Madawala Sun News

Madawala Sun News எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை”
0774114074 0756916161

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!!!(எஸ். சினீஸ் கான்)பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள...
25/12/2024

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!!!

(எஸ். சினீஸ் கான்)

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களது நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு : பிரதம அதிதியாக MLAM ஹிஸ்புல்லாஹ் எம்.பி...!!!(எஸ். சினீஸ் கான்)...
14/12/2024

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு : பிரதம அதிதியாக MLAM ஹிஸ்புல்லாஹ் எம்.பி...!!!

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு நேற்று (13) நடைபெற்றது.

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் பொறியியலாளர் சப்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் மேற்கொள்வேன். - தாஹிர் எம்.பி(எஸ். சினீஸ்...
10/12/2024

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் மேற்கொள்வேன். - தாஹிர் எம்.பி

(எஸ். சினீஸ் கான்)

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (08) ஒலுவில் க்ரீன் வில்லா வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது பட்டதாரிகள், அரச தொழில் வாய்ப்பின்றி எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவ்வமைப்பினால் தெளிவு படுத்தப்பட்டது.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலான தகவல்கள், அரச தொழில் தொடர்பான தகவல்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான மாற்று தொழில் வழிகாட்டல்கள் தொடர்பிலும் முழுமையான தகவல்களை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இது விடயம் தொடர்பில் பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் தான் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!!(எஸ். சினீஸ் கான்)காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் ப...
09/12/2024

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!!

(எஸ். சினீஸ் கான்)

காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மை காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் இன்று (09) நிந்தவூர் பிரதேச சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் முஹம்மட் அஸ்கி , விவசாயத் திணைக்களத்தின் நிந்தவூர் பெரும்போக உத்தியோகத்தர் ஹார்லிக் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இயற்கை சீற்றத்தினால் பதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததுடன் சேதமடைந்துள்ள வயல் பிரதேச வீதிகள், வடிச்சல் வாய்க்கால் போன்றவற்றினை மீள் சீரமைப்பதற்கு தேவையான பொறிமுறைகளை துறைசார் நிபுணத்துவமுள்ளவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த விடயங்களுக்கான விரைவான தீர்வினை நோக்கி தான் பயணிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்..!!(எஸ். சினீஸ் கான்)கடந்த பாராளுமன்ற ...
09/12/2024

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்..!!

(எஸ். சினீஸ் கான்)

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலத்திற்கு பாடசாலை நிர்வாகம் இன்று (09) அழைத்து பாராட்டி கெளரவித்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இயங்கி வருகின்ற மாஸ் பெளன்டேசன் அமைப்பானது இப்பாடசாலைக்கு தொடரச்சியாக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!(எஸ். சினீஸ் கான்)அண்மையில...
08/12/2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

(எஸ். சினீஸ் கான்)

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் - அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோ...
05/12/2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் - அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை கொண்டு செல்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி கொண்டிருப்பதாகவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

இன்று (05) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கடந்த வாரமளவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர், விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களை மீட்டெடுக்க நிறைய பணங்களை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதற்கான பொருளாதார வசதிகளில்லாத நிலையே அவர்களிடம் காணப்படுகின்றது.

சேதமடைந்த வயல்களுக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது போதுமானதாக அமையாது என்பதை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும்.

அதேபோல், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கடலரிப்பினால் கடற்தொழில் நடவடிக்கைகள் கனிசமானளவு பாதிப்படைந்து மீனவ சமூகத்தின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.

இது விடயம் குறித்தும் அரசங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை; அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர் எம்.பி தெரிவ...
04/12/2024

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை; அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர் எம்.பி தெரிவிப்பு..!

வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தபோதும் அப்பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் அப்பிரதேசத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த இடத்தில் நான் வினயமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல் மாவடிப்பள்ளி பாலம், கிட்டங்கி பாலம் ஆகிய பாலங்கள் சரியாக நிர்மாணிக்கப் படாமையின் காரணமாக வெள்ள நிலைமைகளின் போது அப்பகுதியில் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும்
எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதையை அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை எனவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

நேற்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிக்கையில், இம்முறை ஏற்பட்ட உயிர் சேதம் போன்று இன்னுமொரு முறை இடம்பெறாமல் எதிர்காலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அஸ்வெசும திட்டத்தினால் வறுமைக்கோட்டில் வாழ்கின்ற மக்கள் இன்னும் பாதிப்புக்குள்ளான நிலமையினையே அவதானிக்க முடிகிறது.

