குளோபல் தமிழா

குளோபல் தமிழா Daily Tamil News Updates & Entertainment Videos 24/7 News Update From SriLanka.

*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*👇👇👇👇👇
07/12/2024

*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*
👇👇👇👇👇

for more news: http://www.lankafire.com/Subscribe to us: https://www.youtube.c...

செக்ஸ் காதல் அல்ல, டேட்டிங் செல்வது காதல் அல்ல24/7 ஒருவரிடம் பேசுவது காதல் அல்ல, ஒருவருக்காக இரவு முழுவதும் விழித்திருப்...
07/12/2024

செக்ஸ் காதல் அல்ல, டேட்டிங் செல்வது காதல் அல்ல
24/7 ஒருவரிடம் பேசுவது காதல் அல்ல, ஒருவருக்காக இரவு முழுவதும் விழித்திருப்பது காதல் அல்ல,

காதல் என்பது உங்கள் கடுமையான பக்கத்தைப் பார்த்து, இன்னும் உங்களை நேசிக்கத் தேர்ந்தெடுப்பவர்,

உங்களால் முடியாதபோது உங்களுக்காக விஷயங்களைச் செய்பவர், உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய உங்களைத் தாங்கி உங்களை அமைதிப்படுத்துபவர்,

யாரோ ஒருவர் குரல் கொடுப்பவர். நீங்கள் பார்க்கும் அனைத்தும் கெட்டதாக இருக்கும் போது உங்களைப் பற்றிய நல்ல விஷயங்கள்,

நீங்கள் நன்றாக இருப்பதை உறுதி செய்பவர் ஒருவர், ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றி சிந்திக்கும் ஒருவர், தொடர்ந்து தன்னைத்தானே ஊற்றிக் கொண்டிருப்பவர். நீ, அதுதான் காதல்.... ❤️❤️❤️

மறுமணம் பாவமல்ல..!!!மறுமணம் என்பது தவறல்ல,மாற்றான் கை பட்டதால்பெண் ஒன்றும் இழிவல்ல...காமத்தில் மட்டும் தான்ஆண்களின் பங்க...
04/12/2024

மறுமணம் பாவமல்ல..!!!
மறுமணம் என்பது தவறல்ல,
மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல...
காமத்தில் மட்டும் தான்
ஆண்களின் பங்கு,
பெண்கள் காலமும் செய்ய
இங்கு ஆயிரம் உண்டு...
பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றல்ல,
உள்ளன்பு உயிர் தியாகம்
இவை இன்றி வேறில்லை...
மகர் கொடுத்து பெண்ணெடுத்து
மாடு போல நடத்துபவனை
மிதித்து மீண்டு வந்தால் பாவமில்லை...
பெண்கள் கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை, காமத்தில் விளையாடும் பொம்மையும் இல்லை...
சமுதாயம் தூற்றும் என அஞ்சிக்கொண்டு சாகும் வரை
உரிமை இழக்க பெண்கள் ஒன்றும்
அடிமை இல்லை...
உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் வெறும் உடல் தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு,
பண்பாடு கலாச்சாரம்
என்று சொல்லிக்கொண்டும்
பெண்கள் படும் பாடை
சரி செய்யா சமுதாயமே...!
வந்து உண்டு விட்டு சென்று விடுவீர்,
வாழ்க்கை வீணாய் போய் விட்டால்
நீரா தருவீர்?
முதல் வாழ்க்கை முறிதல்
பாவமுமில்லை,
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை...
மனம் பார்த்து மணம்
கொள்பவன் ஆண்களின் கூட்டம், மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்...
எந்த வயதிலும்,
எந்த நிலையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழ நினைப்பதும் வாழ்வதும் குற்றமல்ல..!
இந்த பிறவியில் இப்போது வாழவில்லை என்றால்,
இனி எப்போதும் வாழ முடியாது...
தேற்றாவிடியிலும் பரவாயில்லை
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்
அவர்களின் வாழ்வை அவர்கள்
வாழ்ந்து விட்டு போகட்டும்..

