Kumbalanga Force

  • Home
  • Kumbalanga Force

Kumbalanga Force எமது page இணை like share comment பண்ணுங்க
(2)

சின்ன இடத்தில் நாட்டப்பட்ட பாப்பாசி மரம், கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், பெரிய மிளகாய்
17/10/2024

சின்ன இடத்தில் நாட்டப்பட்ட
பாப்பாசி மரம், கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், பெரிய மிளகாய்

31/08/2024
1500கிலோ.மீற்றரை 45 நாட்களில்  கரையோரமாக நடந்து சாதனை படைத்து தனது இலக்கையும் வெற்றிகரமாக நிறைவு செய்த ஸஹ்மி ஷஹீத் அவர்க...
26/08/2024

1500கிலோ.மீற்றரை 45 நாட்களில் கரையோரமாக நடந்து சாதனை படைத்து தனது இலக்கையும் வெற்றிகரமாக நிறைவு செய்த ஸஹ்மி ஷஹீத் அவர்களுக்கு Kumbalanga Force விசேட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்

ஸஹ்மி ஷஹீத் அவர்களின் இச் செயலானது மத நல்லிணக்கம் , சுற்றுலாத்துறை மேன்பாடு , போதை ஒழிப்பு போன்றவற்றுக்காய் இலங்கை கரையோர பிரதேசங்களை நடந்து பயணித்து சாதனை புரிந்த பேருவளை ஸஹ்மி ஷஹீத் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அழகிய வீட்டு பூந்தோட்டம்.முயற்சி செய்து பார்க்கலாம்...
26/08/2024

அழகிய வீட்டு பூந்தோட்டம்.
முயற்சி செய்து பார்க்கலாம்...

அஸ்ஸலாமு அலைக்கும் .     கும்பலங்க இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் எமது ஊருக்கு சதக உண்டியல்கள் சென்ற ரமழானில்...
16/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் . கும்பலங்க இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் எமது ஊருக்கு சதக உண்டியல்கள் சென்ற ரமழானில் பகிர்ந்துதளிக்கப்பட்டது. இந்த ரமலான் மாதம் அந்த உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு புதிய உண்டியல்களும் பகிர்ந்துதளிக்கப்பட்டது. இதன் மூலம் எமது மையத்திற்கு பெருந்தொகையான சதகா நிதி கிடைக்கபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிதியின் மூலம் கணவன்மார்களை இழந்த, விடுபட்ட விதவைகளுக்கு உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2500/= பெருமதியான 128 பொதிகள் பகிர்ந்துதளிக்கப்பட்டது. எமக்கு சதகா நிதியினை சேகரித்து தந்ததுதவிய அனைவர்க்களுக்கும் அல்லாஹ் அவர்களின் வாழ்வில் பரக்கத் செய்வானாக!!!!!! அவர்களை பொருந்திக்கொள்வானாக!!!!!!

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு...
15/03/2023

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.

ரோட்டில் ஒரு வயதானவர் 🍌🍌🍌 வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்..ஒரு பெண் காரில் இறங்கி வாழைப்பழம் 🍌🍌🍌 என்ன விலை என்று கேட்...
27/02/2023

ரோட்டில் ஒரு வயதானவர் 🍌🍌🍌 வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்..

ஒரு பெண் காரில் இறங்கி வாழைப்பழம் 🍌🍌🍌 என்ன விலை என்று கேட்டாள்?

அதற்கு வயதானவர் 🍌 ஒரு பழம் 5 ரூபாய் என்றார்

அந்த பெண் 6 🍌🍌🍌🍌🍌🍌 வாழைப்பழம் 25 க்கு கொடுப்பிங்களா என கேட்டாள்.

வயதானவர் சரிம்மா நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க காலையிலிருந்து நீ தான் முதல் போணி செய்கிற கடவுள் உன்னை நல்லா வைக்கட்டும் என்று சொல்லித் தந்தார்...

தான் கேட்ட விலைக்கு கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்துடன் அந்த பெண் வாங்கிக் கொண்டாள்...