அத்திட்டமானது அப்போதைய அரசாங்கத்தினை தக்க வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பொறுத்தமற்றவொன்றாகும்.

இது விடயம் குறித்து இப்போதைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரம் மூலம் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் குறித்த நடவடிக்கைகளை இவ்வரசாங்கம் இது வரை முன்னெடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியவர், இதுவிடயம் குறித்தும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மருதமுனை 65 மீட்டர் பகுதியில் மாநகர சபையினால் வடிகான் நிர்மாணம்.!-அஸ்லம் எஸ்.மெளலானா-மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடி...
03/12/2024

மருதமுனை 65 மீட்டர் பகுதியில் மாநகர சபையினால் வடிகான் நிர்மாணம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வடிகான் நிர்மாணப் பணிகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இன்று கண்காணிப்பு விஜயம் செய்து பார்வையிட்டார்.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற வெள்ள அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இங்கு கல்முனை மாநகர சபையினால் 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் மருதமுனை 65 மீட்டர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு கல்முனை மாநகர சபை
மிகவும் கரிசனையுடன் தீர்பைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு தலைவர் ரிஷாட், தாஹிம் எம்.பி விஜயம்…!மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நி...
03/12/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு தலைவர் ரிஷாட், தாஹிம் எம்.பி விஜயம்…!

மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அன்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கங்களை நிர்வாகத்தினர் மற்றும் உஷ்தாத்மார்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

“சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் - ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து!(எஸ். சினீஸ் கான்)கல்வி அமை...
02/12/2024

“சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் - ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து!

(எஸ். சினீஸ் கான்)

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி நிகழ்ச்சியில் நித்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முஹம்மட் ஹரிஸ் முஹம்மட் ஹின்சான், நிஹால் அஹமட் சிப்னி அஹமட் ஆகியோர் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சியில் பங்குபற்றி முறையே வெண்கலப்பதக்கம், திறமைச் சன்றிதழைப் பெற்றிருந்தனர்.

இதனை பாராட்டி கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிஷாட் பதியுடீன் அவர்களின் அம்பாறை விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாணவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) நிந்தவூரில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹ்மத் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர்களுக்கும், நிந்தவூர் மண் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தாஹிர் எம்.பி யின் குழுவினர் களத்தில்..!நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டு...
26/11/2024

தாஹிர் எம்.பி யின் குழுவினர் களத்தில்..!

நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தில் நீர் வடிந்தோட முடியாமல் அடைப்பட்டு கிடந்த வடிகான்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலையிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த நடவடிக்கைள் நிந்தவூர் பிரதேச சபையின் JCB இயந்திரம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுடைய ஆளணியினரின் உதவியுடனும் அவரது பிரதிநிதிகள் குழுவினரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் - அஷ்ரப் தாஹிர் MP10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிப...
22/11/2024

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் - அஷ்ரப் தாஹிர் MP

10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அரச கொள்கை பிரகடன உரையில் நாட்டினுடைய அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையினை இல்லாதொழிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு திட்டங்களை முன்வைத்ததுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டியிருந்தார். எனவே நாட்டினை கட்டியெழுப்பும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக் தயார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

தனது முதலாவது பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துவிட்டு நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தமைக்காக கட்சியின் தலைமை, கட்சி மத்திய குழு, மாவட்ட மத்திய குழு, சக வேட்பாளர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிப்பதுடன் கடந்த காலங்களிலும் நீங்கள் வழங்கிய பதவிகளை நியாயமாக நேர்மையாக செய்தவன் என்ற வகையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் நேர்மையாகவும் நியாயமாகவும் மக்கள் விரும்புகின்ற வகையில் செயற்படுவதுன் அபிவிருத்தி மற்றும் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், கட்சியின் வளர்ச்சியின் அதிக கவனம் செலுத்துவதுடன் கட்சியின் வளர்ச்சிக்கும் முழுமையாக பங்காற்ற இருப்பதாகவும் திகாமடுல்ல மாவட்டத்தின் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை இரண்டாக அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

