evarest fm & tv

evarest fm & tv உண்மை செய்திகள்

13/01/2025

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம் !

13/01/2025

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

13/01/2025

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணி தெரிவு!

12/01/2025

ஸ்வர்க்கியஸ்ரீ நா.பாலசுப்பிரமணிய சிவாச்சார்ய சாந்தஸ்வரூப சிவாசார்ய ஞாபகார்த்த குருகுலம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரம் வேட்பு மனுக்கள் இரத்து !உள்ளூராட்ச...
12/01/2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரம் வேட்பு மனுக்கள் இரத்து !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், கடந்த அரசாங்கத்தினால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னைய வேட்பு மனுக்களை இரத்துச் செய்தும், புதிதாக வேட்பு மனுக்களைக் கோரும் வகையிலும் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், நாடெங்கிலும் உள்ள 320 உள்ளூராட்சி மன்றங்களின் 8711 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒருகட்டமாக கடந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 80 ஆயிரத்து 670 வேட்பு மனுக்கள் தற்போது இரத்துச் செய்யப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம் !சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்...
12/01/2025

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம் !

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்,

இதற்காக, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நாடளாவிய ரீதியிலான வேலை திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம் பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்ப கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 50 குடும்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுநெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை ...
12/01/2025

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்ற...
12/01/2025

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணி தெரிவு!19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக...
12/01/2025

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணி தெரிவு!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியினரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் காலி- ரத்கமவில் உள்ள தேவபதிராஜா கல்லூரியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஜனவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு 15 பேர் கொண்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அணியில் தமிழ் வீராங்கனைகள் எவரும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், இலங்கை அணி நாளை ஜனவரி 11ஆம் திகதி மலேசியாவுக்கு புறப்படவுள்ளது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி மலேசியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவுடனான குழுவில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி பூட்டு!அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது...
11/01/2025

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி பூட்டு!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிகரெட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு!இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இல...
11/01/2025

சிகரெட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு!

இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் (Ceylon To***co Company) தீர்மானித்துள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலவச சீருடை விநியோகம் தொடர்பான தகவல்!2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவ...
11/01/2025

இலவச சீருடை விநியோகம் தொடர்பான தகவல்!

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) அறிவித்துள்ளது.

இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் தொடர்பான சுற்றறிக்கை சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலவச சீருடைகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்களுக்கான சீருடைத்துணிகள் முழுவதையும் மக்கள் சீனக்குடியரசு இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10/01/2025

இந்திய இழுவைப்படகு அடாவடி – சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்

10/01/2025

கொடிகாமத்தில் கையெழுத்து போராட்டம்!

10/01/2025

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்!

09/01/2025

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல் !

09/01/2025

வடக்கு – கிழக்கில் பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழரை நியமிப்பதற்கு தீர்மானம் !

09/01/2025

இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when evarest fm & tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share