பிறகு தன் அழகான காரில் தன் தோழியே அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றால்.இருவரும்
பேசிக்கொண்டே தாங்கள் விரும்பியதே வாங்கி சாப்பிட்டார்கள்

சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம் பில் தொகை 1200 ரூபாய் அவர் 1300ஜ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து 💯 ரூபாய் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றால்...

ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணமான விஷயம்..
ஆனால் 🍌🍌🍌 வாழைப்பழம் விற்ற பெரியவருக்கு வலி மிகுந்த விஷயம்...

" இதில் உற்று நோக்க வேண்டியது"

நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும் போது நம் பலத்தை காட்டுகிறோம்...

பணக்காரர்களிடமும் தேவைகளை
இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்...

நாம் மாறுவோம்....
நல்ல மாற்றத்தினே உருவாக்குவோம்.......!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  கும்பலங்க, வகுருவெல பிரதான பாதை ஒரத்தை  துப்பரவு செய்து தேவையான மரங்களும் நாட்டி வ...
04/02/2023

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கும்பலங்க, வகுருவெல பிரதான பாதை ஒரத்தை துப்பரவு செய்து தேவையான மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது. இதில் ஊரில் உள்ள சில வாலிபர்கள் முன் வந்து ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். நன்றி

இன்டர்நெட் சிக்கலுக்கு முந்தைய காலம் ❤️🥺
01/12/2022

இன்டர்நெட் சிக்கலுக்கு முந்தைய காலம் ❤️🥺

05/11/2022

🔅ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்....👨

🔅செல்போன்,
🔅டி வி,
🔅கம்ப்யூட்டர்,
🔅இண்டர்னெட்
🔅ஏ சி,
🔅வாஷிங் மெஷின்,
🔅கேஸ் கனெக்‌ஷன்,
🔅மிக்ஸி,
🔅கிரைன்டர்,

இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

தந்தை பதில் கூறினார்,

👌மரியாதை,
👌மானம்,
👌மதிப்பு,
👌வெட்கம்,
👌உண்மை,
👌நற்குணம்,
👌நன்னடத்தை,
👌நேர்மை,
👌தெய்வ பக்தி,
👌தர்மம்,
👌ஒழுக்கம்,

இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ,

அப்படிதான்
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

👍நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்,

👍ஹெல்மெட் அணியவில்லை,

👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
விளையாடினோம்.

👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,

👍உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்.

👍இண்டெர் நெட்டில் அல்ல,

👍தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம்,

👍மினரல் வாட்டர் அல்ல,

👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

👍தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை

👍எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,

👍எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,

👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல,

👍எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,

👍சுருக்கமாக சொன்னால்,
⚘WE ARE THE LIMITED EDITIONS⚘

👍ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்....📺

👍அன்பாக இருங்கள்,...❤
👍கற்றுக் கொள்ளுங்கள்,..😊

👍நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை, என்றார் அந்த தந்தை ❤️❤️

*எது இருந்தால்**எது தேவை இல்லை ... ?*உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் ..  தேவை இல்லை.உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி ...
04/10/2022

*எது இருந்தால்*
*எது தேவை இல்லை ... ?*
உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் ..
தேவை இல்லை.
உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் ..
தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் .. தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் ..
ூள் தேவை இல்லை ...
உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் ...
& தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் ...
Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் ...
பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை ..
உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் ..
Water filter system தேவை இல்லை ..
உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் ...
குளிர்பானங்கள் தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் ..
கொசு விரட்டி தேவை இல்லை ...
உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் ...
Fridge தேவை இல்லை.
உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் ...
Ac தேவை இல்லை ...
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ..
அழகு சாதனப் பொருட்கள்
தேவை இல்லை ...
தேவையானதை இழந்து,
தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?
நீங்கள் பணம் சம்பாதிக்கும்
அதே வேளையில்,
நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.....

