13/09/2024
சஜீத்தை ஆதரிக்கும் தமிழரசு கட்சியிடம் மக்கள் தொடுக்கும் வினா.!
பொதுத்தேர்தலிலும் தமிழரசுகட்சி சுமந்திரன் கும்பல் சஜீத்தின் தொலைபேசியை ஆதரிப்பார்களா?
ஜனாதிபதிதேர்தலில் எந்த நிபந்தனையும் இன்றி தமிழ்பொதுவேட்பாளரை எதிர்பதற்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்தை ஆதரிக்கவேண்டும் என அரசியல் முதிர்ச்சியற்ற தனிக்குரோத மனநிலை முடிவை மத்தியகுழுவில் அவசரமாக தீர்மானம் எடுத்த திருவாளர்களான..
1. எம் ஏ சுமந்திரன் யாழ்ப்பாணம்
2. ப சத்தியலிங்கம் வவுனியா
3. இ சாணக்கியன் மட்டக்களப்பு
4. சி வி கே சிவஞானம் யாழ்ப்பாணம்
5. சே குலநாயகம் யாழ்ப்பாணம்
6. கி துரைராசசிங்கம் மட்டக்களப்பு
7. தி சரவணபவன் மட்டக்களப்பு
8. ஆரியரெட்ண ரஞ்சினி கோட்டைகல்லாறு
9. த கலையரசன் நாவிதன்வெளி
10. பீற்றர் செழிநன் முல்லைத்தீவு
11. சாந்தி ஶ்ரீஷ்கந்தராசா முல்லைத்தீவு
12. இரட்ணவடிவேல் கொழும்பு
13. கசயந்தன் யாழ்ப்பாணம்
இவர்களிடம் கேட்கும் கேள்விகள் முடிந்தால் பதில் தருவார்களா?
அ)ஐனாதிபதி தேர்தலில் சஜீத்தை ஆதரிக்க என்ன அரசியல் ரீதியான காரணம்?
ஆ)சஜீத் பிரமதாசாவின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலாவது சமஷ்டி தீர்வு வழங்குவேன் என குறிப்பிடப்பட்டுள்ளதா?
இ)ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றால் வடக்கு கிழக்கில் சஜீத்பிரமதாசாவின் கட்சி ரெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டால் தமிழரசுகட்சி உறுப்பினரான நீங்கள் அவருடன் இணைந்தா பாராளுமற்ற தேர்தலில் போட்டியிடுவீர்கள்?
அவருடன் இணைந்து போட்டியிடாவிட்டால் அவரை எதிர்த்து உங்களால் பிரசாரம் செய்ய முடியுமா?
ஈ)பாராளுமன்ற தேர்தலில் போலித்தமிழ் தேசியம் பேசிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசியம் வலுவூட்டும் நோக்கில் இந்த தடவை பொதுவேட்பாளர் ஒருவரை 9, தமிழ்தேசிய கட்சிகள், 83, சிவில் அமைப்புகள், ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்புகள் எடுத்த தீர்மானத்தை நீங்கள் 13,பேர் மட்டும் நிராரிப்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழரசுகட்சியை மக்கள் நிராகரித்ததாக தேர்தல் முடிவுகள் வந்தால் நீங்கள் 13, பேரும் அரசியலில் இருந்து விலகுவீர்களா? அல்லது முக்காடு போடுவீர்களா?
உ)தமிழரசுக்கட்சியில் உள்ள தமிழ் பொதுவேட்பாளரை எதிர்க்கும் 13, பேரில் யாராவது பொதுத்தேர்தலில் வேட்பாளராக அல்லது மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக அல்லது உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளராக எந்த கொள்கையை முன்வைத்து வாக்கு கேட்கப்போகிறீர்கள்?
ஊ) பிள்ளையான், வியாழேந்திரன், டக்லஷ், அங்கயன், கருணா, மோகன், பிரபா, போன்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
அவர்களை ஆதரிப்பதும் உங்களை ஆதரிப்பதும் ஒன்று என்பதை ஏற்பீர்களா?
எ)தென்பகுதி பிரதான வேட்பாளர்களின் நிதி நன்கொடையை பெற்றுள்ளதாக உங்களிடம் குற்றம் கூறப்படுவது உண்மைதானே?
உ)தற்போதய பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் சுமந்திரன் செம்பா?மாவையரின் பந்தா?
இது ஒட்டுமொத்த தமிழர்களுடைய கேழ்வி மனச்சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்!
-முல்லை மைந்தன்
தமிழரசுக்கட்சி உறுப்பினர்
Copy