08/03/2024
♦பெண்களை அறிவுத் தெய்வமாக்கி கலைமகள் என வழிபட்டனர்; ஆனால் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கூறி அடுக்களைப் பதுமைகளாக்கினர்.
♦பெண்களை செல்வத்திற்கு அதிபதியாக திருமகள் என வழிபட்டனர்; ஆனால் பெண்களுக்கு சொத்துரிமயைத் தர மறுத்தனர்.
♦பெண்களை வீரத்திற்கு அதிபதியாக மலைமகள் என வழிபட்டனர்; ஆனால் ஆணாதிக்கம் எனும் போர்வையிலே பெண்களை அடக்கி ஒடுக்கினார்கள்.
♦இத்தகைய ஒரு சூழலில் தான் பாட்டுக்கொரு கவிஞன் பாரதி தோன்றினான். அழகுப் பதுமைகளாக மாத்திரம் பார்க்கப்பட்ட பெண்களை புதுமைப் பெண்களாக காண அரும்பணி ஆற்றியவன் பாரதி.
♦பாரதி உடலால் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பல பெண்கள் அழகுப் பதுமைகளாக மாத்திரமே சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள்.
♦மாறாக சரி நிகராக இன்றைக்கு பல பெண்கள் புதுமைப் பெண்களாக வலம் வரவும் செய்கிறார்கள்.
♦பெண்கள் அழகுப் பதுமைகளாக மாத்திரமன்றி புதுமைப் பெண்களாக வலம் வர ஆணினம் அணி சேர்க்கட்டும்.
♥அத்துனை பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.