18/08/2022

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!1. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்ப...
13/08/2022

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

08/08/2022

Qatar visit visa available
கட்டார் க்கான விசிட் விசா கைவசம் உள்ளது தேவையுடயோர் உங்க number comment பண்ணுங்க
(Srilanka )

Garden For Idea
05/08/2022

Garden For Idea

cd125 benly gear 50770272096 whatsapp1st oner locations kurunegala new battery new tyers new paint….thaiwan silanser ori...
28/07/2022

cd125 benly gear 5
0770272096 whatsapp
1st oner
locations kurunegala
new battery
new tyers
new paint….
thaiwan silanser
original 12v
switch start working
new rim….
petrol 3l available
running 💯
all documents clear
price 325000rs

மனைவி இறக்கும்போது, *அவருக்கு வயது 45 இருக்கும்*. உறவினர்கள், *நண்பர்கள்* அனைவரும் *அவரை* *மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற...
27/07/2022

மனைவி இறக்கும்போது,
*அவருக்கு வயது 45 இருக்கும்*.
உறவினர்கள்,
*நண்பர்கள்*
அனைவரும்
*அவரை*
*மறுமணம்*
செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தியும்,
*அவரால்*
*அதை ஏற்றுக்கொள்ள*
*முடியவில்லை* .

என் மனைவி,
*அவள் நினைவாக*
எனக்கு
*ஒரு மகனை*
விட்டு சென்றிருக்கிறாள்.
*அவனை வளர்த்து*
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*.
அவன் சந்தோஷத்தில்
*அகமகிழ்ந்து*,
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது*
எனக்கு போதும்.
*அவனுக்காக*
*வாழ போகிறேன்*.

இன்னொரு துணை
*எனக்கு தேவையில்லை*
என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம்
எழுதி கொடுத்துவிட்டு
ஓய்வு பெற்றார்.

மகனுக்கு திருமணமும்
செய்து வைத்து,
அவர்களுடனேயே
தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது.
ஒரு நாள்
வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம்
சீக்கிரமாக
காலை உணவு உண்ண,
*மருமகளிடம்*
ரொட்டியில் தடவ
*வெண்ணெய்
தருமாறு கேட்டார்.
*மருமகளோ* ,
*வெண்ணை*
*தீர்ந்துவிட்டது*
*என்று சொல்லி விட்டாள்*.

மகன்
அதை கேட்டுக் கொண்டு,
தானும் உணவருந்த உட்கார,
தகப்பன் வெறும்
ரொட்டி துண்டை
உண்டு விட்டு நகர்ந்தார்.

*மகன்*
உணவருந்தும் போது,
*மேஜையில்*
*வெண்ணை*
கொண்டு வந்து
வைத்தாள் *மனைவி*.
ஒன்றும் பேசாமல் ,
*மகன்*
தன் வியாபாரத்துக்கு
புறப்பட்டான்.
*அந்த வெண்ணையை*
பற்றிய சிந்தனையே
*அந்நாள் முழுதும்*
அவன் எண்ணத்தில்
*ஓடிக்கொண்டிருந்தது*.

மறுநாள்
காலையில்
தன்
தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள்
நாம் வக்கீலை
பார்த்துவிட்டு
வருவோம் என்றான்.
ஏன் எதற்காக
என்று தகப்பன் கேட்க...

நானும்
என் மனைவியும்
வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம்.
என் பெயரில்
எழுதிய அனைத்தையும் ,
உங்கள்
பெயருக்கே
மாற்றி கொள்ளுங்கள்.

இந்த வியாபாரத்திலும்
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம்
சம்பளம் வாங்கும்
சராசரி
தொழிலாளியாக
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..

ஏன்
இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
*உங்கள் மதிப்பு*
என்னவென்று
*என் மனைவிக்கு*
உணர்த்த வேண்டிய
*கட்டாயம் வந்துவிட்டது*.

*சாதாரண வெண்ணைக்காக*
நீங்கள் கையேந்தும்
*நிலை வரக்கூடாது*.
ஒரு பொருளை
பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
*அவள் உணர வேண்டும்*.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...