குளோபல் தமிழா

வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்....ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு ...
04/12/2024

வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்....

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? ".

தென்னங்கன்று சொன்னது, " ஒரு வருஷம்".

"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.

தென்னங்கன்றோ🌴 அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின்🌱 வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை🌴விட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.
தென்னங்கன்றோ🌴 எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை🌱 நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட🌴 இருமடங்கு உயரமாகி விட்டது.

தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை "கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.
தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது.
அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .

ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .
இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.
வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. ஆம் வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது.

Like to support 💥 குளோபல் தமிழா

ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனை விட பொறுமையுள்ளவன் உத்தமன்.

02/12/2024

கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.
அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.
அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி.

அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.

”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு.

அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”

”கண்டாரோ.. கொடுமை..... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.

“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்க்கறீரே..
சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.

சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு, கொடு” என்றாராம்.

அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.

”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”

ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.

சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள்.

கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.

இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு.

ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.

அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க..

இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.

ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.

""தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""

என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள்.

தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)

கம்பன் வந்து பார்த்தான்.

யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை.

அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால.

பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.

அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி

கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்

மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்

கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி

ஒப்பிக்கும் என் உள்ளம்.

என்றாள்.. நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு,கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னாள்.

அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்..
உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா..
இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.
பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன் என்றாளாம் ஓளவை கிழவி.......

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் : வெளியான தகவல் போலியா.??😲🙏https://www.lankafire.com/8450/
02/12/2024

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் : வெளியான தகவல் போலியா.??
😲🙏
https://www.lankafire.com/8450/

ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.வித்தியாசம் தெரிக...
30/11/2024

ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.

ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.

வித்தியாசம் தெரிகிறதா?

இங்கு பெரும்பாலும், உடலுறவு என்பது ஒரு ஆணுக்கு உடல் சார்ந்த விஷயம்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு உடலுறவு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம்.

காதல் காரணமாக ஒரு பெண் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக மட்டுமே ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியும்.

ஒரு பெண் உங்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவள் உங்கள் மீது மன ரீதியான உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். அவள் ஆணுடன், அந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் அந்த பிழை கூட அன்பின் பரிமாணம் கொண்டதாக இருக்கும்.

ஒரு பெண் தான் காதலிக்காத ஆணுடன் உடலுறவு கொள்வதை நீங்கள் காண்பது அரிது. அவள் விபச்சாரியாக இருந்தால் தவிர.

ஆனால் ஒரு ஆணுக்கு, இது தலைகீழாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளக்கூடும்.

இதனாலேயே ஒரு ஆண் விபச்சாரியை உடலுறவு கொள்வதற்காக தேவைக்கு தேடலாம். ஆண் தனது பாலியல் ஆசையை நிறைவேற்றும் முன் விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது, ​​இதைப் புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே:

ஒரு ஆண் தனது பாலியல் ஆசைகளுக்கு தீனி போட ஒரு பெண்ணாக, உங்களைப் பயன்படுத்தலாம். அவர் உங்களுக்கு தேவையான பணம் கூட கொடுக்க முடியும். அவர் உங்களை வெளியே அழைத்துச் செல்ல முடியும். இதெற்கெல்லாம் காரணம் அவர் உடலுறவை விரும்புகிறார், உங்களை அல்ல!

ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசிக்கிறானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நின்று கவனியுங்கள்.

நீங்கள் அவருக்கு செக்ஸ் கொடுக்காததால் அவர் உங்களை விட்டு வெளியேறினால், அவர் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் செக்ஸ்-ஐ மட்டுமே நேசிக்கிறார்!

அன்புள்ள இளம் வயது பெண்களே!

- நீங்கள் வளர்ந்து திருமண வாழ்க்கையின் பயணத்திற்கு நெருங்கி வரும்போது..
- உங்களுக்கான ஒரு கணவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
- ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது
- அவர்களுக்கான தந்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​தயவு செய்து, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியராக மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்க தகுதியான ஒரு ஆணைத் தேர்ந்தெடுங்கள்.

