு நீதிகோரி விஸ்வமடுவிலும் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, விஸ்வமடு, ரெட்பான சந்தியில் டயகம சிறுமியின் இறப்பிற்கு நீதி கோரி 27.07.2021 இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த டயகம சிறுமியின் இறப்பிற்கு நீதி கோரியதுடன், சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் படுவதற்கும் எதிராக தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

அத்தோடு பணிக்கமர்த்தப்படும் வயதெல்லையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்பாட்டக்காரர்களால் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடளுமன்ற உறுப்பினர் வினோ நோகராத லிங்கத்திடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#முல்லைத்தீவு

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

🔵கொழும்பில் 1150 ரூபா🔵கண்டியில் 1191 ரூபா🔵 திருகோணமலையில் 1217 ரூபா🔵 வவுனியாவில் 1216 ரூபா🔵 மன்னாரில் 1216 ரூபா🔵 அம்பாறை...
26/07/2021

🔵கொழும்பில் 1150 ரூபா
🔵கண்டியில் 1191 ரூபா
🔵 திருகோணமலையில் 1217 ரூபா
🔵 வவுனியாவில் 1216 ரூபா
🔵 மன்னாரில் 1216 ரூபா
🔵 அம்பாறையில் 1252ரூபா
🔵 மட்டக்களப்பில் 1250 ரூபா 🔵யாழ்ப்பாணத்தில் 1259 ரூபா 🔵கிளிநொச்சியில் 1243 ரூபா, 🔵முல்லைத்தீவில் 1242 ரூபா.
🔵நுவரெலியாவில் 1229 ரூபா
🔵அம்பாறையில் 1252 ரூபா
🔵 பதுளையில் 1235 ரூபா

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

மாலுமிக்கு மாரடைப்பே வந்திருக்கும்! படகுக்கு அருகில் பாய்ந்த திமிங்கலம்.அற்புதமாக Photo எடுக்கப்பட்டுள்ளதுலைக் பண்ணுங்க ...
25/07/2021

மாலுமிக்கு மாரடைப்பே வந்திருக்கும்!
படகுக்கு அருகில் பாய்ந்த திமிங்கலம்.

அற்புதமாக Photo எடுக்கப்பட்டுள்ளது

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

நாயாறு முடக்கப்பட்ட பகுதியில்  உள்ள பருவகால மீனவர்கள் வீதிக்கு வந்ததால்  அமைதியின்மை | Tamil News Media  செய்திகளை பார்ப...
24/07/2021

நாயாறு முடக்கப்பட்ட பகுதியில் உள்ள பருவகால மீனவர்கள் வீதிக்கு வந்ததால் அமைதியின்மை | Tamil News Media

செய்திகளை பார்ப்பதற்கு கீழே உள்ள link அழுத்தவும் https://youtu.be/_yrk5rLXzCQ👈↩️

பண்ணுங்க

#பகிருங்கள்

#ஆதரவு தாங்க

.. .. .. #பண்ணுங்க...

​tamil #...

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான கவனயீர்ப்பு முல்லைத்தீவு மாவட்ட ...
22/07/2021

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான கவனயீர்ப்பு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின்
முன்பாக இன்று

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

#முல்லைத்தீவு

22/07/2021

காடுகள் செழிக்க யானைகள் வாழ வேண்டும்...

லைக் பண்ணுங்க & பின்தொடருங்க...

SUBSCRIBE and support our YouTube channel :-https://www.youtube.com/channel/UCJ543QjIwkzibpUZ78F0itw

#முல்லைத்தீவு

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது | 1616 DAY PROTEST | Tamil News Sri Lanka செய்திகளை பார்ப்பதற...
21/07/2021

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது | 1616 DAY PROTEST | Tamil News Sri Lanka

செய்திகளை பார்ப்பதற்கு கீழே உள்ள link அழுத்தவும் https://youtu.be/dVV6fRoB82I👈↩️

​tamil #...

Address

Mullaitivu

Alerts

Be the first to know and let us send you an email when முல்லைத்தீவு Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முல்லைத்தீவு Mullaitivu:

Videos

Share