பெற்றவர்கள்
பிள்ளைகளுக்கு
ATM கார்டாக இருக்கலாம்..
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார்
(அடையாள) கார்டாக
இருக்க வேண்டும்
என்பதே
இந்த கதையின் கருப்பொருள்.

பெற்றவர்களை
புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல்
உங்களுக்கு
அடையாளம் என்பதே இல்லை.

இன்றைய அருமையான வீட்டு குறிப்பு தகவல்கள்...
23/07/2022

இன்றைய அருமையான வீட்டு குறிப்பு தகவல்கள்...

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று.சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?"🤔சிறுவன் சிரித்துவிட்ட...
19/07/2022

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று.

சிறுமி கேட்டாள்.....
"BF என்றால் என்ன...?"🤔

சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்"
(Best friend)🤗

அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்....
"நான் உன் BF..." என்று

அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄
"BF என்றால் என்ன...?"

அவன் பதிலளித்தான்:
"இது பாய் ஃப்ரெண்ட்..."😄
(Boy friend)

சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்:
"நான் உன் BF..." என்று

மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்:
"BF என்றால் என்ன...?"🤫

கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்:
"குழந்தையின் அப்பா தான்..."
(Baby's father)🤩

அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்:
அன்பே... "நான் உனது BF.." என்று

கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்:
"BF என்றால் என்ன...?"🥰

முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்......
"என்றைக்கும் உன்னுடன்"
(Be forever)❤️ ❤️

இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார்
"நான் உமது BF..." என்று

வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!!
"BF என்றால் என்ன...??"🤔

முதியவர் பதிலளித்தார்....
"மீண்டு வரேன் bye"😔
(Bye for ever)

கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 😳

"என்றும் உம் அருகில்"
(Beside for ever)😔😔

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது...!!
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!!
😍😍🌹🌹💖

honda cd125t benly nikal pokechasi~ 140gear 5 odrun offon light 💡 original japan 🇯🇵 original od metar engine 💯 new batte...
24/06/2022

honda cd125t benly nikal poke
chasi~ 140
gear 5 od
run off
on light 💡
original japan 🇯🇵
original od metar
engine 💯
new battery
original rims
all parts original japan 🇯🇵
all documents clear
prse 550000
Inbox

வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் ...
10/04/2022

வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.

முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா????

365 நாள் ஐயா

முதலாளி: அதில் மொத்தம் எத்தனை வாரம்?

52 ஐயா

முதலாளி: ஒரு வருஷத்தில் எத்தனை சனி,ஞாயிறு வரும்???

104 ஐயா

முதலாளி: மொத்தத்தில் 261 நாள்தான் Balance இருக்கு.
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் வேளை செய்கிறாய்??????

8 மணி நேரம் ஐயா

முதலாளி: அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற????

ஆமாம் ஐயா

முதலாளி: 16 மணி நேரத்தையும் கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு?
175 நாள் நீ வீட்ல இருக்கிற???

இப்போ சொல்லு மிச்சம் எத்தனை நாள் இருக்கு??

91 நாள் இருக்கு ஐயா

சரி ஒரு நாளைக்கு நீங்க tea 🍵 குடிக்க 30 நிமிஷம் சராசரியாக எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு

23 நாள் ஐயா

அப்போ மிச்சம்???

78 நாள் ஐயா..

அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணி நேரம் . இதன் படி
46 நாள்.

அப்போ மிச்சம் எத்தனை நாள்?

22 நாள் ஐயா

இதில் உடல் நிலை சரியில்லை என்று எப்படியும் 2 நாள் லீவ் எடுத்துக்குவ.
இப்போ எத்தனைநாள்??

20 நாள் ஐயா

இதில் 5 நாள் எப்படியும் Personal work அப்படீனு லீவ் எடுத்துக்குவ???

இப்போ எத்தனை நாள்???

15 நாள் ஐயா

இதில Annual லீவுனு 14 நாள் எடுப்ப????

இப்போ எத்தனை நாள் ???

1 நாள் ஐயா

ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க??????

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumbalanga Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share