30/10/2024
தபால் மூலம் வாக்களிக்கப்போகும்
எம் தமிழ் உறவுகளுக்கு,…..
வாக்களிப்பது சில நொடிகள்,..
வரும் தேர்தல் வெற்றி
உங்கள் வாழ்வின் அடுத்து வரும்
ஐந்தாண்டு கால ஏறு படிகள்,..
வெற்றி என்றால் ஏறு படிகள்
தோல்வி என்றால் இறங்கு படிகள்,..
வெற்றி,…வேட்பாளர்களுக்கு அல்ல,..
வாக்களிக்கும் உங்களுக்கானது,…
வெற்றியா?,…தோல்வியா?,…
நீங்களே தீர்மானியுங்கள்!,…
வாசல் தேடி வந்துங்கள்
காலைப்பிடிக்காத குறையாக
கையை பிடித்திருப்பர்,..
வாக்கு கேட்டு வந்து நின்றோர்
ஊரவர் உறவினர்
சுற்றத்தவர் தாமென்று
சொல்லி பிதற்றியுமிருப்பர்,…
சிலர் வந்து தமிழென்றும் எழுவென்றும்
சீறியும் முழங்கியுமிருப்பர்,..
அது செய்வோம் இது செய்வோம்
ஆகா இதோ பார் விடியுது தேசமென
ஆசை கூட காட்டியிருப்பர்,..
எது செய்தீர் நீவீர் இது வரையென
கேட்கவே நீங்கள் மறந்திருப்பீர்,..
வேலையற்ற பட்டதாரிகள் நியமனம்,..
தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனம்,..
முன்பள்ளி ஆசிரிய நியமனம்,..
புகையிரத தொழிலாளர் நியமனம்,..
சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம்,..
அரச உயர் பதவிகள் நியமனம்,..
சிற்றூழியர் நியமனம்,..
இன்னும்,… இன்னும்,…
தந்தது யாவும் வீணைக்கட்சியே
இவைகள் மட்டுமா?,..
கார்முகில் சூழ்ந்த போர்ச்சூழலில்
உணவில்லை, மருந்தில்லை
யார் வந்து காப்பார் என திகைத்தீர்,..
பட்டினிச்சாவிலிருந்து
மீட்டவர் யாரவர்?,..
பாச தீப தோழர் தேவா ஒருவரே,..
அவர் மட்டுமே உங்களிடை நின்றார்,..
வேலை வாய்ப்பு மட்டுமன்றி
வெந்து தேசம் கருகிய வேளையிலும்
வேதனை தீர்த்து நின்றவர்
வீணைக்கட்சி தலைவர்
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே,..
உங்கள் வாழ்வும் வளமும்
வீணைக்கட்சி தந்த வரமென்று
நன்றி செலுத்துங்கள் வீணைக்கு,..
ஒரு கணம் சிந்தித்து
மறு கணம் வாக்களியுங்கள்!,..
வீணைக்கு வழங்கும் ஆணை
விடியலை தரும் நாளை!,..
(அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும்)
நன்றி - Sivachelvam Sellathamby Vinthan