Jaffnagate

Jaffnagate Convey true news to from all over the world and keep people updated with trending news.

17/04/2024

முதல் முறையாக
✅👉ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் துபாய் உள்ளிட்ட நகரங்களில்,

POINTS TABLE 🏏📸 Getty Images
17/04/2024

POINTS TABLE 🏏

📸 Getty Images

✅👉ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் துபாய் உள்ளிட்ட நகரங்களில், ✅👉பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காட்சிகள்..!
17/04/2024

✅👉ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் துபாய் உள்ளிட்ட நகரங்களில்,

✅👉பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காட்சிகள்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் கா...
16/04/2024

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் காலமாகியுள்ளார்.

அவரது வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் இருக்கும்    திருமதி குமாரவேல் நகுலேஸ்வரி தெகிவளை கண்டி சொப்பிற்குள் இருந்து இன்று(12.04.2024) பி.ப  12....
13/04/2024

இந்தப் படத்தில் இருக்கும் திருமதி குமாரவேல் நகுலேஸ்வரி தெகிவளை கண்டி சொப்பிற்குள் இருந்து இன்று(12.04.2024) பி.ப 12.15 வெளியே வந்ந நிலையில் இதே உடையணிந்த நிலையில் காணமல் போயுள்ளார்.கண்டவர்கள் 0777444031 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

தயவு செய்து இப்பதிவை Share செய்து அவரை கண்டு பிடிக்க உதவுங்கள், அவரை கண்டுபிடிக்க முடிந்தவுடன் இந்த post மூலம் அறியத்தரப்படும்.

இன்று( 27.03.2024)சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்தி...
27/03/2024

இன்று( 27.03.2024)சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிரிக்காம_படிக்கனும்....எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.வெங்காயம்...
27/03/2024

சிரிக்காம_படிக்கனும்....

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

என்ன புரிஞ்சது.?

எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க 😄

பாவம் நீதிபதி...!! 😅😅😅🤣🤣🤣🤣🤣

Few days ago he was playing the school big match at Jaffna at the age of 17 and over night his bowling action went viral...
15/03/2024

Few days ago he was playing the school big match at Jaffna at the age of 17 and over night his bowling action went viral and it reached to MS Dhoni and the rest is history now he’s in Chennai at CSK training camp with the biggest stars of international cricket.

Young Kugadas might be still overwhelmed and nervous but this can be life changing moment for this young man 💯

Photo credits Rex Clementine

காலத்திற்கேற்ற பதிவு....அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்...
09/03/2024

காலத்திற்கேற்ற பதிவு....

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!

1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.

2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.

6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.

உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.

நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

கரீபியன் தீவுகளில் ஒரு யாழ் நகர்…… பிரித்தானிய காலணித்துவத்துக்குட்பட்ட நாடுகளில் ஒன்றான Cayman Islands தீவுத் தொகுதி நா...
22/02/2024

கரீபியன் தீவுகளில் ஒரு யாழ் நகர்……
பிரித்தானிய காலணித்துவத்துக்குட்பட்ட நாடுகளில் ஒன்றான Cayman Islands தீவுத் தொகுதி நாட்டில், எமது ஈழத் தமிழ் மகன் உருவாக்கியுள்ள குடியிருப்புத் தொகுதிகள் கொண்ட நிலப்பகுதிக்கு ‘யாழ்’ எனப் பெயர் சூட்டி, தாயகத்தின் மீதான பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நமது மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து, அவுஸ்திரேலிய மண்ணில் தொழில் முனைவராகத் தலை நிமிர்ந்த நண்பர், திரு. சாம் சமுவேல் தேவசேயன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் ‘தமிழர் வர்த்தக சம்மேளனத்தை’( Astralian Tamil Chamber of Commerce) நிறுவிய முன்னோடியும் ஆவர்.
தற்போது Cayman Islands தீவுகளில் புதிய குடியிருப்புகளை உருவாக்கும் Real estate துறையில் முன்னணித் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.
'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்….’ என்ற கவி பாரதியின் ஆணைக்கேற்பப், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தலைநிமிர்ந்து வாழும் நம் தமிழ் உறவுகளை நெஞ்சாரப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்.

ஊரேழு றோயல் அணியின்  உதைப்பந்தாட்ட வீரா் விபத்தில் சம்பவிடத்தில்  பலி ;  மானிப்பாய் பகுதியில் துயரம்   .!  நீர்வேலி   பக...
21/02/2024

ஊரேழு றோயல் அணியின் உதைப்பந்தாட்ட வீரா் விபத்தில் சம்பவிடத்தில் பலி ;
மானிப்பாய் பகுதியில் துயரம் .!

