10/03/2023
வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியினைப் பெற சிறிய வெற்றிகளில் கவனத்தைச் செலுத்துங்கள்
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் இலக்கினை முன் வைக்கிறீர்கள் எனில் அதனை சிறிய சிறிய படிகளாக உடைத்து அவற்றினை எப்போது நிறை வேற்ற முடியும் என்ற ஓர் ஆராய்வினை மேற்கொண்டு அந்த சிறு சிறு படிகளை நோக்கியதாக உங்கள் செயற்பாடுகளைச் செய்து கொண்டு போனால் இறுதியில் நீங்கள் எண்ணிய பெரிய விடயத்தினை செய்து முடித்து இருப்பீர்கள்.
உதாரணமாக, வேலைக்கு முயலும் ஒருவர் என்றால் உங்களுடைய இலக்குகளை சிறு பகுதிகளாக உடைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, முயலுகின்ற தொழில் ரீதியான interview தொடர்பான கேள்வி பதில்களை அறிந்து கொள்ளல். அவற்றுக்கு பதில்களை தயாரித்துக் கொள்ளல்.
உங்களுடைய தொழிலில் அனுபவமிக்க ஒருவரின் தொடர்பினை சமூக வலைத்தளம் ஏதாவது ஒன்றில் பெற்று அவர்களுடன் இது தொடர்பில் உரையாடுங்கள்.
இவை அனைத்தையும் செய்யும் நேரத்தில் வேலைகளுக்கும் விண்ணப்பியுங்கள் அவை தான் உங்களை ஒவ்வொரு interview க்குமான தயார்படுத்தலாக இருக்கும்.
இவ்வாறு உங்கள் இலக்குகளை சிறு பகுதிகளாகப் பிரித்தி அவற்றினை முயலுங்கள். அந்த சிறு இலக்குகள் வெற்றி அடைகையில் அதைக் கொண்டாடுங்கள் அப்போது தான் அடுத்த இலக்கினை மிகவும் ஆர்வத்துடன் செய்ய எத்தனிப்பீர்கள்.