07/07/2021
மேன்முறையீட்டு நீதிமன்ற பிணை வழக்கு 05/2021. MC Batticaloa வழக்கு இலக்கம் B 947/19...........................................................
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினுடைய முன்னாள் செயளாலர் பூபாலாப் பிள்ளை பிரசாந்தன் அவர்கள் சிவபாக்கியம் எனும் நபரை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் சான்று வழங்க கூடாது என்று தொடர்ச்சியாக அச்சுறுத்தல் வழங்கினார் என்ற குற்ற சாட்டு அடிப்படையில் 12.11.2020 அன்று victim of crime and witness Act No. 4 of 2015 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டிருந்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பிணை விண்ணப்பம் ஆனது பின்வரும் இரண்டு காரணங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள பட்டிருந்தது.
1. காலம் தாழ்த்தப்பட்ட முறைப்பாடு.
2. புலன் விசாரணையின் போது கூறப்பட்ட கூற்றுகள் ஒன்றுக்கு ஒன்று முரண் பட்டதாக அமைந்து காணப்பட்டது.
Victim of crime and witness Act பிரிவு 10(1) இன் பிரகாரம் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவரேனும் பிணையில் விடுவிக்க பட வேண்டும் எனில் வழக்கிற்கு அமைவாக ஏதேனும் விதிவிலக்கு சந்தர்ப்பங்களை நிலைநாட்ட வேண்டும்.
அதனடிப்படையில், பிணை விண்ணப்பதாரர் மன்றிற்கு கூறியதாவது 2019 ஆம் பங்குனி மாதம் இடம்பெற்றிருக்க வேண்டி குறித்த முறைப்பாடு, காலம் தாழ்த்தபட்டு 2019 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமே இடம்பெற்றிருந்தது. மேலும், அவருக்கெதிரான குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் திகதியும் தெளிவாக இல்லை' என கூறப்பட்டது.
வாதங்களை கேட்டு அறிந்த மன்றானது கூறியதாவது: victim of crime and witness Act இன் உடைய நோக்கமானது (பிரிவு 2 இல் கூறப்பட்டது போன்று ) பாதிக்கபட்ட தரப்பிற்கும், சாட்சிக்கும் பாதுகாப்பு வழங்குவதாகவும். இருப்பினும் பிரிவு 10(2) இன் பிரகாரம் குறித்த பாதுகாப்பானது குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபருக்கும் உரித்தானது. வழக்கினை காலதாமதம் இன்றி விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்ற பாதுகாப்பு குற்றம் சுமத்தபட்ட நபருக்கும் உள்ளதாக மன்று கூறியிருந்தது.
மேற்கொண்ட வாதங்களை மேற்கோள் காட்டி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சிச் செயலாளர் பிரசாந்தன் அவர்களின் பிணை கட்டளையில் 'அவருக்கெதிரான முறைப்பாடானது காலம் தாழ்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கெதிரான குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் திகதியும் தெளிவாக இல்லை' என்ற காரணத்தினாலும் தலா 100,000 பெறுமதியான இரு சரீர பிணையிலும் 25,000 ரூபாய் காசு பிணையிலும் நீதிமன்றம் அவருக்கு பிணை கட்டளை வழங்கி உள்ளது.
Sujithash Navarednam LL.B (Hons).
,