Thank you KANDY ✊🏻♥️ලාෆීර් හජියාර්ට ඡන්දය දුන් නොදුන් සියලුදෙනාට හෘදයාංගම ස්තූතිය! ඔබගේ අදහස් හා මතභේද අපි විශේෂයෙන්ම පි...
17/11/2024

Thank you KANDY ✊🏻♥️

ලාෆීර් හජියාර්ට ඡන්දය දුන් නොදුන් සියලුදෙනාට හෘදයාංගම ස්තූතිය! ඔබගේ අදහස් හා මතභේද අපි විශේෂයෙන්ම පිළිගන්නවා, අගය කරනවා. ලාෆීර් හජියාර් ඉදිරියටත් ජනතාව වෙනුවෙන් කැපවී කටයුතු කරනවා.

லாஃபீர் ஹஜியாருக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைவருக்கும் நன்றிகள்! உங்கள் கருத்துகளையும் மாறுபாடுகளையும் நாங்கள் குறிப்பாக மதிக்கின்றோம், அவற்றை சிறந்த முறையில் ஏற்றுக் கொள்கிறோம். லாஃபீர் ஹாஜியாரின் மக்கள் சேவை தொடரும்.

A heartfelt thank you to everyone who voted for Lafeer Hajiyar and to those who didn’t. We appreciate and value your choice and opinion. Lafeer Hajiyar will continue to work hard and serve the people.

🌸🍬

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆண...
12/11/2024

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கமையை, வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோல், தேவையின்றி வெளியில் நடமாடுதல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் வீடுகளிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறும் அவர் அறிவித்தார்.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்

அதன்படி, தேர்தல் பணிகளுக்காக வழங்கப்படும் நியமனங்களை எந்த வகையிலும் மாற்றவோ, ரத்து செய்யவோ கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 #ஆடைத் தொழிற்சாலையில்  #தீப்பரவல்  . #இராஜகிரிய பகுதியில் உள்ள  #ஆடைத்  #தொழிற்சாலை ஒன்றில்  #தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.க...
12/11/2024

#ஆடைத் தொழிற்சாலையில் #தீப்பரவல் .

#இராஜகிரிய பகுதியில் உள்ள #ஆடைத் #தொழிற்சாலை ஒன்றில் #தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு படைப்பு சொந்தமான நான்கு தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் MS தௌபீக் முதலிடம் ...!---------------------------------------------திருகோணமலை மாவட்ட அரசியல் கள...
11/11/2024

திருகோணமலை மாவட்டத்தில் MS தௌபீக் முதலிடம் ...!
---------------------------------------------

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் களத்தை பொறுத்தவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய முகங்கள் பல ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சுயாதீன கள ஆய்வில் இம்முறை திருமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் அதிக விருப்புவாக்குகளை MS தௌபீக் பெற்றுக்கொள்ளாவார் என்பதை இலகுவாக கணிக்க முடிவதுடன் அவருக்கு மக்களின் பலத்த ஆதரவுடன்
செல்லுமிடம் எங்கும்
அமோக வரவேற்பும் காணப்படுகிறது.

இதற்கு, தனது பாராளுமன்ற காலத்தில் மக்களுக்காக செயற்பட்டமை, திருமலை வரலாற்றில் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டமை.

ஊழலற்ற அரசியல், மக்களுடன் நெருக்கமாக பழகுதல், முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவுகள் கொண்டுள்ளமை.

நமது உரிமைக்காக பெற்றுக்கொள்வதற்காபாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததுடற் ஆக்கபூர்வமான முயற்சிகளை செய்தமை.

தனது தேர்தல் பரப்புரைகளில் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தோ நையாண்டித்தனமான பேசியதை அவரிடம் காணவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருமலை மாவட்டத்திற்கான இரண்டு முஸ்லிம் பிரதிநிகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாத்திரமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்த...
10/11/2024

தேர்தல் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பல மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும், தேர்தல் ஆணைக்குழுவும் கூட்டாக இணைந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தினமன்று ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் காணப்படும் அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் நடைபெறும் தினம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Address

Madawala Baggala Gedara
Madawala

Alerts

Be the first to know and let us send you an email when Madawala Sun News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madawala Sun News:

Videos

Share