Suport us Like Here குளோபல் தமிழா

பெண்களுக்கான கைவிலங்குகளில் மிகவும் மென்மையானது இந்த திருமண முக்காடு, எனவே ஆழ்ந்து சிந்தித்து, சிறைத் வாழ்க்கையைத் தவிர்க்க, உங்கள் இல்லத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.

வாழ்த்துக்கள் நண்பிகளே..

வழக்கம் போல இந்த கட்டுரைக்கும் மாறுபட்ட கருத்துக்கள் வரலாம். வரவேற்கிறேன். கருத்துரிமை அனைவருக்கும் உண்டு. அது நல்ல புரிதலுடன், ஆரோக்கியமாக இருப்பின் அனைவருக்கும் ஆனந்தமே..

அண்ணன் கைய தோளுக்கு மேல தூக்குனா, கத்த போறான்னு அர்த்தம்.கைய மூக்குல வச்சா, கதை விட போறான்னு அர்த்தம்.அதுவே கைய கட்டுனா,...
21/11/2024

அண்ணன் கைய தோளுக்கு மேல தூக்குனா,
கத்த போறான்னு அர்த்தம்.

கைய மூக்குல வச்சா,
கதை விட போறான்னு அர்த்தம்.

அதுவே கைய கட்டுனா,
பிச்ச கேக்க போறான்னு அர்த்தம்.

வாக்கு பெட்டிகளை காணவில்லை? காலியில் சம்பவம்...முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️https://www.lankafire.com/7879/ ஐ கிளிக் செய்யுங...
13/11/2024

வாக்கு பெட்டிகளை காணவில்லை? காலியில் சம்பவம்...

முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️
https://www.lankafire.com/7879/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏

மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்..! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு...முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️https://www.lankafire.com/7...
13/11/2024

மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்..! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு...

முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️
https://www.lankafire.com/7875/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏🙏

வயிற்றுக்குள் பெருமளவு போதைப்பொருளோடு ஒருவர் கைதானார்.முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️https://www.lankafire.com/7884/ ஐ கிளிக் ...
13/11/2024

வயிற்றுக்குள் பெருமளவு போதைப்பொருளோடு ஒருவர் கைதானார்.

முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️
https://www.lankafire.com/7884/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏🙏

சட்டவிரோதமான வெடிபொருட்களோடு ஒருவர் கைதாகியுள்ளார்.முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️https://www.lankafire.com/7889/ ஐ கிளிக் செய...
13/11/2024

சட்டவிரோதமான வெடிபொருட்களோடு ஒருவர் கைதாகியுள்ளார்.

முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️
https://www.lankafire.com/7889/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏🙏

இதுக்கு எண்டே கிடையாதா சாரே..! முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️https://www.lankafire.com/7595/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏🙏
07/11/2024

இதுக்கு எண்டே கிடையாதா சாரே..! முழுசா படிக்கணுமா? ⬇️⬇️⬇️

https://www.lankafire.com/7595/ ஐ கிளிக் செய்யுங்க..!🙏🙏

சும்மா கிடந்த ஷாபியை ஊதி கெடுத்தார்களாம் ஆண்டவர்கள்... என்னதான் சொல்றாரு வைத்தியர்..!மேலும் விரிவாக அறிய ⬇️⬇️⬇️https://w...
07/11/2024

சும்மா கிடந்த ஷாபியை ஊதி கெடுத்தார்களாம் ஆண்டவர்கள்... என்னதான் சொல்றாரு வைத்தியர்..!

மேலும் விரிவாக அறிய ⬇️⬇️⬇️
https://www.lankafire.com/7590/ ஐ நாடுங்கள் .😀😄🙏🙏

06/11/2024

யாழ் மக்களே ஊசிக்கு ஓட்டு போட்டால் "கொட்டை கொத்து" இலவசமாம்
😃😃😃😃
எப்படி வசதி?
#குசும்பன்

06/11/2024

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when குளோபல் தமிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share