
01/02/2025
தனியாக இருக்கிறோம் என்று ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
சுற்றி இருப்பவர்கள் காதலிக்கிறார்கள் என்று ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
ஒருவரை உங்களை காதலிக்கிறார் என்பதற்காக பெயரளவுக்கு ஒருவரை காதலிக்காதீர்கள்..
உங்களை பற்றி ஒருவர் கவிதை எழுதி விட்டார் என காதலிக்காதீர்கள்..
மறைந்து போகும் அழகில்
மையல் கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
ஒரே சாதி,மதம்,...என வரையறை கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
ஒருவர் மேல் பரிதாபம் கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
காலேஜ் முடிக்கும் வரை கல்யாணம் முடிக்கும் வரை என Agreement போட்டுக்கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
எப்படியும் இவனையோ/ இவளையோ தான் கட்டிக் கொள்ள போகிறோம் என சிறுவயதில் சொல்லி வைத்த சொந்த பந்தங்களின் பேச்சுக்காக ஒருபோதும் காதலிக்காதீர்கள்..
ஆனால்,காதலியுங்கள்..!!
எப்போது பார்த்தாலும் முதன் முறை பார்த்த உணர்வு தொற்றிக் கொள்வது போல உணரும் போது,
அதீத அன்பில் தோற்ற மயங்கங்கள் எல்லாம்
தோற்றுப் போகும் போது,
தேவதைகள் பற்றிய பிரதி பிம்பங்கள் எல்லாம் ஒருவரில் ஒன்றுமில்லாமல் போகும் போது,
தேக்கி வைத்த சொற்களையும்
பூட்டி வைத்த மெளனங்களையும்
சலனமில்லமால் கொட்டிக் தீர்க்க உயிர்த்துணை கிடைக்கும் போது,
கனவுகளையும் ஆசைகளையும் காரணமில்லாமல் ஏற்றுக்கொண்டு
கைக்கோர்த்து இறுதிவரை பயணிப்போம் என்ற நம்பிக்கை பிறக்கும் போது,
தெரியாத ஒன்றுக்காக அவமானப்படுத்தப்படாமல் அன்புடன் சொல்லிக் கொடுக்கும் இதயத்தை சமீபித்திருக்கும் போது,
எப்போதும் எதையும் யாரிடமாவது சொல்ல வேண்டுமென மனம் திணறுகையில் என்றென்றும் மின்னல் அடிக்கும் முதல் முகமாக அவனோ/அவளோ
தோன்றும் போது,
மழை என்று சொன்னாலே மனம் தானாய் நனைவதைப் போல
ஒரு பெயரை எங்கு கேட்டாலும் மனம் தானாய் பூத்து மெய் சிலிர்க்கும் போது,
கண்ணீரை ஏந்திக் கொள்ளும்
கரங்களும் சாய்ந்து அழ தோளும் நமக்காக காத்திருக்கும் என்ற வரம் வாய்க்கும் போது,
காற்றில் கை வீசி மறைக்கத் தேவையில்லாத கதைகள் பேசி தீர்க்க பெருந்துணையுடன் நெடுந்தூரம் பயணம் செல்லும் பாக்கியம் கிட்டும் போது,
இவள்/இவன் தான் உனக்கென
உனக்கான அசரீரி சொல்லும் போது,
ஒருவரை விட்டு பிரிவதை விட இறப்பதே மேல் என்று
உணரும் போது,
காதலியுங்கள்..!!
அதுவரை,
ஒருவேளை நிகழாமல்
போனால் கூட
ஒரு போதும்
காதலித்து விடாதீர்கள்..✨