நீர்வேலி பகுதியில் இன்று
காலை 5:30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பிரிவு மாணவனும் ஊரேழுறோயல் விளையாட்டுக்கழக வீரருமான சகீந்தன் உயிரிழந்துள்ளார்

தனது வீட்டில் இருந்து நீர் வேலி சந்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து இடம் பெற்றுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம்
வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும்மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் வயது 22 என்ற மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார் உடலம் உடல்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையின் தொழிநுட்ப,  தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான...
21/02/2024

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகு இன்று காலை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது.

80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்டம், சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது..(கீழே டெக் கேபின் 4Nos, Pantry, M/F கழிப்பறைகள், ஸ்கிப்பர் கேபின், சேமிப்பு , வராண்டா )

அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது.

தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான ஆர்டருக்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது.

உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என மஹாசென் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:

டாக்டர். மஹாசென் மரைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவந்த அதபத்து
+94711692567
[email protected]
www.mahasenmarine.com

20/02/2024

Siddharth & Santhosh Narayanan in Jaffna 😍🚁
Yaazh Gaanam Live Concert 2023

18/02/2024

வணக்கம் யாழ்ப்பாணம் ❤️

📷 மன்னார் மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள்! 📸 மகிழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
14/02/2024

📷 மன்னார் மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள்!

📸 மகிழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

இ.போ.ச பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது யாழ்ப்பாணம் - தென்மராட்சி A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இ.போ.ச பேருந்து ஒன...
14/02/2024

இ.போ.ச பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது யாழ்ப்பாணம் - தென்மராட்சி A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இ.போ.ச பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.

இந்தச் விபத்து சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது.

A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது

இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் தெய்வாதீனமாக அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இணுவிலில் கோர விபத்து ஒருவர் பலிஇருவர் படுகாயம் *🟡யாழ்ப்பாணம், இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ...
14/02/2024

இணுவிலில் கோர விபத்து ஒருவர் பலிஇருவர் படுகாயம் *🟡யாழ்ப்பாணம், இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும், குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.*

*இவர்கள் ஹையேஸ் ரக வாகனத்தில் பயணித்த நிலையில், இணுவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது விபத்து நடந்துள்ளது.*

அறியத் தாருங்கள் 🙏🏽
29/01/2024

அறியத் தாருங்கள் 🙏🏽

 இன்று அதிகாலை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலிய...
25/01/2024



இன்று அதிகாலை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலியானார்.

இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் மரணித்துள்ளனர்.

BREAKING NEWSA9 வீதியில் மற்றொரு பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய 2 டிப்பர்கள்மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு ட...
24/01/2024

BREAKING NEWS

A9 வீதியில் மற்றொரு பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய 2 டிப்பர்கள்

மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனஇதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவரையும் மகனையும் வெளிநாட்டுக்கு வழியனுப்பி திரும்பிய தாய் விபத்தில் பலி!இவ் விபத்தில் பலியான பெண் யாழ் புனித ஜோன் பொஸ்...
24/01/2024

கணவரையும் மகனையும் வெளிநாட்டுக்கு வழியனுப்பி திரும்பிய தாய் விபத்தில் பலி!

இவ் விபத்தில் பலியான பெண் யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய ஆசிரியர் ஆவார்.

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு அன்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி, வெளிநாட்டுக்குக் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வந்த பெண் பயணித்த கயஸ் வாகனத்திலும் மோதியதில் பாசையூர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வட மாகாணம் வடக்கில் சிறிய மாவட்டம் –  #யாழ்ப்பாணம்.வடக்கில் பெரிய மாவட்டம் –  #முல்லைத்தீவு.வடக்கில் கடல்பரப்பில்லாத மாவ...
12/01/2024

வட மாகாணம்

வடக்கில் சிறிய மாவட்டம் – #யாழ்ப்பாணம்.

வடக்கில் பெரிய மாவட்டம் – #முல்லைத்தீவு.

வடக்கில் கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.

வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு.

வடக்கில் காணப்படும் பெரிய தீவு – #நெடுந்தீவு.

வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - #நாகர்கோவில்.

வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – #கைதடி.

வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்.

வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு.

வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்.

வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்.

வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்.

வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – #குருநகர், யாழ்ப்பாணம்.

வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – #வேலணை – புங்குடுதீவு.

வடக்கில் காணப்படும் முனை – #பருத்தித்துறை (பேதுறு).

வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டமானாறு.

இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - #நயினாதீவு (நாகதீவு).

வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி.

வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும் உப்பளம் ஆனையிறவிலும் சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது.

வட மாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்ட்ட இடம் - சுண்டிக்குளம் ( #கிளிநொச்சி மாவட்டம்).

வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்.

யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கை ஆறு (பருவகால ஆறு).

இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்.

"செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா.

அண்மையில் வடக்கில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பேட்டை - அச்சுவேலி.

வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.

பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - Borassus flabellifer.

வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்.

இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி.

இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.

யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஆகஸ்ட் 1, 1974

வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.

மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.

வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.

ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.

சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவெர்.

யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981.

யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.

முறிந்த பனை என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.

மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.

மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.

மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.

முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).

நயினாதீவின் தற்போதைய பெயர் – நாகதீப.

யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.

இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.

மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.

தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.

யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.

யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.

வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.

ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.

யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.

சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.

சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).

நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.

மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா.

அதிகமானோர் இப்பதிவின் மூலமாக பயன்பெற பார்க்கும் நண்பர்களே அதிகமாக பகிருங்கள்!

பிரதி

மோசடியில் அகப்படாதீர்கள் யாழ்ப்பாணம் . கல்வியங்காடு . டச்சுவீதி GPS Lane அருகாமையில் 6 பரப்புக் காணி இரண்டு பரப்பாகப் பி...
11/01/2024

மோசடியில் அகப்படாதீர்கள் யாழ்ப்பாணம் . கல்வியங்காடு . டச்சுவீதி GPS Lane அருகாமையில் 6 பரப்புக் காணி இரண்டு பரப்பாகப் பிரிக்கப்பட்ட நிலையில் விற்பனைக்குள்ளது என பத்திரிகைகளில் கடந்த சில நாட்களாக வந்த விளம்பரம் மோசடியாக செய்யப்பட்ட விளம்பரமாகும் . குறித்த ஆதனம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளாய்வு / 128 / 23 எனும் வழக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் காணி / 1320 / 2024 எனும் வழக்கும் நிலுவையில் உள்ளன . இக்காணியை விற்க முயல்வோருக்கு குறித்த காணியில் எவ்வித உரித்தும் இல்லை என்பதனை உரிமையாளர்கள் அறியத்தருகின்றனர் . குறித்த மோசடி விற்பனையில் பங்குபற்றி காணி கொள்வனவு செய்வோருக் கெதிராகத் தலா 1 கோடி நட்டம் கோரி காணி உரிமையாளர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படும் .

மேலதிக விபரங்களுக்கு
075 325 4124,074 136 4103

( 18592 )

02/01/2024

Viral video of an elephant 🐘🇱🇰inside room in Sri Lanka.

The incident is reportedly from Panama, Sri Lanka.

பொத்துவிலில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பானமையில் அமைந்துள்ள கடற்படை காரியாலயத்தில், (NAVY) கடற்படையினர் தங்கும் அறையில் புகுந்த யானை. 02.01.2024.

#பானமை #பொத்துவில்

யாழில் மலையகத்தை சேர்ந்த இருவர் பலி!யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில...
02/01/2024

யாழில் மலையகத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் மற்றும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Hillside Report .

கொழும்பு காலிமுகத்திடல் புத்தாண்டு கொண்டாட்டம்
01/01/2024

கொழும்பு காலிமுகத்திடல் புத்தாண்டு கொண்டாட்டம்

உங்களின் உயர்ந்த உள்ளமும்,உதவிய கரமும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாது...வானுலகம் செல்லும் வள்ளலுக்கு எங்களின் வணக்கங...
29/12/2023

உங்களின் உயர்ந்த உள்ளமும்,உதவிய கரமும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாது...
வானுலகம் செல்லும் வள்ளலுக்கு எங்களின் வணக்கங்கள்....

 #நல்ல ஒரிஜினல் தேன்!! #வீதியில் நல்ல தேன் வாங்க முடியும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு:மக்கள் நடமாட்டம் கூடிய பாதைக...
29/12/2023

#நல்ல ஒரிஜினல் தேன்!!

#வீதியில் நல்ல தேன் வாங்க முடியும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு:

மக்கள் நடமாட்டம் கூடிய பாதைகள் எங்கும் ஒரிஜினல் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் சில கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த இத்தேன்கள் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் இந்நான்கையும் கலந்து குறித்த பதத்தில் காய்ச்சி இவ்வாறு போத்தல்களில் அடைத்து விற்பனை செய்வதாக பிடிபட்டவர்களே வாக்குமூலம் வழங்கியுள்ளனர். தேன் விடயத்தில் மிகக்கவனம்.

அண்மையில் உலக அரங்குகளில் சாதித்த சிலர். Share and encourage
29/12/2023

அண்மையில் உலக அரங்குகளில் சாதித்த சிலர்.

Share and encourage

Address

Jaffna
4000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnagate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffnagate:

Videos

Share

Category

Nearby media companies


Other Newspapers in Jaffna

Show All