![*ஜனாஸா நலன்புரி வாகனமொன்றை, ஊருக்காக தனி ஒருவனாய் வழங்கிய இளம் தொழிலதிபர்!*கடந்த நான்கு மாதத்துக்கு முன்பாக எமது வாட்ஸ்...](https://img5.medioq.com/549/404/435802895494045.jpg)
06/04/2024
*ஜனாஸா நலன்புரி வாகனமொன்றை, ஊருக்காக தனி ஒருவனாய் வழங்கிய இளம் தொழிலதிபர்!*
கடந்த நான்கு மாதத்துக்கு முன்பாக எமது வாட்ஸ்அப் செய்திக்குழுமத்தில் பதிவிட ஒரு செய்தி வருகிறது...
ஊருக்கான ஜனாஸா வாகனத்தின் தேவை குறித்தும் அதனை பெற்றுக்கொள்வதற்காக வாரி வழங்குமாறும். பதிவிடப்பட்ட அடுத்தநாளே அடுத்த செய்தி வருகிறது; ஜனாஸா வாகனம் கிடைத்துவிட்டது.*
அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு நாளிலேயே எப்படி?
ஒருவர் பொறுப்பெடுத்துவிட்டார்!
ஒருவரா?
ஆம்! தனி ஒருவர்!
மாஷா அல்லாஹ்! யாரது?
sorry! இப்போதைக்கு சொல்ல முடியாது.
ஓகே! ஒகே! அல்லாஹ் அவருக்கு இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கொடுக்கட்டும் என்று துஆ செய்தவனாக தொலைபேசியை வைத்துவிட்டேன்.
ம்ம்ம்... யாராக இருக்கும்....
*****
தற்போது வாகனம் கிடைத்தாயிற்று.
எப்போதும் வழங்குபவர்,
எண்ணாது வழங்கிக்கொண்டிருப்பவர்,
வழங்கியிருக்கிறார்!
ஆம்! Group of Companies உரிமையாளர் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்கள் தனது தகப்பனார் மர்ஹூம் அல்ஹாஜ் O.L.M இப்றாஹீம் அவர்கள், மற்றும் தனது மாமனார் மர்ஹூம் அல்ஹாஜ் இமாமுத்தீன் ஆகியோரது பெயரில் அல்லாஹ்வுக்காக அண்மையில் (13.03.2024) தெஹியங்கை ஜும்ஆ மஸ்ஜிதில் வைத்து மக்கள் முன்னிலையில், மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M.N.M பைஸர் அவர்களிடம் மக்கள் நலனுக்காக வக்ப் செய்தார்கள்.
தெஹியங்க, தெஹிகம ஜனாஸா நலன்புரி அமைப்புக்கள் தமக்கான வாகனமொன்றை கொள்வனவு செய்ய எடுத்துவந்த முயற்சி இறைவன் கிருபையால் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களைக்கொண்டு மிக இலகுவாக இடம்பெற்றிருக்கிறது. அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களது இத் தியாக நோக்கத்திற்கான பரிபூரண கூலியை அல்லாஹ் வழங்கிவைப்பானாக. மேலும் அவ்வாகனத்திற்கான வருடாந்த அரச செலவீனங்களையும் அவரே பொறுப்பேற்றுள்ளமை அவரின் மிகைத்த பெருந்தன்மையைக் காட்டுகிறது.
மத்திய பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் M.N.M பைசல் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்ட வாகனத்தை மக்களுக்கு முழுமையான சேவையை வழங்கும் நன்நோக்கில் அன்றையதினமே; தெஹியங்கை ஜானஸா நலன்புரி சங்கத் தலைவர் ஜனாப் A.C.M நளீம் அவர்களிடம் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சிறப்புமிக்க அந்த அழகிய தருணத்தில் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களுக்கு ஊர் நிர்வாகசபையினால்; ஜமாஅத்தினர் சார்பாக நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
***
இவ்வாகனத்தை யடினுவர உடுநுவர மற்றும் அண்மித்த பிரதேச மக்கள் தமது ஜனாஸா மற்றும் அதிமுக்கிய சுகாதாரத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெஹியங்க ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜனாப் A.C.M நளீம் அவர்களைத் தொடர்புகொண்டபொழுது குறிப்பிட்டார். மேலதிக தொடர்புகளுக்கு 076 826 3070
****
அன்பாளன்,
அருளாளன்,
அல்லாஹ்!
அல்ஹாஜ் அரூஸ் அவர்களின்
அறிவிலும்,
ஆரோக்கியத்திலும்,
ஆயுளிலும்,
ஆதாயத்திலும்,
அபிவிருத்தியை
அளவில்லாமல்
அதிகரிப்பானாக!
அவரது குடும்பம் மற்றும் அனைத்துத்துறைகளிலும் பரக்கத்தை உண்டுபண்ணுவானாக!
அத்தோடு இவ்விடயத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!
***
தலைவர்,
DESDA சமூகநல அமைப்பு,
தெஹியங்க